Showing posts with label திருச்செந்தூர். Show all posts
Showing posts with label திருச்செந்தூர். Show all posts

Saturday, May 18, 2019

பிறந்தநாள்... இன்று முருகனுக்கு பிறந்த நாள் - வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் எனப்படும் நன்னாளான இன்றுதான் முருகப்பெருமான் அவதரித்த தினம்.  வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில்தான் முருகன் அவதாரம் நடந்தது. அதாவது முருகருக்கு ஹாப்பி பர்த்டே இன்னிக்கு.   விசாகம் நட்சத்திரமென்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டாகும். 

மக்களுக்கும் , தேவர்களுக்கும் பெரும் இன்னலை கொடுத்துக்கொண்டிருந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் மற்றும் அசமுகியை வதம் செய்யும் நோக்கோடு முருகப்பெருமான் படைக்கப்பட்டார். தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள் என்ற ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் இறைவன் எனும் ஒருவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் பொருட்டு  முருகப்பெருமான் தோற்றம் ஆறு என்ற எண்ணிக்கையில் உண்டாக்கப்பட்டது.

வைகாசி மாதம் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலாயே இம்மாதத்தை வைசாகம் என்றழைக்கப்பட்டு வைகாசி என்றழைக்கப்படுது. வைகாசி மாத பௌர்ணமி தினத்தைதான் நாம் வைகாசி விசாகம் என்று கொண்டாடுறோம்.  “வி”ன்னா பட்சி, ”சாகன்”என்றால் சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில்மீது வலம் வருவதால் முருகனுக்கும் விசாகன் என்றும் ஒரு பேருண்டு.  பகைவனுக்கும் அருளும் தன்மைக்கொண்ட முருகனுக்கு இந்நாளில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் போன்ற தலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுது. இந்நாளில் மக்கள் பால்குடம் ஏந்தி வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்துவிக்கப்படும்.  இன்றைய தினம் விரதமிருந்து முருகனை வேண்டிக்கொண்டால் நினைத்தது ஈடேறும். குழந்தை இல்லாதவர்கள் விசாகத்தன்று பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டால் அடுத்த விசாகத்திற்குள் குழந்தை வரம் கிடைக்குமென்பது கண்கண்ட உண்மை. திருமணமாகாதவர்களும் இவ்விரதம் கடைப்பிடிக்கலாம். ஆண்களும் இவ்விரதத்தை கடைப்பிடிக்கலாம். பால்காவடிகள் எடுத்து இறைவனை தியானித்தால் சகல சௌபாக்கியமும் கிடக்கும்.
Sri Karthikeya and Shivalingam:
ராம அவதாரத்திற்கு முன்பே கந்தர் அவதாரம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது. முனிவர்களின் யாகத்திற்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய ராம, லட்சுமணனை விஸ்வாமித்திரன் அழைத்து செல்கிறார். அவ்வாறு செல்லும்போது கந்தப்பெருமானின் பிறப்பு, பத்மாசூரனை அழித்த கதையை சொல்லி சென்றதாக வால்மீகி தன் ராமாயாணத்தில் ‘குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். பின்னாளில் இந்த வாசகமே காளிதாசருக்கு தலைப்பாய் அமைந்துவிட்டது. 

.
இனி முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்வினை பார்ப்போம்...

