Monday, June 06, 2011

இதுவரை கண்டிராதக் கோலங்களில்..,


அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் பாரதி,
ஓடி ஒளிந்து விளையாடும் ஔவை,
தூக்கக் கலக்கத்தில் கொட்டாவியுடன் கிருஷ்ணன்,
காற்சிலம்பை பாண்டிமாதேவிக்கு அணிவித்து மகிழும் கண்ணகி,

எழுத்தாணியால் முதுகு சொறியும் வள்ளுவன்,
கைத்தடியால் அடுத்தவனை அடிக்கும் காந்தி,
ரோஜா இதழை கசக்கி எறியும் நேரு,
சாக்லேட்டை பகிராமல் தான் மட்டும் உண்ணும் கர்ணன்,

அழைத்தவுடன் மேடையேற
வரிசையில் காத்தபடி
கண்டிராத கோலங்களில் இவர்கள்...,

பெற்றவர் பெருமைக்காக
யாரென்ற அறிமுகம்கூட
அல்லாதவரின் முகம் அணிந்து
மனனம் செய்தது
மறக்காமலிருக்க வேண்டி..,

உருப்போட்டபடி
"மாறுவேடப்போட்டி"யில்
பரிசுக் கனவுகளுடன்
காத்திருக்கும்
பிஞ்சுகள்.




27 comments:

  1. // பெற்றவர் பெருமைக்காக யாரென்ற
    அறிமுகம்கூட ல்லாதவரின் முகம்
    அணிந்து மனனம் செய்தது
    மறக்காமலிருக்க வேண்டி.., //

    ஹி., ஹி., ஹி...!!

    என் பசங்க ஸ்கூல் பக்கம்
    எதாவது போனீங்களா..?!

    ReplyDelete
  2. இது கதையா, கவிதையா. விளக்கம் ப்ளீஸ்

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
  4. //பெற்றவர் பெருமைக்காக
    யாரென்ற அறிமுகம்கூட
    அல்லாதவரின் முகம் அணிந்து
    மனனம் செய்தது
    மறக்காமலிருக்க வேண்டி..,

    உருப்போட்டபடி
    "மாறுவேடப்போட்டி"யில்
    பரிசுக் கனவுகளுடன்
    காத்திருக்கும்
    பிஞ்சுகள்.//

    இன்னும் ஸ்கூல் பக்கம் போகல... போனால் இதை எல்லாம் அனுபவிக்கலாம்...

    ReplyDelete
  5. என் ஸ்கூல் பக்கம் போனீங்களா?

    --Athirai

    ReplyDelete
  6. கவிதை வரிகள் தேர் போல வடிவம் கொண்டதை ரசித்தேன்.. தானா அமைஞ்சது போல .. காலரை தூக்கி விட வேண்டாம் ஹி ஹி

    ReplyDelete
  7. வெங்கட் கூறியது...

    // பெற்றவர் பெருமைக்காக யாரென்ற
    அறிமுகம்கூட ல்லாதவரின் முகம்
    அணிந்து மனனம் செய்தது
    மறக்காமலிருக்க வேண்டி.., //

    ஹி., ஹி., ஹி...!!

    என் பசங்க ஸ்கூல் பக்கம்
    எதாவது போனீங்களா..?!
    >>
    நல்ல வேளை போகலை. போயிருந்தால் என் கதி?? அவ்வ்வ்

    ReplyDelete
  8. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

    இது கதையா, கவிதையா. விளக்கம் ப்ளீஸ்
    >>
    கதை பாதி, கவிதை பாதி

    ReplyDelete
  9. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    வித்தியாசமான சிந்தனை.
    >>
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  10. பெயரில்லா கூறியது...

    என் ஸ்கூல் பக்கம் போனீங்களா?

    --Athirai
    >>
    நீங்க ஸ்கூல் பக்கம்லாம் போயிருக்கீங்களா?

    ReplyDelete
  11. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    கவிதை வரிகள் தேர் போல வடிவம் கொண்டதை ரசித்தேன்.. தானா அமைஞ்சது போல .. காலரை தூக்கி விட வேண்டாம் ஹி ஹி
    >>
    thanks

    ReplyDelete
  12. சங்கவி கூறியது...

    //பெற்றவர் பெருமைக்காக
    யாரென்ற அறிமுகம்கூட
    அல்லாதவரின் முகம் அணிந்து
    மனனம் செய்தது
    மறக்காமலிருக்க வேண்டி..,

    உருப்போட்டபடி
    "மாறுவேடப்போட்டி"யில்
    பரிசுக் கனவுகளுடன்
    காத்திருக்கும்
    பிஞ்சுகள்.//

    இன்னும் ஸ்கூல் பக்கம் போகல... போனால் இதை எல்லாம் அனுபவிக்கலாம்...
    >>
    வெகு விரைவில் இவற்றையெல்லாம் காணலாம்....,

    ReplyDelete
  13. வெங்கட் நாகராஜ் கூறியது...

    நல்ல கவிதை...
    >>>
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  14. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) கூறியது...

    அருமை
    >>>
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  15. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    Super kavithai
    >>
    Thanks

    ReplyDelete
  16. அழைத்தவுடன் மேடையேற
    வரிசையில் காத்தபடி
    கண்டிராத கோலங்களில் இவர்கள்..//

    ஒவ்வொரு வருடமும் கண்டு நொந்த தருணங்கள். உங்கள் கவிதை வடிவில். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி கூறியது...

    அழைத்தவுடன் மேடையேற
    வரிசையில் காத்தபடி
    கண்டிராத கோலங்களில் இவர்கள்..//

    ஒவ்வொரு வருடமும் கண்டு நொந்த தருணங்கள். உங்கள் கவிதை வடிவில். பாராட்டுக்கள்
    >>>>
    பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  18. என்னவொரு அருமையான கவிதை மாற்றுசிந்தனையுடன்...நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  19. மனசாட்சியே நண்பன் கூறியது...

    என்னவொரு அருமையான கவிதை மாற்றுசிந்தனையுடன்...நல்லா இருக்குங்க!
    >>
    பாராட்டுக்கு நன்றிங்க!!!

    ReplyDelete
  20. அழைத்தபடி மேடையேற
    வரிசையில் காத்தபடி
    கண்டிராத கோளங்களி இவர்கள்...//

    நல்ல கற்பனை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அம்பாளடியாள் கூறியது...

    அழைத்தபடி மேடையேற
    வரிசையில் காத்தபடி
    கண்டிராத கோளங்களி இவர்கள்...//

    நல்ல கற்பனை வாழ்த்துக்கள்.
    >>>தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  22. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
    மேலும் விபரம் அறியவும்....
    இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
    எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

    ReplyDelete
  23. நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. உலக சினிமா ரசிகன் கூறியது...

    எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
    மேலும் விபரம் அறியவும்....
    இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
    எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...
    >>>>
    தஙள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாய் வருகிறேன்.

    ReplyDelete
  25. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

    நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்
    >>>>>
    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete