Thursday, December 09, 2010

மறந்துப்போன காதலனுக்கு கடிதம்

உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி, யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடித்ததை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ளஎன்றா? அல்லது பாசத்துடன் என்றா? அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்..,

என்னை எப்படியடா மறந்தாய்? உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டுஆண்டுகளா என்ன? நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.

எனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடியெடுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது?

உன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ? என் மீதான உன் வேட்கை அதிகமானதா?

பிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்துஇருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின்விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும், மீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,

அதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரிவோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,

நீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் பிரிவை எண்ணிகண்ணில் கண்ணீர் அரும்பியதே மறந்துவிட்டாயா? பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா?

பின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்றபின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,

பின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்??

ஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்பதுகிலோ வெள்ளி, "புதுவண்டி" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்.

உன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் "ஓட்டி"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை "ஓட்டி" பழகியிருக்கிறேன் என்றாய்.., "

மெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,

நீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் போர்ராமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.நீ இதைப் பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி

"சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா? ,இதற்கு நீ என்னை கொன்றே போட்டிருக்கலாம்.

இப்படிக்கு,

உன் பிரிவை எண்ணி வாடும்

உன் மிதிவண்டி

சே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்..,

காலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந்த ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்குஅவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.

அவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.

மருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு "இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றதுநினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .

காலையில் முதல் வேலையா எழுந்து "ஷெட்டுல இருக்குற தன்னோட பழையமிதிவண்டியை போய் பார்க்கனும்" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போணான்.

பின்குறிப்பு: இது என்னோடநூறாவது பதிவு. எத்தனை நாளைக்குதான் கவிதையே எழுதுறது.அதுதான் சிறுமுயற்சி. நூறாவது பதிவுக்காக வித்தியாசமாய் எதாவது எழுதனுமினு யோசிக்கையில், நிறைய "கதைக் கருக்கள்" மனதில் தோன்றியது. பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் பதிவிடுகிறேன்.

(மைண்ட் வாய்ஸ்: : பிடிக்கலைனு சொல்லிட்டால்??

நான்: அப்பவும் பதிவிடுவேன்.

மைண்ட் வாய்ஸ் :??!!!)

இந்த வலைப்பூவை விளையாட்டாய்தான் ஆரம்பித்தேன். ஆனாலும், தொடர்ந்து தொடர்வேனா என்று முதல் சில பதிவுகளில் நான் நினைத்ததுண்டு. நூறை தொட்டதில் எனக்கும் ஆச்சர்யம்தான். என் பதிவையும் படித்து பார்த்து??!!! முதன்முதலில் பாராட்டி, முதல் follower ஆன ஆதிரை அவர்களுக்கு நன்றி!! மற்றும் 24 followers க்கும் ஆயிரங்களை தாண்டிய பார்வையாளர்களுக்கும் நன்றி! நன்றி!!
24 comments:

 1. // இந்த வலைப்பூவை விளையாட்டாய்தான் ஆரம்பித்தேன். ஆனாலும் தொடர்வேனா என எனக்கே சந்தேகம்தான் //
  நூறுக்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.... நாங்க இருக்கிறோம்...

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ராஜி!!

  ReplyDelete
 3. அப்பறம் பதிவ பத்தி சொல்லனும்னா! நான் பயந்துகிட்டே படிச்சேன் என்னடா ஒரு மாதிரி போகுதேன்னு, ஆனால் நல்ல கற்பனை!!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ராஜி!!

  philosophy prabhakaran கூறியது...
  // இந்த வலைப்பூவை விளையாட்டாய்தான் ஆரம்பித்தேன். ஆனாலும் தொடர்வேனா என எனக்கே சந்தேகம்தான் //
  தொடர்ந்து எழுதுங்கள்.... நாங்க இருக்கிறோம்...//
  நானும் கூட ராஜி....
  நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நூறு பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்...1

  விளையாட்டாய் ஆரம்பிச்சாலும் விவரமாகத்தான் இருக்கிறது பதிவு எல்லாம்....! :))

  ReplyDelete
 7. ஜெயந்தி12/09/2010 4:33 PM

  மிதிவண்டினு நான் நினைக்கவேயில்லை. கதை கொஞ்சம் வளவள னு இருக்கு. அங்கங்கே டிங்கரிங்க், பட்டி பார்த்து சரிசெய்தால் இன்னும் சூப்பரா இருக்கும்.

