Tuesday, January 03, 2012

மதுரை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


     என் அம்மா சில நாட்களுக்கு முன் ராஜ் டிவியில் அகட விகடம்நிகழ்ச்சியை பார்த்திருக்காங்க. நிகழ்ச்சியின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே அம்மா பார்த்திருக்காங்க.  

     ஒரு கிளார்க்(கிளார்க்கான்னும் சரியா தெரியலை. ஆனால், அரசாங்க ஊழியர்)  ஒருத்தர் சில வருடங்களுக்கு முன் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் மனநலம் சரியில்லாத ஒரு பெண் மலத்தை தின்னும் காட்சியை கண்டு மனம் பதறி, அவளை தன்னோடு அழைத்து சென்று மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டு வந்திருக்கிறார். 

   வீட்டிற்கு வந்து யோசிக்கையில், இதுப்போல் மனநலம் பாதிக்கப்பட்டு.., ஏதோ காரணங்களுக்காக தெருவில் விடப்பட்ட பெண்களின் நிலையை யோசித்து பார்த்திருக்கிறார். அப்படிப்பட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அதனால் சில பெண்கள் கர்ப்பிணியாய் அலையும் அவலங்கள்தானே அப்பெண்களுக்கு நேர்கிறது.
நாமே ஏன் அப்பெண்களுக்கு பாதுகாப்பாய் இருக்கக்கூடாது என்று எண்ணி, தன் அரசாங்க பணியிலிருந்து விலகி, மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட பெண்களுக்கான காப்பகத்தை தொடங்கியுள்ளார். சிறிய அளவில் தொடங்கப்பட்ட காப்பகம் இப்போது கிட்டத்தட்ட 300 பெண்களை அவர் பாதுகாத்து வருகிறாராம். 

  இப்போது அப்பெண்கள் தங்க புதுசா கட்டிடம் கட்டி கொண்டிருக்கிறாராம். அதற்கு பொருளுதவி வேண்டி அகடவிகடத்தில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். 

   அவருக்கு பொருளுதவி செய்யனும்ன்னு அம்மா ரொம்ப ஆவலா இருக்காங்க.  ஆனால், அவர் பெயரோ அவர் நடத்தும் காப்பகத்தின் பெயரோ, மற்ற  எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது. எனவே, இதை படிக்கு மதுரை வாழ் பதிவர்களுக்கு தெரிந்தாலோ அல்லது தங்கள் நண்பர்களிடத்தில் விசாரித்தோ முகவரியை அளித்தால் பேருதவியாய் இருக்கும்.

 உதவுவீர்களா நண்பர்களே?


29 comments:

  1. நல்ல மனசு உங்களுக்கு ...

    ReplyDelete
  2. உதவணும்கற நல்ல மனசு எல்லாருக்கும் வந்துடறதில்லை தங்கச்சி. ஈர மனசு படைச்ச அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள்! மதுரையில் (என் ஊர்) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அந்த நல்ல மனிதருக்கு என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்கறேன்மா.

    ReplyDelete
  3. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
    நீங்கள் ராஜ் டிவிக்கு தொலைபேசியில் அழைத்தாலே சரியான தகவல் கொடுத்து விடுவார்கள்.
    044 24334149, 24334150, 24334151

    ReplyDelete
  4. அம்மாவின் உதவும் சிந்தனைக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. வணக்கம் அக்கா நல்ல மனம் படைத்த உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

    அந்த காப்பகத்தை நடத்திவரும் அந்த உன்னத மனம் படைத்த தாயிற்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. உதவி செய்ய காத்திருக்கும் நம் அம்மாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...!!!

    ReplyDelete
  7. சத்தமின்றி நடத்தி வரும் அந்த காப்பக தாய்க்கு நன்றிகள் நன்றிகள்...!!!

    ReplyDelete
  8. மதுரை வாழ் ட்வீட்டர்கள்ட்ட இந்த பொறுப்பை ஒப்படைக்கறேன்

    ReplyDelete
  9. அம்மாவின் நல்ல எண்ணத்தை வரவேற்கிறேன்..

