Friday, November 13, 2015

அருள்மிகு சடைநாதர் திருக்கோவில், புதேரி - புண்ணியம் தேடி ஒரு பயணம் .

இந்த வாரம் புண்ணியம் தேடி போறப் பயணத்துல நாம பார்க்கப்போறது கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ   தொலைவில் இருக்கும் ”புதேரி”,யில் அமைந்திருக்கும் ”அருள்மிகு சடைநாதர் திருக்கோவில்”. 

பச்சைப் பசேலென பச்சைப் போர்வை போர்த்திய மாதிரி இருக்கும் வயல்களின் இடையே, இயற்கை எழில் சூழ்ந்த  ஒரு கோவில் தூரத்தில் தெரிவதை அந்த வழியே போகும்போது  பார்த்தோம். அந்த சூழல் மனசுக்கு பிடிச்சதால கிட்டக்கப் போய் பார்க்க போனோம்.  ஆள், அரவம் இல்லாம அமைதியாக இருந்தது ”அருள்மிகு சடைநாதர் திருக்கோவில்”.


சரி, கிட்டக்க போய்   தரிசிக்கலாம்ன்னு பார்த்தா,  அங்க கோயில் கிட்டக்க யாரும் இல்ல எங்களைத் தவிர.  ஒண்ணு ரெண்டு காக்கா, குருவியும் தான் இருந்துச்சு.  எங்க கட்டுச்சோறு மூட்டையை பகிர்ந்துக்க சில பைரவர்களும்கூட அங்க இருந்தாங்க. சரி, அடிக்கிற வெயிலுக்கு அங்க இருக்கிற திண்ணையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்ன்னு கோவில் உட்கார்ந்தோம்.  அந்த தூய்மையான காத்தும், இயற்கை சூழலும், மனதுக்கும் உடலுக்கும் ,கண்களுக்கும் இதமாக இருந்துச்சு.


அந்தி சாயும் நேரம் ஆச்சு. அந்தக் கோவில் பத்தி தெரிஞ்சுக்கவும், ஒரு பதிவு தேத்தவும் யாராவது அந்தப்பக்கம் வருவாங்களான்னு காத்திருந்தோம். கொஞ்ச நேரத்துல சில பெரியவர்களும், கோவிலைச் சுத்தம் செய்பவர்களும் வந்தாங்க. அங்க வந்தவங்கக்கிட்ட இந்தக் கோவில் பத்தி விவரங்களை கேட்டோம். யாருக்கும் தெரியலை. வயசானவங்ககிட்டேயும் கேட்டுப் பார்த்தோம். எங்க முன்னோர்கள் கும்பிட்டாங்க. நாங்களும் கும்பிடுறோம்ன்னு சொன்னாங்க. ஒருவேளை, கோவில் பூசாரியை கேட்டுப் பாருங்கன்னு சொல்லி எஸ்ஸ்ஸ்ஸ்கேப்பிட்டாங்க .
.

கொஞ்ச நேரத்துல கோவில் பூசாரியும் வந்தார். அவர்கிட்ட அந்த திருக்கோவிலின் வரலாற்றைப் பற்றி கேட்டோம். அவர் ரொம்ப அழகா பதில் சொன்னார். நாங்க அப்படியே அசந்து நின்னுட்டோம். நான், இந்த கோவிலில் பூஜை செய்ய வந்து ஏழு வருஷங்கள் தான் ஆச்சு. இதைத்தவிர எனக்கு வேறு எந்த வரலாறும் தெரியாதுன்னு சொன்னாரே பார்க்கலாம். 

சரி,  சடைநாதா!  உன் கோவில் பத்தி வெளி உலகத்துக்கு தெரிய வைப்பது உன் பொறுப்புன்னு, அவர்கிட்டயே பொறுப்பை ஒப்படைச்சுட்டு சுற்றிவர ஆரம்பித்தோம் .


