பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக மகள்களுக்கு பாவாடை தாவணி எடுக்கனும்ன்னு முடிவானது. கடையில் போய் பார்த்தால் பிடிச்ச கலர், பிடிச்ச டிசைன், பிடிச்ச துணின்னு சேர்ந்து அமையல. ஆகாய வண்ணத்துல சின்னவளுக்கும், மாந்தளிர் வண்ணத்துல ஹாஃப் சில்க் துணில வெறும் சங்கிலி தையலை மட்டுமே கொண்டு ஹெவி வொர்க் பாவாடை தாவணியை ரெடி செஞ்சாச்சு. நம்ம அம்மா நமக்காக செஞ்சதுன்னு பசங்களுக்கும் பசங்களுக்கு செஞ்சோம்ன்னு எனக்கும் ரொம்ப திருப்தி.
வெறும் சங்கிலி தையல் மட்டுமே. நூலில் ஆங்காங்கு சமிக்கி நுழைச்சுக்கிட்டா வெயில்லயும், லைட்டிங்க்லயும் மின்னும்.
சின்னவளுக்கு பிடிச்ச ஆகாய நீல வண்ணம்...
ஆங்காங்கு குந்தன் கற்கள் கொண்டும் அழகு செஞ்சாச்சு.
சின்னவ ட்ரெஸ்சுக்கு மேட்சா சில்க் த்ரெட் கம்மல்...
ட்ரெஸ்சுக்கு மேட்சா க்வில்லிங்க் பேப்பர்ல செஞ்ச மணிமாலை...
இது பெரிய மகளுக்கு வெறும் சங்கிலி தையல்ல செஞ்ச பெரிய மாங்காய்... அதேமாதிரிய சமிக்கிய அங்கங்க நுழைச்சு குந்தன் கல்லால அலங்கரிச்சது...
க்ராஸ் பார்டர்ன்னு கொஞ்சம் வித்தியாசமாய்...
மாந்தளிர் கலர்ல ஆரஞ்ச் மாங்காய் மின்ன பெரியவள் பாவாடை தாவணி ரெடி..
இது பெரியவளுக்கு செஞ்ச சில்க் த்ரெட் கம்மல்...
இது எனக்கு....
இதும் எனக்கு..
நாளைக்கு நாயன்மார்கள் கதையில் இடங்கழி நாயனார் பத்தி தெரிஞ்சுக்கலாம்.
தமிழ்மணம் ஓட்டு பட்டை தெரியாதவங்களுக்காக....
நன்றியுடன்,
ராஜி.