    ReplyDelete
  10. அம்மாவின் மனதிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    //ரோட்டில் மனநலம் குன்றியவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்வோம். பரிதாபப் படுவோம் அல்லது ஒதுங்கி செல்வோம். ஆனால் இவர் கடந்து எட்டு ஆண்டுகளாக இது போன்ற 400பேரை தினந்தோறும் தேடிச்சென்று மூன்று வேளையும் உணவளித்து ஊட்டி விடுகிறார். ஒரு சமையல் கலை நிபுணரான இவர் தனக்கு வெளிநாட்டில் கிடைத்த வேலையை உதறி விட்டு இப்பணியைச் செய்கிறார். வெளிநாட்டுக்கு கிளம்புவதற்கு முன் ஒரு முதியவர் பசியால் தன் மலத்தையே உண்ட காட்சி இவரை பாதித்து விட்டது. வேலையை தூக்கி எறிந்து விட்டு அன்றிலிருந்து இப்பணியை செய்து வருகிறார். தினந்தோறும் 100சதுர கிலோமீட்டர் பரப்பலவில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கு வீதி வீதியாக தேடிச் சென்று மூன்று நேரமும் உணவளிக்கிறார். இதுவரைஒரு கோடியே இருபது லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளார்.//

    இவரையா சொல்றீங்க???
    அப்படியாயின் எளிதாக இவரை பற்றி விவரங்கள் கிடைக்கும். சமீபத்தில் கூட CNN நிறுவனம் உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

    ReplyDelete
  11. http://ananthi5.blogspot.com/2010/10/blog-post_27.html

    இந்த லிங்க் பாருங்க. ஒருவேளை இவரா இருக்கலாம். இவர் குறித்து மதுரை மக்களுக்கு தெரியாமல் இருக்காது.

    ReplyDelete
  12. நல்ல விடயம், உதவும் கரங்களுக்கு நன்று

    ReplyDelete
  13. அம்மாவின் உதவும் சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. தங்கள் அம்மவிற்கும்,தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ராஜி.

    விவரம் கிடக்கப்பெற்றால் எங்களுக்கும் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  15. Akshaya's Helping in H.E.L.P Trust
    9, West 1st Main Street, Doak Nagar Extension, Madurai 625 016. India
    Ph : + 91 (0)452 4353439
    Cell : + 91 98433 19933
    Email :mduakshaya@gmail.com
    Web: www.akshayatrust.org www.akshayausa.org

    ReplyDelete
  16. உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. உங்கள் அம்மாவின் உதவும் எண்ணத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/

    இவரைப் போன்ற நல்ல உள்ளங்களை ஊக்குவிக்க பலரும் முன்வரவேண்டும். அம்மாவுக்கு என் அன்பு வணக்கம்.

    ReplyDelete
  19. வணக்கம் ராஜி அக்கா, நல்ல கருத்தினைத் தந்திருக்கிறீங்க.
    ரொம்ப நன்றி...நானும் இந்த தகவலை அனைவரிடமும் கொண்டு சேர்க்கிறேன்.

    ReplyDelete
  20. உதவும் குணத்துக்கு வாழ்த்துக்கள் நீங்கள் தேடும் நபர் இவர்தான் போன் நம்பர் வாங்கி தருகிறேன்
    "இந்த லிங்க் அவருடையது "
    அன்புப் பரிசாய் வோட்டு போடலாம்..!!

    ReplyDelete
  21. Akshaya's Helping in H.E.L.P Trust
    9, West 1st Main Street, Doak Nagar Extension, Madurai 625 016. India
    Ph : + 91 (0)452 4353439
    Cell : + 91 98433 19933
    Email :mduakshaya@gmail.com
    Web: www.akshayatrust.org www.akshayausa.org

    ReplyDelete
  22. Donation in Indian Rupees

    Feeding RS.
    Feed 425 people 3 times/day
    20,000
    Feed 425 people one meal/day
    7,000
    Feed one person/day
    50

    We request Support for

    - Feeding programme and
    - Home maintenance
    - Corpus fund

    ReplyDelete
  23. Donation in Indian Rupees

    Donations can be made in Indian Rupees
    in any branch of ICICI Bank in India favouring

    Akshaya's Helping in H.E.L.P. Trust
    ICICI Bank Ltd., Kochadai Branch,
    Madurai-625010

    S.B.A/C 601 701 013 912

    I F S C I C I C 0 0 0 6 0 1 7
    M I C R 6 2 5 2 2 9 0 0 7

    Donations exempt under 80 (G) of I.T. Act Reg.No.108/2003-04/ITC Madurai

    Please mail us following details to trace donations, issue receipt and proper account maintenance.

    ReplyDelete
  24. அந்த நல்ல மனிதருக்கும்., அவருக்கு
    உதவ நினைக்கும் உங்கள் அம்மாவிற்கும்
    நன்றிகள் பல..

    ReplyDelete
  25. உதவும் எண்ணம் கொண்ட உங்க அம்மாவுக்கும் உங்களுக்கும் இறைவன் எல்லா அருளும் தருவான் சகோ!

    ReplyDelete