சில பாட்டுகள் என்ன படம், யார் நடச்சதுன்னே தெரியாது. ஆனா, அந்த பாட்டு ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கும். ஒருநாள் விசுவலா பார்க்கும்போது இவர் நடிச்சு இப்படி இந்த பாட்டை சொதப்பிட்டாரேன்னும் இருக்கும். இல்ல இவரா நடிச்சார், இத்தனை நாள் விசுவலா பார்க்கலியேன்னு ஆச்சர்யமா இருக்கும். அதுமாதிரி எனக்கு பிடிச்ச பாட்டில், எனக்கு பிடிச்ச நடிகர் நடிச்சது தெரிஞ்சு ஆச்சர்யப்பட்ட ஒருபாட்டைதான் இன்னிக்கு பார்க்கப்போறது...
Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts
Sunday, November 01, 2020
Sunday, June 21, 2020
குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல இந்த பாட்டு - பாட்டு புத்தகம்
கோதுமை ஊற வைத்து ஆட்டி, பால் எடுத்து, புளிக்க வைத்து, வாணலியில் நெய் சேர்த்து அதில் நீர்த்த கோதுமை பாலை சேர்த்து கிளறி, சர்க்கரை சேர்த்து கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, சுருண்டு வரும்போது இறக்காம விட்டால் அடிப்பிடிச்சு மொத்த உழைப்பும் வீண்,
Sunday, May 31, 2020
மானே தேனே கட்டிப்புடி - பாட்டு புத்தகம்
மோகன் படமா?! மைக் புடிச்சு பாடும் பாட்டு கண்டிப்பா இருக்கும். அப்படி ஒரு காட்சி இருந்தால் படம் ஹிட்ன்னு 80-90களில் சினிமா செண்டிமெண்ட்.. அந்த செண்டிமெண்ட் நல்லாவே வேலை செய்தது. பாட்டுக்காகவே மோகனின் படங்கள் ஹிட் அடித்தது. மொக்கை படமானாலும் மோகன் படங்களில் பாட்டு நல்லா இருக்கும். ஓரிரு பாட்டுக்கள் இல்ல எல்லா பாட்டுமே! மோகன்+இளையராஜா+எஸ்.பி.பி இந்த மூன்று பேரின் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒத்துப்போச்சு.
Sunday, April 05, 2020
பாடகி பி.சுசீலாவை இளையராஜா இதற்காகத்தான் தவிர்த்தாரா?! - பாட்டு புத்தகம்
ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் ஆஸ்தான மேக்கப் மேன், உடை அலங்காரம், டிரைவர்ன்னு இருந்த காலக்கட்டம் அது, டி.எம்.சௌந்திரராஜன்தான் எம்.ஜி.ஆர், சிவாஜியின் பெரும்பான்மையான பாடல்களை பாடுவார். அதேமாதிரி பத்மினி , சரோஜாதேவி மாதிரியான முன்னனி நாயகிகள் பாடலை பாட பி.சுசிலாதான் பாடுவது வழக்கம்... ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தால் முதல் கதாநாயகிக்கு பி.சுசீலாவும், இரண்டாவது கதாநாயகிக்கும் மற்றவர்களும் பாடுவது எழுதப்படாத விதி.
Sunday, March 22, 2020
இன்றைய கேப்டன் நிலைக்கு இந்த பாட்டு பொருந்தி போகுதா?! - பாட்டு புத்தகம்
சமீபத்துல கேப்டன் டிவியில் தே.மு.தி.க கட்சி மீட்டிங்க் போய்க்கிட்டிருந்துச்சு. கடைசியில் விஜயகாந்த் பேசினார்.
Sunday, March 15, 2020
பெண்களை வீக்கர் ஆஃப் செக்ஸ்ன்னு ஏன் சொல்றாங்க?!-பாட்டு புத்தகம்
பெண்களை வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்னு சொல்வாங்க. இதுக்கு பலவாறாய் அர்த்தம் சொல்வாங்க. உடல்ரீதியாக பலவீனமானவங்கன்னு அர்த்தம்ன்னு சொல்வாங்க. ஆனா, ஆணுக்கு நிகரா எல்லா வேலைகளையும் செய்றாங்க. அடுத்து அறிவுரீதியா சொல்வாங்க. அதுவும் தப்புன்னு பெண்கள் நிரூபிச்சு எல்லா படிப்புகளிலும் வெளுத்து வாங்கி உயர் பதவிகளில் இருக்காங்க. அப்ப மனரீதியாக சொல்லலாமா?!