பத்மாசுரன் என்பவன் கடும் தவமிருந்து சிவனுக்கு இணையான ஒருவரால் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்கக்கூடாது. அவ்வாறு வரும் ஒருவனும் பெண்ணால் வந்தவனாக இருக்கக்கூடாதெனவும் வரம் வேண்டுமென ஈசனிடமே வரம் கேட்டு, அவ்வாறே வரமும் வாங்கிக்கொண்டான்.  பிறகென்ன?! பெண் சம்பந்தமில்லாம எப்படி குழந்தை பிறக்கும்?! அதும் ஈசன் மூலமாய்...  இப்படி ஒரு பிறப்பு நிகழாதென ஆணவம் கொண்டு தேவர்களை துன்புறுத்தினர்.  தேவர்கள்  சிவனிடம் சென்று முறையிட சென்றனர். தட்சிணாமூர்த்தி தோற்றத்தில் சிவன் தவம் புரிய, அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவம் புரிந்துக்கொண்டிருந்தாள். இந்நேரத்தில் எதுக்கேட்டாலும் கிடைக்கும் என்று உணர்ந்திருந்த தேவர்கள் சிவனிடம், அசுரர்களை அழிக்க ஒரு அம்சம் தங்களால் ஒரு அம்சம் வேண்டுமென வேண்டி நின்றனர்.

பத்மாசூரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கி கங்கை நதியில் விட்டார். வாயுதேவனும், வருணபகவானும் அந்த குழந்தையை சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தனர்.  அந்த ஆறு குழந்தைகளை கார்த்திகை பெண்கள்  வளர்த்து வந்தனர். குழந்தையை காண வந்த பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் அள்ளி அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாகியது. இக்குழந்தைக்கு ஆறு முகம், பனிரெண்டு கைகளென திகழ்ந்தது.

முருகனுக்கு சுப்ரமணியன் என்றும் பெயர் உண்டு. ஸுப்ரஹ்மண்யன் என்ற பெயரே இவ்வாறு சொல்லப்படுகிறது. இந்த பெயருக்கு பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவப்பெருமானே பரமாத்மா. அவரின் பிள்ளை பரமாத்மாவின் அம்சம் என்று பொருள்படும்படி இப்பெயர் வந்தது.

முருகப்பெருமான் தன்னுடைய ஆறு வயது வரை மட்டுமே குழந்தைப்பருவ லீலைகளை புரிந்தார். பிரம்மாவும்க்கு ’ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தது, அப்பனுக்கே பாடம் சொன்னது, அவ்வையின் தலைக்கனத்தை அழித்தது, ஞானப்பழத்துக்காக சண்டையிட்டு பழனி மலையில் நின்றது என பல லீலைகள் புரிந்தார்.  ஆனாலும், அவரின் அவதார நோக்கமாகிய பத்மாசூரன் வதத்திற்குள் இத்தனையும் லீலைகளையும் புரிந்தார்.

பத்மாசூரனை வெல்ல தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவசேனாதிபதியென பெயர் பெற்றார். தேவசேனா என்பது தெய்வானையின் ஒரு பெயராகும். அவளை மணந்து தேவர்களின் பரிசினை ஏற்றார். குறவர்குல மகளான வள்ளியை மணந்து இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதமில்லை என உலகுக்கு உணர்த்தினார்.

பணிரெண்டு கரங்களின் வேலைகள்...

பனிரெண்டு கைகளின் வேலைகள் இரு கைகள் நம்மை காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தை செலுத்துகிறது, நாலாவது கை தன் தொடையில் இருக்கிறது. ஐந்தாவது மற்றும் ஆறாவது கை வேலை சுழற்றுகின்றது. ஏழாவது கை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. எட்டாவது கை மார்பிலிருக்கும் மாலையை சுழற்றுகிறது. ஒன்பதாவது கை கைவளையலை சுழற்றிக்கொண்டு நம் வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை அருளோசையை எழுப்புகின்றது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பனிரெண்டாவது கை மணமாலையை சூட்டுகிறது...

வைகாசி விசாகத்தின் சிறப்புகள்...

புத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதாரமும், ஞானமும் பெற்றது இந்நாளில்...

வைணவ பக்தி மார்க்கத்தை பின்பற்றி, நெறிதவறாமல் வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினம் இத்தினம்...

வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவிய நாள் இந்நாள்....

காஞ்சிப்பெரியவர் இந்நாளில்தான் அவதரித்தார். பல தெய்வங்களுக்கு வைகாசி விசாகத்தன்று விழாக்கள் எடுப்பதால் இந்த மாதத்தை ‘மாதவ மாதம்’ன்னு பேர் பெற்றது..

