Thursday, November 05, 2020

அருங்கோண, ஸ்டார் டைப் வயர் கூடை - கைவண்ணம்

ஜூலையில் மகள் கர்ப்பிணியாய் வீட்டிற்கு வரும்போது மகிழ்ச்சியோடு  மகளின் பத்திய சாப்பாடு, குழந்தை பராமரிப்பு, குழந்தையை பார்க்க விருந்தினர் வருகைன்னு... வேலை பளு அதிகமா இருக்கும்ன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். 

கொரோனா டைம் என்பதால் விருந்தினர் யாரும் வீட்டிற்கு வரலை.. மகளுக்கும், மகனுக்கும் கல்லூரி விடுமுறை என்பதால் குழந்தையை அவங்களே பார்த்துக்கிட்டாங்க.... குழந்தையும் படு சமர்த்து..  சாப்பிடும்.. தூங்கிடும்.. இல்லன்னா, மாமன், சித்தியோடு விளையாடும்.. மகளுக்கு பத்திய சாப்பாடு சமைப்பதும், குழந்தை துணி துவைப்பதும், வீட்டு வேலை மட்டுமே என்பதால் நான் பயந்த மாதிரி அதிக வேலைப்பளு இல்ல.   எனக்கும் அதிகம்  வேலை இல்லாததால் ரெண்டு கூடை பின்னினேன்.. நாலு மாசத்தில் ஸ்டார் கூடை, அருங்கோண கூடைன்னு சின்னதா ரெண்டு கூடை பின்னினேன்.. 


கேக்குறவங்களுக்குலாம் கூடை பின்னி கொடுக்குறியே! என் பிள்ளை விளையாட சின்னதா ஒரு கூடை பின்னி கொடுன்னு மகள் கேக்குறா. வரும் வாரங்களில் பின்னி கொடுத்திட வேண்டியதுதான்...

சிறுகூடையை இவருக்குதான் பின்னி கொடுக்கனும்...
இளஞ்சிவப்பில் இருபாதம்..
குட்டிகுட்டியாய் யட்சியின் கைகள்...
பொன்னிலவின் விழி...
மேனிபூசிய தாய்ப்பால் சுகந்தம்...
ஸ்பரிசத்தின் மென்வெப்பம்...
ஓயாத அழுகையிசை..
அதிசயமாய் ஒரு குறுஞ்சிரிப்பு..
தோளில்'மம் மம்'கொட்டி ஒழுகும் உமிழ்நீர்...
திடுமென சேலை நனைக்கும் சிறுநீர்..
என்னை ரட்சிக்க வந்த ஆண் தேவதை.
அத்தேவதையின் பெயர் "வருண் ராகவ்"


அம்மா, சித்தி, தாய்மாமனுடன் என்ற பேரர்.. என்ற பேரரை வாழ்த்துங்க சகோஸ்...

நன்றியுடன் 
ராஜி..

4 comments:

  1. திருக்குறள் போல் வாழ வாழ்த்துகள் பல...

    ReplyDelete
  2. தமிழ் போல் வாழ்க வாழ்க

    ReplyDelete
  3. உங்க பேரர் ரொம்ப க்யூட் ராஜி!!பாட்டின்னா சும்மா இல்லை பொறுப்புகள் நிறையவாக்கும். நல்லதா பாட்டு பாடணும், கதை சொல்லணும் எல்லாமே.

    உங்க அழகு பேரருக்கு பல்லாண்டு வாழ நல்ல மனிதராக வளர்ந்து வாழ வாழ்த்துகள்!

    கூடை சூப்பர் பேரர் என்றதும் அழகு கூடியிருக்கு!!!

    கீதா

    ReplyDelete
  4. போட்டாச்சு . போட்டாச்சு. அடுத்த ஐந்து ஆண்டுக்கு நம் தலை எழுத்தை நிர்ணயம் செய்பவர்கள் க்கு.

    ReplyDelete