ம்ம்ம்ம் சொல்லலாம். ஏன்னா, பெண் மனசு இளகினது. சட்டுன்னு உணர்ச்சிவசப்படுவாங்க. காதல், ஆசை, பொன்னாசை, மண்ணாசைன்னு எதுக்காவது சட்டுன்னு எல்லாரையும் நம்பி ஏமாந்து போவாங்க(விதிவிலக்குகள் உண்டு.) அதனால் சொல்லி இருப்பாங்களோ?!
பிள்ளைநிலா படத்தில் ராதிகா பணக்கார வீட்டு பெண்ணாய், எதுக்கும் அஞ்சாத அறிவார்த்தமான பொண்ணா இருக்கும். மோகனோடு ஒரே காலேஜில் படிப்பாங்க. மோதல்ல ஆரம்பிச்சு பிரண்டாகி, மோகன் மேல் காதல்கொண்டு, ஒரு நாலு வருசம் கழிச்சு மோகனை சந்திச்சு தன்னோட காதலை சொல்லும். ஆனா, அந்த நேரத்தில் மோகனுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் தகப்பனா இருப்பார். ராதிகா காதலை ஏற்க மறுத்துடுவார். அப்ப ராதிகா சொல்லும் வசனம் டாப்..
இனிமே, எந்த பொண்ணாவது உங்கக்கிட்ட என்னைய பத்தி என்ன நினைக்குறீங்கன்னு கேட்டா, அப்பிடி இப்படி எதாவது சொல்லி புகழாதீங்க. ஏன்னா, பொண்ணுங்க மனசு எந்தளவுக்கு இறுக்கமோ, அந்தளவுக்கு இளக்கம், எந்தளவுக்கு இளக்கமோ அந்தளவுக்கு இறுக்கம்ன்னு சொல்லி சூசைட் பண்ணிக்கும். வீக்கர் ஆஃப் த செக்ஸ்ன்ற வார்த்தை கேட்டால், இந்த வசனம் நினைவுக்கு வரும்.
பிள்ளை நிலா படத்தில் வரும் ராஜா மகள்.. ரோஜா மலர் பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டு ரெண்டு முறை வரும். ராதிகாவை புகழ்ந்து வரும். அடுத்து சோகமா ஒருமுறை வரும்..
ராஜாமகள் ......ரோஜாமகள்.....
ராஜாமகள்...... ரோஜாமகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா?
ராஜாமகள்....... ரோஜாமகள்
பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடுதான் பார்க்கிறேன்!!
பூவென்பதா?! பெண்ணென்பதா?!
நெஞ்சோடு நான் கேட்கிறேன்.
முள்ளோடுதான்.. கண்ணோடுதான்..
ரோஜாக்களும் பூக்கலாம்!!
அம்மாடி நான், அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்!!
கோபம் ஒரு கண்ணில்..
தாபம் ஒரு கண்ணில்..
வந்து வந்து செல்ல..
விந்தை என்ன சொல்ல?!
வண்ணமலரே!!
ராஜாமகள்....... ரோஜாமகள்.......
ஆடைகளும்.. ஜாடைகளும்...
கொண்டாடிடும் தாமரை..
வையகமும்... வானகமும்,,,
கைவணங்கும் தேவதை.
நீயும் ஒரு ஆணையி,ட
பொங்கும் கடல் ஓயலாம்!!
காலை முதல் மாலை வரை
சூரியனும் ஓயலாம்!
தெய்வமகள் என்று
தேவன் படைத்தானோ!?
தங்கச்சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ?!
மஞ்சள் நிலவே....
ராஜாமகள்... ரோஜாமகள்...
படம்: பிள்ளை நிலா
இசை:இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்.
எழுதியவர்:வாலி
இதே பாட்டு சோகபாட்டாவும் வரும்.. செத்துப்போன ராதிகா மோகனுக்கு மகளா பேபி ஷாலினியா பொறந்து வந்து பழிவாங்கும்.
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
பெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்
பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு
தொட்டில் வந்து சேர்ந்தவள்
மன்னவனே உன் நினைவில்
வெண்ணிலவாய் தேய்ந்தவள்
பெண் : கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
எந்தன் உயிரே…….ஏ…..ஏ…ஏ…..ஏ……
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
பெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்
பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு
தொட்டில் வந்து சேர்ந்தவள்
மன்னவனே உன் நினைவில்
வெண்ணிலவாய் தேய்ந்தவள்
பெண் : கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
எந்தன் உயிரே…….ஏ…..ஏ…ஏ…..ஏ……
பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
Sunday, March 01, 2020
நெருக்கமானவங்க பக்கத்திலிருக்குற மாதிரி உணரனுமா?!- பாட்டு புத்தகம்
அலைகள் ஓய்வதில்லை வெற்றிக்குப்பின் நினைவெல்லாம் நித்யா, அலைகள் ஓய்வதில்லையின் தெலுங்கு பதிப்பு என சில ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, மீண்டும் ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருந்தார். விசு, மௌலி என தமிழிலும் சில தெலுங்கு படத்திலும் நடிச்சுட்டு சினி ஃபீல்டுல தனக்கான இடத்தை தக்க வச்சிக்கிட்டிருந்தார். அப்படி வந்த படங்களில் ஒன்னுதான் தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சியின் அன்வேஷனா (Anveshana) படத்தில் பானுப்பிரியா ஜோடியா நடிச்சார். அப்படம், பின்னாளில் பாடும் பறவைகள் ன்னு தமிழில் டப் பண்ணாங்க.
