தீபாவளின்னா புதுத்துணி, பலகாரத்தைவிட பட்டாசுக்குதான் மவுசு. அதுலயும் வெடின்னா கூடுதல் விருப்பம். வெங்காயம் வெடி, மாப்பிள்ளை வெடி, லட்சுமி வெடி, ஓலை பட்டாசு, யானை வெடி, 7 ஷாட்.. இதுலாம்தான் நான் கேள்விப்பட்டது. ஆனா, இப்ப பிரபலங்களை வச்சு வெடிகளை உண்டாக்குறது ஃபேஷனா போச்சு. . முன்ன ஒருமுறை பதிவர்லாம் வச்சு இப்படி ஒரு போஸ்ட் போட்டேன். இப்ப முன்ன மாதிரி பதிவர்களுக்குள் நெருக்கம் இல்ல, அதனால அவங்களை பத்தி சொல்ல தெரில. அதுக்காக மரபை விட்டுடக்கூடாதுல்ல. அதனால, இப்ப ஹாட் டாபிக்ல இருக்கும் ஆட்களை வச்சு வெடி வெடிக்க ஆரம்பிப்போம்.
யார்ல இருந்து ஆரம்பிக்கலாம்... அம்மா! என்னம்மா ஆச்சுன்னு புலம்புனதாலயே சினேகனை பிடிக்காம போச்சு. பிக்பாஸ் பார்க்கும் எல்லாரும் அவர் கட்டிப்பிடிக்கிறார்ன்னு கிண்டலடிச்சாலும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் . வீட்டு வேலைகளை அழகா செய்வார், சமையல், க்ளீனிங்க்ன்னு இல்லாம எல்லா டாஸ்க்லயும் சூப்பரா செய்யும் அந்த அறிவு. உடல் வலிமைன்னு, அதோடு குடும்பத்தோட ஒட்டுதல் இல்லாமை, தோழியர் புடைசூழன்னு சொன்னது எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்களை நினைவுப்படுத்தும், அதனாலாயே சினேகனை பிடிக்கும் . அதனால, சினேகன்ல இருந்து ஆரம்பிக்கலாம்.... கடைசியா சினேகன் தான் ஜெயிக்கனும்ன்னு ஆசைப்பட்டேன்.
சினேகன் வெடி: வெடிய அப்படியே பத்த வச்சா மட்டும் வெடிக்காது. வெடிய பத்த வச்சுட்டு பக்கத்துல இருக்கவுங்களை கட்டிப்பிடிச்சு அழுதாதான் வெடிக்கும்.
ஓவியா வெடி: இது பத்த வச்சிட்டு லவ்வா பேசனும், கொஞ்சனும், இல்லன்னா செத்துடுவேன்னு மிரட்டும்.
ஆரவ் வெடி: இந்த கொஞ்சம் ஏடாகூடமான வெடி. இதையும் பத்த வச்சதும் வெடிக்காது. பக்கத்துல இருக்கவுங்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாதான் வெடிக்கும்.
ஜூலி வெடி: ஒருவேளை தான் வெடிக்காம போனதுக்கு மத்தவங்கதான் காரணம்ன்னு சொல்லும். கூடவே மத்த வெடிகளை பத்தி புரணி பேசும்.
சசிகலா வெடி: இது இப்படி வெடிக்கும் அப்படி வெடிக்கும்ன்னு கேட்லாக்ல இருக்கும். ஆனா பாருங்க பத்த வச்சதும், நேரா அம்மா சமாதில போயி மூணு முறை முட்டிட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்துலதான் போய் வெடிக்கும்.
பன்னீர் வெடி : முதல்ல இந்த வெடியதான் பத்த வக்கனும். ஒருவேளை மறந்தாப்ல இந்த வெடிய விட்டு வேற வெடிய பத்த வச்சா கோச்சுக்கிட்டு அம்மா சமாதில போய் உக்காந்து தியானம் பண்ணும்.
எடப்பாடி: இந்த வெடிய இங்க பத்த வச்சா டெல்லிலதான் போய் வெடிக்கும். வெடிக்கும்போது காவி கலர் பேப்பர் மட்டும்தான் பறக்கும்/.
கமல் வெடி: இது வெடிக்குமா?! வெடிக்காதா?! இல்ல புஸ்சுன்னு போகுமா?! வெளிச்சம் வருமா?!ன்னு குழம்பிக்கிட்டே இருக்க வைக்கும்.
ரஜினி வெடி: இது பத்த வச்சா யாரோட அட்வைசுக்காகவோ வெயிட் பண்ணி கடைசில நமுத்து போகும்.
சீமான் வெடி: இது தமிழர்கள் மட்டும்தான் பத்த வைக்கனும். இல்ல வேற மாநிலத்தவங்க, நாட்டவங்க பத்த வச்சா காது செவுடாகுற மாதிரி சத்தம் வரும். சிலசமயம் ஏடாகூடமா வெடிச்சு ஆட்களை பயமுறுத்தும்.
தமிழக அமைச்சர்கள் வெடி: இதுலாம் திரிக்கு நெருப்பு வச்சு அது கங்கு பிடிக்கனும்ன்னா இந்த வெடிங்க கண்ணுல நோட்டை காட்டனும். சங்கு சக்கரம்ன்னு நினைச்சு பத்த வச்சா அது ராக்கெட்டா மாறி பறக்கும், புஸ்வானம்ன்னு நினைச்சு பத்த வச்சா சங்கு சக்கரம் மாதிரி சுத்தும். சரி கம்பி மத்தாப்புன்னு நினைச்சு கொளுத்துனா பாம்பு மாத்திரை மாதிரி வெடிக்கும். ராக்கெட் புஸ்வானமாகும், லட்சுமி வெடி பென்சிலா மாறும். ஆக மொத்தம் எதும் அதுங்க நிலையில் இருக்காது.
தமிழிசை வெடி; இந்த வெடிய பத்த வைக்க மிஸ்டு கால் கொடுக்கனும், இல்லன்னா நீட் எக்சாம் எழுதி இருக்கனும், இல்லன்னா காவி ட்ரெஸ் போட்டிருக்கனும், இல்லன்னா நவோதயா பள்ளில படிச்சிருக்கனும்....
மோடி வெடி:: அப்படி வெடிக்கும் இப்படி வெடிக்கும்ன்னு கடைக்காரன் சொல்ல ஆசைப்பட்டு வாங்கி வந்து பத்த வச்சா புஸ்சுன்னு போகும்.

