திங்கள், நவம்பர் 29, 2010

நீயில்லாத நிகழ்காலம்

என்னுள் மட்டும் அல்ல‌
என் கவிதையிலும்
வெறுமை தெரிகிறது
நீ இல்லாத தருணங்களில்...,

உன்னிடம் சொல்ல நினைத்து
ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌
நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!

சர்க்கரை இல்லாமலே இனிக்கிறது
உன் நினைவுகள்.
நீ கன்னத்திலிட்ட முத்தமும்,
கைவிரல் கோர்த்து நடந்த பயணமும்
நினைவில் மெல்ல நகர்கிறது
அந்தக்கணத்தின் தீராதத் தாகத்தோடு..,

அணுஅணுவாய் சுகம் கண்டு
ஆசைத் தீரப் பேறுப் பெற்று
ஆயுள்வரைக் கூட வருவேன் என்று
தோளில் சாய்ந்து நீ உரைத்ததைக் கேட்டு,
நமக்கு நிழல் கொடுத்த மரம்
உறைந்துக் கிடக்கின்றது இன்று

மௌ சாட்சியாய் ..,


உன் ஆசை மொழிகளை பகிர வந்த

அலைப்பேசி அழைப்புகளையும்,
உன் காதலை சொல்ல வந்த

குறுஞ்செய்திகளையும்,
உன் அன்பை சுமந்து வந்த

பரிசுகளையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..,!!
அவை அறியாப்
பல நெருடல்களோடு..,

என்னை விட்டுவிட்டு
உன்னால் எப்படி முடிந்தது
வேறொருவன் கரம்பிடித்துப் போக
ஒரு பூவைப்போல்...,

தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,

குறிப்பு: அடுத்த பதிவு எனது நூறாவது பதிவு , மற்றும் எனது மகளின் உற்ற தோழி ஓவியாவின் பிறந்த நாள் டிசம்பர் 3 ம் நாள் வருகிறது. அதற்கும் சேர்த்து மிகப்பெரிய ட்ரீட் வைக்கலாமினு இருக்கேன். எனவே, டிசம்பர் 3 ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் எட்டு மணியளவில் பார்ட்டி இருக்கு. பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டுகிறேன். .
இடம்: அவரவர் வீடு.
தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். .

நன்றி! நன்றி! நன்றி!


இவள்தான் ஓவியா


இவள்தான் என் மகள் தூயாவின் உற்ற தோழி. இவள் எனது மகளுக்கு இதே நாளில் வடபழனி முருகன் கோவிலில் பரிசாக கிடைத்தாள். என் மகளுக்கு எங்கள் வீட்டருகே யாரும் தோழிகள் இல்லாததால் இவள்தான் எல்லாமே.(பொம்மை என்று சொன்னால், கோவப்படுவாள்.) அது அவளுக்கு எந்த அளவு பிடிக்குமென்றால், எங்களுக்கு எதாவது அவளிடம் காரியம் சாதிக்க வேண்டுமென்றால், தூயாவை கொன்னுடுவோமினு என் மகனும், குப்பையில் தூக்கிப்போட்டுடுவேன்னு நானும் மிரட்டுமளவுக்கு அதன் மீது பைத்தியம் அவளுக்கு. தூங்கும்போது, அருகிலும், படிக்கும்போது அருகிலும், வெளியில் எங்காவது செல்லும்போது பத்திரமா இரு நு சொல்லி தன் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டுதான் செல்வாள். இன்று அது தனக்கு கிடைத்த நாளை அதன் பிறந்த நாள் என்று கூறி அதன் மீதுள்ள அலங்காரப் பொருட்களை அவளே செய்தாள்.

*******************************************************************************************************************இன்று உன் பிறந்த நாளில்லை
ஒரு தேவதை எனக்காக
ம்ண்ணில் இறங்கி வந்த நாள்.
- தூயா
34 கருத்துகள்:

 1. உன்னிடம் சொல்ல நினைத்து
  ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
  நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌
  நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!///
  கவிதை அருமை!

  ஓவியா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. நல்ல வரியை copy&paste பண்ண நினைத்தேன், முடியல ஒவ்வொரு வரியும் என்னாலும் உணர முடிந்தது! நேரமிருந்தால் வரவும் http://unmai-sudum.blogspot.com/

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை..!!

  தயவு செய்து போட்டோ வேற
  மாத்திடுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..!!

  பதிலளிநீக்கு
 5. அட அப்போ 100வது பதிவுக்கு பரிசு நாளைக்கு உங்களுக்கு கன்பார்ம்

  பதிலளிநீக்கு
 6. //உன்னிடம் சொல்ல நினைத்து
  ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
  நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌
  நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!

  சர்க்கரை இல்லாமலே இனிக்கிறது
  உன் நினைவுகள்.
  நீ கன்னத்திலிட்ட முத்தமும்,
  கைவிரல் கோர்த்து நடந்த பயணமும்//

  //
  வேறொருவன் கரம்பிடித்துப் போக
  ஒரு பூவைப்போல்...,
  தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,
  //
  மனதை தொடும் வரிகள்,

  மிக நன்றாக இருந்தது,

  கவிதை தொகுப்பு விரைவில் நூலாக வந்தாலும் வியப்பில்லை

  --ஆதிரை (வேறு அக்கௌன்ட் இல் இருந்து)

  பதிலளிநீக்கு
 7. பிளாகர் எஸ்.கே கூறியது...