திரில்லர் படமான இதில் வரும் ஆட்களும், இடங்களும், காட்சியமைப்பும் தமிழுக்கு அன்னியப்பட்டு இருந்ததால் படம் அவ்வளவா ஓடல. ஆனா, பாட்டுகள் ஹிட், அதிலும் "கீரவாணி! இரவிலே கனவிலே பாடவா நீ", பாட்டு செம ஹிட். அதுக்கு முக்கிய காரணம் இளையராஜா, எஸ்.பி.பி. எஸ்.ஜானகி கூட்டணிதான். வேற ஒரு டியூன் போட்டு அந்த பாட்டு ஓகே ஆனதும் தயாரிப்பாளர் என்ன ராகம் இதுன்னு கேட்க, கீரவாணின்னு ராஜா சார் சொல்லி, அதையே பாட்டா போட்டு தரச்சொல்லி கேட்டுவாங்கி வந்த பாட்டுதான் இது.
யாருமேயில்லாத ஏகாந்தமான ஒரு இடத்தில் தனியா இந்த பாட்டை கேட்டு பாருங்க, காபி மணத்தோடு மனசுக்கு பிடிச்சவங்க நமக்கு பக்கத்திலிருக்குற மாதிரி ஒரு ஃபீல் வரும். சட்சட்ன்னு மாறும் இசைத்துணுக்கு நம்மை சொக்க வைக்கும். பாட்டை கேட்டு சொக்கி போயிருக்கும் நேரத்தில் படத்தின் காட்சிகளை பார்த்தால் ஒட்டாத வாயசைவு கொஞ்சம் உறுத்தும். மத்தபடி பாட்டு சூப்பர்.
கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ...
இதயமே உருகுதே!!
அடி ஏனடி சோதனை.... தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி?! சங்கதி சொல்லடி..
வா நீ கீரவாணி...
இரவிலே கனவிலே பாட வா நீ,,
இதயமே உருகுதே...
இதயமே உருகுதே...
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி..
நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி..
தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய்..
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்..
வருவாய்.. பெறுவாய்.. மெதுவாய்...
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததே!!
அதற்கொரு விடை தருவாய்!!
(கீரவாணி)
புலி வேட்டைக்கு வந்தவன், குயில் வேட்டைதான் ஆடினேன்..
புயல் போலவே வந்தவன், பூந்தென்றலாய் மாறினேன்..
இந்த வனம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன்..
இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன்..
மனதில் மலராய் மலர்ந்தேன்..
வளருக இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்
Sunday, September 08, 2019
என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது.. - பாட்டு புத்தகம்
எள்ளலும் எகத்தாளமுமாய் காதல் பாடல்பாடி நம்மையும் ரொமாண்டிக் மூடுக்கு கொண்டு போறதில் எஸ்.பி.பியை மிஞ்ச யாருமில்லை. அதேப்போல் சோகப்பாடல்களைப்பாடி நம் கண்ணில் நீரை வரவழைப்பதில் கே.ஜே.யேசுதாஸைவிட யாருமில்லை. தாஸன்னான்னு இளையராஜாவால் செல்லமாய் கூப்பிடப்படும் யேசுதாஸ் பல பாடல்களை பாடி இருந்தாலும யேசுதாஸின் டாப் டென் பாடல்கள்ன்னு வரிசைப்படுத்தினால் அதில் நீதானா அந்தக்குயில் படத்தில் வரும் என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது...பாடல் கட்டாயம் இருக்கும்.