அவர்கள் உண்மைகள்: இந்த வெடிய பத்த வச்சதும் வெடிக்காது. பூரிக்கட்டையால போட்டாதான் வெடிக்கும். சிலசமயம் ஃபிகர் போனாலும் வெடிக்கும்.
கரந்தை ஜெயக்குமார்: இந்த வெடிய பத்த வச்சா எதாவது தமிழ் சங்கத்துல போயிதான் வெடிக்கும்/
எங்கள் பிளாக் : இது ஒரு வெடிதானேன்னு நினைச்சு பத்தா வச்சா ஒரு க்ரூப் வெடியே வெடிக்கும்.
துளசி கோபால்: இதை பத்த வச்சா கோவில், குளம்ன்னு போய் வெடிக்கும். இது அதோட ஜோடி வெடி இல்லாம வெடிக்காது. வளையல், புடவைன்னா இந்த வெடிக்கு ரொம்ப பிடிக்கும். கூடவே இந்த வெடி வீட்டுல வச்சாலும் இருக்காது. ஊர் சுத்திக்கிட்டே இருக்கும். வடையக்கூட இந்த வெடி ஃபோர்க், ஸ்பூன்லதான் சாப்பிடும்...
பகவான்ஜி வெடி: இத பத்த வச்சா ஜோக் சொல்லிக்கிட்டே வெடிக்கும். சில ஜோக் அப்பிடி இப்பிடி இருக்கும். சில ஜோக் மொக்கையா இருக்கும்.
கில்லர்ஜி வெடி: இந்த வெடி பார்க்க பயமா இருக்கும். ஆனா, பத்த வச்சா பயமுறுத்தாது. பாசமான வெடி.
துளசிதரன். தில்லைக்கது: இந்த வெடிய பத்த வச்சு, அது வெடிக்கும்போது ஒரே ஒரு சவுண்ட்தான் கேக்கும். ஆனா, பாருங்க. கீதா வெடியோட சவுண்டும் இதேமாதிரிதான் இருக்கும். அதனால, அதுதான் இது...இதுதான் அதுன்னு சொல்லி ஏமாத்தும் இந்த நாகர்கோவில் வெடி.

எல்லா வெடியும் பார்த்தாச்சு... ராஜி வெடிய பத்தி சொல்லனும்ல்ல...
ராஜி வெடி: எல்லா வெடியும் பத்த வச்சாதான் சத்தமா வெடிக்கும். ஆனா இந்த வெடி பத்த வைக்குறதுக்கு முன்னமயே சத்தம் போடும். ஆனா, பத்த வச்சா... புஸ்சுன்னு போயிடும்.
ராஜி இருந்தா அங்க அவளுக்க்கு பிடிச்ச அவ மாமன் இருக்கனுமில்ல?! இந்த வெடிய என்னதான் ஆசையா வெடிச்சாலும்... சாமியார் மாதிரி தியானம், கோவில், குளம்ன்னு போய் வெடிக்கும்....
2012ல அப்ப இருந்த பதிவர்களை வச்சு போட்ட பதிவு.. முடிஞ்சா பாருங்க. வலையுலகம் எப்படி கலகலவென இருந்ததுன்னு ஏக்கம் வரும்!
டமால்... டுமீல் பட்டாசுக்கடை - பதிவர்கள் வெடி அறிமுகம்...

ஹாப்பி தீபாவளி மக்கா!
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1475054

நன்றியுடன்,
ராஜி.