Tuesday, June 21, 2011

"யாராவது காப்பாற்றுங்களேன் "



தூக்கத்தில் கனவு அன்று ..,
கனவில் தூக்கம் இன்று ..,

 தேடலே தொழிலாகி..,
வலைத் தளங்களானது
வாழ்க்கை ..,
ஒவ்வொரு நாளும்
வெவேறு தேடல்கள்.

மறைச்சொல்லை
மறக்கிறோம்
முடமாகிறது தொடக்கம்...,
தொடக்கூடாததைத்
தொடுகிறோம்
குப்பையாகிறது  கோப்பு.     

விரல் நுனிகளில் வைரஸ்
புற்றாகிறது  பூக்கள்..,
அடுத்த கிரகம் தேடி
அலைகிறோம்
"ஆண்டி வைரஸ்" தேடி  

விஞ்ஞான  எல்லையை
எட்டிக் கொண்டே
பயணிக்கிறது அறிவு...,
அறிவைக் குட்டிக் கொண்டே
பயணிக்கிறது விஞ்ஞானம்.

குடம் தேனாய்
விஞ்ஞானம் கண்டோம்,
குடத்துக்குள்ளேயே
வீழ்ந்தோம்
  
"யாராவது காப்பாற்றுங்களேன் "  
   

23 comments:

  1. நல்ல கவிதை..

    ஆனா நீங்க இப்படி எல்லாம்
    எழுத வாய்ப்பில்லையே.. எந்த
    Site-ல சுட்டீங்க..?

    ReplyDelete
  2. வெங்கட் கூறியது...

    நல்ல கவிதை..

    ஆனா நீங்க இப்படி எல்லாம்
    எழுத வாய்ப்பில்லையே.. எந்த
    Site-ல சுட்டீங்க..?
    >>>
    நிச்சயமாய் உங்க Siteல் இல்ல சார்.

    ReplyDelete
  3. ""யாராவது காப்பாற்றுங்களேன் ""

    ReplyDelete
  4. வெங்கட் கூறியது...

    நல்ல கவிதை..

    ஆனா நீங்க இப்படி எல்லாம்
    எழுத வாய்ப்பில்லையே.. எந்த
    Site-ல சுட்டீங்க..?

    அவங்களும் உங்களை மாதிரி தான் எஸ் எம் எஸ் ல இருந்து சுட்டாங்க. ஹா ஹா

    ReplyDelete
  5. >>விஞ்ஞான எல்லையை
    எட்டிக் கொண்டே
    பயணிக்கிறது அறிவு...,
    அறிவைக் குட்டிக் கொண்டே
    பயணிக்கிறது விஞ்ஞானம்.

    கலக்கல் வரிகள்

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    வெங்கட் கூறியது...

    நல்ல கவிதை..

    ஆனா நீங்க இப்படி எல்லாம்
    எழுத வாய்ப்பில்லையே.. எந்த
    Site-ல சுட்டீங்க..?

    அவங்களும் உங்களை மாதிரி தான் எஸ் எம் எஸ் ல இருந்து சுட்டாங்க. ஹா ஹா
    >>>
    இதென்ன வஞ்சப்புகழ்ச்சி அணியா?

    ReplyDelete
  7. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

    ""யாராவது காப்பாற்றுங்களேன்
    >>>>
    நீங்க உங்க பிளாக்க படிச்சீங்களா?

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>விஞ்ஞான எல்லையை
    எட்டிக் கொண்டே
    பயணிக்கிறது அறிவு...,
    அறிவைக் குட்டிக் கொண்டே
    பயணிக்கிறது விஞ்ஞானம்.

    கலக்கல் வரிகள்
    >>>>
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  9. அசத்தலான வரிகள்..
    அருமையான காவிதை..
    நன்றி சகோ..

    ReplyDelete
  10. super raji... really nice

    ReplyDelete
  11. நல்ல வேளை...ஜஸ்ட் எஸ்கேப்.... முதல் பத்தி படிச்சவுடனேயே நீன்ஃப்க கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கீங்கனு கண்டுபிடிச்சிட்டு...முழுசா படிக்காம ஓடிவந்துட்டேன்

    ReplyDelete
  12. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    அசத்தலான வரிகள்..
    அருமையான காவிதை..
    நன்றி சகோ..
    >>>>
    பாராட்டுக்கு நன்றி சகோதரரே

    ReplyDelete
  13. பெயரில்லா கூறியது...

    super raji... really nice
    >>>
    Thanks.

    ReplyDelete
  14. அருண் பிரசாத் கூறியது...

    நல்ல வேளை...ஜஸ்ட் எஸ்கேப்.... முதல் பத்தி படிச்சவுடனேயே நீன்ஃப்க கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கீங்கனு கண்டுபிடிச்சிட்டு...முழுசா படிக்காம ஓடிவந்துட்டேன்
    >>>.
    இந்த கவிதையெல்லாம் தமிழ்பாடப்புத்தகத்துல, செய்யுள்பகுதில வரும், உங்க மகளுக்கு சொல்லிக்குடுக்கும்போது, அடடா இது ராஜியின் கவிதயாச்சே, அப்பவே miss பண்ணிட்டமேனு வருத்தப்படப்போறீங்க பாருங்க.

    ReplyDelete
  15. நல்ல கவிதை.ரசித்தேன்.
    கவியரசர் கண்ணதாசனைப்பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
    உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
    அன்போடு அழைக்கிறேன் சகோதரியே...

    ReplyDelete
  16. உலக சினிமா ரசிகன் கூறியது...

    நல்ல கவிதை.ரசித்தேன்.
    கவியரசர் கண்ணதாசனைப்பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
    உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
    அன்போடு அழைக்கிறேன் சகோதரியே..
    >>
    கண்டிப்பாய் வருகிறேன். நன்றி சகோதரரே.

    ReplyDelete
  17. கவிதை மிக அருமை, குறிப்பாக இந்த வரிகள்
    //விரல் நுனிகளில் வைரஸ்
    புற்றாகிறது பூக்கள்..//

    ReplyDelete
  18. கவிதையாய் சொல்லி இருக்கீங்க நடைமுறையை ரசித்தேன் சகோ நன்றி!

    ReplyDelete
  19. திருவாதிரை கூறியது...

    கவிதை மிக அருமை, குறிப்பாக இந்த வரிகள்
    //விரல் நுனிகளில் வைரஸ்
    புற்றாகிறது பூக்கள்../
    .>>>
    நன்றி

    ReplyDelete
  20. விக்கியுலகம் கூறியது...

    கவிதையாய் சொல்லி இருக்கீங்க நடைமுறையை ரசித்தேன் சகோ நன்றி
    >>>
    நன்றி சகோதரா

    ReplyDelete
  21. யாராலும் உங்களைக் காப்பாத்த முடியாது தாயி
    நீங்களா வெறுத்து ஒதுக்கினாத்தா உண்டு. இல்லையென்றா
    போற போக்கில என்னமாதிரி பல்லு விளக்காம சாப்புடுவீங்க
    தனியா நின்னு சிரிப்பீக,எரிஞ்சு எரிஞ்சு விளுவீக என்ன
    நா சொல்லுறது உங்களவிட அதிகமா இதால பாதிக்கப் பட்டவ நா.
    சொன்னாக் கேட்டுக்கோங்க அம்புட்டுத்தா!!..............

    ReplyDelete
  22. நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்..........

    ReplyDelete
  23. தூக்கத்தில் கனவு அன்று ..,
    கனவில் தூக்கம் இன்று //

    தூக்கமே கனவாய் போனால் காப்பதெங்கே?

    கவிதை அருமை.

    ReplyDelete