கோவிலோட அருமை, பெருமை, வரலாறு தெரியலைன்னாலும் கோவிலை ரொம்ப சுத்தமாக வச்சிருக்காங்க. கோவில் சுவர்களெல்லாம் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு அழகாகக் காட்சியளிச்சது.

மேல இருக்கும் படம் திருக்கோவிலின் பின்புறம். எல்லா இடமும் சுத்தமா வெச்சிருக்காங்க.  கோவிலைச் சுற்றி பயபக்தியுடன் வலம் வந்தோம். பாரதி ஆசைப்பட்ட தென்னை மரமும் சிலது இருந்துச்சு.


திருக்கோவிலை முழுமையாக சுற்றி வந்துட்டோம். உள்ளூர்வாசிகள் சிலர் கோவிலுக்கு வந்தனர். ஆனா, யாருக்குமே வரலாறு தெரில. 


இது நுழைவு வாயிலின் உள்புற தோற்றம்.  மண்டபங்கள் எல்லாம் அழகாக கட்டப்பட்டுள்ளன .

நாங்கள் சென்றிருந்த அன்னிக்கு பிரதோஷ தினம். பக்தர்களும், சிவனடியார்களும் திருக்கோவில் வந்தாங்க.  பிரதோஷக்கால பூஜைகள் செய்து பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தாங்க. 


அங்கே சுவரில் அனுமன் சித்திரம் ஒன்று கல்லால் செதுக்கப்பட்டு இருந்தது. சிவன் கோவிலில்  அனுமன் எப்படி வந்தார்ன்னு தெரில. தெரிஞ்சுக்க ஆர்வம் எழுந்தாலும் அங்க பதில் சொல்ல யாருக்கும் தெரில.  இனி, இந்த ஊர்க்காரங்களை நம்பி பிரயோஜனம் இல்ல. நம்ம கூகுளாண்டவர்கிட்ட கேட்டுக்கலாம்ன்னு வந்துட்டேன்.

ஆனா, நூத்தியெட்டு தேங்காய் உடைக்குறேன், மதுரைதமிழனுக்கு மொட்டையடிக்குறேன்னு வேண்டியும் கூகுளாண்டவர் கைகொடுக்கல. நம்ம சகோஸ் யாருக்காவதுக்க்ல. இனி, தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கோ அண்ணன், தம்பி, தங்கச்சின்னு ஒரு பாசக்கூட்டமே இங்க இருக்கு. இனி இக்கோவில் பத்தி  தெரிஞ்சுப்பேன்னு பதிவு போட்டுட்டேன்.

நான் நினைச்சது சரிதானே?!

 நீங்க சொல்வீர்களா?! சொல்வீர்களா?!

24 comments:

 1. நாகர்கோவிலில் இருந்து இதுவரை நான் இந்த கோவிலுக்கு சென்றதில்லை.... இனி சென்று உங்களது சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இதுக்குதான் அண்ணன், தம்பி வேணும்ங்குறது. நன்றி சகோ!

   Delete
  2. அறிந்து கொள்கிறேன்...

   Delete
 2. அக்கா முன்னாடியே பதிவு போட்டுருந்தா நா கேட்டுட்டு வந்திருப்பேன்.. 2 வாரம் முன்னாடி திற்பரப்பு போயிட்டு இது வழியா தான் வந்தோம்.. சரி யாராவது வந்து சொல்லட்டும்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. அடடா! மிஸ் பண்ணிட்டேனே! இனி யாராவது கண்டிப்பா சொல்வாங்க அபி!

   Delete
  2. ஆமாம் அக்கா.. யாராவது சொல்லிடுவாங்க..

   Delete
 3. படங்கள் அழகு! தல வரலாறு! கூகிளார் கூடச் சொல்லவில்லையா?

  ReplyDelete
 4. சடைப்ப நாதரும் கைக்கொடுக்கல, கூகுளாரும் கைக்கொடுக்கவில்ல. இனி நம்ம சகோஸ்தான் கைகொடுக்கனும்.

