என் குட்டிப் பையனுக்கு ஒரு சந்தேகம்.
(இதுக்கெல்லாம் சந்தேகம் வரலைனு எவன் அழுதான் இப்போ)
மனித இனம் எப்படி தோன்றிற்று..?ன்னு.
(ரொம்ப முக்கியமான சந்தேகம்தான்)
அவன் அவனோட அப்பாக்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தான்.
அப்பா, அப்பா மனித இனம் எப்படி தோன்றிற்றுனு.
அவன் அப்பா, கடவுள் "ஆதாம், ஏவாள்" என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"ன்னு சொன்னாங்க.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்கிட்ட வந்து கேட்டான்,
அம்மா அம்மா மனித இனம் எப்படி தோன்றிற்றுனு
"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..ன்னு நான் சொன்னேன்.
( என்னங்க, நான் சொன்னது கரெக்ட்தானே)
அப்பவும் அவனுக்கு புரியலை, என் பையனாச்சே அவ்வளவு சீக்கிரம் விளங்கிடுமா?
மீண்டும் அவன் அப்பாக்கிட்டயே போயி
அப்பா, அப்பா நீங்க ஆதாம், ஏவாள் ல இருந்து மனிதன் தோன்றினானு சொல்றீங்க, ஆனால் அம்மா குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்னு. இதில் எது சரினு கேட்டான்.
ரெண்டுமே சரிதான்பானு நாட்டாமை சரத்குமார் ரேஞ்சுல சொன்னார்.
அதெப்படி ஒருக் கேள்விக்கு ரெண்டுப் பதில் வரும்னு புத்திசாலித்தனமா கேட்டான்,
(என்னைப்போலவே)
அதுக்கு அவர் சொன்னாருப் பாருங்க ஒரு பதில்
அப்படியே, "ஷாக்க்க்காகிட்டேன் நானு".
(பின்ன இதுங்களாக் கூட மாறடிக்குறதுக்கு கரண்ட் ஷாக் எவ்வளவோ தேவலை)
எங்க பரம்பரை "ஆதாம், ஏவாள்" ல இருந்து வந்தது. உங்கம்மாதான் குரங்கின் மரோவதாரமேச்சே, அதனால உங்கம்மா கும்பல் லாம் "குரங்குப் பரம்பரை"னு.
கிர்ர்ர்ர் டமால்னு ஒரு சத்தம்.(இது நாந்தானுங்கோ.)
Very Good answer
ReplyDeleteNalla bulb a?
ReplyDeleteWhat a pity?
ReplyDeleteஎனக்கு என்ன கமென்ட் போடறதுன்னே தெரியல? ஹ..ஹ..ஹா.
ReplyDelete:)))) இரண்டில் எது சரியான பதில்... பதிலை உங்களிடமே விட்டு விடுகிறோம் நாங்கள்... :)))))
ReplyDeleteஎப்படா இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்.... உண்மைய சொல்லலாம்னு காத்துட்டு இருந்திருக்கார் போல....
ReplyDeletehi hi hi pinkey pinkey panki, father is a donkey...
ReplyDeleteஹா ஹா ஹா... சூப்பர் பல்பு...சூப்பர்..:)
ReplyDelete// உங்கம்மாதான் குரங்கின்
ReplyDeleteமரோவதாரமேச்சே, அதனால
உங்கம்மா கும்பல்லாம்
"குரங்குப் பரம்பரை"னு. //
இப்படி ஒரு பதில் சொன்ன
உங்க வீட்டுக்காரரை சும்மாவா
விட்டு இருப்பீங்க...?
அப்படியே தாவி... ஒரு கடி
கடிச்சி இருப்பீங்களே..!
எனக்கு தெரியும்..! :)
வணக்கம் ராஜி அவர்களே,
ReplyDelete//"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..ன்னு நான் சொன்னேன்.
( என்னங்க, நான் சொன்னது கரெக்ட்தானே)//
காலம் காலமாக இதை நாம் சொல்லி வந்தாலும் இக்கருத்து தவறு..