  உன்னிடம் சொல்ல நினைத்து
  ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
  நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌
  நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!///
  கவிதை அருமை!

  ஓவியா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!////
  பாராட்டுக்கு நன்றி. எங்க ஓவியா யாருனு பார்த்தா நீங்க அசந்துப் போயிடுவீங்க.

  பதிலளிநீக்கு
 8. philosophy prabhakaran கூறியது...

  உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்.../////////////

  தங்கள் வருகைக்கும், பிந்தொடர்தலுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 9. வைகை கூறியது...

  நல்ல வரியை copy&paste பண்ண நினைத்தேன், முடியல ஒவ்வொரு வரியும் என்னாலும் உணர முடிந்தது! நேரமிருந்தால் வரவும் http://unmai-sudum.blogspot.com/

  வந்து பார்த்துட்டேன். இனி அடிக்கடி வருவேன். நன்றி

  பதிலளிநீக்கு
 10. வெங்கட் கூறியது
  கவிதை அருமைஃஃஃ
  நன்றி

  தயவுசெய்து வேற போட்டோ மாத்திடுங்க ப்ளீஸ்ஸ் ஃஃஃ

  சாரி சகோதரா. இது பிரிவு கவிதை. தன்னை மறந்து வேறொருவனை மணந்ததால் இது திணிக்கப்பட்ட பிரிவு. திணிக்கப்பட்ட பிரிவு என்றாலே இதயத்தை வேரோடு பிடுங்குவது போல. அதனால் இந்த படம் சரியான தேர்வே

  பதிலளிநீக்கு
 11. அருண்பிரசாத் கூறியது
  அட நுறாவது பதிவுக்கு பரிசு நாளைக்கு கன்பார்ம்ஃஃஃ

  அப்படியா!?!நன்றி

  பதிலளிநீக்கு
 12. திருவாதிரை கூறியது
  கவிதை அருமை.ஃஃஃ

  கவிதை தொகுப்பு விரைவில் நூலாக வந்தாலும் வியப்பில்லைஃஃஃ

  நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது. சும்மா ஏதோ எழுதி பார்ப்பேன் அவ்வளவே.
  என்னை கவிஞனாக்கிய பெருமை உங்களையே சாறும். (நேரம் ஒதுக்கி, படித்து, ரசித்து, பின்னூட்டமிடுவதால்).

  பதிலளிநீக்கு
 13. வெங்கட் சொன்ன மாதிரி போட்டோ மாத்திடுங்க பிளீஸ்... மனசுக்கு ரொம்ப சங்கடமா, கஸ்டமா இருக்கு அதை பார்த்தா...

  பதிலளிநீக்கு
 14. இதோ பரிசு:

  உங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

  http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html

  நன்றி

  பதிலளிநீக்கு
 15. பிரியமுடன் ரமேஷ் கூறியது...
  அருமையான கவிதை..////

  பாராட்டுக்கு நன்றி  ///வெங்கட் சொன்ன மாதிரி போட்டோ மாத்திடுங்க பிளீஸ்... மனசுக்கு ரொம்ப சங்கடமா, கஸ்டமா இருக்கு அதை பார்த்தா...///

  பாராட்டுக்கு நன்றி. சாரி சகோதரா இந்த கவிதைக்கு இந்த படம்தான் சரியான தேர்வுனு என் மனசுக்கு பட்டுச்சு.இந்த கவிதையை எப்பவோ எழுதிட்டேன். படத்துக்காக வலையில் தேடி, தேடிப் பார்த்தப்போது ..., இந்த படம் கிடைத்ததும் இதுதான் நான் தேடிய படம் என்று எடுத்துவைத்துவிட்டேன்.எந்த வலைப்பூ என்று நினைவில்லை.

  ஆகவே, மாற்ற இயலாது. சகோதரா மன்னிக்க

  பதிலளிநீக்கு
 16. பிரியமுடன் ரமேஷ் கூறியது...
  அருமையான கவிதை..////

  பாராட்டுக்கு நன்றி  ///வெங்கட் சொன்ன மாதிரி போட்டோ மாத்திடுங்க பிளீஸ்... மனசுக்கு ரொம்ப சங்கடமா, கஸ்டமா இருக்கு அதை பார்த்தா...///

  பாராட்டுக்கு நன்றி. சாரி சகோதரா இந்த கவிதைக்கு இந்த படம்தான் சரியான தேர்வுனு என் மனசுக்கு பட்டுச்சு.இந்த கவிதையை எப்பவோ எழுதிட்டேன். படத்துக்காக வலையில் தேடி, தேடிப் பார்த்தப்போது ..., இந்த படம் கிடைத்ததும் இதுதான் நான் தேடிய படம் என்று எடுத்துவைத்துவிட்டேன்.எந்த வலைப்பூ என்று நினைவில்லை.