பாட்டின் முதலில் வரும் ஹம்மிங்க் பாட்டு சுமந்து வரும் சோகத்துக்கு கட்டியம் கூறி நம்மை அழைத்துச்சொல்லும். பாடலின் இடையிடையே ஒலிக்கும் உடுக்கை சத்தம் நம் மனசின் அடி ஆழத்திலிருக்கும் சோகத்தை அசைச்சு வெளிக்கொணர்ந்துட்டுதான் ஓயும். பாடல், வரிகள், இசைன்னு இந்த பாட்டு ஹிட்டடிக்க பல காரணங்கள் இருந்தாலும், இந்த படம் ஹிட் அடிக்காம போனதுக்கு ஒரே காரணமாதான் இருக்கும். அது இந்த படத்துல நடிச்ச ராஜா. செத்தவன் கையில் கொடுத்த வெத்தலை பாக்கு மாதிரின்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க, அந்த மாதிரி, உணர்ச்சிகொந்தளிப்பில் ஒலிக்கும் இந்த பாட்டை எந்தவித உணர்ச்சியுமில்லாம வெறும் வாயை மட்டுமே அசைச்சு சொதப்பி வச்சிருப்பாரு.
இரவுப்பயணத்தின்போது இந்த பாட்டை கேட்டா, கண்ணில் நீர் எட்டிப்பார்க்காம இருக்காது...
என் ஜீவன் பாடுது, உன்னைத்தான் தேடுது..
என் ஜீவன் பாடுது, உன்னைத்தான் தேடுது...
காணாமல் ஏங்குது, மனம் வாடுது...
எங்கே என் பாதை மாறி, எங்கெங்கோ தேடி தேடி....
என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது...
ஆஆஆஆ
கண்ணோடு மலர்ந்த காதல் ,
நெஞ்சோடு கனிந்த நேசம்
பொன்னாக வளர வேண்டும் வாழ்விலே!
ஒன்றோடு ஒன்று சேரும் .
உல்லாசம் வாழ்வில் கூடும்
என்றே நான் நினைத்தேன் உண்மை நீரிலே...
உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்,
கல்யாண காலம் வந்ததும் திருமணம்
எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ?!
ஆஆஆஆஆஆ..
என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது..
நெஞ்சத்தை திறந்து வைத்தேன்.
எண்ணத்தை சொல்லி வைத்தேன்.
என் ராணி மனசு இன்னும் தெரியலே!!
முல்லைப்பூ வாங்கி வந்தேன்.
முத்தாட ஏங்கி நின்றேன்.
கொண்டாட காதல் நாயகி வரவில்லை!!
என் ஜீவன் போனப்பாதையில் போகிறேன்..
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்
அன்பே என் காலம் யாவும் நீயன்றோ?!!
ஆஆஆ..
என் ஜீவன் பாடுது..உன்னைத்தான் தேடுது...
படம்: நீதானா அந்தக்குயில்..
நடிகர்கள் :ராஜா, ரஞ்சனி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
அடுத்த வாரம் கார்த்திக் பாட்டோடு வர்றேன். அதுக்கொரு காரணம் இருக்கு.. என்னன்னு ஒருவாரம் வெயிட் செய்யண்டி!!
ராஜி.
Sunday, June 02, 2019
தன்னாலே வந்த வினை..... பாட்டு புத்தகம்
நடிகர் பிரபுக்கு, கல்யாணம், சடங்கு, செக்ஸ்ன்னா என்னன்னே தெரியாத அப்பாவி சின்னதம்பி கேரக்டர் அத்தனை பாந்தமா பொருந்தி போகும்போல!! சின்னதம்பி மாதிரியான வெகுளி கேரக்டரில் எனக்கு தெரிஞ்சே அஞ்சாறு படம் நடிச்சிருக்கார்.
முதிர்கன்னி மலையாள பெண்ணான லட்சுமி டீக்கடை வச்சு வாழ்ந்திருக்கும் ஊரில் பிழைக்க வர்றார் பிரபு. அங்க பிரபுக்கும் ராதாவுக்கும் லவ்ஸ் உண்டாகுது. . ஒரு மழைநாளில் குடிச்சிட்டு வர்ம் பிரபு லட்சுமியை ராதான்னு நினைச்சு அணைப்பார். லட்சுமியும் ஒத்துக்கும். செக்சின் முடிவில் ராதா பெயரை பிரபு உச்சரிக்க, தன்மீது காதல்லாம் இல்லன்னு உணர்ந்து அங்க நடந்த விசயத்தை யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஆனா கர்ப்பம் ஆகி ஊருக்கெந் விசயம் தெரிய வரும். ஆனாலும் பிரபு பேரை சொல்லாம மறைச்சிடுவாங்க. படத்தின் முடிவில்தான் பிரபுக்கு அந்த குழந்தை தன்னுதுன்னு தெரிய வரும்.