  ReplyDelete
 5. விஜயன் சொல்லிடுவாரு,கவலைப்படாதீங்க!
  (மாருதி சிவனின் அம்சம்தானே)
  புண்னியம் எங்களுக்கும்

  ReplyDelete
 6. கோவிலின் படங்கள் அருமை...
  விஜயன் அண்ணா எப்படியும் விசாரித்துச் சொல்வார் என்று நினைக்கிறேன்..

  ReplyDelete
 7. பழைய கோவில் புதுப்பிக்கப்பட்டு... வரலாறு தெரியலைன்னா என்ன, விடுங்கள்.. அருள் கிடைச்சா சரி!
  தம +1

  ReplyDelete
 8. ஸ்ரீ ன்னு ஒருத்தர். அத்தனைக் கோவில்களுக்கும் சென்று, மிக மிக மிக அருமையான படங்கள் எடுத்துப் பகிர்வார். அவர் தள முகவரி தொலைத்து விட்டேன். அவர் கட்டாயம் சென்று வந்திருப்பார் இங்கு. அவர் தளம் சென்றால் விவரம் கிடைக்கும். ஆனால்..

  ReplyDelete
 9. அழகிய புகைப்படங்கள் நன்று விடயங்களுடன்...
  தமிழ் மணத்தில் நுளைக்க... 7

  ReplyDelete
 10. சகோ! நான் நாகர்கோயில்காரி. நாங்கள் புத்தேரி என்றுதான் சொல்லுவோம். இந்தக் கோயிலுக்குச் சென்றவள். எங்க ஊர் ஜடாயுபுரம் ஆற்றங்கரையிலிருந்து வயல்வரப்பு வழி கோயிலை/புத்தேரியை அடையலாம். (பஸ்ன்னா ரொம்ப சுத்துப் பாதை. ) இந்தக் கோயில் எங்கள் ஊருக்கும் புத்தேரிக்கும் இடையில் வயலின் நடுவே இருப்பது. அந்தக் கோயிலிலிருந்து பார்த்தா எங்க ஊர், ஆற்றங்கரை எல்லாம் தெரிஞ்சுருக்கும்... ஆனால் உங்களுக்கு எங்க ஊர் தெரியாதே...அஹ்ஹஹ் இந்தக் கோயிலுக்கு ஸ்தல வரலாறு என்று யாரும் சொல்லிக் கேட்டதில்லை. நான் அங்கிருந்த வரை (இப்போது சென்னை) . ஏனென்றால் சில கோயில்கள் அந்த ஊர் மக்களால் கட்டப்பட்டிருக்கும். அங்கு எந்தவித செதுக்கல்கள் கூட நீங்கள் பார்த்திருக்க முடியாது. பாடல்கள் போன்ற எதுவுமே சுவரில் பார்த்திருக்க முடியாது. சரியா...அப்படி நாளடைவில் வந்த கோயில்தான் அது. ரொம்பத் தொன்மையானது என்று சொல்லுவதற்கில்லை. நான் இருந்த காலத்தில் இந்த அளவிற்கு உங்கள் இப்போது புகைப்படத்தில் இருப்பது போல் இருந்தது இல்லை.
  அது சரி புத்தேரி போனவர்கள் பக்கத்தில் இருக்கும் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரர் போகவில்லையா? திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) போகவில்லையா? இவை இரண்டும் + புத்தேரி யோகீஸ்வரர் கோயில் செல்லவில்லையா? யோகீஸ்வரர் கோயில் ஸாஸ்தா ...ஆனால் இப்போது யோகீஸ்வரர் என்று சிவ வழிபாடு...என்ற ஸ்தல வரலாறு உண்டு. இப்படி ஒருவேளை சடைநாதர் கோயிலும் மக்களால் ஆகியிருக்கலாம்.. ஆனால் அங்கிருந்தவரைக் கேட்டதில்லை...

