Showing posts with label காதணி. Show all posts
Showing posts with label காதணி. Show all posts

Thursday, May 10, 2018

பொழுது போக்காய் பொழுதை போக்க... - கைவண்ணம்


எனக்கு எம்ப்ராய்டரி செய்ய ரொம்ப பிடிக்கும். அதுல கமல்கடாய் தையல்ன்னா  பிடிக்கும்.  கமலுக்கும், கடாய்க்கும் இந்த தையலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு தலைப்பிச்சுக்கிட்டிருந்த வேளையில் கீதாக்கா இதுக்கு அர்த்தம் சொன்னாங்க. கமல் கடாய் ஹிந்தி பெயர்...ஆந்திர மாநிலத்தின் தையல் இது. கமல் என்றால் தாமரை. கடாய் என்றால் சட்டி ன்னு சொன்னாலும் ஃப்ளவர் வாஸ் ன்னும் சொல்லலாமோ!! ஃப்ளவர் வாஸ் ஷேப்பின் மேல் அடுக்கடுக்காக தாமரை போன்ற இதழ்கள் விரிந்து இருக்கும் பூ வேலைப்பாடு மாதிரி இருக்குறதால  இந்தப் பெயர் வந்திருக்கலாம்ன்னு சொன்னாங்க. என் பசங்களுக்கு இந்த வேலைப்பாட்டுல சுடிதார் தைச்சு கொடுத்தேன். ஆனா, எனக்கு இந்த வேலைப்பாடுல சேலை ஒன்னு வேணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. அதான் ஆரம்பிச்சு முடிச்சாச்சு.  
சங்கிலி தையலும், கமல் தையலும் சேர்ந்த வேலைப்பாடு ... கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு முடிக்க....
இந்த தையலுக்கு கோன் த்ரெட்ன்னு  சொல்லுற இந்த நூல்தான் சரிப்பட்டு வரும். எல்லா நிறத்திலும் ஒரே கண்டுல நிறைய நிறங்கள் சேர்ந்தும் வருது.
இதான் தையல் பழக தேவையான கோடுகள்... 
 துணிக்கு அடியிலிருந்து  ’ஒ’ புள்ளி வழியா நூலை மேல எடுக்கனும்...

 அடுத்து ’ ஏ’ வழியா ஊசியை துணிக்குள் விட்டு, ’பி’ வழியா ஊசியை எடுக்கனும்.
’பி’ லிருந்து  மறுபடியும் ’ஓ’ வழியா ஊசி நூலை துணிக்கடியில் எடுக்கனும்....
 ’ஓ’ புள்ளியிலேயே கொஞ்சம் தள்ளி மீண்டும் ’ஓ’விலேயே நூலை வெளில எடுத்து ’சி’ புள்ளியில் ஊசியை நுழைச்சு டி வழியா ஊசி நூலை எடுக்கனும்...
’டி’ புள்ளியிலிருந்து மறுபடியும் ’ஓ’ புள்ளியில் ஊசியை நுழைச்சு, கொஞ்சம் தள்ளி ’ஓ’ புள்ளியிலேயே ஊசிய துணிக்கு மேல எடுக்கனும். அப்படி எடுத்து ’ஈ’ புள்ளியிலிருது ’எஃப்’ புள்ளிக்கு போய் மீண்டும் ’ஓ’ புள்ளியில் ஊசியை நுழைச்சா மேல இருக்குற மாதிரி நூல் அமையும்.  இந்த நூல் நல்லா டைட்டா இருக்குற மாதிரி பார்த்துக்கனும்...
நான் சொன்ன மாதிரி செஞ்சா துணிக்கு பின்னாடி இப்படி வரும். எம்ப்ராய்டரி டிசைன் எப்படி  அழகா இருக்குமோ அதே மாதிரி துணிக்கு பின்பக்கமும் நீட்டா முண்டும் முடிச்சுமா இல்லாம சுத்தமா அழகா இருக்கும்... இருக்கனும்.
 ஊசியை துணிக்கடியிலிருந்து மேல எடுத்து ’ஈ’ புள்ளி மேல ஊசி, ’சி’ புள்ளி நூலுக்கு கீழ நூலு, ஏ புள்ளிக்கு கீழ நூலுன்னு மாத்தி மாத்தி  ஆறு நூலிலும் நூலை கோர்த்துக்கிட்டே போகனும். பாய் பின்னுற மாதிரி...
 ஆறு நூல் முடிஞ்சதும் அடுத்து நாலு நூல்லயும் இதேமாதிரி மாத்தி மாத்தி நூலை கோர்த்துக்கிட்டே வரனும்...
 நாலு நூல் முடிஞ்சதும் ரெண்டு நூல் வழியா மாத்தி மாத்தி கோர்த்துக்கிட்டு வரனும்...
முடிந்த நிலையில் இப்படிதான் இருக்கும் கமல் கடாய் தையல்...
பல நிறத்தாலான கோன் த்ரெட்ல கமல் கடாய் எம்ப்ராய்டரி.... 
சேலையின் முந்தி, பார்டர்லாம் ஒரே படத்தில்...

முழுக்க முழுக்க சங்கிலி தையலால் சின்ன மகளுக்கு செஞ்சு தந்த பாவாடை தாவணி..
அதுக்கு மேட்சிங்கான காதணி..
முழுக்க முழுக்க காம்பு தையலால் உருவான பெரிய மகளுக்கான பாவாடை தாவணி..
அவளுக்கு ஒரு காதணி.. இப்படியாக பொழுது போகின்றது
நன்றியுடன்,
ராஜி.