இந்த படத்தின் வி.சி.ஆர் கேசட் என் அப்பாவின் பிரண்ட் வீட்டில் இருந்துச்சு. இந்த படத்தை அடிக்கடி பார்த்திருக்கேன். படம் முழுக்க காடு, அருவி,மலை சார்ந்த இடமா வரும். என் கனவு வீடு மாதிரியான ஆற்றங்கரை ஓரம் லட்சுமியின் டீக்கடை இருக்கும். அந்த லொக்கேஷனுக்காகவே இந்த படம் பிடிக்கும்..
முதிர்கன்னி மலையாள பெண்ணான லட்சுமி டீக்கடை வச்சு வாழ்ந்திருக்கும் ஊரில் பிழைக்க வர்றார் பிரபு. அங்க பிரபுக்கும் ராதாவுக்கும் லவ்ஸ் உண்டாகுது. . ஒரு மழைநாளில் குடிச்சிட்டு வர்ம் பிரபு லட்சுமியை ராதான்னு நினைச்சு அணைப்பார். லட்சுமியும் ஒத்துக்கும். செக்சின் முடிவில் ராதா பெயரை பிரபு உச்சரிக்க, தன்மீது காதல்லாம் இல்லன்னு உணர்ந்து அங்க நடந்த விசயத்தை யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஆனா கர்ப்பம் ஆகி ஊருக்கெந் விசயம் தெரிய வரும். ஆனாலும் பிரபு பேரை சொல்லாம மறைச்சிடுவாங்க. படத்தின் முடிவில்தான் பிரபுக்கு அந்த குழந்தை தன்னுதுன்னு தெரிய வரும்.
இந்த படத்தின் வி.சி.ஆர் கேசட் என் அப்பாவின் பிரண்ட் வீட்டில் இருந்துச்சு. இந்த படத்தை அடிக்கடி பார்த்திருக்கேன். படம் முழுக்க காடு, அருவி,மலை சார்ந்த இடமா வரும். என் கனவு வீடு மாதிரியான ஆற்றங்கரை ஓரம் லட்சுமியின் டீக்கடை இருக்கும். அந்த லொக்கேஷனுக்காகவே இந்த படம் பிடிக்கும்..
பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி,
இப்போ ரெண்டு கெட்டும போனா.. இதுகென்ன வழி காமி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும போனா.. இதுகென்ன வழி காமி
பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி......
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி,
இப்போ ரெண்டு கெட்டும போனா.. இதுகென்ன வழி காமி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும போனா.. இதுகென்ன வழி காமி
பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி......
தன்னாலே பெண்ணொருத்தி, தாயாக ஆன கதை...
உண்டாக்கி வைத்தவனே, ஓர் நாளும் அறிந்ததில்லை..
கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான்..
கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான்..
யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை
ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீ தானே?!
எந்நாளும் நாளை என்று ஏன் மறைத்தாய்?!
உண்டாக்கி வைத்தவனே, ஓர் நாளும் அறிந்ததில்லை..
கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான்..
கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான்..
யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை
ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீ தானே?!
எந்நாளும் நாளை என்று ஏன் மறைத்தாய்?!
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும் போனா இதுகென்ன வழி காமி...
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும் போனா இதுகென்ன வழி காமி...
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி..
அந்நாளில் போட்ட விதை இந்நாளில் வளருதிங்கே..
அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதிங்கே..
உல்லாச ராகத்திலே பாடுதொரு ஜோடிக் குயில்...
சொல்லாத சோகத்திலே வாடுதொரு ஊமைகுயில்..
வாய்ப்பூட்டு போட்டுகிட்டா
வந்ததை ஏத்துகிட்டா
பாய் போட்டு தனை இழந்த பூங்கோதை
தன்னாலே வந்த வினை தான் சுமந்தாள்...
அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதிங்கே..
உல்லாச ராகத்திலே பாடுதொரு ஜோடிக் குயில்...
சொல்லாத சோகத்திலே வாடுதொரு ஊமைகுயில்..
வாய்ப்பூட்டு போட்டுகிட்டா
வந்ததை ஏத்துகிட்டா
பாய் போட்டு தனை இழந்த பூங்கோதை
தன்னாலே வந்த வினை தான் சுமந்தாள்...
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி...
படம்: என் உயிர் கண்ணம்மா
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா
எனக்கு பிடிச்ச பாட்டு. உங்களுக்கு பிடிக்குதான்னு கேட்டு பாருங்க..
நன்றியுடன்,
ராஜி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி...
படம்: என் உயிர் கண்ணம்மா
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா
எனக்கு பிடிச்ச பாட்டு. உங்களுக்கு பிடிக்குதான்னு கேட்டு பாருங்க..