  மிக்க நன்றி சகோ எங்கள் ஊரைப் பார்த்ததற்கு புகைப்படம் வழி. சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. மட்டுமல்ல 10 வருடங்களுக்கு முன் போனபோதே எங்கள் ஊர் வயல் எல்லாம் காங்க்ரீட் ஆகியிருந்தட்ன...மனம் வெம்பிவிட்டது...நடந்த வயல் வரப்புகல் எல்லாம் மதில்சுவர்களாகி இருந்தது....

  ReplyDelete
 11. முந்தைய கமென்ட் இட்டது எங்களில் கீதா. பெயர் இட மறந்துவிட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. ஊர்க்காரவுங்க அலப்பறை ஓவரு...... சொல்லிப்புட்டேன்.

   Delete
 12. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ,இதே கேள்வியை ஆரம்பத்தில் விஜயன் அண்ணாவும் கேட்டு இருந்தார்.நீங்கள் சொல்லும் புத்தேரி ,வடசேரியில் இருந்து வடக்குபக்கமாக செல்லும் வழியில் இருக்கிறது. அதைத்தாண்டி ஒரு பெரிய குளமும்,இருக்கிறது .நாங்கள் செல்லும் போது,அதில் நிறைய தண்ணீர் இருந்தது , அதனையும் செல்லும் போது தான் நீங்கள் சொல்லும் சாஸ்தா கோவில் இருக்கிறது. பழைய காலத்தில் ,அந்த இடங்களெல்லாம் ஆரண்யமாக இருந்தவை ,அதில் காவலுக்கு வணங்கப்பட்ட தெய்வமே இந்த சாஸ்தா ,எந்த பூஜை நடைபெற்றாலும் ,இந்த சாஸ்தாவுக்கு தான் முதலில் பண்ணுவார்கள் .அங்கே இருந்து பார்த்தால் ,அதாவது புத்தேரி வயல்காட்டு வழியே நடந்தால் ,பழயாற்றின் கரை வரும் அந்த கரையின் அந்தபக்கம் தான்,ஜடாயுபுரம் சிவன் கோவில் இருக்கிறது ,அதைபற்றியும் விரிவான பதிவு இங்கே எழுதி இருக்கிறேன் .இந்த கோவில் ,நீங்கள் சொல்லும் புத்தேரி ,இல்லை ,நாகர்கோயில் - திருநேல்வேலி நெடுஞ்சாலையில் ,ஒழுகினேசரி வழியாக ,ஒட்டாபீஸ் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,முன்னோக்கி வரும் போது ,வாட்டர் டேன்க் வழியாக ,இந்த புதேரி என்னும் ஊருக்கு செல்ல வேண்டும் திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை என்று ,ஒரு மருத்துவமனை இருகிறது .அதன் பின்புறமாகவும் செல்லலாம். மேலும் இந்த திருகோவிலின்,சுவர்களில் கல்வெட்டுக்கள் உள்ளன .இந்த திருகோவிலின் வரலாறு ,திருவிதாங்கூர் செப்பு பட்டயங்களில் இருக்கிறது .முடிந்தால் அதையும் படித்து பிறகு விரிவான பதிவு இருக்கிறேன் அங்கே ஊருக்கு வெளியே ,சிவன் கோவிலும் ,ஊருக்கு உள்ளே நாராயணர் ,கோவிலும் நாகர்கோயில் பேச்சு வழக்கப்படி ,மச்சான் மச்சினன் என்று அழைக்கப்பட்டு ,இரண்டாம் வரி மலையில் இருந்து உற்பத்தியாகும் பழையாற்று படுகையில்,பழையாறு நதி கடலில் கலக்கும் வரை 21 சிவன் -விஷ்ணு கோவில்கள் உள்ளன .அவைகளில் சிலவற்றை கூட இங்கே பதிவிட்டுள்ளேன் .இனி ஒரு தத்துவமாக ,நாராயணன்னை அடைவது எளிது எனவும் அதனால் அவர் ஊருக்கு உள்ளேயும் ,சிவனை அடைய கடுமையான தவம் வேண்டும் என்பதற்காக ,சிவன் கோவில் ஊருக்கு வெளியேயும் ,அமைத்த தத்துவத்தில் இருகின்றன . நீங்கள் சொல்லும் திருபதிஸ்சாரம் கோவில் பதிவு ..இங்கே விரிவாக இட்டுள்ளேன் .
  http://rajiyinkanavugal.blogspot.in/2013/09/blog-post_16.html