எமதர்மன் பிறந்த நாள் இன்றுதான். வைகாசி விசாகத்தன்று யமனுக்கு பூஜை செய்து நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமென வேண்டி கொள்வர்.

இந்நாளில் இந்திரன், சுமாமிமலை முருகனை வணங்கி, இழந்த தன்  ஆற்றலை திரும்ப பெற்றான். திருமழப்பாடியில் ஈசன் இந்நாளில் திருநடனம் புரிகிறார்.  மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபதா ஆயுதத்தை பெற்றது இந்நாளில்...

மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சபவ விழா பத்து நாட்கள் சிறப்பாக இந்நாளில் நடைபெறும். கன்னியாக்குமரி  பகவதி அம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக நடைப்பெறும். காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலிலும், கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலிலும் கருட சேவை நடைப்பெறும். காஞ்சிபுரம் சுற்றீயுள்ள 16 வகை பெருமாள்கள் ஒரே நேரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவது சிறப்பு..

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் நரசிம்மரின் உக்கிரம் குறைய  வருடம் முழுதும் சந்தன காப்பில் இருப்பார். இந்த விசாக தினத்தன்று காப்பு அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  ராமநாதப்புரத்தில் உத்தரகோச மங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டால் சகல தோசமும் நீங்கும். உச்சிக்கால வேளையில் தலையில் பச்சரிசி, அருகம்புல் வைத்து நீராடினால் பிரம்மஹத்தி தோசம் நீங்கும்.

இதுமட்டுமின்றி திருச்சேங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மற்றும் பல திரௌபதி அம்மன் கோவில்களில் திமிதி விழாவும், அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் திருவிழாக்களும் இந்நாளில் சிறப்புற நடைப்பெறும்..

விரதமிருக்கும் முறை...

வைகாசி விசாக விரதமிருக்க விரும்புபவர்கள் பிரம்ம மூர்த்தத்தில்  எழுந்து நீராடி, நாள் முழுவதும் விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி இரவு பால் அருந்தி விரதம் முடிக்கலாம்,.  முருகன் கோவில் அமைந்துள்ள மலையை கிரிவலம் வந்தாலும் நல்லது. இவ்விரதத்தை மேற்கொள்வோர் பானகம், மோர், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். அன்று முழுவதும் முருகனின்  மந்திரமான ஓம் சரவணபவ,  ஓம் முருகா என்பவற்றை உச்சரித்தல் சிறந்த பலனை அளிக்கும். கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம் புத்தகமும் படிக்கலாம்.

நாற்புறமும் பல்வேறு அபாயங்கள் நம் தேசத்தையும், மக்களையும் சூழ்ந்துள்ள நிலையில், வெற்றிவேல் நமக்கு உற்ற துணையாகட்டும். வீணரை வீழ்த்திய வீரவேலின் சக்தி நம் நெஞ்சில் குடிகொள்ளட்டும். சூரனை வென்ற சுடர்வேல் நம்மை முப்போதும் எப்போதும் காக்கட்டும்!! திருச்செந்தூர்வாழ் முருகன்தான் எல்லாத்துக்கும் துணையாய் இருக்கனும்! அருகிலிருப்போரை முதல்ல கண் திறந்து பாரப்பா!

வெற்றிவேல்! வீரவேல்!

நன்றியுடன்,
ராஜி.

Monday, May 28, 2018

முருகனுக்கு ஹாப்பி பர்த்டேவாம் - அறிவோம் ஆன்மீகம்

நாற்புறமும் பல்வேறு அபாயங்கள் நம் தேசத்தையும், மக்களையும் சூழ்ந்துள்ள நிலையில், வெற்றிவேல் நமக்கு உற்ற துணையாகட்டும். வீணரை வீழ்த்திய வீரவேலின் சக்தி நம் நெஞ்சில் குடிகொள்ளட்டும். சூரனை வென்ற சுடர்வேல் நம்மை முப்போதும் எப்போதும் காக்கட்டும்!! திருச்செந்தூர்வாழ் முருகன் தான் எல்லாத்துக்கும் துணையாய் இருக்கனும்! அருகிலிருப்போரை முதல்ல கண் திறந்து பாரப்பா!