நன்றியுடன்,
ராஜி
Sunday, May 26, 2019
கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்
விரும்பியதை வெறுக்க வைக்கவும், வெறுத்ததை விரும்ப வைக்கவும் காலத்தினால் மட்டுமே முடியும். கார்த்திக் ரசிகைதான். ஆனாலும் இந்த பாட்டை மட்டும் பாஸ்ட் பார்வார்ட் பண்ணிடுவேன்.
என் அக்கா கல்யாணத்தப்போ இந்த படம் பார்த்தது. எனக்கு ரயில் பயணம் பிடிக்கும். ஆனா எல்லா உறவுகளும் பக்கத்திலேயே இருப்பதால், ரயில் பயணம்ங்குறது எனக்கு எட்டாக்கனியே!! என் அக்கா ஊரில் சின்னதா ஒரு ரயில்வே ஸ்டேசன் உண்டு. இந்த படம் பார்த்துட்டு தினத்துக்கு நாலு முறை அங்கு போய்டுவேன்.
இந்த படத்தின் எல்லா பாட்டும் அப்ப ஹிட். ஆனா படம் மொக்கை. இது பேய் படம் வேற! நாக்கு வெளித்தள்ளி கோரைப்பற்கள் காட்டி, வெள்ளை உடை உடுத்தி, காத்தில் ஜன்னல் அடிக்க பழிவாங்கும் கதை இல்லை இது. ஷூ, புல் ஹாண்ட் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் போட்ட சாதுவான பேயை இந்த படத்தில் பார்க்கலாம். முரடனை, களவானியை, பைத்தியத்தை லவ் பண்ண கதையெல்லாம் ஏத்துக்கிட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் பேயை ஒரு பொண்ணு லவ் பண்ணுறதை ஏத்துக்கலை. அதனால் படம் பிளாப்.
1988ல சின்ன பிள்ளையாய் இருந்த ராஜிக்கு பிடிக்காத இந்த பாட்டு, பின்னர் பிடிக்க ஆரம்பிச்சு இன்னிக்கு பேவரிட் கலெக்ஷனில் ஒன்னா இருக்கு.
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச...
கட்டி வச்சுக்க..
இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
இந்த நேரம் பொன்னான நேரம் ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
கட்டி ...
தனியா தவம் இருந்து.. இந்த ராசாத்தி கேட்டதென்ன?!
மனம்போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன?!
கன்னி மலர்களை நான் பறிக்க,,
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக.......
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க...
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க, தேன் கொடுக்க..
மாறாது இது மாறாது!!
தீராது சுவை தீராது!!
ஆயிரம் காலமே!!..
கட்டி ...
அந்த சுகத்துக்கு நேரம் உண்டு...
இந்த உறவுக்கு சாட்சி உண்டு..
தொட்டு தொடர்வது சொந்தமம்மா!!
தொட்டில் வரை வரும் பந்தமம்மா!!
அன்புக்கரங்களில் நீ அணைக்க.. நீ அணைக்க..
முத்துச்சரமென நீ சிரிக்க.. நீ சிரிக்க..
மாறாது... இது மாறாது..
தீராது.. சுவை தீராது...
ஆயிரம் காலமே !!
இந்த பொன்னான நேரம்..
வந்த கல்யாண காலமே!!
படம்: என் ஜீவன் பாடுது..
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், ஜானகி
எழுதியவர்: வாலி
எனக்கு பிடிச்ச பாட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
நன்றியுடன்,
ராஜி
Sunday, March 17, 2019
வானில் போகும் மேகம் யாரை தேடுதோ?! - பாட்டு புத்தகம்
டைம் மெஷின்ல ஏறி மீண்டும் வாழ்ந்து பார்க்க ஒரு சான்ஸ் கிடைச்சா எந்த பருவத்தை தேர்ந்தெடுப்பீங்கன்னு கேட்டால் பெரும்பான்மையினரின் பதில் பள்ளிப்பருவம் என்பதாகவே இருக்கும். ஏன்னா பொறுப்புகளற்ற பருவம் அது. தங்கள் தவறினை திருத்திக்கவும், கள்ளங்கபடமற்ற வாழ்வினை வாழ்ந்து பார்க்கவும், தாய் தந்தை, சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்த வாழ்க்கைக்காகவும், கிராமத்து வாழ்க்கையினை அனுபவிக்க என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். பக்கத்து வீட்டு அக்கா/ண்ணா. ஆசிரியர்/யை, சக மாணவி/வன் மீதான பப்பி லவ்வை அனுபவிக்க இப்படி பல காரணங்கள் உண்டு.
