Tuesday, July 19, 2011

சிடியாக அவதாரமெடுத்த‌ "ஏ,பி,சி,டி"1990 ல‌
தூயா இங்க வாம்மா
          என்னம்மா?
பக்கத்துல வந்து உக்காருடி செல்லம் நாம ஏ,பி,சி,டி சொல்லலாம்.
எங்கே சொல்லு பார்க்கலாம் ஏ,பி,சி,டி..,
          ஏ,பி,சி,டி
ம் அப்புறம்...,
         அப்புறம் என்னம்மா
முழுசா ஏ,பி,சி,டி, சொல்லும்மா.
          ம் முழுசா ஏ,பி,சி,டி
அவ்வ்வ்வ்வ்

 2000ல
அவள் ஹோம்வொர்க் நோட்டுல, ஒரு வார்த்தையில சியும் டியும் விடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டி
சிடி எங்கேம்மா தூயா?
இரும்மா அலமாரில இருக்கான்னு பார்த்துட்டு வரேன்.
நற நற நற
                                   
                                                 
                                                    
                                                         


2011 ல
சில நாட்கள் வெளியூருக்கு நான் மட்டும் போக வேண்டிய சூழல். திரும்பி வந்து பார்க்கும்போது
கம்ப்யூட்டர்  சியும், டியும்  எழுத்துக்கள் அழிஞ்சுப் போயிருந்துச்சு
தூயா . கீப்போர்டுல இருந்த சிடியை காணோமேம்மா.
லூஸுப் போல உளறதேம்மா. கீப்போர்டுல  எப்படி சிடி இருக்கும்?
அது சிடி டிரைவ்லதானே இருக்கும்
கிர்ர்ர் டமால்.

 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
                                                        
 இப்படி என்னை கலாய்ச்சு, பல்ப் குடுக்கும் என் செல்ல மகளுக்கு இன்று பிறந்த நாள் அவளுக்கு வாழ்த்து சொல்லும் இந்த இனிய வேளையில், அவள் தந்த பல்ப்க்களை எண்ணி, "எண்ணி" சிறு வெட்கத்துடன் பெருமிதமும் கொள்கிறேன்.
                                             

 டிஸ்கி1:என் கண்ணசைவில் என் எண்ணத்தை புரிந்து சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் நடக்க வல்லவள். சில நேரங்களில் மட்டும் மகளாகவும், மற்ற‌ நேரங்களில் தாயாகவும்,தோழியாகவும், ஆசானாகவும் அவதாரமெடுக்கும் இவள், வெகுசில சமயங்களில் மட்டும்  குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை எடுப்பாள்.

                                                        
                                                                

அவளுக்கு பரிசாய்  ஒரு கவிதை:

அப்படிதான் இருந்தாள் அவள்..,
தங்கச் சிலைக்கு
உயிர் பெற்று, அசைந்தாடி..,
வெள்ளி மணிகளின் நாதம் போல்
அழுகையுடன்...,

கரை தொலைத்த படகாய்
நானிருக்க, தூரத்தில்
கண்சிமிட்டி வழிகாட்டும் கலங்கரை
விளக்காய் நீ வந்தாய்...,

எனக்காவே பிறந்தாய் நீயென்று
உன்னை நான் உச்சி முகர்ந்த
அத்தருணமே.., என் மனம்
சாந்தியடைய கண்டேன்..,

என்னவளே!
எனக்கு வரமாக கிடைத்தவளே!
இறைவனிடம் எனக்காக‌
வரமொன்று கேட்பாயா?!

என் விழிநீர் உனைத்தழுவ‌
உன் மடிதனில் முகம்
புதைத்திருக்கும் வேளையினில்
எனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,

உன் பிறப்பில் உளமகிழ்ந்தேன்
என்னுயிரையும்விட நேசிக்கிறேன் உன்னை..,
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.
 
 என் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லும் அதே வேளையில், அவள் வாழ்வில் எல்லா நல‌மும், வளமும் பெறனுமினு கடவுளை வேண்டிக்கணுமினு கேட்டுக்குறேன்.
Wish You Many More Returns of The Day Thooyaa.                       

                                       

 79 comments:

 1. பிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்....

  ReplyDelete
 2. பாப்பாவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மாபெறும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்/.. .....

  ReplyDelete
 3. >>என் கண்ணசைவில் என் எண்ணத்தை புரிந்து சமயோசிதமாகவும், சமர்த்தியமாகவும் நடக்க வல்லவள். சில நேரங்களில் மட்டும் மகளாகவும், மற்ற‌ நேரங்களில் தாயாகவும்,தோழியாகவும், ஆசானாகவும் அவதாரமெடுக்கும் இவள், வெகுசில சமயங்களில் மட்டும் குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை எடுப்பாள்.