வெற்றிவேல்! வீரவேல்!

நன்றியுடன்,
ராஜி.

Wednesday, October 25, 2017

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே....

நம்மோட வாழ்க்கைல வரும் பிறந்த நாள், கல்யாண நாள், காது குத்து, லவ்வுனது, பார்த்தது, பேசினது, சண்டை போட்டதுன்னு எல்லாத்தையும் நினைவுல வச்சுக்கிட்டு  அழுகிறோம், சிரிக்கிறோம்.. அதுமாதிரிதான், பண்டிகைகளும்.. முருகப்பெருமான், அசுரனை வதம் செய்த நாள். தீபாவளி கழிச்சு வரும் வளர்பிறை  சஷ்டி திதியில்......   இந்த நாளையே நாம், கந்த சச்டி விழா எனவும், சூர சம்ஹாரம் எனவும் கொண்டாடி வருகிறோம்...

அசுரன்னா கோரைப்பற்களும், முண்டைக்கண்ணுமா இருப்பதல்ல. நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களே அசுர வடிவம்தான். அதுப்படி,  சூரபத்மனின் ஒருபாதி நான்” என்கின்ற அகங்காரமும்மற்றொரு பாதி எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன். சூரபன்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. அதாவது நம்மை  பீடித்துள்ள ஆணவம்கன்மம்மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இந்நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.

பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என இரு மகன்கள்.  அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். 

ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை"என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவவலிமை எல்லாவற்றையும் காசிபன் இழந்தான். இதனைத் தொடந்து காசிபன், மாயையுடன்  இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும்சிங்கமுகம் கொண்ட சிங்காசுரனும்யானைமுகம் கொண்ட தாரகாசுரனும்ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பெண்பிள்ளை ஒன்றையும் பெற்றனர்.

அசுரேந்திரனுக்கும் மங்கல கேசிக்கும் மகளாய் பிறந்தாள் மாயை.

மாயை தன் குலத்தைப் பெருக்க முனிவர் சுக்ராச்சாரியாரிடம் அறிவுரை பெறுதல்.

 மாயையும் காசிப முனிவரும் இணைந்தனர்.

சூரபத்மன் பிறந்தான்.

மாயையும் காசிப முனிவரும் சிங்கமாக உருமாறி இணைந்தனர். சிங்கமுகன் பிறந்தான்.

மாயையும் காசிப முனிவரும் ஆடாக உருமாறி இணைந்தனர். சூரபத்மனின் தங்கை ஆட்டுத் தலையாள் அசுமுகி பிறந்தாள். 

இரண்டு இலட்சம் அசுரர்கள் பிறந்தனர். அனைவரும் தாய் தந்தையை வணங்குதல்.

சிவனருள் வேண்டி சூரபத்மன் தவம் புரிதல்.

1008 அண்டங்களையும் 108 யுகங்களiலும் ஆளும் வரம் பெற்றான் சூரபத்மன்.

இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து108 யுகங்கள் உயிர் வாழவும்1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும்இந்திரஞாலம் எனும் தேரையும்சிவசக்தியால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

வரத்தால் செருக்கடைந்த சூரபத்மன் தேவர்களை சிறைப்படுத்தினான்

சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன்,  அக்கினிமுராசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகிய புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரம் பேரும் பிறந்தனர். சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.

சிவபெருமானிடம் தேவர்கள் முறையீடு.

அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.

தேவர் துயர் தீர்க்க ஒரு மகனை அருள்வேன் என்றார் சிவபெருமான்

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகள் சரவண பொய்கையில் சேர்தல்.

தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் .) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன.
ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாய் ஆறு தாமரையில் தோன்றின.

