Showing posts with label நெகிழ்ச்சி. Show all posts
Showing posts with label நெகிழ்ச்சி. Show all posts

Monday, September 02, 2013

பதிவர் சந்திப்பு - ஐஞ்சுவை அவியல்


காலைல சமைக்காம எங்க போய்ட்டு வரே!  போட்டது போட்ட படியே கிடக்கே! வேலை செய்யாம எங்க போய் வரே புள்ள!

ராஜி வீட்டுக்கு மாமா!

ராஜி வீட்டுக்கா?! காலையிலேவா?! ஏண்டி, அவளுக்குதான் வேற வேலை இல்ல, நேத்துலாம் பெங்களுரு, சென்னைன்னு சுத்திட்டு வந்து உன் கிட்ட பெருமை பீத்திக்க கூப்பிட்டான்னா, உனக்கெங்க போச்சு அறிவு?! சமைக்காம அவ வாயையே பார்த்துக்கிட்டு இருந்தியா?!

 பெங்களூரு போய் அவ பொண்ணை பார்த்து வந்தது, சென்னைல நடந்த பதிவர் சந்திப்புல கலந்துக்கிட்டது,  அங்க நடந்ததுலாம் சொல்லிட்டு இருந்தா அதான் நேரம் போனது தெரியாம கேட்டுட்டு இருந்தேன்.

என்ன சொன்னா உன் ஃப்ரெண்ட்?!

சனிக்கிழமை காலைல பெங்களுருக்கு கிளம்பி போனா..,

ஐயோ! அந்த கதையை அப்புறம் சொல்லு, ஒரு மாசமா, சேலை வாங்கனும், நகை வாங்கனும், மூஞ்சிக்கு சுண்ணாம்பு அடிக்கனும் வான்னு உன்னை இம்சை பண்ண காரணமா இருந்த பதிவர் சந்திப்பை பத்தி சொல்லு.

ம்ம்ம் சரிங்க, அவ ஆசைப்பட்டப் படியே சேலைல ஸ்டோன்லாம் ஒட்டி சின்ன பொண்ணு இனியா, அவ பையன் அப்புவை கூட்டிக்கிட்டு கொஞ்சம் லேட்டாகிடுச்சே! நிகழ்ச்சி ஆரம்பிச்சிருப்பாங்களேன்னு பதறிக்கிட்டே போனாளாம். நல்ல வேளை நிகழ்ச்சி ஆரம்பிக்கலையாம்!

போன உடனே, அவளோட கணேஷ் அண்ணா முதல் ஆளாய் வரவேற்றார். ”வீடு திரும்பல்”மோகன்குமார் அடுத்த ஆளாய் தன் அக்காவை வரவேற்று நலம் விசாரிச்சிருக்கார்.

அடுத்ததா கவியாழி, புலவர் ஐய்யா, பட்டிக்காட்டான்லாம் வந்து வரவேற்றிருக்காங்க, ராஜி பெங்களூரிலிருந்து ஃப்ளைட்ல வந்ததால கலாய்க்கலாம்ன்னு போட்டோ எடுக்கலாம்ன்னு கூப்பிட்டாராம். நான் தெரியலைன்னாலும் பரவாயில்ல ஃப்ளைட்ல ஒட்டுன டேக்லாம் தெரியனும்ன்னு கண்டிஷன் போட்டு ரார்ஜி எல்லோரோடவும் நின்னு போட்டோ எடுத்திருக்கா. ராஜி போட்டோ எடுத்துக்குறதை பார்த்து சசியும் ஓடி வந்து க்ரூப்புல நின்னுக்கிட்டா.

அடுத்து சங்கவி வந்து வரவேற்றிருக்கார். கோவை ஆவி, மதுமதி, “ராஜபாட்டை” ராஜா, கோவை நேரம்” ஜீவா,  சீனு, சிவா, ரூபக்ன்னு எல்லார்கிட்டயும் நலம் விசாரிச்சிருக்கா. 

என் கேர்ள் ஃப்ரெண்ட் எங்க?! ஏன் கூட்டி வரலைன்னு அடையாறு அஜீத் சென்னை பித்தன் ஐயா ராஜிக்கிட்ட கோவிச்சுக்கிட்டார். தூயா இல்லாட்டி பரவாயில்லை இனியா இருக்கான்னு தன் இளைய மகளை காட்டி இருக்கா. அப்புறம், தமிழ்வாசி பிரகாஷ், அரசன், வெங்கட் நாகராஜ், திண்டுக்கல் தனபாலன், ரமணி ஐயா, பெண்கள்ல சசி, ஸ்கூல் பையன், மயிலன், கோகுல், எழில், அகிலா, வெங்கட் நாகராஜோட மனைவி(பேரு கேக்க மறந்துட்டேனே!!) குட்டீசுல சசி மகன்கள், வெங்கட் நாகராஜ் மகள், பட்டிக்காட்டானோட குட்டீஸ், சதீஷ் செல்லதுரை மனைவி, குழந்தைகள்ன்னு எல்லார்க்கிட்டயும் பேசி இருக்கா.

கணேஷ் அண்ணா சேட்டைக்காரன் ஐயாக்கிட்ட இவ என் தங்கைன்னு அறிமுகப்படுத்தும்போது உனக்கு சப்போர்ட் பண்ண உன் தங்கச்சி இருக்கா. அதனால இனி உன்னை பத்தி எழுதும்போது பார்த்து எழுதுறேன்னு கணேஷ் அண்ணாக்கிட்ட பயந்த மாதிரி சொன்னாராம்.

பண்ணையார் கெட்டப்புல புல்லட்ல வந்து வெல்கம் பண்ணி இருக்கார் ஆரூர் மூனா செந்தில். டி.பி.ஆர்.ஜோசப், “மூங்கில் காற்று”முரளிதரன்னு ஒரே அன்பு மழைதானாம். சென்னைலயே இருந்துக்கிட்டு லேட்டா வந்திருக்கார் சௌந்தர்.

போஸ்ட்ல போட்ட புடவை பார்த்துதான் நீங்க ராஜின்னு கண்டுப்பிடிச்சேன்னு   ஒரு பதிவர் வந்து சொல்லி இருக்கார். ஆனா, அவ பேருதான் ராஜி மறந்துட்டாளாம்.

உன் ஃப்ரெண்டுதான் லூசாச்சே!

அவளை திட்டாதீங்க. அத்தனை பேரும் அக்கா, தங்கச்சின்னு பாசம் காட்டுன நெகிழ்ச்சில இருக்கும்போது எப்படி நினைவில் வச்சுக்க முடியும்?!

அப்புறம் பகவான்ஜி வந்து அறிமுகப்படுத்திக்கிட்டார். தருமி ஐயா, கடல் ப்யணங்கள் சுரேஷ் குமார்ன்னு எல்லார்க்கிட்டயும் ஹலோ சொல்லவே அரை மணி நேரம் ஆச்சுதாம்.



இவ்வளவுதானா?! நான் என்னமோ சுவாரசியமா எதாவது நடந்திருக்குமோன்னு நினச்சுல்ல வந்தேன். 

நேத்துதான் ஊரிலிருந்து வந்திருக்கா. டயர்டா இருக்காம் யார் யார்லாம் வந்தாங்கன்னு சொன்னதோட சரி, சுவாரசியமான மேட்டர்லாம் நாளைக்கு சொல்லிறேன்னு சொல்லி இருக்கா.

இப்போ கரண்ட் கட் நேரம் அதனால, அப்புறமா சொல்றேனுங்க.