Monday, February 13, 2012

ஐயோ சொக்கா! எனக்கே..., எனக்கா?! இந்த விருதும் எனக்கே எனக்கா!?


    
                                                    
                               
  சரக்கை அடிச்ச குரங்கோட  வாலுல பட்டாசை கட்டி கொளுத்தி, அது  ஓடும்போது , கொளவி கொட்டுனா எப்படி அலம்பல் பண்ணுமோ அதுப்போல அலம்பல் பண்றேன்னு எங்க பாட்டி என்னை அடிக்கடி திட்டும் (நீங்க குரங்குன்னு உங்க பாட்டிக்கும் தெரிஞ்சுடுச்சான்னு யாரும் கமெண்ட் போடக்கூடாது. போட்டீங்க, அப்புறம் மூஞ்சில பூரானை விட்டுடுவேனாக்கும்...,)

   புள்ளை படிக்க உதவுமேன்னு எங்க வீட்டு ரங்கமணி கம்ப்யூட்டரும் நெட் கனெக்சனும் வாங்கி குடுத்தாங்க. ஆனால், எனக்கு பொழுது போகாம இருக்கும்போது சும்மா கம்ப்யூட்டரை தூசு தட்டலாமேன்னு போனப்போ என்ன பட்டனுல என் கைப்பட்டுச்சோ தெரியலை.blogger.com ஓப்பன் ஆகிடுச்சு. என்ன இது புதுசா இருக்கேன்னு நோண்டிக்கிட்டு இருந்தேன். ஒரு லிங்க் அழுத்தினேன் படம் வந்துச்சு, அடுத்த லிங்க் அழுத்தினேன் எழுத்து சேர்ந்துச்சு, அடடான்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே ஒவ்வொரு  லிங்கா அழுத்தி பார்த்தால் ஒண்ணுல எழுத்து பெரிசாச்சு, இன்னொன்னுல  எழுத்துக்கு கலர் சேர்ந்துச்சு.
                                                 
      ஐ நல்லா இருக்கேன்னு  கீழ இருக்குற publish post ங்குற பட்டனை கிளிக் பண்ணால் என் பதிவு  பப்ளிஷ் ஆச்சு. நான் கிறுக்குனதையும்  மதிச்சு?! ஆதிரைங்குற புண்ணியவதி ஒரு கமெண்டை போட்டு தொலைச்சுட்டாங்க. அப்புறம் அங்கங்கு போய் சுட்டுக்கிட்டு வந்து என் பிளாக்குல பதிவா போட்டேன். இப்படியே பதிவு போட்டுக்கிட்டு இருந்தால் நம்ம கடைக்கு கூட்டம் வராது. அடுத்தவங்க கடைக்கும் போய் வந்தாதான் நம்ம கூட்டம் வரும்ன்னும், பிளாக்குல எந்த டைம்ல போட்டா கூட்டம் வரும்ன்னு சிபி சார் பிளாக்குல படிச்சேன். அவர் பதிவுல சொல்லியிருந்தபடியே நடந்துக்கிட்டதாலே ஏதோ என் கடைக்கும் கூட்டம் வர ஆரம்பிச்சது.

    சும்மா இல்லாம நாஞ்சில் மனோ அண்ணா நான் ரசித்த பதிவுன்னு அவார்டும், மின்னல் வரிகள் கணேஷ் அண்ணா   இளம்பதிவர்களுக்கான (நீங்க இளம் பதிவரான்னும் கேட்கப்படாது. எங்க வீட்டுல பூரான் நிறைய இருக்கு..)  Liebster விருதும் குடுத்துட்டங்களா?! பால்காரன் சண்டை போட்டதை பதிவா தேத்தலாமா? இல்ல கீரைக்கார பாட்டிக்கிட்ட டிப்ஸ் கேக்கலாமான்னு பார்க்குறதெல்லாம் பதிவா தேத்த யோசிச்சுக்கிட்டு  இருக்கேன்னு வீட்டுல திட்டுவாங்க.

