Showing posts with label கனவுகள். Show all posts
Showing posts with label கனவுகள். Show all posts

Wednesday, March 28, 2012

ப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு


(ஐ,  எனக்கு பரிட்சை முடிஞ்சு போச்ச. நான் இனி ஜாலியா ஊர் சுத்துவேன்...,)
 

















(பாட்டனி கொஸ்டின் பேப்பர் செம ஈசிப்பா. நான் செண்டம் வாங்குவேனே....)

















(பிஸிக்ஸ் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணவன் கைக்கு கிடைச்சான் அவனை....,)













(ஏப்ரல் 2 ல இருந்து பேப்பர் திருத்த போறாங்களாம்?! ...,)


















(நான்  மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எழுதப்போறேன்...., டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை பண்ணா போறேன்.)
















(நான் ஐஐடிக்கு எண்ட்ரன்ஸ் எழுதப்போறேனே...., இஞ்சினியராகி தரமான பொருட்களை தயார் பண்ண போறேன்.)

 

















 (நான், டீச்சர் ட்ரெயினிங் படிக்க போறேன். டீச்சராகி நல்ல குடிமக்களை உருவாக்க போறேன்....,)













 (நான் எக்கனாமிக்ஸ் படிச்சு அரசியலுக்கு போய் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாட்டை  நல்ல நிலமைக்கு கொண்டு வரப் போறேன்...,)














(இன்னியோட இந்த ஆட்டம் பாட்டம் முடிஞ்சுது.....,இனி நாமலாம் காலேஜ் போகப்போறோம்..,பொறுப்பா நடந்துக்கனும்...,)
















(பசுமை நிறைந்த நினைவுகளே...., பாடி திரிந்த பற்வைகளே! பழகி திரிந்த தோழர்களே பறந்து செல்கிறோம்..., நாம் பறந்து செல்கிறோம்...,) 

 
 
















   (பரிட்சைதான் முடிஞ்சு போச்சே. இனி ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தால்  எண்ட்ரன்ஸ், கோச்சிங் கிளாஸ்ன்னு மறுபடியும் சாவடிக்குறாங்களே..., அவ்வ்வ்வ்வ்வ்வ்)



















டிஸ்கி: என் பொண்ணுக்கு 26ந்தேதி எக்ஸாம் முடிஞ்சுது அவ எக்ஸாம் முடிச்சுட்டு கூட்டி வரும்போது காய்கறிகள் வாங்கிட்டு வந்து நெட்டுல உக்காந்தா இந்த படம் கண்ணுல பட்டு, கமெண்டும் தோணுச்சு. பொருத்தமா இருக்கா?

Monday, February 06, 2012

யான் பெற்ற இன்பம்..., பெறுக ஐந்து வலைப்பூ எழுத்தாளர்கள்...

  ஏய் தூயாக்குட்டி, பிளாக்குல எழுதுறதால என்ன சாதிச்சேன்னு அடிக்கடி கேட்பியே. ”மின்னல் வரிகள்” கணேஷ் அண்ணா எனக்கு விருது கொடுத்திருக்கிறார். 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இப்போ புரியுதா? நான் பிளாக்குல எழுதி சாதிச்சது.
                             
                          
                   சும்மாவே பதிவெழுதுறதாலஉனக்கு பெருமை பிடிபடாது. உன் எழுத்துக்களையும் “சிலர்” ரசிக்குறாங்கன்ற நினைப்புனால தலைக்கணம் வேற ஏறிக்கிட்டு இருக்கு. இந்த லட்சணத்துல உனக்கு விருது வேற குடுத்துட்டாங்களா? இனி எந்நேரமும் நீ பிளாக்கையே கட்டிக்கிட்டு அழுவே.  நான் படிக்க கம்ப்யூட்டரை நீ விட்டு குடுத்த மாதிரிதான். எப்படியாவது போ. நான் படிக்க போறேன்.