  சாமார்த்தியமாவா?சமர்த்தியமாவா? சமர்த்தா சமாளீங்க பார்ப்போம்?

  ReplyDelete
 4. >>கரைத் தொலைத்த படகாய்

  கரை தொலைத்த படகாய்.. என்பதே சரி.. இருந்தாலும் பாசத்தில் அழுத்தத்தில் அது கணக்கில் வராது..

  ReplyDelete
 5. முத ஃபோட்டோ கலக்கல். எல்லா அம்மாவுக்கும் குழந்தை எவ்வளவு பெரியவள் ஆனாலும் தாய்க்கு அவள் 3 வயது குழந்தையாகத்தான் தென்படுவாள் என்பதை சொல்லாமல் சொன்னது..

  ReplyDelete
 6. உங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ட்ரீட் எப்போ?

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  முதல் மழை
  >>>
  முதல் மழை அல்ல. முதல் வாழ்த்து அல்லது சாக்லேட்

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  பிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்..
  >>>
  அதென்ன சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்..? விளக்கம் பிளீஸ்

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  பாப்பாவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மாபெறும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்/.. .....
  >>>
  வாழ்த்துக்கள் நன்றிகள்

  ReplyDelete
 10. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >>என் கண்ணசைவில் என் எண்ணத்தை புரிந்து சமயோசிதமாகவும், சமர்த்தியமாகவும் நடக்க வல்லவள். சில நேரங்களில் மட்டும் மகளாகவும், மற்ற‌ நேரங்களில் தாயாகவும்,தோழியாகவும், ஆசானாகவும் அவதாரமெடுக்கும் இவள், வெகுசில சமயங்களில் மட்டும் குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை எடுப்பாள்.

  சாமார்த்தியமாவா?சமர்த்தியமாவா? சமர்த்தா சமாளீங்க பார்ப்போம்?
  >>> பப்ளிக்ல இப்படியா மானத்தை வாங்குவீங்க? மாத்திடுறேன்

  ReplyDelete
 11. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >>கரைத் தொலைத்த படகாய்

  கரை தொலைத்த படகாய்.. என்பதே சரி.. இருந்தாலும் பாசத்தில் அழுத்தத்தில் அது கணக்கில் வராது..
  >>>
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  முத ஃபோட்டோ கலக்கல். எல்லா அம்மாவுக்கும் குழந்தை எவ்வளவு பெரியவள் ஆனாலும் தாய்க்கு அவள் 3 வயது குழந்தையாகத்தான் தென்படுவாள் என்பதை சொல்லாமல் சொன்னது..
  >>>
  நன்றி (இது எனக்கு தோணலையே)

  ReplyDelete
 13. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  உங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ட்ரீட் எப்போ?
  >>>
  நன்றி. ஆரிய கூத்தாடினாலும் காரியத்துல மட்டும் கண்ணாக இருக்கும் ரமேஷ் வாழ்க,

  ReplyDelete
 14. தூயா..! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 15. // வெகுசில சமயங்களில் மட்டும்
  குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை
  எடுப்பாள். //

  யாரை., எப்படி சமாளிக்கணும்னு
  அவளுக்கு தெரிஞ்சி இருக்கு..
  விடுங்க..!

  ReplyDelete
 16. வெங்கட் கூறியது...

  தூயா..! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!
  >>>>
  வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 17. வெங்கட் கூறியது...

  // வெகுசில சமயங்களில் மட்டும்
  குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை
  எடுப்பாள். //

  யாரை., எப்படி சமாளிக்கணும்னு
  அவளுக்கு தெரிஞ்சி இருக்கு..
  விடுங்க..!
  >>>>>
  நீங்களும் உங்க பிள்ளைங்கக்கிட்ட நிறைய பல்ப் வாங்குவீங்கனு
  உங்க பதிவுல படிச்சதா நினைவு

  ReplyDelete
 18. எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

  ReplyDelete
 19. Vazhga Valamudan

  ReplyDelete
 20. பிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்...

  ReplyDelete
 21. வணக்கம் ராஜி.உங்க பெண்ணிர்க்கு அழகான் கவிதையை பரிசாக அளித்துள்ளீர்கள்.
  என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  நான் புதியதாக பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன் நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவிர்க்கு வந்து பார்க்கவும். நன்றி..

  ReplyDelete
 22. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 23. பயங்கர பல்ப்லாம் வாங்கியிருக்கீங்க :)

  வாழ்த்துக்கள் அன்பு மகளூக்கு!!!

  ReplyDelete
 24. உன் பிறப்பில் உளமகிழ்ந்தேன்
  என்னுயிரையும்விட நேசிக்கிறேன் உன்னை..,
  உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.//

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. அன்பு தூயாவிற்கு,

  என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  உன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தும் நெஞ்சம்

  ---ஆதிரை

  ReplyDelete
 27. மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. உங்க செல்ல மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் .God Bless You Thooya .May this day bring to you all things that make you smile. Happy Birthday!.

  ReplyDelete
 29. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தூயா......

  ReplyDelete
 30. உலகில் தாயன்பிற்க்கு இணையானது எதுவும் இல்லை என்பதை சொல்லும் அழகான கவிதை..
  என் விழிநீர் உனைத்தழுவ‌
  உன் மடிதனில் முகம்
  புதைத்திருக்கும் வேளையினில்
  எனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,நெஞ்சைத் தொட்ட வரிகள்...
  தூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 31. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயா..

  பல்பு வாங்குறதுக்காகத்தானே நாமெல்லாம் அவதாரம் எடுத்திருக்கோம் தூயாம்மா(லாஜி) :-))))

  ReplyDelete
 32. Wish You many more happy returns of day...

  ReplyDelete
 33. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தூயா
  அம்மாவை தொல்லை பண்ணாம சமர்த்தா இருக்கணும் சரியா!!

  ReplyDelete
 34. ♔ம.தி.சுதா♔ கூறியது...

  எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
  >>>
  பாப்பாக்கிட்ட தங்கள் வாழ்த்தை சேர்த்திட்டேன் சகோ

  ReplyDelete
 35. பெயரில்லா கூறியது...

  Vazhga Valamudan
  நன்றி!

  ReplyDelete
 36. Mohamed Faaique கூறியது...

  பிறந்த நாள் .. இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் .. சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் சொய்ங்க் டோய்ங்க்...
  >>>>
  வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 37. RAMVI கூறியது...

  வணக்கம் ராஜி.உங்க பெண்ணிர்க்கு அழகான் கவிதையை பரிசாக அளித்துள்ளீர்கள்.
  என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  நான் புதியதாக பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன் நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவிர்க்கு வந்து பார்க்கவும். நன்றி..
  >>>
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். கண்டிப்பாய் வரேன் சகோதரி

  ReplyDelete
 38. ஆமினா கூறியது...

  பயங்கர பல்ப்லாம் வாங்கியிருக்கீங்க :)

  வாழ்த்துக்கள் அன்பு மகளூக்கு!!!
  >>>>
  தங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்

  ReplyDelete
 39. இராஜராஜேஸ்வரி கூறியது...

  உன் பிறப்பில் உளமகிழ்ந்தேன்
  என்னுயிரையும்விட நேசிக்கிறேன் உன்னை..,
  உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.//

  வாழ்த்துக்கள்.
  >>
  தங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும், தங்களின் பிரார்த்தனைக்கும் நன்றிகள்

  ReplyDelete
 40. விக்கியுலகம் கூறியது...

  உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  >>
  வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ

  ReplyDelete
 41. நாய்க்குட்டி மனசு கூறியது...

  happy birthday wishes to the birthday baby
  >>
  Thanks for your wishes

  ReplyDelete
 42. பெயரில்லா கூறியது...

  அன்பு தூயாவிற்கு,

  என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  உன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தும் நெஞ்சம்

  ---ஆதிரை
  >>>>>
  தங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்

  ReplyDelete
 43. Rathnavel கூறியது...

  மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  >>

  தங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் ஐயா

  ReplyDelete
 44. angelin கூறியது...

  உங்க செல்ல மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் .God Bless You Thooya .May this day bring to you all things that make you smile. Happy Birthday!.
  >>
  தங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்

  ReplyDelete
 45. Krishnan R கூறியது...

  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தூயா......
  >>>
  வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 46. ரேவா கூறியது...

  உலகில் தாயன்பிற்க்கு இணையானது எதுவும் இல்லை என்பதை சொல்லும் அழகான கவிதை..
  என் விழிநீர் உனைத்தழுவ‌
  உன் மடிதனில் முகம்
  புதைத்திருக்கும் வேளையினில்
  எனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,நெஞ்சைத் தொட்ட வரிகள்...
  தூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  >>>>
  தங்கள் வருகைக்கும், வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்

  ReplyDelete
 47. அமைதிச்சாரல் கூறியது...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயா..

  பல்பு வாங்குறதுக்காகத்தானே நாமெல்லாம் அவதாரம் எடுத்திருக்கோம் தூயாம்மா(லாஜி) :-))))
  >>>>
  அப்படித்தான் போல இருக்கு போல வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 48. பிளாகர் udai கூறியது...

  Wish You many more happy returns of day...
  Thanks for your wishes

  ReplyDelete
 49. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தூயா
  அம்மாவை தொல்லை பண்ணாம சமர்த்தா இருக்கணும் சரியா!!
  >>

  அவ சொல் பேச்சுக் கேட்க மாட்டாள் சகோ. ஆனால், அவள் சமர்த்தா இருந்திட்டா வீட்டோட கலகலப்பே போயிடுமே, மத்தப்படி வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 50. உங்கள் குழந்தைக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 51. உங்கள் குழந்தைக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
  >>
  தங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள்

  ReplyDelete
 52. மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 53. FOOD கூறியது...

  மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.
  >>>>
  தங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் சகோ.

  ReplyDelete
 54. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தூயா

  ReplyDelete
 55. Faizal கூறியது...

  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தூயா
  >>>>
  தங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் சகோ.

  ReplyDelete
 56. உங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 57. ஹாப்பி பர்த்டே தூயா...

  ReplyDelete
 58. எஸ்.கே கூறியது...

  உங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  >>
  வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 59. சரியில்ல....... கூறியது...

  ஹாப்பி பர்த்டே தூயா..
  >>
  Thanks

  ReplyDelete
 60. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு !
  அழகிய குழந்தையை சாத்தான் என கூறியதை வாபஸ் வாங்கவும் ராஜிஜி !

  ReplyDelete
 61. உங்கள் மகளின் பிறந்த நாளுக்கு, நானும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 62. அழகான அவதாரத்திற்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னாடியே சொல்லி இருந்தா எங்க எஃப்.எம் (Hello fm - 106.4) லயே வாழ்த்து சொல்லி ருக்கலாமே?

  ReplyDelete
 63. Belated B'day wishes to THooyA....

  ReplyDelete
 64. தாமதமாய்

  பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 65. உங்கள் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  டிஸ்கில அசத்திட்டீங்க.

  கவிதையும் புகைப்படங்களும் அருமை.

  ReplyDelete
 66. shunmuga கூறியது...

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு !
  அழகிய குழந்தையை சாத்தான் என கூறியதை வாபஸ் வாங்கவும் ராஜிஜி !

  >>>>>
  அது ஆசையாய் என் மகளை விளிப்பது கோவத்தால் அல்ல. மற்றப்படி வழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 67. நிரூபன் கூறியது...

  உங்கள் மகளின் பிறந்த நாளுக்கு, நானும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  >>>>
  நன்றி சகோ

  ReplyDelete
 68. solomon.j(Radio jackey) கூறியது...

  அழகான அவதாரத்திற்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னாடியே சொல்லி இருந்தா எங்க எஃப்.எம் (Hello fm - 106.4) லயே வாழ்த்து சொல்லி ருக்கலாமே?
  >>
  அப்படியா?! அடுத்த வருடம் பார்த்துக்கலாம். வாழ்த்துக்கு நன்றி சகோ

  ReplyDelete
 69. Sen22 கூறியது...

  Belated B'day wishes to THooyA...
  >>>>
  Thanks for your Wishes

  ReplyDelete
 70. பலே பிரபு கூறியது...

  தாமதமாய்

  பிறந்த நாள் வாழ்த்துகள்
  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 71. சகல செல்வங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துகள்.

  ReplyDelete
 72. இனிய வாழ்த்துகள்

  ReplyDelete
 73. மாதேவி கூறியது...

  சகல செல்வங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துகள்
  >>>>
  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 74. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  இனிய வாழ்த்துகள்
  >>
  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 75. படங்களும் பதிவும் பிறந்த நாள் கவிதையும் அருமை
  குழந்தை தூயா தங்கள் மனம் போல அனைத்து
  நலமும் வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ
  எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்
  (தாமத வருகைக்கு மன்னிக்கவும்)

  ReplyDelete
 76. Ramani கூறியது...

  படங்களும் பதிவும் பிறந்த நாள் கவிதையும் அருமை
  குழந்தை தூயா தங்கள் மனம் போல அனைத்து
  நலமும் வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ
  எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்
  (தாமத வருகைக்கு மன்னிக்கவும்)
  >>
  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 77. குழந்தைகளிடம் பல்ப் வாங்குவது ரொம்ப இனிமையான விஷயம் ராஜி.

  குழந்தை தூயாவுக்கு ஏ பி சி டி சொல்லிக்கொடுத்ததும் சிடி பற்றி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அதுக்கு தூயா கொடுக்கும் சரியான தடாலடி எல்லாம் எங்கிட்டு போகும் ஜூனியர் ராஜி :)

  குழந்தைக்கு என் ஆசிகள்.

  ReplyDelete