சில பாட்டுகள் என்ன படம், யார் நடச்சதுன்னே தெரியாது. ஆனா, அந்த பாட்டு ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கும். ஒருநாள் விசுவலா பார்க்கும்போது இவர் நடிச்சு இப்படி இந்த பாட்டை சொதப்பிட்டாரேன்னும் இருக்கும். இல்ல இவரா நடிச்சார், இத்தனை நாள் விசுவலா பார்க்கலியேன்னு ஆச்சர்யமா இருக்கும். அதுமாதிரி எனக்கு பிடிச்ச பாட்டில், எனக்கு பிடிச்ச நடிகர் நடிச்சது தெரிஞ்சு ஆச்சர்யப்பட்ட ஒருபாட்டைதான் இன்னிக்கு பார்க்கப்போறது...
பாடல்களை கேட்க ஆரம்பத்தில் ரேடியோவில் அடிக்கடி இந்த பாட்டு ஒலிப்பரப்பாகும். செம பாஸ்டா போகும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். ரேடியோவில் மட்டுமே கேட்ட பாட்டு காலப்போக்கில் மறந்து போச்சுது.. மெமரி கார்ட் வசதி கொண்ட மொபைல் கைக்கு வந்தபின் கடையில் கொடுத்து பாடல் இறக்கி வந்தபோது இந்த பாட்டு தொத்திக்கிட்டு வந்து என் பேவரிட் லிஸ்ட்ல சேர்ந்துச்சு. சமீபத்துல யூட்யூப்ல சுத்தும்போது இந்த பாட்டை கேட்க/பார்க்க நேர்ந்தது. அதில் கார்த்திக், இதயம் நல்லெண்ணெய் புகழ் சித்ரா நடிச்சிருந்தது ஆச்சர்யமா போச்சுது. பிடித்த பாடல் மேலும் அதிகமா பிடிக்க ஆரம்பிச்சுட்டுது....
ஒருநாள் நினைவிது..
பலநாள் கனவிது..
நினைக்க, நினைக்க
மனம் இனிக்கிறதே!
மணநாள் அழைக்குது..
சுகமாய் இருக்குது..
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே!...
வா!வா!வா! அன்பே வா!!
வா!வா!வா!ராஜா வா!!
ஒருநாள் நினைவிது...
பலநாள் கனவிது..
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே!!
வில்லோடு நான் அம்பாகவா?!
பெண்மானை நீ குறி பார்க்கவா?!
பூமீது வண்டாக நான் மாறவா?!
விரல் மீட்டத்தான் வீணை தடை கூறுமா?!
வண்டென்ன வரம் கேட்டு வரவேண்டுமா?!
நிலம் கேட்டுதான் மேகம் நீர் ஊற்றுமா?!
சந்தேகம் ஓடிப்போனதே!!
சந்தோஷம் கூடிப்போனதே!
உற்சாகம் ஏறிப்போனதே!
நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்ததே!!
பண்பாடும் காவியம்தான் இது..
பாடிடும் நாள் இது.
இளமை வேளையில் இனிமை கூடியது..
ஒருநாள் நினைவிது..
பலநாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே!!
கண்ணோடு நீ மணியாகவா?!
பெண்ணோடு நான் துணை சேரவா?!
பலவேஷம் நீ போட்டு எனை மாற்றினாய்!!
பெண் மனதில் தீ மூட்டினாய்!!
கலையான சிலை ஒன்றை நான் தேடினேன்!!
உனை கண்டதும் நான் சிலையாகினேன்...
பெண்மானை காளை வென்றதே!
பொன்னான வேளை வந்ததே!!
செல்வங்கள் வாழ்வில் சேருமே!
தெய்வங்கள் வாழ்த்து கூறுமே!
பண்பாடும் காவியம்தான் இது..
பாடிடும் நாள் இது..
இளமை வேளையில்
இனிமை கூடியது..
ஒருநாள் நினைவிது..
பலநாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே!! ..
படம்: திருப்புமுனை..
நடிகர்கள்: கார்த்திக், சித்ரா,
இசை இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா
வேகமா ஓடும் இந்த பாட்டுக்கு வேகமான நடன அசைவு இருந்திருந்தால் ஹிட் அடிச்சிருக்குமோ என்னமோ தெரில. இப்படிதான் சரியான காட்சியமைப்பு இல்லாததால் இளையராஜாவின் பல பாடல்கள் வீணடிக்கப்பட்டிருக்கு... எது எப்படியோ எனக்கு பிடித்த பாடலை கேட்டு/பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
நன்றியுடன்,
ராஜி.
அருமையான பாடல்...
ReplyDeleteபாட்டிக்கு பதிவு பகிர இப்போது தான் நேரம் கிடைத்ததோ...?!
கிளிக்கு றெக்கெ முளைச்சுட்டுது.. அது கூட்டை விட்டு பறந்து போச்சுதுன்னு சொல்வாங்க. அதுமாதிரி பேரருக்கு மூணு மாசம் ஆகிட்டுது. அவங்க வீட்டுக்கு போய்ட்டாரு.. உறவுகள் வரும் போகும்.. என்னிக்கும் எனக்கு பிளாக்தான்ண்ணே துணை
Deleteகேட்டிருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.
ReplyDeleteகார்த்திக் பற்றி எழுதியிருந்தீங்க...
ReplyDeleteஅதைக் காணவில்லையே....
வெகுநேரம் தேடுகிறேன்..
கார்த்திக் பற்றி எழுதியிருந்தீங்க...
ReplyDeleteஅதைக் காணவில்லையே....
வெகுநேரம் தேடுகிறேன்..
கார்த்திக் பற்றி எழுதியிருந்தீங்க...
ReplyDeleteஅதைக் காணவில்லையே....
வெகுநேரம் தேடுகிறேன்..