Wednesday, February 04, 2015

நன்றி இறைவா!!


நொடிக்கொருதரம் சாலைகளில்   
பறக்கும் மகிழுந்துகளும்..,
எதிர் வீட்டுக்காரி     வாங்கிருக்கும் 
புது  ஆரமும்....,

மச்சினர் மகள்  சேர்ந்திருக்கும்  
மிகப்பெரிய பள்ளியும்...,   
நாத்தனார் சென்று வந்த 
அயல்நாட்டு  சுற்றுலாவும்....,

பாதாளம் வரை பாயும் பணமும்...,
புழுங்க வைக்கும் பகட்டும்...,
கால்  வாரிவிடும்  உறவுகளை  பற்றியும்  
முறையிட விரைகிறேன் உன் இருப்பிடம் நோக்கி....,

 கண்ணீர்விட்டு அழுது , கதறி, 
ஏன் இந்நிலை!?
 என்ன தந்தாய் எனக்கு!?
என   மணியடித்து புகார் வாசித்து நிமிர்கிறேன்.,  

 எதையும் தாங்கும் இதயத்தையும்..,
மாறாத புன்னகையும்.., 
தோள் தட்டி ஆறுதல் சொல்லும்   நட்புக்களையும்  ...,

இவையெல்லாவற்றையும் விட நானும் 
உன்னுடன் இருக்கையில், 
வேறென்ன  வேண்டும் என்பதுப் போல 
உள்ளிருந்து   நீ புன்னகைக்க..,  

உன் புன்னகையின் பொருளுணர்ந்து 
திருப்தியுடன் திரும்புகிறேன்......,
 கை நிறைய  கிடைத்த வரங்களோடு!! 
நன்றி இறைவா!!

34 comments:

 1. பொன்மகளே வருக பதிவு கோடி தருக

  ReplyDelete
 2. ///எதையும் தாங்கும் இதயத்தையும்..,
  மாறாத புன்னகையும்.///

  இது இரண்டு இருந்தாலே போதுமே வாழ்க்கையை வெல்ல

  ReplyDelete
 3. அவன் உள் இருந்தால்
  எதிலும் மனம் நாடாது.
  அவன் உள் இல்லை எனின்
  எதிலும் மனம் நிறையாது.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 4. வரவேற்புகள்...

  ReplyDelete
 5. நலம் தானே ராஜி...வெல்கம் back

  ReplyDelete
 6. ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் அதுபோலதான் சோதித்து கடைசில. கைநிறைகைநிறைய வரங்கள் கொடுத்து இருக்கிறான்

  ReplyDelete
 7. மீண்டும் வருகை தந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகுக :-)

  ReplyDelete
 8. அம்மாடி!! வந்துடீங்க:)) எவ்ளோ தேடுனேன் தெரியுமா?? ஸ்வீட் அக்காவிற்கு வெல்கம் பொக்கே!!

  ReplyDelete
 9. வாங்க ராஜி , நலமா? மீண்டும் வந்தது மகிழ்ச்சி, வாழ்த்துகள்

  ReplyDelete
 10. என்னவோ நடந்திருக்கு! அதான் இந்தக் கவிதை. மனசு பாதிச்சுதான் இத்தனை நாளா வலைப்பக்கம் வரலையா? ஹூம்... மீண்டு(ம்) வந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். த.ம.+ (இது கவிதைக்கு)

  ReplyDelete
 11. காணாமல் போன கனவுகள் மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா...
  உங்கள் வருத்தம் கவிதையாக... எல்லாம் சரியாகும்...

  ReplyDelete
 12. காணாமல் போன கனவுகள் கனவுகள் கலைந்து வந்தாகிவிட்டது! நலம்தானே!! தொடருங்கள்!

  ReplyDelete
 13. மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்

  ReplyDelete
 14. "அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்... அவன்தான் வைகுந்தனே..."..

  "புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்கள் காணட்டுமே..கண்களும் காணட்டுமே.."

  நலமே விளைக! கவிதை அருமை.

  ReplyDelete
 15. வலையில் தங்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டனவே
  தொடர்ந்து வாருங்கள் சகோதரியாரே
  வாசிக்கக் காத்திருக்கிறோம்
  தம +1

  ReplyDelete
 16. எதிர்ப்பார்த்துக் கொண்டே இருந்தேன்... மிகவும் சந்தோசம் சகோதரி... இனி வலையுலகம் கலகலக்கும்...

  ReplyDelete
 17. நல்லதொரு பாசிட்டிவ் கவிதை !

  ReplyDelete
 18. நல்லதொரு பாசிட்டிவ் கவிதை !

  ReplyDelete
 19. நல்லதொரு பாசிட்டிவ் கவிதை !

  ReplyDelete
 20. நீங்கள் கடந்த வருடம் போட்ட கருத்துக்களை என் தளத்தில் நினைவு கூர்ந்து கொண்டிருந்தேன் ,கவிதையுடன் மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள்!
  த ம 8

  ReplyDelete
 21. அற்புதமான கவிதையுடன் மீண்டும்
  வலைப்பூக் கோயில் வந்தமைக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள்.. தொடருங்கள் வாழ்த்துக்கள் த.ம11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 23. மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துகள் ராஜி.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 24. வாங்க ராஜி அக்காள். தீபாவளி அல்வா சாப்பிட்டு காந்திமதி கடையைச்சாத்திவிட்டு ஓடியதை என்ன சொல்ல நன்றி அழகான கவிதையுடன் வருகைக்கு.

  ReplyDelete
 25. வருக வருக... நாங்களிருக்க கவலை எதற்கு?

  ReplyDelete
 26. நல்ல கவிதையுடன் அடுத்த சீசன் தொடக்கம் வருக வருக

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள்...நல்ல கவிதையுடன், நம் தொடக்கம்.வருக.

  ReplyDelete
 29. மீண்டும் வந்தாய் மகளே! இடர் ஏதுமின்றி மீண்டு வந்தாயோ! மகளே! மேலும் அன்று நேரில் இல்லம் வந்து நலம் பற்றிக் கேட்டதற்கும் மிக்க
  நன்றி

  ReplyDelete
 30. காணாமல் போன கனவுகள் ஆசைகள் முறையீடுகள்
  நன்று

  ReplyDelete