பதின்ம வயது பள்ளிக்காதலை மையமா வச்சு கார்த்திக், ராதா நடிச்ச அலைகள் ஓய்வதில்லையும், சுரேஷ், சாந்தி கிருஷ்ணா நடிச்ச பன்னீர் புஷ்பங்கள் படமும் ஒரே காலக்கட்டத்தில் வந்தது. பள்ளிக்காதலை சிலாகிச்சு, தெய்வீகமாய், புனிதமாய் காட்டியது அலைகள் ஓய்வதில்லை. ஆனா, பள்ளிக்காலத்து காதலுக்கும், காதலருக்கும் என்ன பாதுகாப்பு என பொட்டில் அடித்த மாதிரி உணர்த்தியது பன்னீர் புஷ்பங்கள். இந்த ரெண்டு படத்துக்கு அப்புறம்தான் பள்ளிக்கூடத்து காதல் அதிகமா வர ஆரம்பிச்சுது..
விடலைப்பருவத்து நட்பு, அதை காதலென்று நம்பி, ஆசிரியரையும் தோழியையும் சேர்த்து நாயகன் சந்தேகிக்க, விடலைப்பருவத்தின் தவிப்பை உணர்ந்த ஆசிரியர் நாயகனுக்கு சாதகமாய் பேச, இவர்களது நட்பையும் தாண்டிய உறவை தெரிந்த வீட்டினர் கண்டிக்க, அதனால் நண்பர்களின் துணையோடு ஊரைவிட்டு ஓடிப்போகும்போது, ஆசிரியர் இருக்கும் அதே ரயில்பெட்டியில் ஏற, பொறுப்பான ஆசிரியர் புத்திமதி சொல்லி வீட்டுக்கு அழைத்து போய், அங்கு பெத்தவங்களுக்கு புத்தி சொல்லி சுபமாய் முடிவதாய் படத்தினை முடிச்சிருப்பாங்க. ஆனா, அது காதலா?! நட்பா?! கால்யாணம் ஆச்சா?! காதல் பிழைத்ததா?! அல்லது பணால் ஆச்சான்றதுலாம் நம்ம கற்பனைக்கு விட்டுட்டாங்க.
இப்பாடல், ரெண்டுமுறை வரும்.கிளைமாக்ஸ் காட்சியில் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலையுறும் நடுத்தர வயதினரின் பக்குவப்பட்ட பார்வையில் இந்த பாடல் ஒலிப்பது ரொம்ப சிறப்பு. ஆசிரியரின் மனமுதிர்வை அழகாய் தனது குரலில் வெளிக்கொணர்ந்திருப்பார் மலேசியா வாசுதேவன். இரவில் கண்ணை மூடி இப்பாடலைக் கேட்டால் காற்றிலோ/அலையிலோ/ஆற்றிலோ அதன்போக்கில் போறதுமாதிரி இருக்கும்.
கோடைகால காற்றே!!
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு....
அதைக்கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே!! புதுச்சோலை பூக்களே~~
கோடைக்கால காற்றே!!
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ?!
யாரைத் தேடுதோ?!
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ?~
தன் உணர்வுகளை மெல்லிசையாக
தன் உறவுகளை வந்து கூடாதோ?~
இது நாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்....
சுகம் தேடி ஆடட்டும்....
இவைகள் இளமாலை பூக்களே! புதுச்சோலை பூக்களே!
கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!...
ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம்
இங்கே கண்டதே...
இங்கே கண்டதே...
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
வெண்மலை அருவி பன்னீர் தூவி
பொன்மலை அழகின் சுகம் ஏற்றாதோ?!
இவை யாவும் பாடங்கள்...
இனிதான வேதங்கள்..
இனிதான வேதங்கள்..
இவைகள் இளமாலை பூக்களே!! புதுச்சோலை பூக்களே!!
கோடைகால காற்றே!! குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
மனம் தேடும் சுவையோடு தினந்தோறும் இசைபாடு..
அதைக்கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...
இவைகள் இளமாலை பூக்களே!! புதுச்சோலை பூக்களே!!
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே!!
பாடல்: கோடைகால காற்றே
திரைப்படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
திரைப்படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
நன்றியுடன்,
ராஜி
Sunday, February 17, 2019
மயிலாடும் பாறையிலே! - பாட்டு புத்தகம்
குத்துப்பாட்டு கேட்டாலே எத்தனை சோகமா இருந்தாலும் நமக்குள் ஒரு சுறுசுறுப்பு வரும். அதிலும், பிடிச்ச நடிகர் அதில் இருந்தால்?! உற்சாகத்துக்கு கேட்கவா வேணும்?! இன்னிக்கு கார்த்திக் நடிச்ச பாண்டி நாட்டு தங்கம் படத்துல வரும் மயிலாடும் பாறையிலே நாங்க ஆடியிருக்கோம்... பாட்டை பத்திதான் பார்க்கப்போறோம்....
