Showing posts with label வேட்டி. Show all posts
Showing posts with label வேட்டி. Show all posts

Sunday, January 06, 2019

பொட்டு வச்ச கிளியே - பாட்டு புத்தகம்

இன்னிக்கு வேட்டி வாரம் ஆரம்பிக்குதாமே! சோ, வேட்டி காட்டும் ஆண்களுக்குலாம் வாழ்த்துகள் சொல்லிக்கிட்டு, அப்படியே நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணாக்கும் வாழ்த்துக்களை சொல்லிடலாம். அதென்னம்மா தனபாலன் அண்ணா மட்டும் உனக்கு ஸ்பெஷல்! வேட்டி கட்டி படம் எதாவது அனுப்பினாரா?! இல்ல வேட்டி கடை வச்சிருக்காரான்னு கேட்காதீங்க. என் அண்ணாக்கு இன்னிக்கு ஹாப்பி பர்த் டே. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்! 

பட்டு வேட்டி, சட்டை உடுத்தி இருக்கும் ஆண்கள்லாம் கொள்ளை அழகா தெரிவாங்க.  என் கல்யாணத்தப்போ என்ன வேணும்ன்னு என்னை அப்பா கேட்கும்போது உனக்கு பட்டு வேட்டி சட்டை வாங்கனும். நான் உன்னைய இதுவரை பட்டு வேட்டி, சட்டைல பார்க்கலைப்பான்னு கேட்டேன். செலவுலாம் நிறைய இருக்கு. இப்ப வேணுமா?! இது அவசியமான்னு அப்பா கேட்டாங்க. ஆமாம்ன்னு சொல்ல, ஒரிஜினல் பட்டுவேட்டி, சட்டை வாங்கி, அப்பா உடுத்தினப்போ எனக்கு அத்தனை சந்தோசம். ஆடம்பரம் விரும்பாத அப்பா, அதை ஓரிரு முறை கட்டினதோடு சரி.  ஆனா, இன்னமும் பீரோவில் இருக்கு. 

 வேட்டி கட்டி  எத்தனையோ அழகான நடிகர்கள் நடிச்சிருந்தாலும் பட்டு வேட்டி, சட்டை பாந்தமா பொருந்தி போறது  கார்த்திக்குதான். பட்டு வேட்டி கட்டி நடிச்ச பாட்டுதான் இன்னிக்கு பார்க்கப்போறது பூவரசன் படத்திலிருந்து பொட்டு வச்ச கிளியே பாட்டு...

படம்: பூவரசன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி
எழுதியவர்: வாலி

நன்றியுடன்,
ராஜி