அவற்றை வாயுபகவான் ஏந்திச்சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

அழகு குழந்தைகளை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர்.

அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்தனர்.

அன்னை உ மாதேவி ஆறு குழந்தைகளை அன்புடன் அணைத்தாள். ஆறிரு தோள்களுடன் ஆறுமுகன் தோன்றினான்

அப்படி  குழந்தைகள் வளர்ந்து வரும் வேளை, அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன்.

ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம்ஐஸ்வர்யம்அழகுவீர்யம்வைராக்கியம்புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும். பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன்அழிக்கும் கடவுளான ருத்திரன்படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் ஆறுமுகமே சிவம்சிவமே ஆறுமுகம்” எனப்பெறுகின்றது. 

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வைபட்டதும் அவைகள் நவசக்திளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர். இவர்கள் ஆனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

தந்தை சிவபெருமானிடம் வேல் பெற்றான் செவ்வேள்.

அம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மை தந்த  வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் அப்பன் வழங்கினர். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு உருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.
தேவர் குறை தீர்க்க முருகன் சூரபதுமனுடன் போர் செய்யப் புறப்பட்டான்.

மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லி முருகன் தேவதச்சனைப் பணிக்கிறார். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் வழங்குகின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளப்புகின்றது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினர். அன்கு பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் முருகனை வரவேற்று வீழ்ந்து வணங்குகின்றனர்.
.சூரபதுமனிடம் வீரபாகு தேவரை தூது அனுப்பினான் முருகன்

முருகப் பெருமான் புதிதாக கட்டப்பெற்ற ஆலயத்தில் அமர்ந்துதேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவாகின்றது.
வீரபாகு தேவருடன் சூரபதுமன் செருக்குடன் பேசினான்.

முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போதுவீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைக்கின்றான். முருகன் என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமாஅது நடக்காத காரியம் என்று கூறி முழங்கலானான்.

சூரனின் ஆணவத்தால் தூது முறிகின்றது. அது மாத்திரமன்றி தூது சென்ற வீரவாகுதேவரையும் சிறையிலடையுங்கள் என உத்தரவிடுகின்றான். வீரவாகுதேவரை சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர்புரிகின்றார். அப்போது நடந்த போரில் சூரனின் புத்திரனான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனானசகத்திரவாகுஆகிய இருவரும் வீரவாகுதேவரினால் கொலை செய்யப்படுகின்றனர்.

அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி செல்கையில்; விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன்(ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர்  அவனுடன் போர் புரிகின்றார்.
ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்துகின்றான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிகின்றான். வீரவாகுதேவர் முதலானோர் மலைச் சிறையிலிருந்து விடுபடுகின்றனர். (தாரகாசுரன் ஒரு சிவபக்தன். கூடுவிட்டு கூடுபாயும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றவன். தாரகனின் நண்பனான கிரௌஞ்சம் என்னும் பறவை அகத்தியரின் சாபம் பெற்று மலையுருவானது. அந்தமலையாக தனது மாயை சக்தியால் வீராவாகுதேவர் உள்ளிட்ட முருகனின் சேனையை சிறைப் பிடித்தான்.) சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.
...

பேரிகைகாளம்கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது.

வீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப் எம்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோதுபிரமன்திருமால்இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, "மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்" என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.

தேவதச்சனை அழைத்து "உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து" என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும்வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு "ஏமகூடம்" என்று பெயர் வைத்தார்கள்.

எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர்களோடும்தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.[கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர் துவங்குகிறது.
தம்பி சிங்கமுகசூரன் போரை தவிர்க்குமாறு சூரபதுமனிடம் வேண்டுதல்.

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின்தருமகோபன் (சூரனின் மந்திரி)சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் (3000)ம் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் செல்கின்றான்.

