Thursday, January 18, 2018

இந்தியாவின் விசித்திர உணவுகள்-கலாச்சாரம்

அருவருக்கத்தக்க உணவுகள்ன்ற தலைப்பில் உலகத்தின் பல்வேறு நாடுகளின் உணவு பழக்கத்தை  பதிவா போட்டு,  உங்க  முகம் சுளிக்க வைத்த ராஜி, அன்னிக்கே சொன்னேன், இந்த உணவு பதிவு வரும். ஆனா வேற ரூபத்தில்ன்னு.. சீரியல்ல வருமே! இனி அவருக்கு பதில் இவர்ன்னு.. அதுமாதிரி...   இந்தியாவிற்கும் விசித்திரமான பழக்க வழக்கத்திற்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்குறதால, இங்க இனம், நிறம், மொழி, கலாச்சாரம், கல்வி, கடவுள்ன்னு வித்தியாசங்களுக்கு குறைவில்ல. எல்லாத்துலயும் வித்தியாசம் இருக்குற மாதிரி உணவு பழக்கத்துலயும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.  அந்த மாதிரியான வித்தியாசமான உணவு வகைகளை இன்னிக்கு பார்க்கலாம்..
நாமெல்லாம் தவளையை பார்த்தால் தலைதெறிக்க ஓடுவோம். ஆனா இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலம் பக்கம் போனா அந்த தவளை போனா, அதான் தலைதெறிக்க ஓடும். காரணம் இந்த மாநிலத்தில் தவளைக்கால்கள் மிகவும் பிரமாதமான உணவு. அதுவும் பண்டிகை காலங்களில் சிக்கிம் பக்கம் போனீங்க தவளை கால் பிரை,  சூப், கிரேவின்னு விதவிதமா சமைச்சு அசத்திடுவாங்க. அதுக்கு அவங்க சொல்லுற காரணம், தவளைக்கால் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராதாம். அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கிறவங்க சிக்கிம் பக்கம் ஒரு விசிட் அடிக்கலாம் . 
அடுத்து நாம பார்க்கபோறது கோரிஷா என்பது மூங்கில் தளிர்களை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ, அஸ்ஸாம் பகுதி மக்கள் சாப்பிடுவார்களாம். மேலும் இது அப்பகுதியில் மிகவும் பிரலமான ஓர் சைவ உணவும் கூட. மேலும் இதனை அசைவ உணவை தயாரிக்கும் போதும் சேர்ப்பார்களாம்.  இதனை சமைக்கும் முறை வித்தியாசமாக இருந்தாலும், சுவையாக இருக்குமாம். இதோடு  பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து சிக்கன் கறிப்போல செய்தாலும் அதே சுவை வருமாம். ஊறுகாயாக, சாப்பாட்டுக்கு குழம்பாக என  இதை செய்வார்களாம்.  வாய்ப்பு கிடைக்குறவங்க சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.
அடுத்து நாம சட்டீஸ்கர் மாநிலத்துக்கு போகலாம். பொதுவாக வீட்டில் எறும்பு வந்திட்டா, உடனே எறும்பு பொடி போடுவோம். இல்லன்னா, சீமஎண்ணெய் ஊத்துவோம்.  ஆனா சட்டீஸ்கர் மாநிலத்தில் இதுக்குலாம் வேலையே இல்ல. அங்க ஸ்பெஷல் உணவே சிவப்பு சுள்ளெறும்பு தான் ,இதன் முட்டைகளை கொண்டு இனிப்பு பதார்த்தம் செய்வாரர்களாம் ,இந்த எறும்புகளை கூட மிளகுப்பொடி சேர்த்து சட்னியாக அரைத்து சாப்பிடுவர்களாம்! காடுகளுக்கு சென்று சுள்ளெறும்புகளை பிடித்து அவற்றின், முட்டைகள் மற்றும் எறும்புகளை வெயிலில் நன்றாக உலர்த்தி, தக்காளி, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய், உப்பு மற்றும் சர்க்கரை.சிறிது சேர்த்து அரைத்த இந்த சட்னிக்கு பெயர் சப்ரா. நம்மூர்ல,  எதாவது சாப்பாட்டுல எறும்பு இருந்து, அம்மா, பாட்டிக்கிட்ட சொன்னா, எறும்பை சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும்டான்னு சொல்வாங்க. அப்படி சாப்பிட்டும் நான் ஏன் கண்ணாடி போட்டிருக்கேன்னு தெரில. பயபுள்ளைக பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டுதுக .
நம்மூர்ல கூழ் விக்கிற மாதிரி இது ரோட்டோரங்கள்ல கூட வச்சு விற்பாங்களா., சட்னியில் நமக்கு தேவையான புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைய இருக்கு. நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் இதுல நிறைய இருக்கு. இந்த சுள்ளெறும்பு சட்னியை சாப்பிட்டா உடல் சுறுசுறுப்பாகவும் ,நினைவாற்றலை பெருக்கவும் செய்யுமாம் .
கோவா சுறாமீன் குழம்பு மற்றும் சுறாமீன் வறுவல். இந்த வகையான உணவுகள் நாவில் எச்சில் ஊறவைக்குமாம். இந்த குழம்பை சுவைக்கவே உலகின் பலபகுதிகளில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவார்களாம். இது அந்த இடத்தின் பாரம்பரிய உணவாகும். பொதுவா குட்டி சுறாமீன்களே இந்த உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றனர்.  இதெற்கென நிறைய செய்முறைகள் இருக்கின்றன.  
அடுத்து நாம பார்க்கபோறது  மேகாலயாவின் காரோ. காரோ என்னும் பழங்குடியினர் வசிக்கும் கரோ மலைபகுதில் இருக்கும் ஒருவிதமான பாரம்பரிய உணவான கருவாடு, சாம்பல் மற்றும் காய்கறிகளைக் கொண்டு மிக்ஸிங் செய்த குழம்பு செய்து சாப்பிடுவார்களாம். இவர்களுக்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. மன்னர்கால வரலாற்றில் நடந்த யுத்தத்தில் மலைக்குகைகளில் வசித்து சண்டைபோட்டு பிறகு சிறு,சிறு குழுக்களாக வசிக்க தொடங்கினர் என்றும் சொல்லப்படுவதுண்டு. இவர்களின் பாரம்பரிய உணவே இந்த சாம்பல் குழம்பு. இதன் செய்முறை வித்தியாசமாக இருப்பதோடு, இதன் சுவையும் வித்தியாசமாக இருக்குமாம். இந்த ஊர் ஆளுங்க செம அழகாம். அவங்களை பத்தி  ஒரு பதிவு போடனும்.
அடுத்து நாம பார்க்கபோறது ஒரு அருவருப்பான உணவு. பிடிக்காதவங்க கொஞ்சம் ஸ்கிப் பண்ணிட்டு போய்டுங்க. சில மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மிசோரம் பகுதியில் .நாயை உணவாக உட்கொள்கின்றனர். இது சீனாவின் பரவலாக காணப்படும் ஒரு விஷயமாகும். .இதைவிட கொடுமை என்னனா சீனாவில் உணவு தட்டுபாட்டு காலங்களில் வீட்டு நாயும் உண்ணப்படுவதுண்டு. நாகாலாந்து மிசோரம் போன்ற இடங்களில் வசிக்கும் பழங்குடியினர் நாய்களை விரும்பி உணவார்களாம் .. நாய்க்கறியும், மனுசக்கறியும்தான் எதுக்கும் உதவாதுன்னு நினைச்சுட்டிருந்தேன்.

