Tuesday, July 22, 2014

கோதுமை வடை - கிச்சன் கார்னர்

கோதுமைல என்னென்னெச் செய்யலாம்!? சப்பாத்தி, பூரி, அல்வா, கஞ்சி..., இதெல்லாம்  கேள்விப்பட்டும், சாப்பிட்டுமிருப்பீங்க.  கோதுமைல வடை!?   என்னாது கோதுமைல வடையா!? எதிர் வீட்டக்கா நாலு வடையை சாப்பிட கொடுத்தபோது நானும் இப்படித்தான் ஆச்சர்யப்பட்டேன். ஆனா, கோதுமை வடையை சாப்பிட்டப் போது இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டோமே!!ன்னு தோணிச்சு. கோதுமை வடையை சாப்பிடனும்ங்குற ஆசையைவிட, அதை பதிவாக்கனுமேன்ற ஆவலில் மறுநாளே கோதுமையை ஊற வச்சு வடை சுட்டு பதிவும் தேத்தியாச்சு!

தேவையான பொருட்கள்:
முழு கோதுமை  - ஒரு ஆழாக்கு,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 1,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - ஒரு துண்டு,
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - வடை பொறிக்க தேவையான அளவுகோதுமையை நாலு மணி நேரம் ஊற வச்சு, கழுவி உப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்சுக்கவும். உளுந்து, க்டலைப்பருப்புப் போல சீக்கிரம் மசியாது. மிக்சில போட்டு அரைச்சாலும் கொஞ்சம் நேரமெடுத்துக்கும். 


அரைச்ச கோதுமை மாவில் பொடியாய் நறுக்கிய வெங்காயம், கறிவேபிலை, கொத்தமல்லி சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க.

அடுப்பில் வாணலி வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி கோதுமை மாவை வடையாய் தட்டி போட்டு, ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

கோதுமை வடை ரெடி. மத்த வடைகள் போல் இல்லாம கொஞ்சம் கடினமா இருக்கும். எப்ப பாரு கோதுமைல சப்பாத்தி, பூரியே சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் நமக்கு ஒரு மாறுதல்.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்....,

29 comments:

 1. Replies
  1. அவசியம் செஞ்சுப் பாருங்க்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 2. பார்க்கும்போது செய்திட ஆவலைத் தூண்டுகிறது சகோதரி!

  செய்து பார்க்கின்றேன்.
  ஊறுவதற்கு நான்கு மணி நேரம் போதுமா?...
  அதுதான் அரைக்கக் கஷ்டமாக இருக்குமோ?

  பகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ராஜி!

  ReplyDelete
  Replies
  1. மற்ற தான்யங்கள் போல இல்லாம கோதுமை ஊறுவதற்கு அதிகம் நேரமெடுக்கும். கூடவே அரைப்படவும் நேரமெடுக்குது.

   Delete
 3. எல்லோரும் அல்வா தான் கொடுப்பாங்க, நீங்க வடைய கொடுக்கிறீங்களாக்கும்!!!!!

  ReplyDelete
  Replies
  1. எத்தனை நாளுக்குத்தான் அல்வா கொடுக்குறது!? அதான் இப்படி வித்தியாசமாய்....,

   Delete
 4. நான் கோதுமையை அரைமணிநேரம் ஊறவச்சி கச்சாயம் செய்வேன் ..மிக்சில தான் அரைக்கணும் ..நல்லா அரைபடும் .
  சிலவகை கோதுமை உடனே அறையும் சிலது டைம் எடுக்கும் .வடை செய்து பார்த்துட்டு சொல்றேன் ..ராஜி ...அப்புறம் முதலில் ரொம்ப நாளா சொல்லனும்னு யோசிச்சு மறந்து போய்டுவேன் ..உங்க சமையல் ரெசிப்பி சீர்க குழம்பு நிறைய தரம் செஞ்சுட்டேன் ..அருமையான ருசிங்க !!!

