தாய்மை
தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில்
இன்று...
நமது முந்தைய தலைமுறையினர் ,நல்ல குணமுள்ளவர்களாகவும் ஒழுக்கத்திலும் ,சிறந்து விளங்கினர் .காரணம் அவர்கள் .காசுக்கவோ உடல் சார்ந்த இன்பங்களுக்கவோ .ஆசைப்படாமல் . அடுத்தவர்களை தும்புருத்தாது
நல்ல மனங்களோடு ,மானத்திற்கு அஞ்சி நடந்ததினால் தான்
தங்களுடைய குழந்தைகளுக்கும் ,அந்த நல்ல பழக்கவழக்கங்களை தாய்ப்பால் என்னும் அமிர்தத்துடன் ,ஊட்டிவளர்த்தனர் அப்பொழுது .நல்ல சமுதாயம் உருவாகி இருந்தது
.மனச்சாட்சிக்கு அஞ்சினர் பொய் ,களவு ,சூது மற்றும் மது போன்ற தீய பழக்கங்களை ஒதுக்கி வைத்து இருந்தனர் ஆனால் ,அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு
இல்லாமல் போய் ஒழுக்கம் என்பது கடுகு அளவு கூட இல்லாமல் போனதற்கு காரணம் தாய்மார்கள் நல்ல பண்புகளை தாய்ப்பாலுடன் ஊட்டாமல் ,வியாபார நோக்கோடு வரும் பவுடர்ப்பால்களை கொடுப்பதினால் தான் நல்ல
சமுதாயம் இல்லாமல் போனது ,இந்த பதிவின் நோக்கமே ,பண்டைய காலத்து மருத்துவ முறைகளை மீண்டும் வெளியே கொண்டுவந்து ,நல்ல சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்பதுதான் .அந்த தாய்மை வரிசையில்
இன்று
பச்சை மருந்துப்பொடி
தேவையானவை:
சுக்கு - 100 கிராம்
மிளகு - 25 கிராம்
திப்பிலி - 10 கிராம்
நறுக்கு மூலம் - 25 கிராம்
ஓமம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 25 கிராம்
பெருங்காயம் - ஒரு புளியங்கொட்டை அளவு
கடுகு - 50 கிராம்
சீரகம் - 25 கிராம்
அக்கரா - ஒரு சிறிய துண்டு
சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு
சன்னயிரு - 25 கிராம்
சாலியல் - 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்
செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், ஓமம், பெருங்காயம், அக்கரா, சித்தரத்தை, சன்னயிரு, சாலியல் மற்றும் சதகுப்பையை அம்மியில் நன்கு தட்டி பிறகு மிக்ஸியில்
சேர்த்து அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். இவையெல்லாம் சற்று
கடினமாக இருக்கும் என்பதால் நன்கு தட்டிவிட்டு பிறகு மிக்ஸியில் அரைத்தால் மட்டுமே
உடைந்து பொடியாகும். இல்லையென்றால், மிக்ஸியின்
பிளேடு உடைந்துவிடும். இத்துடன் தேவையானவற்றில் மீதமிருப்பவைகளை சேர்த்து
அரைக்கவும். இப்படி அரைத்து சலித்தெடுத்து வைப்பதுதான் பச்சை மருந்துப்பொடி. பிறகு,
காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்து,
அவ்வப்போது கஷாயம் செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்கவும்.
கஷாயம் செய்யும் விதம்:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
ஒரு டீஸ்பூன் பச்சை மருந்துப் பொடி, ஒரு டம்ளர்
தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு,
தட்டிய கருப்பட்டி சிறிது சேர்த்துக்
கரைந்ததும் எடுத்து வடிகட்டி பிறகு பரிமாறவும்.
குறிப்பு:
பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை
பிறந்த முதல் மாதம் இதைக் குடிக்கக் கொடுக்கும்போது, கர்ப்பப்பை விரைவில் குணமடைய உதவும்.
மேலும், தாய்ப்பாலின் மூலமாக இந்த மருந்தின் பலன் குழந்தையைச் சென்றடையும்; குழந்தைக்கு
வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கும்
No comments:
Post a Comment