பொதுவாக சாப்பாட்டில் கிடைக்கும் கருப்பு அரிசிகளை பொருக்கி வீசிடுறது நம்ம வழக்கம். ஆனா, அதே கருப்பு அரிசியை மட்டும் விரும்பி சாப்பிடுபவர்கள் நம் இந்தியவில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 1970 ன் கடைசிகளில் 80 தொடக்கத்தில்  என நினைக்கிறேன். வருஷம் சரியாக ஞாபகம் இல்லை அந்த சமயம் மூன்று ஆண்டுகளா மழை பெய்யவில்லை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.  அந்த நாளிலெல்லாம் கருப்பு அரிசி நிறைய வந்தன. சாப்பாடு அப்படி கசக்கும். அதை சாப்பிட்ட அனுபவம் உண்டு வேறு அரிசி கிடையாது .வெளிநாடுகளில் இருந்து கோதுமை ,அரிசி எல்லாம் இறக்குமதி செய்து கொடுத்தனர். அது ஒரு பஞ்ச காலம். ஆனா அப்ப இருந்த அரிசியை உணவாக ரசித்து உண்ணும் இடம் மணிப்பூரில் சில இடங்களில் இருக்கிறது. சமைத்தபின் ஊதா நிறத்தில் மாறிவிடுமாம். இதற்கென தனி ரெசிபி இருக்கிறது .அதைவிட விஷேசமான தகவல் என்னனா இந்த அரிசி ஆன்லைன் ல கூட கிடைக்கிறது. .
அடுத்து நாமப்பார்க்கபோறது பட்டுப்புழு அஸ்ஸாம் பகுதியில் வாழும் மக்கள் பட்டுப்புழுவை சமைத்து சாப்பிடுவார்களாம். அதுவும் இந்த பட்டுப்புழுவை அறுவடை செய்து, அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளான பட்டு நூலை எடுத்துவிட்டு, எஞ்சியுள்ள புழுவை சமைத்து சாப்பிடுவார்கள்.என்ன அஸ்ஸாம்க்கு  ஒரு டிக்கெட் எடுத்திடலாமா .. 
அடுத்து நாம பார்க்கபோறது ஒரு வித்தியாசமான அதுவும் பலராலும் ஒதுக்கப்படும் எருமையின் மண்ணீரல் கொண்டு செய்யப்படும்  ஒருவகையான ரெசிபியை பூனேவிலுள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவார்களாம் மேலும் பண்டிகைக் காலங்களில் அப்பகுதி மக்களால் சமைத்து சாப்பிடப்படுமாம். மேலும் பூனேவில் உள்ள ஹோட்டல்களில் இந்த ரெசிபி கிடைக்குமாம் .இதில் இரும்பு சத்து அதிகம் இருக்காம் .