  ReplyDelete
 8. நான் 18ப்ளஸ் கதைனு நினைச்சு உள்ள வந்தேன். கடைசியில இப்புடி பண்ணிட்டீங்களே. மக்கா வடை போச்சே

  ReplyDelete
 9. ராஜி சொல்லிட்டாங்க. போய் எல்லோரும் மிதிங்க. சீ மிதிவண்டி எடுத்துட்டு வாங்க

  ReplyDelete
 10. பிளாகர் philosophy prabhakaran கூறியது...

  // இந்த வலைப்பூவை விளையாட்டாய்தான் ஆரம்பித்தேன். ஆனாலும் தொடர்வேனா என எனக்கே சந்தேகம்தான் //
  நூறுக்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.... நாங்க இருக்கிறோம்.../////

  thanks

  ReplyDelete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. //நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.//

  அவ்வளவு பழசா??

  ReplyDelete
 13. பிளாகர் வைகை கூறியது...

  வாழ்த்துக்கள் ராஜி!


  பிளாகர் வைகை கூறியது...

  அப்பறம் பதிவ பத்தி சொல்லனும்னா! நான் பயந்துகிட்டே படிச்சேன் என்னடா ஒரு மாதிரி போகுதேன்னு, ஆனால் நல்ல கற்பனை
  /////////////////
  Thanks! Thanks

  ReplyDelete
 14. கல்பனா கூறியது...

  வாழ்த்துக்கள் ராஜி!!

  philosophy prabhakaran கூறியது...
  // இந்த வலைப்பூவை விளையாட்டாய்தான் ஆரம்பித்தேன். ஆனாலும் தொடர்வேனா என எனக்கே சந்தேகம்தான் //
  தொடர்ந்து எழுதுங்கள்.... நாங்க இருக்கிறோம்...//
  நானும் கூட ராஜி....
  நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
  //////////


  Thanks

  ReplyDelete
 15. பிளாகர் karthikkumar கூறியது...

  நூறு பதிவுக்கு வாழ்த்துக்கள்
  ////////////
  Thanks

  ReplyDelete
 16. பிளாகர் Kousalya கூறியது...

  வாழ்த்துக்கள்...1

  விளையாட்டாய் ஆரம்பிச்சாலும் விவரமாகத்தான் இருக்கிறது பதிவு எல்லாம்....! :))////////

  Thanks

  ReplyDelete
 17. ஜெயந்தி கூறியது...

  மிதிவண்டினு நான் நினைக்கவேயில்லை. கதை கொஞ்சம் வளவள னு இருக்கு. அங்கங்கே டிங்கரிங்க், பட்டி பார்த்து சரிசெய்தால் இன்னும் சூப்பரா இருக்கும்.
  /////////////

  அப்படியா நன்றி! இனி முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 18. பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  நூறுக்கு வாழ்த்துக்கள்
  /////////////////////////////////
  பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  ராஜி சொல்லிட்டாங்க. போய் எல்லோரும் மிதிங்க. சீ மிதிவண்டி எடுத்துட்டு வாங்க
  //////////////////////////////

  நன்றி! எதுக்கு மிதிவண்டி.. உனக்கு "நடராஜா சர்விசு" தான்

  ReplyDelete
 19. அன்பரசன் கூறியது...

  //நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.//

  அவ்வளவு பழசா??

  ///////////////////////////////////

  அப்போதான் மிதிவண்டி.., இப்போலாம் எல்.கே.ஜி பாப்பாக் கூட splender, pulser கேக்குது

  ReplyDelete
 20. மிகவும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

  தொடருங்கள்......

  நூறாவது பதிவுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ராஜி

  ReplyDelete
 22. நூறு பதிவுக்கு வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!!

  ReplyDelete