Monday, February 06, 2012

யான் பெற்ற இன்பம்..., பெறுக ஐந்து வலைப்பூ எழுத்தாளர்கள்...

  ஏய் தூயாக்குட்டி, பிளாக்குல எழுதுறதால என்ன சாதிச்சேன்னு அடிக்கடி கேட்பியே. ”மின்னல் வரிகள்” கணேஷ் அண்ணா எனக்கு விருது கொடுத்திருக்கிறார். 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இப்போ புரியுதா? நான் பிளாக்குல எழுதி சாதிச்சது.
                             
                          
                   சும்மாவே பதிவெழுதுறதாலஉனக்கு பெருமை பிடிபடாது. உன் எழுத்துக்களையும் “சிலர்” ரசிக்குறாங்கன்ற நினைப்புனால தலைக்கணம் வேற ஏறிக்கிட்டு இருக்கு. இந்த லட்சணத்துல உனக்கு விருது வேற குடுத்துட்டாங்களா? இனி எந்நேரமும் நீ பிளாக்கையே கட்டிக்கிட்டு அழுவே.  நான் படிக்க கம்ப்யூட்டரை நீ விட்டு குடுத்த மாதிரிதான். எப்படியாவது போ. நான் படிக்க போறேன்.

ஏய், தூயா நில்லுடி

என்னம்மா,

   இந்த விருதை வாங்குனவங்க தான் படிச்சு ரசிச்ச வலைப்பூக்கள் எழுத்தாளர் ஐந்து பேருக்கு    குடுக்கனும்.  அவங்க வலைப்பூ 200 உறுப்பினர்களுக்கு குறைவா இருக்குனும். அப்போதான்  இந்த விருதை தர முடியும். நான் ஐந்து பேரை செலக்ட் பண்ணிட்டேன்.  என் தேர்வு சரியா இருக்கான்னு பார்த்து சொல்லேன் ப்ளீஸ்...,

அறிவியலை ஆனந்தமாய் ரசிக்க வைக்கும்  அலையல்ல சுனாமி வலைப்பூ எழுத்தாளார் ”சகோதரர்  விச்சு” அவர்களுக்கு....
சமூக அவலங்களை தோலுறித்துக் காட்டும் ஆணிவேர்  வலைப்பூ எழுத்தாளார் ”சகோதரர் சூர்ய ஜீவா” அவர்களுக்கு.....
எல்லாரும் கூடங்குளம் பிரச்சனையை பற்றி பதிவுதான் எழுதினாங்களே  தவிர துணிச்சலாக குடும்பத்துடன் களத்துகே சென்று அங்கிருந்த நிலமைகளை பகிர்ந்த  மெல்ல தமிழ் இனி வாழும் என்ற வலைப்பூ எழுத்தாளர் ”சகோதரர் ரெவரி” அவர்களுக்கு...,

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதே நம் இந்திய பண்பாடு. ஆனால், மரபுகளை மீறாமல் வாழ்ந்த புராண காலத்திலேயே ஒருத்திக்கு மட்டும் ஐந்து கணவர்கள்.  அவளை தூற்றாமல், தெய்வம் என போற்றப்படுகிறாளே எப்படி என்ற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. அந்த ஐயத்தை நீக்கிய  மின்மினிப்பூச்சிகள் வலைப்பூ எழுத்தாளர் ”சகோதரி சக்தி பிரபா” அவர்களுக்கு...,

பதிவுலகத்தில் எத்தனையோ  உறவுகள்  கிடைச்சிருக்காங்க. அந்த லிஸ்டில் நான் இல்லையா?ன்னு உரிமையா சண்டையிட்டு கடைக்குட்டி தம்பியா சேர்ந்தவர். திருக்குறளை சென்னை தமிழில் வித்தியாசமாய் சொன்னவர், தூத்துக்குடி மருத்துவர் கொலையின் போது மருத்துவர்களின் உள்ளக்குமுறலை ஒரு பொறுப்புள்ள மருத்துவராய் எழுதியவர், எதோ சில காரணங்களுக்காக இப்போ எழுதறதில்லை. கூடிய விரைவில் எழுதுவார் என்ற நம்பிக்கையில்  மயிலிறகு வலைப்பூ எழுத்தாளர் ”மரு.மயிலன்” அவர்களுக்கும்....
 எனக்கு கிடைத்த  ”லீப்ச்டர்” விருதை தர போறேன் என் தேர்வு எப்படி?

ம்ம்ம் விருதுக்கு தகுதியான ஆட்களைத்தான் தேடி கண்டுப்பிடிச்சிருக்கே. ஓக்கே பைம்மா, நான் போய் படிக்குறேன்.

டிஸ்கி 1: ”லீப்ச்டர்' விருது படம் என் வலைப்பூவில் எடுக்க முடியாதவங்க ”மின்னல் வரிகள்” வலைப்பூவிற்கு சென்று எடுத்து கொள்க..,

டிஸ்கி 2: ஒரு தேவதை தன் கனவுகளை பகிர்ந்து கொள்ள உங்களை நாடி பிப்ரவரி 14 வருகிறாள்.......,


 தமிழ்மணத்துல ஓட்டு போட...,

25 comments:

 1. நன்றி சகோதரி ராஜி என் எழுத்தை கௌரவித்ததுக்கு...உங்கள் விருது பொறுப்புடன் என்னை எழுத வைக்கும்...

  உங்களுக்கும் அது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...மீன்றும் நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்...

  ReplyDelete
 2. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...


  புதிய தேவதைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. முதலில் உங்களுக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். உண்மையிலேயே எனக்கும் விருதா!!நம்பமுடியவில்லை...என் எழுத்தை ரசித்த தங்களுக்கு நன்றி நன்றி.

  ReplyDelete
 4. நானும் ஐந்து நபர்களுக்கு இந்த விருதை வழங்கலாமா?

  ReplyDelete
 5. மிகத் தகுதியான நபர்களைத்தாம்மா செலக்ட் பண்ணியிருக்கே. உனக்கும் விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தேவதைக்கு சிவப்புக் கம்பள வரவேற்புத் தருகிறேன் நான்!

  ReplyDelete
 6. விருது பெற்ற உங்களுக்கும், விருதினை உங்கள் மூலம் பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. உங்களுக்கும், விருதைப் பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி !

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள், ராஜி.

  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. >>>விச்சு சொன்னது…

  நானும் ஐந்து நபர்களுக்கு இந்த விருதை வழங்கலாமா?


  haa haa kaasaa? paNamaa? alli vidungka

  ReplyDelete
 10. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

  ReplyDelete
 11. விருதுக்கு வாழ்த்துக்கள் ராஜி.

  மிகுந்த நன்றி.
  என் வலைப்பூ உங்களுக்கு பிடித்தமாகப் போனதில் மகிழ்ச்சி. மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 12. வாழ்த்துகள் சகோ...

  ReplyDelete
 13. வாழ்த்துகள் சகோ...

  ReplyDelete
 14. மிகவும் சிறப்பு. விருது பெற்றமைக்கும் விருது வழங்கியமைக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்.

  ReplyDelete
 15. எலேய் தங்கச்சி'ம்மா நானும் வந்துட்டேன்.

  ReplyDelete
 16. விருதை பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 17. புதிய தேவதைக்கு அண்ணனின் வந்தனங்கள்...!!!

  ReplyDelete
 18. விருது வாங்கிய உங்களுக்கும் உங்களிடமிருந்து பெற்று கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்... தேவதை கனவை காண காத்திருக்கிறோம்...;)

  ReplyDelete
 19. விருது பெற்றமைக்கும்
  அருமையான பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
  விருதினை பகிர்ந்து கொண்டமைக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. ஆங்கில மொழி வழியில் படித்ததால் தமிழ் கொஞ்சம் சிக்கல் தான்... எந்த இடத்தில் எந்த "ன்" "ண்" போடுவது என்று குழம்பியே என் கவிதைகளையும் கதைகளையும் குப்பைகளில் சேர்த்து வைத்தேன்... என்னை தூசி தட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர்கள் கவிஞர். சுந்தா அவர்களும் தோழர் எம். எஸ் அவர்களும்... என் பார்வையை மாற்றியவர்களில் இவர்கள் முதன்மையானவர்கள்... என் எழுத்தை ரசிப்பார்களா என்ற எண்ணம் எல்லாம் முதலில் எழவில்லை, என் கோபத்தை கொட்டி விட்டு செல்ல பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்... இப்படி ஒரு விருதுக்கு நான் தகுதியானவனா என்ற கேள்வி மட்டும் எழுந்து கொண்டே இருக்கிறது.. ஆகையால் இந்த விருதை வாங்கியவர்கள் ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டும் என்ற விதியை நான் தளர்த்திக் கொண்டு எனக்கு கொடுத்த இந்த விருதை ஐந்து பேருக்கு கொடுத்து விடுகிறேன்... மன்னிக்கவும் தோழி... இன்னும் என் எழுத்து என்னையே கவர வில்லை...

  ReplyDelete
 21. விருது பெற்ற தங்களுக்கும் தாங்கள் கொடுத்து மகிழ்ந்த மற்றவர்களுக்கும் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. விருது பெற்றதற்கும் அதை உரியவர்களுக்குப் பகிர்ந்து அளித்ததற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ராஜி.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்.

  ReplyDelete