ஏய், தூயா நில்லுடி

என்னம்மா,

   இந்த விருதை வாங்குனவங்க தான் படிச்சு ரசிச்ச வலைப்பூக்கள் எழுத்தாளர் ஐந்து பேருக்கு    குடுக்கனும்.  அவங்க வலைப்பூ 200 உறுப்பினர்களுக்கு குறைவா இருக்குனும். அப்போதான்  இந்த விருதை தர முடியும். நான் ஐந்து பேரை செலக்ட் பண்ணிட்டேன்.  என் தேர்வு சரியா இருக்கான்னு பார்த்து சொல்லேன் ப்ளீஸ்...,

அறிவியலை ஆனந்தமாய் ரசிக்க வைக்கும்  அலையல்ல சுனாமி வலைப்பூ எழுத்தாளார் ”சகோதரர்  விச்சு” அவர்களுக்கு....
சமூக அவலங்களை தோலுறித்துக் காட்டும் ஆணிவேர்  வலைப்பூ எழுத்தாளார் ”சகோதரர் சூர்ய ஜீவா” அவர்களுக்கு.....
எல்லாரும் கூடங்குளம் பிரச்சனையை பற்றி பதிவுதான் எழுதினாங்களே  தவிர துணிச்சலாக குடும்பத்துடன் களத்துகே சென்று அங்கிருந்த நிலமைகளை பகிர்ந்த  மெல்ல தமிழ் இனி வாழும் என்ற வலைப்பூ எழுத்தாளர் ”சகோதரர் ரெவரி” அவர்களுக்கு...,

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதே நம் இந்திய பண்பாடு. ஆனால், மரபுகளை மீறாமல் வாழ்ந்த புராண காலத்திலேயே ஒருத்திக்கு மட்டும் ஐந்து கணவர்கள்.  அவளை தூற்றாமல், தெய்வம் என போற்றப்படுகிறாளே எப்படி என்ற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. அந்த ஐயத்தை நீக்கிய  மின்மினிப்பூச்சிகள் வலைப்பூ எழுத்தாளர் ”சகோதரி சக்தி பிரபா” அவர்களுக்கு...,

பதிவுலகத்தில் எத்தனையோ  உறவுகள்  கிடைச்சிருக்காங்க. அந்த லிஸ்டில் நான் இல்லையா?ன்னு உரிமையா சண்டையிட்டு கடைக்குட்டி தம்பியா சேர்ந்தவர். திருக்குறளை சென்னை தமிழில் வித்தியாசமாய் சொன்னவர், தூத்துக்குடி மருத்துவர் கொலையின் போது மருத்துவர்களின் உள்ளக்குமுறலை ஒரு பொறுப்புள்ள மருத்துவராய் எழுதியவர், எதோ சில காரணங்களுக்காக இப்போ எழுதறதில்லை. கூடிய விரைவில் எழுதுவார் என்ற நம்பிக்கையில்  மயிலிறகு வலைப்பூ எழுத்தாளர் ”மரு.மயிலன்” அவர்களுக்கும்....
 எனக்கு கிடைத்த  ”லீப்ச்டர்” விருதை தர போறேன் என் தேர்வு எப்படி?

ம்ம்ம் விருதுக்கு தகுதியான ஆட்களைத்தான் தேடி கண்டுப்பிடிச்சிருக்கே. ஓக்கே பைம்மா, நான் போய் படிக்குறேன்.

டிஸ்கி 1: ”லீப்ச்டர்' விருது படம் என் வலைப்பூவில் எடுக்க முடியாதவங்க ”மின்னல் வரிகள்” வலைப்பூவிற்கு சென்று எடுத்து கொள்க..,

டிஸ்கி 2: ஒரு தேவதை தன் கனவுகளை பகிர்ந்து கொள்ள உங்களை நாடி பிப்ரவரி 14 வருகிறாள்.......,


 தமிழ்மணத்துல ஓட்டு போட...,