       இப்போ எரியுற கொள்ளில எண்ணேய் ஊத்தி இன்னும் எரிய வைக்குற மாதிரி  தோழி சாகம்பரி அவர்களும், தம்பி தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் THE VERSATILE BLOGGER AWARD என்னும் விருது கொடுத்துள்ளார். அவர்களுக்கு என் நன்றிகளை சொல்லும் அதே வேளையில் இன்னும் என்னென்னலாம் அக்கப்போர் பண்ண போறேனோ யாருக்கு தெரியும்?!
                            

        இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து தோழி சாகம்பரிக்கு  வழங்கப்பட்டுள்ளது. தோழி சாகம்பரியிடமிருந்து எனக்கும், தம்பி பிரகாஷுக்கும் வழங்கப்பட்டது. தம்பி பிரகாஷ்  எனக்கு கொடுத்துள்ளார்.

     இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து  பதிவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.

பிடித்த விசயங்கள்:
1.என்  முத்தான மூன்று பிள்ளைகள்,
2. என் பிளாக்,
3. மெல்லிசை பாடல்கள்
4.நண்பர்கள்
5.சுபா, ராஜேஸ்குமார், பி.கே.பி, இந்திரா சௌந்திரராஜன், சாண்டில்யன் போன்றோர்  நாவல்கள், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற புத்தகங்கள்

6. ரோஸ்மில்க், லஸ்ஸி
7. கடலலையில் கால் நனைத்தவாறு தனிமையில் இருப்பது

நான் ரசித்த ஐந்து வலைப்பூ எழுத்தாளருக்கு எனக்களித்த விருதை குடுக்கனுமாம்...,

1. தொழில் நுட்ப விஷயங்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான கேள்விகளை தொகுத்தும், நடிகர்களை தன் ரேஞ்சுக்கு உயர்த்தி?! கலாய்ச்சு பதிவு போடும் ராஜப்பாட்டை ராஜாவுக்கு....,

2. நாம் கேள்விப்பட்டே இராத கோவில்கள் பற்றிய அரிய தகவல்கள கண்ணை கவரும் படங்களுடன் பதிவிடும் ராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு...,
3. வயசுக்கு மீறி அமைச்சர்கள், சாதீ, கலைகள் காப்பது, என தன் கோபங்கள் கவிதையாய் கொட்டும் மாலதிக்கு....,
4. சிரிக்கவும், சில நேரம் அநீதிக்காகவும் பதிவும் நாஞ்சில் மனோ அண்ணாவுக்கும்...,
5.உலக வரலாற்றிலேயே கருப்பு கலர்ல இட்லி சுட்டும், பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குறேன்னு டாகடருக்கே பைத்தியம் பிடிக்க வச்சதையும் சிரிக்க பதிவ்டும் அப்பாவி தங்கமணிக்கும் இந்த விருதை கொடுப்பதில் பெருமை கொள்கிறேன்.

டிஸ்கி:  இந்த விருதுகள் வழங்கும் நோக்கம் நாம் ரசிக்கும் நல்ல வலைப்பூக்களை மற்ற வலைப்பூக்கள் எழுத்தாளருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை. இந்த விருதால் எனக்களித்தவர்களோ. நானோ, இல்லை நான் அளிக்கப்பட்டவர்களும் தங்கள் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை தவிர வேறு எந்த விதமான லாபத்தையும் அடைய போவதில்ல.

22 comments:

 1. உங்களுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நீங்க ரொம்ப நல்லாகவே தூசி தட்டுறீங்க.......

  ReplyDelete
 3. ஒ...கோ தூசிய இப்படித்தான் தட்டனுமா?

  (தூசி தட்ட சொல்லிகொடுத்த உங்களுக்கு என்ன விருது கொடுக்கலாம்.)


  வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும்

  ReplyDelete
 4. சினிமாவுல ஓபனிங் சாங்,பைட்டோட ஹீரோ என்ட்ரி ஆகுற மாதிரி,உங்க பிளாக் என்ட்ரி தூசு தட்டியதில் தொடங்கியிருக்கு.சுவாரஸ்யம்.
  விருது பெற்ற உங்களுக்கும் உங்களால்
  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. //நீங்க குரங்குன்னு உங்க பாட்டிக்கும் தெரிஞ்சுடுச்சான்னு யாரும் கமெண்ட் போடக்கூடாது//

  அதெல்லாம் நாங்க கேட்க மாட்டோம்! வித்தியாசமா கேட்போம்!
  நீங்க சரக்கு அடிப்பீங்களா? இதையேன் இவ்வளவு நாளா சொல்லல?
  எப்பூடி? :-)

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. //நீங்க குரங்குன்னு உங்க பாட்டிக்கும் தெரிஞ்சுடுச்சான்னு யாரும் கமெண்ட் போடக்கூடாது//

  அதெல்லாம் நாங்க கேட்க மாட்டோம்! வித்தியாசமா கேட்போம்!
  நீங்க சரக்கு அடிப்பீங்களா? இதையேன் இவ்வளவு நாளா சொல்லல?
  எப்பூடி? :-)

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. விருது பெற்றமைக்கும் அது குறித்து
  ஒரு ரசிக்கும்படியான பதிவினைக் கொடுத்தமைக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ராஜி.
  உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. தூசி தட்டினா இப்படியொரு விஷயம் நடக்குமா? இது தெரியாம ரெண்டு மூணு பேத்து கிட்ட கேட்டு கத்துக்கி்டடனேம்மா..! ரொம்ப நல்லாவே எழுதறதாலதான் உனக்கு விருது கிடைச்சிருக்கு (எனக்கு பூரான்னா ரொம்ம்ம்ப்ப பயமாக்கும்)

  விருது பெற்றதற்கும் தகுதியானவர்களுக்கு வழங்கியதற்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 11. ரொம்ப நன்றி .. இது என்னை மேலும் எழுத தூண்டுகோலாக இருக்கும் .. மிக்க நன்றி ,, சகோ

  ReplyDelete
 12. மூன்றாவது தடவையாக THE VERSATILE BLOGGER AWARD கொடுத்தமைக்கு நன்றி..

  இன்னும் அவார்டு வாங்காதவர்களை எப்படிக்கண்டுபிடிப்பது !!!

  ReplyDelete
 13. என்னை சும்மாவே கைல புடிக்க முடியாதுங்க, இப்படியெல்லாம் விருது குடுத்தா அவ்ளோ தான்...:) ஜோக்ஸ் அபார்ட், ரெம்ப ரெம்ப சந்தோஷம் ரெம்ப ரெம்ப ரெம்ப நன்றி...:) சிரிக்க வெக்கறது எவ்ளோ கஷ்டம் நல்லாவே எனக்கு தெரியும், அதை ஈஸியா செய்யற உங்களுக்கு இந்த விருது பொருத்தம் தான்னு இந்த போஸ்ட்லையே ப்ரூவ் பண்ணிட்டீங்க..:) Congrats to fellow-awards recipients as well...;)

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. விருது பெற்ற உங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 16. 1000 porkaasu..tamilvaasiyidam vaangi vidavum. vaalthugal.

  ReplyDelete
 17. பாராட்டுகளும் நன்றியும் உமது சிறந்த விமர்சனத்திற்கும் சிறப்பான விருதிற்கும் நன்றி நன்றி நன்றி ....

  ReplyDelete
 18. ஐயோ தங்கச்சி மன்னிச்சு, அண்ணன் ரொம்ப லேட்டும்மா...

  ReplyDelete
 19. மிக்க மிக்க நன்றி நன்றி [[இம்புட்டு லேட்டாடா ராஸ்கல்]]

  ReplyDelete