பானுகோபன் மாயாஜால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே பாலகன் முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார். தேவர்களை விடுவித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தானே போருக்குச் சென்று முருகனையும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பிவைக்கின்றான். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையயை ஆழ்த்த முருகன் அதையும் முறியடித்து விடுகிறார். அதன் போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.
சூரபத்மன் சிங்கமுக சூரனை கடிந்தல்.
முருகனை எதிர்த்த சிங்கமுக சூரன் போரில் மாண்டான்.

பானுகோபன் பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச் செல்கின்றான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். முருகனாக வந்திருப்பவர் சிவனே. சிவனுடன் போர்புரிய எம்மால் முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர் வாழலாம் என சூரனுக்கு புத்திமதி கூறியும் அவன் கேட்காமையால் செஞ்சோற்றூக் கடனுக்காக போர்புரியச் செல்கின்றான். இவன் பல மாய வித்தைகள் செய்தும்பல விதமாக முருகவேளுடன் போர் புரிகின்றான். இவனது சிரம் விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாது குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம் செய்கின்றான்.

திருச்செந்தூரில் ஆறுமுகக்கடவுள், திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போது வீரவாகுதேவர் திருச்செந்தூர் திரும்பி வந்து முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.முருகனும் இனியும் தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானிக்கின்றார்.
முருகனும் சூரபதுமனும் போர்புரிதல்

கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி "பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்."நம் தேரைக் கொண்டுவா" என்று கட்டளையிட்டார்.

தங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேலின் கட்டளைப்படி வீரவாகுதேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், " நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்" என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.
சூரபதுமன் மாமரவடிவில் கடலில் தலைகீழாக நின்றான்

சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப் பட்டு அதர்மவழியில் சென்று அழிகின்றான். தன் சொந்தபந்தங்களையும்துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவையாவும் முருகவேலின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செய்யலானான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய்இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால்உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும்அடிபணிய ஆணவம் விடவில்லை.

முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும்எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும்சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும்தன் தன்மை மாறாது போர் செயலானான்.
சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும்தேரை அழைத்து முருகனின்படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு செறது. முகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார். இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான். சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது.
கடைசியாக சூரன் தனது அம்புப்படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக உருமாறி வானில் பறந்து பல அழிவுகளை ஏற்படுத்தியதுடன் முருகனின் முருகனின் சேனையையும் சீண்டத் தொடங்கினான். 
இதுக்கண்ட முருகப்பெருமான் இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாஜால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.தனது படையினரையும்படைக்கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிக்கலானான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனைநீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சம்ஹாரம் செய்தார்.
ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்துதன்னை மன்னித்துஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்கஅவன்மேல் இரக்கம் கொண்டுபிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும்மயிலாகவும் மாற்றிமயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
கந்த புராணக் கதையைச் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்" என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள்.முருகனின் ஆணைப்படிவருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்கபோர் முடிகிறது. வெற்றி வீரத் திருமகனாய்முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப்பெருமான் குடிக்கொண்டுள்ள ஆறுபடைவீடுகளில் ஒன்றாகியதும்கடலும்கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலம்
சூரனை அழித்த மனக்கேதம் தீரசெந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில்கைகளில் ஜபமாலையோடுசிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்கசற்று எட்டிப் பார்த்தால்கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.இங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல்ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்பின் கரம் சத்திப்படை ஏந்திஇன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்கதியானத்தில் முழந்தாளில் கைவைத்துஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
 கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால்அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடிமணி முடி தரித்துவங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்துவெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

முருகப் பெருமான் சூரபத்மனோடும், அவனது படையினருடனும் பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும்சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.இதுவேசூரசம்ஹாரத்தின் வரலாறு. சஷ்டி விரத நன்னாளில் எல்லாம்வல்ல முருகப்பெருமானை வணங்குவோம்...  எல்லா வளங்களும் பெறுவோம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1475778
நட்புடன்,
ராஜி.