  ஆகவே, மாற்ற இயலாது. சகோதரா மன்னிக்க

  பதிலளிநீக்கு
 17. அருண் பிரசாத் கூறியது...
  இதோ பரிசு:

  உங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

  http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html

  நன்றி
  ////////

  அப்ப‌டியா!!!! ப‌ரிசுக்கு ந‌ன்றி ச‌கோத‌ரா.. வ‌லைச்ச‌ர‌த்தை பார்வையிட்டுவிட்டு வ‌ருகின்றேன்.
  என் எழுத்துக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி நன்றி ச‌கோத‌ரா

  பதிலளிநீக்கு
 18. @ ராஜி.,

  // உங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் //

  நான் ஒரு வாரமா சொல்லிட்டு
  இருந்த அந்த Surprise Gift.. இது
  தானுகோ..!!

  அருண் 10 நாள் முன்னாடியே
  என்கிட்ட சொல்லிட்டார்..

  -----------------------------------

  படத்தை மாத்தலை..
  அதுக்கு காரணம் வேற..

  ம்ம்..ஓ.கே.. ஓ.கே.!!

  பதிலளிநீக்கு
 19. வெங்கட் கூறியது


  // உங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் //

  நான் ஒரு வாரமா சொல்லிட்டு
  இருந்த அந்த Surprise Gift.. இது
  தானுகோ..!!

  அருண் 10 நாள் முன்னாடியே
  என்கிட்ட சொல்லிட்டார்.. /////

  அப்படியா!!?? நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அன்பரசன் கூறியது...
  அருமையான வரிகள்.//////

  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 21. எனது கனிணிக்கு யாரோ சூனியம் வச்சுட்டதால என்னால் நூறாவது பதிவையும், தங்கள் பின்னூட்டத்திற்கு பதிலும் அளிக்க இயலா சூழ்னிலையில் இருக்கிறேன். நன்றி (யாருப்பா அது அங்க கை தட்டி விசிலடிக்கிறது.)ச்ரி, சரி கொஞ்ச நாளைக்கு ஜாலியா இருங்க.

  பதிலளிநீக்கு
 22. ஆழ்வார்பேட்டை ஆளுடா,
  அறிவுரையை கேளுடா,
  ஒரேக் காதல் ஊரில் இல்லையடா?
  தாவணி போனால் சல்வார் உள்ளதடா நண்பா
  so, enjooy

  பதிலளிநீக்கு
 23. வேறொருவன் கரம்பிடித்துப் போக
  ஒரு பூவைப்போல்...,
  தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,


  இந்த பொண்ணுங்க‌ளை செருப்பால அடிச்ச மாதிரி இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 24. வேறொருவன் கரம்பிடித்துப் போக
  ஒரு பூவைப்போல்...,
  தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,


  இந்த பொண்ணுங்க‌ளை செருப்பால அடிச்ச மாதிரி இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 25. நுறாவது பதிவுக்குவாழ்த்துக்கள்!
  அருமையான கவிதை..!!

  பதிலளிநீக்கு
 26. வெங்கட் sir சொன்ன மாதிரி போட்டோ மாத்திடுங்க பிளீஸ்... மனசுக்கு ரொம்ப சங்கடமா, கஸ்டமா இருக்கு அதை பார்த்தா..

  நுறாவது பதிவுக்குவாழ்த்துக்கள்!
  அருமையான கவிதை..!!

  பதிலளிநீக்கு
 27. ஒவ்வொரு வாட்டியும் கவிதைன்னு சொல்லி ஏமாத்திடுரீங்களே. கவிதை எங்க?

  பதிலளிநீக்கு
 28. //என்னுள் மட்டும் அல்ல‌
  என் கவிதையிலும்
  வெறுமை தெரிகிறது//

  நல்ல கவிதையா எழுதணும்...

  பதிலளிநீக்கு
 29. //உன்னிடம் சொல்ல நினைத்து
  ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
  நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌//

  ஏதாவது பக்கெட்டுல பிடிச்சு வைங்க

  பதிலளிநீக்கு
 30. //சர்க்கரை இல்லாமலே இனிக்கிறது
  உன் நினைவுகள்.//

  உங்களுக்கு சுகரா?

  பதிலளிநீக்கு
 31. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
  ஒவ்வொரு வாட்டியும் கவிதைன்னு சொல்லி ஏமாத்திடுரீங்களே. கவிதை எங்க?
  ///////////////////////////////

  ஏதாவது பக்கெட்டுல பிடிச்சு வைங்க
  ////////////////////////

  நல்ல கவிதையா எழுதணும்...
  ///////////////////////////////

  உங்களுக்கு சுகரா?
  //////////////////////////


  உங்களுக்கு கும்மி அடிக்க இன்னிக்கு வேற பிளாக் கிடைக்கலியா? பிரிவு கவிதைனு சொல்லி இருக்கேன். இங்க வந்து கும்மியடிக்கிறியே, இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமாம். கவிதையை கலைக்கண்ணோட்டத்தோட (கலைனா பொண்ணுப் பேரோ இல்ல பையன்பேரோ இல்ல ஆர்ட்)பார்க்கணும்.

  பதிலளிநீக்கு