  இது ஜடாயுபுரம் பற்றிய பதிவு ..
  http://rajiyinkanavugal.blogspot.in/2013/09/blog-post_13.html

  நன்றி சகோ

  ReplyDelete
 13. ஹலோ ராஜி...சேம் ஊருதான்...நான் திருப்பதிசாரத்துக் காரிதான்...நீங்கள் சொல்லும் எல்லாமே பழையாற்றின் கரையிலதான் .....ஓட்டாபீஸ்.....கல்லூரிக்கு நட்ந்து செல்லுவது...வெள்ளமடம் வழி நாக்கால் மடம் வழி வந்தால் எங்கள் வீடு....முன்பு கிராமத்தில் இருந்தோம் பின்னர் கீழூர் வந்தோம். அதே ஊருதான்..திரவியம் ஆஸ்பத்திரி எல்லாம் அதே....புத்தேரி என்றுதான் நாங்கள் சொல்லுவது....

  இதே கோயில்தான்..நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் சரியே.....திருப்பதிசாரம் நான் பிறந்து வளர்ந்த ஊர் கல்லூரிப்படிப்புவரை...மணமான பின்புதான் திருவனந்தபுரம்...சென்னை என்று.....மிக்க நன்றி சகோ...எங்க ஊரைப் பத்தி எழுதியதைப் பார்க்கின்றேன்...

  ReplyDelete
  Replies
  1. Thats not puththeri or putheri its Puravaseri. But colloquially its Putheri not Puththeri.
   From: S.Chenthil
   Therekalputhur, Puravaseri (Putheri)
   skckingofalari@yahoo.co.in (facebook)

   Delete
 14. நல்லதொரு கோவில் பற்றிய தகவல்களுக்கும் படங்கள் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

  ReplyDelete
 15. புதேரி....ஓகே புரிந்துவிட்டது...சகோ....30 வருடம் ஆகிவிட்டது....ஸோ ...சரிதான் ........நன்றி சகோ....

  ReplyDelete
 16. சமீபத்தில் கூட ஆவி அதான் நம்ம கோவை ஆவி எங்க ஊருக்குப் போய்விட்டு வந்தார்.. நீங்களும் போயிட்டு வந்துருக்கீங்க...எங்க ஊர் மக்கள் இங்க சென்னைல மினி திருப்பதிசாரமே இருக்கு..அவங்க கூட போயிட்டு வந்துருக்காங்க நான் தான் இன்னும் எங்க ஊருக்குப் போகவே இல்லை......ம்ம்ம் உங்க மூலமா எங்க ஊர்...மிக்க நன்றி...

  ReplyDelete
 17. உண்மைதான் எங்களை அந்த திருகோவிலுக்கு கூட்டி சென்ற,வழிகாட்டி நண்பர்களிடம் கேட்டேன் .உங்கள் ஊர் இங்கே பெரிய விவாத பொருள் ஆகிவிட்டது அதனால் விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டபோது ,.உண்மையில் .அது புரவசேரி என்று தான் பொருளாம் ,புரவலர்கள் என்றால் தமிழ் புரவலர்கள் ,இல்லை தானம் வழங்குபவர்கள் இருந்த இடம் என சொல்ல படுவதுண்டாம் ,நாளடைவில் புரவசேரி மறைந்து புதேரி என்று ஆகிவிட்டதாம் .

  ReplyDelete
 18. சிறந்த பகிர்வு

  ReplyDelete