நதியின் சலசலப்பு
பாம்பின் சரசரப்பு
பெயர் தெரியா
பூச்சிகளின் ரிங்காரம்....,
இரையைத் தேடும்
ஜந்துக்களின் நடுவே.....,
நான் மட்டும்
ஆதிவாசியாய்!!!!
இரவும் பகலும்
ஒன்று தான் எனக்கு....,
விஷமும், அமுதமும்
ஒன்று தான் எனக்கு....,
என் நண்பன், நான் மட்டும்,,,
என் உறவினர்கள் ,நான் மட்டும்
தனியாய்…
நாளும் தெரியாது!?
கிழமையும் தெரியாது!?
உணவைத் தேடி
சுற்றிக் கொண்டு
இருக்கிறேன்...,
யானைப் பிளிரும்
சத்தத்திலிருந்து..,
சிறுத்தையின்
சீற்றத்திலிருந்து..,
தப்பித்து ஒரு இடத்தை
அடைந்தேன்.!
நான் பார்த்திராத இடம்
சுற்றிலும் பூக்கள்…
எண்களும் தெரியாது!
எண்ணங்களும் தெரியாது!
அதில் ஒன்று எனக்கு
பிடித்திருந்தது!?
எடுத்தேன்...,
பசி இல்லை. இப்போது
பூவையே பார்த்துக்கொண்டு
இருந்ததால்....,
பூவுக்கு ஒரு முத்தம்...,
பேசினேன்......,
கத்தினேன்....,
கொஞ்சினேன்....
கெஞ்சினேன்..,
மிஞ்சினேன்...,
சண்டையிட்டேன்...,
சமாதாமானேன்...,
அசைவற்று இருந்தது?!
நிறமும் தெரியாது..,
மணமும் தெரியாது..,
பூவையே பார்த்துக்கொண்டு
இருந்தேன்!!
என்னிடம் பேசும் என்று
உறங்கிப் போனேன்!!!!!
எழுந்தேன்.
அதே நிறத்தில்
அதே மணத்தில்
பூ, இல்லை!?
அழுதேன், கதறினேன்...,
பூவையே கையில் வைத்து
திரிந்து கொண்டு இருந்தேன்
பசி இல்லை!?
கால் இடறி விழுந்தேன்...
பறக்கிறேன்
நீர் வீழ்ச்சியிலிருந்து
விழுகிறேன்,
என் பூவோடு...........,
நீரோடு -
பெரிய பாறை
பலத்த அடி
சிவப்பு பூ பூத்தது!!.
அதன் அழகை,பார்த்தபடியே
இறக்கிறேன்...,
இந்த உலகத்தில்....,
முதலும் நான் தான்!!
முடிவும் நான் தான்!!
சில நேரங்களில் நமது மனம் தனிமையை நாடும்! சமயத்தில் தனிமையைச் சாடும்!
ReplyDelete"கனியை ஒருநாள் கசப்பென சொல்வாய்!
கசப்பை ஒருநாள் கனியென உண்பாய்!
மனமே உன்னால் மயங்கிய நாட்கள் ,
மரத்தின் வாழ்வில் சிதறியப் பூக்கள்!! "
Please anybody help me getting this entire poetry by great zkannadasan
DeleteFull poetry of மனமே உன்னால் மயங்கிய நாட்கள் -கவிஞர் கண்ணதாசன் உடனே தேவை.
Deleteதனிமைத் தவம்! எனக்கும் சில சமயங்களில் தனித் தீவாக இருந்துவிட வேண்டும் என்ற ஏக்கம் எழுந்ததுண்டு. அருமையான வரிகளில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்காக வாழ்த்துக்களும், எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகளும்!
ReplyDeleteமரணத்தை கூட ரசித்தீர்களா...
ReplyDeleteஇந்த உலகை இருக்கும் இடத்திற்க்கு ஏற்றவாறு ரசிக்க முடிந்தால் இந்த வாழ்வே பேரானந்தம்தான்...
கவிதை படிப்பவர்களையும் தனியே பயணிக்க வைக்கிறது ஒரு காட்டு வழியே...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அருமையான படைப்பு
ReplyDeleteவார்த்தைகளைத் தாண்டிய அனுபவத்தில்
படிப்பவரையும் இழுத்துச் செல்லும்படியாக
உணர்வு பூர்வமான கவிதைகளை இப்படி
எல்லோராலும் படைக்க முடிவதில்லை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
/யானைப் பிளிரும்
ReplyDeleteசத்தத்திலிருந்து..,
சிறுத்தையின்
சீற்றத்திலிருந்து..,
தப்பித்து ஒரு இடத்தை
அடைந்தேன்.!
நான் பார்த்திராத இடம்
சுற்றிலும் பூக்கள்…
எண்களும் தெரியாது!
எண்ணங்களும் தெரியாது!//
அழகான வரிகள்
இன்று என் வலையில்
ReplyDeleteதயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.
அருமையான வரிகளில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்த கவிதை வேறு தளத்தில் பயணிக்கிறது, அந்த தளத்தில் நான் இல்லை... வார்த்தைகள் மனதை என்னவோ செய்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்
ReplyDeleteஅருமை சிறப்பான வரிகள்
ReplyDeleteஅருமை...!
ReplyDeleteவித்தியாசமான படைப்பு...!
கவிதை வழியே காட்டில் பயணித்த உணர்வு...!!
வாழ்த்துகள்...
நைஸ் மேடம்...
ReplyDeleteவேறு உலகமா என எண்ணும் எண்ண ஓட்டத்தில் கவிதை அமைந்துள்ளது. த.ம 7
ReplyDeletecast away என்ற ஆங்கிலப் படத்தின் கவிதை வடிவம்போல இருக்கிறது. பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை இப்படித்தான் நம்மை கலைத்து போடும். கலைந்ததை கவிதையாக்கியது அருமை.
ReplyDeleteவார்த்தைகள் விளையாடுகின்றன சகோதரி உங்கள் கவிதையில்,
ReplyDeleteதனிமை எவ்வளவு பெரிய விஷயம்..
எல்லோருக்கும் அது கிடைத்துவிடுவதுமில்லை..
கிடைத்ததை எல்லோரும் சரியாக பயன்படுத்துவதுமில்லை..
சொப்பன வாழ்வில் கிடைக்கும் அழகுத் தனிமையை
அழகுறக் கூறி கவி படைத்திருக்கிறீர்கள்..
அருமை அருமை...
என்னமோ சொல்ல வர்றீங்க. ஆனா எனக்குதான் ஒண்ணும் புரியல.. ஹி ஹி நிறைய படிக்கனும் குமாரு ( இது எனக்கு)
ReplyDeleteகாடுகளில் சுற்றும் தனிமையின் அழகை மன ஓட்டத்தை ரசிக்கும்படி நல்ல கவிதையாக மாற்றியிருக்கிறீர்கள்!
ReplyDeletebrilliant.அருமை.
ReplyDelete