Saturday, March 05, 2011

அலம்பல் தாங்க முடியலைடா சாமி..,

வியாழன் அன்று மாலை ஒலிக்க துவங்கிய எனது அலைப்பேசி இதோ, இந்த நிமிடம் வரை ஓயவில்லை.
வாழ்த்து சொன்ன தலைவர்களுக்கு நன்றி சொல்லி மாளவில்லை.
வீட்டிற்கு
வந்த பூங்கொத்துக்களை வாங்கி, வாங்கி எனது கைகள் ஓய்ந்துவிட்டன.
அந்த
பூங்கொத்துக்களை வாங்கி வைக்க எனது வீட்டில் இடம் போதவில்லை.
ஸ்ஸ்ஸ்
முடியலை சோடா பிளீஸ் ..,

(அட விஷயம் இதுதாங்க.., பய புள்ளை கவிதை ஒண்ணு ஆனந்தவிகடன் ல இந்த வாரம் வந்திருக்கு. அதனாலதான் இத்தனை அலப்பறை..,)

இதோ அந்த கவிதை உங்க பார்வைக்கும்..,

(இதப் பாரடா புத்தகம் படிக்குறவங்களை கொன்னது போதாதுன்னு உங்களையும் கொல்லுது இம்சை ..,)



தொட்டி மீன்
மனிதர்களற்ற வீட்டின்
தொட்டியினுள் சலனமற்று
வாழ்தலின் பொருட்டு
உலாவும் மீனுக்கு...,
சமுத்திரத்தின் சுதந்திரமோ?!
வலை நோக்கிய போராட்டமோ?!
எதுவாகினும்
தெரிவதில்லை!

டிஸ்கி: பாராட்டனும் னு நினைக்குறவங்க எல்லாம் மேடைக்கு வாங்க. திட்டனும் னு நினைக்குறவங்க லாம் சாரி போய்ட்டு நாளைக்கு வாங்க.


18 comments:

  1. முதல் மழை என்னை நனைத்ததே

    ReplyDelete
  2. >>>அந்த பூங்கொத்துகளை வியாளான்

    வியாழன்

    ReplyDelete
  3. >>நினைக்குறவங்க லாம் சாரி போட்டு நாளைக்கு வாங்க.

    போய்ட்டு

    ReplyDelete
  4. டியூஷன் ஃபீஸ் ரூ 100 தரவும். (விகடன்ல அவ்வளவுதான் குடுப்பாங்க. அத அப்படியே இங்கே தள்ளி விடவும்)

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    முதல் மழை என்னை நனைத்ததே///
    ரொம்ப நனையாதீங்க அப்புறம் சளி பிடிச்சுக்க போகுது

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>>அந்த பூங்கொத்துகளை வியாளான்

    வியாழன்
    ///
    >>நினைக்குறவங்க லாம் சாரி போட்டு நாளைக்கு வாங்க.

    போய்ட்டு
    ////////////

    சரி பண்ணிட்டேன்
    O.K. O.K.

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    டியூஷன் ஃபீஸ் ரூ 100 தரவும். (விகடன்ல அவ்வளவுதான் குடுப்பாங்க. அத அப்படியே இங்கே தள்ளி விடவும்)
    ///////////////////

    டியூஷன் ஃபீஸ் ரூ 100 போதுமா? இல்ல பெருசா எதாவது கவனிக்கனுமா?

    ReplyDelete
  8. ஆகா... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. " நல்ல கவிதை..!
    மேலும் தொரட்டும் உங்கள்
    கவிதை பணி..! "

    ( நீங்க எழுதி குடுத்து போட சொன்னதை
    அப்படியே போட்டுடேன்.. ஆனா எனக்கு
    வர வேண்டிய Commission பணம்
    இன்னும் Pending.. Why..?!?!!?? )

    ReplyDelete
  10. ஆனா ஆனந்த விகடன்ல ராஜூ அப்டின்னு பேர் போட்டிருக்கே. அது உண்மையிலையே நீங்க எழுதினதுதானா?

    ReplyDelete
  11. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

    ஆகா... வாழ்த்துக்கள்..
    //////////////////////////
    நன்றி சகோதரா

    ReplyDelete
  12. வெங்கட் கூறியது...

    " நல்ல கவிதை..!
    மேலும் தொரட்டும் உங்கள்
    கவிதை பணி..! "

    ( நீங்க எழுதி குடுத்து போட சொன்னதை
    அப்படியே போட்டுடேன்.. ஆனா எனக்கு
    வர வேண்டிய Commission பணம்
    இன்னும் Pending.. Why..?!?!!?? )

    /////////////////////

    உங்க account numbre எழுதுன paper மறந்து எங்கயோ வச்சுட்டேன். கிடைத்தவுடன் அனுப்பிடுறேன்.

    ReplyDelete
  13. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

    ஆனா ஆனந்த விகடன்ல ராஜூ அப்டின்னு பேர் போட்டிருக்கே. அது உண்மையிலையே நீங்க எழுதினதுதானா?

    //////////////////////////
    அது எதோ spelling mistake. அடுத்தவங்க பதிவை cut, copy&paste பண்ணிட்டு எங்களோடதுனு அலப்பறை விட தெரியாது, வேணும்னா ஆனந்த விகடனிலிருந்து பரிசு பணம் வருமில்ல அதோட ரசீதை செஞ்சு அதையும் ஒரு பதிவா போட்டுட்டா போச்சு.

    ReplyDelete
  14. ராஜி கூறியது...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

    ஆனா ஆனந்த விகடன்ல ராஜூ அப்டின்னு பேர் போட்டிருக்கே. அது உண்மையிலையே நீங்க எழுதினதுதானா?

    //////////////////////////
    அது எதோ spelling mistake. அடுத்தவங்க பதிவை cut, copy&paste பண்ணிட்டு எங்களோடதுனு அலப்பறை விட தெரியாது, வேணும்னா ஆனந்த விகடனிலிருந்து பரிசு பணம் வருமில்ல அதோட ரசீதை செஞ்சு அதையும் ஒரு பதிவா போட்டுட்டா போச்சு.///

    ரசீதை செஞ்சு அப்டின்னா நீங்களே டூப்ளிகட் ரெடி பண்ண போறீங்க அதான?

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் ராஜி , இது மிகபெரிய விஷயம்.

    வாழ்க வளர்க.

    ReplyDelete
  16. >>விகடனிலிருந்து பரிசு பணம் வருமில்ல அதோட ரசீதை செஞ்சு அதையும் ஒரு பதிவா போட்டுட்டா போச்சு.

    அட... இந்த ஐடியா எனக்கு வர்லையே.. டே சி பி நீ இன்னும் வளரனும்டா

    ReplyDelete
  17. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  18. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராஜி.

    ReplyDelete