இப்ப மாதிரி ஏகப்பட்ட சேனல்கள் இல்லாம டிடி எனப்படும் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே இருந்த காலமது! ஊர் உலகமே ஒளியும், ஒலியும் பார்க்கும். முதல்நாள் இந்த பாட்டை பார்த்துட்டு வந்து, மறுநாள் என்னைய கலாய்ப்பாங்க. என்னடி! உன் ஆளு குருவிக்காரிக்கிட்ட வாங்கின பாவாடையை கட்டி இருக்கார்ன்னு.... ஒரே அசிங்கமா இருக்கும். ஆனாலும் மனசுக்கு பிடிச்சுட்டா குத்தம் தெரியாதே! எதாவது சொல்லி முட்டுக்கொடுப்பேன். இந்த படம் வெளிவந்த காலக்கட்டத்தில் பள்ளி ஆண்டுவிழாவில் கண்டிப்பா இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாங்க. தயாரிப்பாளருக்கு என்ன பணநெருக்கடியோ தெரியாது. பாடல் முழுக்க ஒரே காஸ்ட்யூம்தான் :-( டான்ஸும், இசையும் செமயா இருக்குங்குறது வேற விசயம்).
இளையராஜா இசையில், எஸ்.பி.பி, சித்ராவும் ரொம்ப பாஸ்ட்டா பாடி அதகளம் பண்ணி இருப்பார். இன்னிக்கும் இந்த பாட்டை கேட்க நேர்ந்தால் மனசு துள்ளாட்டம் போடும். அன்னிக்கு என் ப்ரெண்ட்ஸ்ங்க கிண்டல் செஞ்சாங்க. இன்னிக்கு நான் பெத்ததுங்க கிண்டல் பண்ணுதுங்க.. என்னம்மா! உன் ஆளு இப்படி..... பச்சைக்கலர் ஜிங்குச்சான்னு தைய்ய்ய தக்கன்னு குதிக்குறாப்லன்னு... காலம் மாறினாலும் கோலம் மாறாது போல! :-(. ... கனவுப்பாட்டுன்னாலும் ஒரு ரசனை வேணாமா?! சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி ரேஞ்சுக்கு அரைப்பாவாடைல தலைவனை ஆடவிட்டு ஒரு கிளாமர் ஹீரோவா ஆக்கிட்டீங்களே! என்னமோ போங்கடா!
மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்..
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கி இருக்கோம்..
மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்..
மதுரை மேங்காட்டு பொட்டலிலே மெடலு வாங்கி இருக்கோம்...
நாங்க போகாத ஊருமில்லை..
இப்ப நாங்கவாங்காத பேருமில்ல..
நாங்க போகாத ஊருமில்லை..
இப்ப நாங்கவாங்காத பேருமில்ல.. (மயிலாடும்..)
திருச்சி சேலம் தஞ்சாவூர் பாண்டி பொள்ளாச்சி போலே
ராணி போலே நாட்டியம் ஆடி பெருமை தானே??
பேரு பெத்த சென்னையிலே பரிசு பல வாங்கிவந்தேன்!!
பெரியவங்க கையலதான் பதக்கம் பல பெற்று வந்தேன்!!
ஆட்டம்பாட்டத்துல என்னை யாரும் ஜெயிக்க வரல
போடும் ஆட்டத்துல?? என்னை யாரும் எதிர்க்க வரல
தாளகட்டுக்குள்ள ராகமெட்டுக்குள்ள என்னை எதிர்த்து பாடி பாரு
தாம்ததக்கதீம் தாம்தக்கதீம் எனக்கு யாரும் ஈடு இல்ல!
(மயிலாடும் ...)
ஆடும் குயிலு, பார்த்தா மயிலு ஆஹா ஒயிலுஅப்பப்பா..
ஆடும் போதும், பாடும் போதும் அது ஒரு ஸ்டைலு, ஹோய்.. ஹோய்..
தாளம் எதுவும் தப்பவில்லை,
பாடும் சுதி விட்டதில்ல,
மேளம் இன்னும் கொட்டவில்லை
தாலிக்கொடி கட்டவில்லை..
பாத்தி கட்டி வெச்சு பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்
நாட்டு சக்கரயை பார்த்து சொக்குறேன்?? காத்த்து நிக்குறேன்
ஜாதி மல்லிகையை சேர்த்துக்கையிலேதான் சூடி, கூடி எடுக்க நாளும் பாரு..
தாம்ததக்கிடதீம் தாம்தக்கிடதீம் தாளம் எடுத்து பாடி பாரு..
(மயிலாடும் பாறையிலே...)
படம் : பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
Subscribe to:
Posts (Atom)