வேலூரில் இருக்கும் சி.எம்.சி(chiristian medical college)லதான் திரு. செரியன் அவர்கள் தனது மருத்துவப் பயணத்தை துவக்கி, புகழ்பெற்ற இருதய நிபுணரா தன் மருத்துவப் பணியை தொடர்ந்தார். இந்தியாவில் முதல் இதயமாற்று சிகிச்சை செய்த மருத்துவர் இவரே!இவரது சேவையை பாராட்டி 1991இல் பத்மஸ்ரீ விருது கொடுத்தாங்க.
ஐன்ஸ்டினின் கணிப்புபடி தேனீ இனம் முற்றிலும் அழிந்து, அன்றிலிருந்து சரியாய் 4 ஆண்டுகளுக்குள் மனித இனம் முற்றிலுமாய் அழிஞ்சு போயிடுமாம்!!
ஒரு கண் பாதிக்கப்பட்டால் பார்வைத்திறனில் 5ல் ஒரு பங்குதான் குறைகிறது. மற்ற ஒரு கண்ணின் மூலமே 95 சதவீத காட்சியை காணலாமாம்.
திருக்குறளில் உயிரெழுத்துக்கள் 13 ஆயிரத்து 74ளும், மெய்யெழுத்துக்கள் 12,729 ளும்... உயிர் மெய் எழுத்துக்கள் 15 ஆயிரத்து 47,ஆயுத எழுத்தும், 50 ஆக மொத்தம் 40 ஆயிரத்து 900 எழுத்துக்கள் உள்ளன. அதேமாதிரி, திருக்குறள் ‘அ’வில் ஆரம்பித்து ‘ன்’ல் முடியும்.
மாநில பிரிவிற்கு முன் அழகுத்தமிழில் எருமையூர் என அழைக்கப்பட்டு, மாநில பிரிவிற்கு பின் வடமொழியில் மகிசூர் (எருமை)ஆகி, அதுவும் மருவி மைசூர் ஆனதாம். ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக குடியேறியவர்களில் பலரும் ஆங்கிலேயே அரசால் நாடு கடத்தப்பட்ட தண்டனைக் குற்றவாளிகள்தான். உலகம் உருண்டை என்று கூறியவர் கோப்பர்நிக்கஸ், ஆனால் அதனை நிரூபித்தவர் கலிலியோ ..., டென்மார்கில் சொந்த நாட்டு கொடியை எரிக்கலாம். ஆனால் வேறு நாட்டு கொடியை எரிப்பது குற்றமாம்.
தமிழகத்தில் ஒரு தமிழன் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி 18500 ரூ. மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 6200ரூ மட்டுமே! அதே சமயம் பிகார் செலுத்துவது 7200ரூ பெறுவதோ 30400ரூ. உபி செலுத்துவது 7000ரூ. திரும்ப பெறுவது 11200ரூ. ராஜஸ்தான் செலுத்துவது 6600ரூ. திரும்ப பெறுவது7800ரூயாம்... ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க!
ஊர்வம்பு தொடரும்...
நன்றியுடன்,
ராஜி.
ஊர்வம்பு தொடரும்...
நன்றியுடன்,
ராஜி.