இனியும் நிறைய வித்தியாசங்களுடன் ,வினோத கொண்டாட்டங்களுடன் நாம் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம் 
நன்றியுடன்,
ராஜி.

15 comments:

 1. Replies
  1. நீண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பின்னான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 2. கட்டுண்டு கிடக்கும் நாய்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. அப்ப கோழி ஆடு, மாடு, முயல்?! மீனை வீட்டில் சுத்தம் பண்ணும்போது அதோட நுரையீரல வெளில துடிச்சதை பார்த்து ரொம்ப நாள் அசைவம் சாப்பிடாம இருந்தேன். அப்புறம் சின்னவ வயித்துல இருக்கும்போது டாக்டர் அட்வைஸ் செய்ய இப்ப சாப்பிடுறேன்.

   Delete
 3. மற்ற எல்லாம் போகட்டும். சாக்குக்குள் இருந்து நட்புடன் பார்க்கும் அந்த நாய்களை பார்த்தல் வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம். ஆமாம். அதோட கண்ணுல தெரிவது பயமா?! நட்பா?! நம்பினேன்னு கையறு நிலையான்னு தெரில.

   Delete
 4. ஸ்கிப் பண்ணி போகும்போதுகூட கொஞ்சம் தொந்தரவு செய்தது மனது.

  ReplyDelete
  Replies
  1. இனி இப்படிலாம் வராம நான் ஸ்கிப் பண்ணிடுறேன்ப்பா

   Delete
 5. ஆமாம் ராஜி சகோதரி/ ராஜி இப்படியான உணவுகள் பற்றிக் கேட்டிருக்கோம்...வெங்கட்ஜி கூட வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலா பதிவின் போது அங்கு உண்ணும் உணவுகள் பற்றி எழுதியிருந்தார்.

  ஆனால் நாய்க் கறி ரொம்ப வேதனைபடுத்தியது...

  ReplyDelete
  Replies
  1. துளசியண்ணா, கீதாக்கா ரெண்டு பேருமே என்னைவிட மூத்தவங்கதான். ராஜின்னே சொல்லலாம். சகோதரின்ற அடைமொழி வேண்டாம். சொல்லலைன்னாலும் நான் உங்க தங்கைதான். அது என்னிக்கும் மாறாது..

   ம்ம் இதைவிட முயல்,புறாக்கறி தின்பதுலாம் இன்னும் வேதனை. எத்தனை அழகான உயிர்கள் அவைகள்?!

   Delete

  2. ராஜி துளசி கீதா என்னைவிட மூத்தவர்களான நீங்கள் ( நான் என்றும் பதினாருதான் ) சகோ என்று அழைப்பதும் தவருதான்

   Delete
  3. பதினாறா?! அதிகமாயிருக்கும் போல இருக்கே தம்பி!?

   Delete
 6. பசி ருசியறியாதது போல ,ருசி பாவம் அறியாது.

  ReplyDelete
  Replies
  1. கொன்றால் பாவம் தின்றால் போச்சுங்குற மாதிரியா?!

   Delete
 7. மற்றவைகளை பார்த்து பதறாத மனம் நாய்களை பார்த்ததும் மிகவும் பதறுகிறது

  ReplyDelete