//எங்க பரம்பரை "ஆதாம், ஏவாள்" ல இருந்து வந்தது. உங்கம்மாதான் குரங்கின் மரோவதாரமேச்சே, அதனால உங்கம்மா கும்பல் லாம் "குரங்குப் பரம்பரை"னு.//
ReplyDeleteஅற்புதம் சகோதரி.. உங்க ஆத்துக்காரருக்கு என்னா டைமிங் சென்ஸ்.. என்னோட வாழ்த்துக்களை சொல்லுங்க..
அன்பன் சிவ. சி.மா.ஜா.
http://sivaayasivaa.blogspot.com
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
ReplyDeleteVery Good answer
Nalla bulb a?
>>>
Hi hi
திருவாதிரை கூறியது...
ReplyDeleteWhat a pity?
>>>
Happy
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
ReplyDeleteஎனக்கு என்ன கமென்ட் போடறதுன்னே தெரியல? ஹ..ஹ..ஹா.
>>>
வாத்தியாருக்கே தெரியலியா?
வெங்கட் நாகராஜ் கூறியது...
ReplyDelete:)))) இரண்டில் எது சரியான பதில்... பதிலை உங்களிடமே விட்டு விடுகிறோம் நாங்கள்... :)))))
:-(((((((
அருண் பிரசாத் கூறியது...
ReplyDeleteஎப்படா இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்.... உண்மைய சொல்லலாம்னு காத்துட்டு இருந்திருக்கார் போல....
>>>
அப்படித்தான் போல
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeletehi hi hi pinkey pinkey panki, father is a donkey...
>>>>
எல்லா அப்பாக்களும் கழுதையா? அப்போ நீங்க?
அப்பாவி தங்கமணி கூறியது...
ReplyDeleteஹா ஹா ஹா... சூப்பர் பல்பு...சூப்பர்..:
>>>
சகோதரி உங்களுக்குமா நான் பல்ப் வாங்குனதில் மகிழ்ச்சி
வெங்கட் கூறியது...
ReplyDelete// உங்கம்மாதான் குரங்கின்
மரோவதாரமேச்சே, அதனால
உங்கம்மா கும்பல்லாம்
"குரங்குப் பரம்பரை"னு. //
இப்படி ஒரு பதில் சொன்ன
உங்க வீட்டுக்காரரை சும்மாவா
விட்டு இருப்பீங்க...?
அப்படியே தாவி... ஒரு கடி
கடிச்சி இருப்பீங்களே..!
எனக்கு தெரியும்..! :)
>>>>
பாம்பின் கால் பாம்பறியும் என்பது இதுதானோ?
சிவ.சி.மா. ஜானகிராமன் கூறியது...
ReplyDeleteவணக்கம் ராஜி அவர்களே,
//"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..ன்னு நான் சொன்னேன்.
( என்னங்க, நான் சொன்னது கரெக்ட்தானே)//
காலம் காலமாக இதை நாம் சொல்லி வந்தாலும் இக்கருத்து தவறு..
>>> வணக்கம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சிவ.சி.மா. ஜானகிராமன் கூறியது...
ReplyDelete//எங்க பரம்பரை "ஆதாம், ஏவாள்" ல இருந்து வந்தது. உங்கம்மாதான் குரங்கின் மரோவதாரமேச்சே, அதனால உங்கம்மா கும்பல் லாம் "குரங்குப் பரம்பரை"னு.//
அற்புதம் சகோதரி.. உங்க ஆத்துக்காரருக்கு என்னா டைமிங் சென்ஸ்.. என்னோட வாழ்த்துக்களை சொல்லுங்க..
>>>> ஆமாங்க சகோ
:) ஹா.. ஹா..
ReplyDeleteஇது பரம்பரை சண்டைதான்..
ரிஷபன் கூறியது...
ReplyDelete:) ஹா.. ஹா..
இது பரம்பரை சண்டைதான்..
>>>
அப்படித்தான் போல இருக்கு சகோதரா. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
பரம்பரை விளக்கம் அருமை.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி கூறியது...
ReplyDeleteபரம்பரை விளக்கம் அருமை.
>>>>
தங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும், நன்றி.
இராஜராஜேஸ்வரி கூறியது...
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/06/3.html
தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி.
>>>>
என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
இந்த ஆம்பிளைங்கலே இப்படி தான் எஜமான்... :(
ReplyDelete