  ReplyDelete
  Replies
  1. காய்ச்சல்ல விழுந்து குணமாகி வந்தப்பின் சீரக காரக்குழம்போடு நெய் சேர்த்து சூடாய் சாப்பிட மரத்துப்போன நாக்குக்கு ருசி தெரிய ஆரம்பிக்கும். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஏஞ்சல்.

   Delete
 5. அருமை
  கோதுமை தோசை சாப்பிட்டிருக்கிறேன்
  கோதுமை வடை, இதுவரை இல்லை
  நன்றி சகோதரியாரே
  தம 4

  ReplyDelete
  Replies
  1. மற்ற தான்யங்களால் செய்த வடை போல இல்லாம கொஞ்சம் கடினமா இருக்கும். ஆனா, ருசியாய் இருக்கும் சகோ!

   Delete
 6. அட...! ம்... புதுசாத் தான் இருக்கு... செய்து பார்க்கிறோம் சகோதரி...~!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 7. என்னாது? எதிர் வீட்டு அக்கா நாலு வடை கொடுத்தாங்களா? ராஜி, இந்த காலத்திலேயும் இப்படி ஒரு நல்ல உள்ளமா? எந்த நேரத்திலேயும் வீட்டை மட்டும் மாத்தாதீங்கோ. இடது அபூர்வம்.

  ReplyDelete
 8. கோதுமை மாவு வடை மிக அருமை, ஆரோக்கியமும் கூட இல்லையா ராஜி

  பீர்னி கேட்டு இருந்தீங்க,

  இது நான் முன்பு போஸ்ட் பண்ண கீர்/பீர்னி

  தர்பூசணியை தவிர்த்து முயற்சித்து பாருங்கள், உங்கள் கிரகபிரவேசத்தில் ருசித்த சுவை வருதான்னு..

  http://samaiyalattakaasam.blogspot.ae/2013/04/rice-badam-kheer-with-watermelon.html
  முந்திரி ரவை கீர்/பீர்னி

  http://samaiyalattakaasam.blogspot.ae/2012/01/cashew-soji-kheer.html

  இரண்டு லின்க் கொடுத்துள்ளேன் , இரண்டையும் முயற்சி த்து பாங்கள்

  செய்து ருசித்து பகிருங்கள்.

  ReplyDelete
 9. கீர் என்பது பீர்னி

  ReplyDelete
 10. புதுசா இருக்குது! அரைச்சா ஜவ்வு வாராது? மிக்சில அரைக்க வந்துச்சா? அந்தச் சவ்வு ஒட்டாம? ம்ம்ம்

  ReplyDelete
 11. கோதுமை வடை எங்க அம்மா செஞ்சு தந்திருக்காங்க.. சூடா சாப்பிட்டாதான் சுவையா இருக்கும்.

  ReplyDelete
 12. அக்கா நலமா? என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ நாளா காணோம்:( உங்களை மிஸ் பண்றேன். சீக்கிரம் வாங்க!

  ReplyDelete
  Replies
  1. அக்கா எங்க போய்டீங்க???

   Delete
 13. கோதுமை வடை மிக அருமை அம்மா,

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

  ReplyDelete
 14. வணக்கம் சகோதரி !

  இன்பத் தமிழில் அருமையான் ஆக்கங்களைத் தினமும்
  வழங்கி வரும் தங்களுக்கு இந்த அம்பாளடியாள் விருது ஒன்றினை
  வழங்கிக் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றேன் .தயவு கூர்ந்து
  அதனைப் பெற்றுக்கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றேன் .

  http://rupika-rupika.blogspot.com/2014/09/blog-post_14.html

  ReplyDelete
 15. வணக்கம் சகோதரி!

  என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

  வணக்கத்துடன்,
  கமலா ஹரிஹரன்..

  ReplyDelete
 16. எனக்கு கிடைத்த VERSATILE BLOGGER AWARD ஐ உங்களுடன் பகீர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....


  http://anu-rainydrop.blogspot.in/2014/09/blog-post.html
  நன்றி

  ReplyDelete

 17. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 18. செய்து பார்த்து விடலாம். கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதுதான் தயக்கமாக இருக்கிறது! :)))

  ReplyDelete
 19. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete
 20. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete