Wednesday, February 29, 2012

ஆண்களே! அலட்சியம் வேண்டாமே பிளீஸ்....,


     புடவை, பட்டு புடவை, தாவணி, காக்ரா சோளி, பாவடை சட்டை,  மிடி, சுடிதார், ஜின்ஸ்......, ஸ் அப்பா மூச்சு வாங்குது.  ட்ரெஸ்ன்னாலே  அதிகமா பெண்களுக்குதான் முக்கியத்துவம். அதில் எந்தவித ஆச்சர்யமும் இருக்கப்போவதில்லை. அதேநேரத்துல, ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா எதைத்தான் போடுவது! என்று நினைத்த காலம்லாம் மலையேறி விட்டது.

    ட்ரெஸ் விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் சொல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பயன்படுத்துற ட்ரெஸ் இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் 

  

Casual Dress

         சில நேரங்களில் நம்ம பசங்க போட்டுட்டு வர ட்ரெஸ்ஸை  பார்த்தால் செம்ம டென்ஷன் ஆகிடுவேன்.. என்னடா உங்க ரசனை? இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு ட்ரெஸ்ஸை போட்டுட்டு திரியறீங்க என்று கோவம் கோவமாக வரும். ஆண்கள்  இனத்தையே டேமேஜ் பண்ணுறீங்களே என்று ஆத்திரமாக வரும்.   பின்ன என்னங்க பசங்கனா ஒரு ஸ்மார்ட்டா இருக்க வேண்டாமா!?

   ஒரு ரிசப்சன் போறோம் இல்லைனாஃபங்க்சனுக்கு போறோன்னா உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் ஆபீசுக்கு போற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக. ஏன்டா! ரிசப்னுக்கு தானே வந்து இருக்கீங்க என்னமோ ஐ நா சபைல இந்தியா சார்பா பேசப்போகிறவன் மாதிரி  முறுக்கிக்கிட்டு வந்து நிற்கறீங்க!ன்னு கடுப்பாக இருக்கும்.

   இதே குடும்பஸ்தன் என்றாலும் கல்யாணத்தில் இதே மாதிரி வந்து நிற்பார்கள்.. (கிராமம் என்றால் வேறு வழி இல்லை) விட்டா டையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு வருவாங்க போல இருக்கு. என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி. அப்புறம் எப்படித்தான் இது மாதிரி நேரத்துல ட்ரெஸ் பண்றதுன்னு ஆண்கள்லாம் கேக்குறீங்க. இருங்க.... இருங்க.. அதைதான் இனி சொல்ல போறேன்....,

 முதல்ல எல்லோரும் ஒண்ணு. சரி இரண்டு, மூன்று ...தெரிஞ்சுக்குங்க  ஆபீஸ்  நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி ட்ரெஸ்ஸை போடவே கூடாது.

ஜீன்ஸ்

     இந்த ஜீன்ஸ் இருக்கு பாருங்க.. இதை அடிச்சுக்க உலகத்துலையே எதுவும் கிடையாது. அது பெண்களுக்காக இருந்தாலும் சரி,  ஆண்களுக்காக இருந்தாலும் சரி இதற்கு என்று உள்ள மதிப்பே தனி. அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை  அணிந்து கொள்ள எளிது. பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும். ப்ரொஃபசனலா உடை அணிந்து இருந்தீர்கள் என்றால் டேய்! மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும். நீங்க  என்னதான் ஜாலி டைப்பாக இருந்தாலும்.  

டி ஷர்ட் & காட்டன் ஷர்ட்

      ஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் ன்னு சொல்லலாம் அல்லது காட்டன் ஷர்ட்டை சொல்லலாம்.  ஆபீஸ் தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி, டூர்,பர்த்டே பார்ட்டி,  தியேட்டர், பீச்ன்னு எங்க போனாலும்   ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே சரியான தேர்வு. டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.  கல்யாணம் காட்சிகளுக்கு போகும்போது  காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும். காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம்இருந்தாலும் காலர் வைத்த டிஷர்ட்னா ராயல் லுக் குடுக்கும்.

    டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. அவங்களுக்கு முன்னாடி அவங்க தொப்பை போயிட்டு இருக்கும் இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகப்படுத்தி இதில் இருந்து தப்பிச்சுக்கலாம். தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க   நானும் பல நாட்டு மக்களை பார்த்துட்டேன் நம்ம பசங்க தான் தொப்பையோட குறிப்பா தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி சுத்திக்கிட்டு டென்ஷன் பண்ணுறாங்க. என்ன இதுன்னு கேட்டால், “செல்ல தொப்பை” ஹி ஹின்னு சிரிப்பானுங்க.  சரி! சட்டையை இன் (In) செய்றதாவது ஒழுங்கா செய்றாங்கன்னா  அதுவும் ம்ஹூம், ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும்.

அலுவலக உடை
     உங்க கிட்ட எத்தனை பேண்ட் இருந்தாலும் முக்கியமா இருக்க வேண்டிய கலர் கருப்பு கலர்தான்.   எந்த சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரே வண்ணம் இது தான் (வெள்ளை சட்டை தவிர்த்து). அலுவலகத்திற்கு செல்பவர்கள் ப்ரைட்டான சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள் டார்க்கான சட்டை நம்மை டல்லாக காட்டும்.


Flat Front

    நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்ற மாதிரி செய்ய கூடாது.  (பலருக்கு ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்றதுன்னு கூட தெரியாது) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும். வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்ற மாதிரி  செய்யக்கூடாது. பல பேர் இந்தத் தப்பைதான் செய்றாங்க.  Flat Front என்பதன் அர்த்தமே முன் பகுதி எந்த பிளீட்டும் இல்லாமல் இருப்பது தான் அதில் நீங்கள் அயர்ன் செய்த கோட்டை வச்சீங்கன்னா  அந்த பேன்ட் டிசைன் அர்த்தமே மாறிப்போகும். 

    தற்போது ப்ளீட் வச்சு தைக்குறதெல்லாம் தைப்பது எல்லாம் Out of fashion ஆகி போச்சு.  அதனால,   Flat Front மாடல் பேண்ட்தான் இப்போ ஃபேஷன். இது வந்து ரொம்ப வருடங்களாகி விட்டாலும் இன்றும் அதே கவர்ச்சியுடன் உள்ளது. தொப்பை உள்ளவர்கள் Flat Front மாடல் பேன்ட்டை போட  முடியாது போட்டாலும் நல்லா இருக்காது.  அவங்களுக்கு ஒரே வழி ப்ளீட் தான் அதுனால தொப்பை இருக்குறவங்கள்லாம் மனசை  தேத்திக்குங்க.

   ட்ரெஸ் எடுக்குறதுல  கொஞ்சம் கவனம் செலுத்துங்க.. இப்போலாம் ஆண்களுக்குன்னு நிறைய வகை மாடல்கள் வந்திருக்கு.   ஏனோ தானோவென்று ட்ரெஸ் பண்ணாமல்  சரியான ட்ரெஸ்ஸை தேர்வு செய்யுங்க. உங்களுடைய ட்ரெஸ் கூட உங்களுக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய விஷயங்களுல் ஒண்ணு. அதனால, ட்ரெஸ் விசயத்துல வேண்டாம் அலட்சியம்.

கொசுறு 1

      என்னால சகிச்சுக்கவே  முடியாத ஒரு விஷயம் குழந்தைகளுக்கும் பெரியவங்க போடுற மாதிரி ஷர்ட் மற்றும் பெரிய பசங்க போடுற மாதிரி ட்ராயர்  போடுறது தான். செம்ம கடுப்பாகிடுவேன். குழந்தைகளுக்கு அழகு அழகா எத்தனை உடைகள் உள்ளது அதெல்லாம் எப்படித்தான் அவங்க கண்ணுல பட மாட்டீங்குதுன்னே தெரியல.. தேடிப்போய் ஒரு மொக்கையா ஒரு ட்ரெஸ் வாங்கிட்டு வந்து குழந்தைக்கு மாட்டி விட்டு அது சோளக்கொல்லை பொம்மை மாதிரி சுத்திட்டு திரிவதை பார்த்துட்டு இருப்பாங்க. பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை இல்லை ஆண் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்.

      நான்கு அல்லது ஐந்து வயது வரை குழந்தையை வைத்து இருப்பவர்கள் தயவு செய்து பெரியவர்கள் போடும் பட்டன் வைத்த சட்டையையும் பெரிய பசங்க போடுற டிராயரையும் பேன்ட்டையும் போடுறதை நிறுத்துங்க. இதைப்போல குழந்தைகளுக்கு காலர் வைத்த, வைக்காத டி ஷர்ட் தான் அழகாக இருக்கும் குறிப்பாக மிக்கி மவுஸ், கார்ட்டூன் படங்கள் மற்றும் சுவாரசியமான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டை போடுங்க. டிராயர் மொட மொட என்று இல்லாமல் ஜட்டி டைப்பில் மென்மையாக இருக்குறதா பார்த்து வாங்குங்க.  ஏன்னா, குழந்தைகளுக்கு  உடலை உறுத்தாமல் சவுகரியமாக இருக்கும். சிறு வயதில் (இரண்டரை வயதிற்கு மேல்) இருந்தே குழந்தைகளுக்கு உள் ஜட்டி போட்டு பழக்கப்படுத்துவது நல்லது.

கொசுறு 2: கல்யாணங்களுக்கு போற ஆளுங்க மாப்பிள்ளைக்கு போட்டியா கோட் சூட், குர்தாலாம் போடுக்கிட்டு போகாதீங்க. அது உங்களை அந்நியப்படுத்தி காட்டும்.   அதனால Casual Dress போட்டுக்கோங்க. மணமகனுக்கு சகோதரனாக, மச்சானாக இருந்தால் நைட் ரிசப்ஷனுக்கு  கோட் சூட், காலை முகூர்த்தத்துக்கு வேட்டி சட்டையில இருந்தா, டிஃபரண்டாவும் ராயல் லுக்காகவும் இருக்கும்.

கொசுறு 3:    கோவிலுக்கு போகும்போதும், பண்டிகைகள் போதும் லுங்கி, ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு சிலர் இருப்பாங்க. அதை பார்க்கும்போது சென்ஸே கிடையாதான்னு கேட்க தோணும். அதனால, கோவில், மற்றும் பண்டிககள் போது வேட்டி, பட்டு சட்டை இல்லைன்னா வெள்ளை காட்டன் சட்டை போடுறது உங்க மேல் மரியாதை கூட்டும்.

33 comments:

  1. ஹயயயயோ... ட்ரஸ்ஸிங் சென்ஸ்ங்கறது எனக்கு ரொம்பக் கம்மியாச்சே... டிஷர்ட் போட விடாம தடுக்கற ஐட்டம் வேற இருக்கே... இதையெல்லாம் மாத்தாட்டி தங்கச்சி கொலவெறியாகி தலையில குட்டிடுவாங்க போலருக்கே... மீ எஸ்கேப்... இதெல்லாம் மாத்திட்டு அப்பறமா இந்தப் பக்கம் டீக்கா வர்றேம்மா...

    ReplyDelete
  2. கணேஷ் சார் சொன்னதுதான் எனக்கும்..எனக்கும் டிரஸிங் சென்ஸ் மிகவும் குறைவு..அழகான பதிவு..பயனுள்ள பகிர்வு..தொடருங்கள் சகோதரி.நன்றி.

    ReplyDelete
  3. போன பதிவில் ஆண்களுக்கான அழகுக்குறிப்பு இன்னைக்கு ஆடைக்குறிப்பு.

    எங்களுக்கும் காலம் வரும்.வரும் என்ன வந்துடுச்சு.ஆடையை வைத்தும் ஒருவரை மதிப்பிடுவதால் முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேணும்.

    ReplyDelete
  4. நான் எப்பவுமே....குர்தா ஜீன்ஸ் தான் ...அப்புறம் விசேச தினங்களில் வேட்டி சட்டைதான்.கேரளா போனால் எப்பவும் காவி வேட்டிதான் .....

    ReplyDelete
  5. எங்க ஆண்கள் சங்கத்து மூலமாக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  6. இந்த ஆட்டத்திற்கெல்லாம் நான் வரமாட்டேன்...

    நான் ராமராஜ் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருக்கேன்...

    வீணா பதவியை இழக்குறதுக்கு நான் தயாராக இல்லை...

    ReplyDelete
  7. அசத்தலன பதிவு தாய்குலமே....

    ஆண்கள் மீது கொண்ட அக்கரைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  8. ஆள் பாதி ஆடை பாதின்னு எங்க அப்பாரு சொல்வாரு - நீங்.. விளக்கமா சொல்லிபுட்டேல்.

    ரொம்ப நன்றிங்..

    ReplyDelete
  9. ஆண்களின் அழகு மேல றொம்ப அக்கறையோ? தொடர்ந்து ஆண்கள் பற்றிய விடயமாவே இருக்கு.

    ReplyDelete
  10. //கோவிலுக்கு போகும்போதும், பண்டிகைகள் போதும் லுங்கி, ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு சிலர் இருப்பாங்க. அதை பார்க்கும்போது சென்ஸே கிடையாதான்னு கேட்க தோணும். அதனால, கோவில், மற்றும் பண்டிககள் போது வேட்டி, பட்டு சட்டை இல்லைன்னா வெள்ளை காட்டன் சட்டை போடுறது உங்க மேல் மரியாதை கூட்டும். ////

    தங்கள் அறிவுரைக்கு நன்றி...

    #என்ன மேடம் பண்ணுறது, மாடு மேய்ச்சு, தண்ணி காட்டி, தேங்கா பறிச்சு... இதுக்கெல்லாம் லுங்கிதான் சவுகர்யம்.. அதேன்..
    ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  11. கனேஸ் அண்ணா சொல்வதுபோலதான் எனக்கும் இந்த சென்ஸ் இல்லை இனி
    மாத்திக்காட்டி அக்காளின் அட்வைசை நடைமுறைப்படுத்துவம்.

    ReplyDelete
  12. எனக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ், சாதா சென்ஸ் எல்லாமே கம்மிதான் ஹி ஹி

    ReplyDelete
  13. மாத்தியோசி... ஆண்கள் எல்லாரும் பெண்கள் பற்றி இடுகையிடும்போது நீங்கள் ஆண்களுக்காக இடுகை... மிக்க மகிழ்ச்சி...மிக்க நன்றி...
    நானெல்லாம் கடைக்குபோய் ட்ரெஸ் எடுக்க ஆரம்பிச்சதே வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகுதான். அதுவரைக்கும் எங்க அப்பா வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்தான். அந்தக் கொடுமைய ஏன் கேக்கிறீங்க... வானத்தைப்போல விஜயகாந்த் மாதிரி...

    ReplyDelete
  14. டிரஸ் பண்ணிக்கறதுல இவ்வளவு விஷயம் இருக்கா?

    ReplyDelete
  15. வேட்டி சட்டை.... இல்லாட்டி கொளாயி சட்டை அப்புடின்னு பொதுவா இருக்குறதுல இம்புட்டு வெவரம் இருக்குங்கிறது இப்பத்தான் தெரியுது.... இனியாச்சும் நீங்க சொன்னாப்புல ஏதாச்சும் மாத்திக் கீத்தி ட்ரை பண்ணப் பாப்போம்....

    ReplyDelete
  16. இதெல்லாம் யாருக்கோ மறைமுகமாய் சொல்கிறீர்களா சகோதரி...

    ReplyDelete
  17. ஆடையை வைத்து எடை போடும் மனநிலையை மாற்றிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லையே.

    ReplyDelete
  18. இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு ட்ரெஸ்ஸை போட்டுட்டு திரியறீங்க என்று கோவம் கோவமாக வரும்.////

    இப்படியெல்லாம் திட்டப்படாது.

    ReplyDelete
  19. அட்வைஸ் பண்றாங்கப்பா.. கேட்டுக்கங்க ஆண்களே.

    ReplyDelete
  20. என்னங்க நான் எப்போதும் ஜீன்ஸ்& டிசர்ட் மட்டும் போடுவதை எப்படி கண்டுபிடிச்சு மத்தவங்களுக்கு அது போல போடனும்னு அட்வைஸ் பண்ணுறீங்க....அப்புறம் எல்லோரும் மதுரைத்தமிழன் டூப்ளிகெட்டாக மாறீடுவாங்களே????

    ReplyDelete
  21. உங்கள் அட்வைஸ் தமிழ்நாட்டில் உள்ள ஆண்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.பெண்கள், ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது உங்கள் கட்டுரைமூலம் தெரியவருகிறது.

    ReplyDelete
  22. இங்கே வரும் ஆண்களுக்கு சகோதரி சொன்ன முறையை கடைபிடித்தால் நிச்சயம் பெண்கள் மனதை கவரலாம் என் தெரிகிறது. அதை ஃப்லோ பண்ணி எத்தனை பெண்களை கவர்ந்தீர்கள் என்பதை ஒரு பதிவாக போடுங்கள்.

    ReplyDelete
  23. //நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்ற மாதிரி செய்ய கூடாது. (பலருக்கு ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்றதுன்னு கூட தெரியாது) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும். //

    இது தப்பாச்சே! ஜீன்ஸ் பேன்ட், flat front ரெண்டுமே பக்கவாட்டில்தானே தேய்க்கணும்?

    ReplyDelete
  24. நான் பார்த்துப் பார்த்து உடை உடுத்திய காலமெல்லாம் போச்சு!
    நல்லாவே சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  25. //நான் பார்த்துப் பார்த்து உடை உடுத்திய காலமெல்லாம் போச்சு!///
    சென்னை பித்தன் சார் நீங்க பார்க்காம உடை அணிந்து மேலே உள்ள போட்டோவில் மாப்பிள்ளை மாதிரி சும்மா ஜம்முன்னு அழகா இருக்கீங்க. இதுல வேற நீங்க பார்த்து உடை அணிந்தா அப்புறம் எந்த இளைஞனும் உங்கள் கூட போட்டி போட முடியாது சார்

    ReplyDelete
  26. அப்பப்பா..
    என்னாமா விளக்கி இருக்கீங்க..
    படிச்சி பார்த்து..
    அசந்துட்டேன்..

    நான் எப்போதுமே நார்மல் பண்ட ஷர்ட் தான் சகோதரி..
    கோவில் திருவிழா என்றால் வேட்டி சட்டை..

    விமான பயணத்தின் போது ஜீன்ஸ் டீ சர்ட் ...

    ReplyDelete
  27. ராஜி...சூப்பர்.இனிப் பாருங்க எல்லாரும் அழகாயிடுவாங்க.முக்கியமா உங்க அண்ணா என் ஃப்ரெண்ட் !

    ReplyDelete
  28. /// நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்ற மாதிரி செய்ய கூடாது. (பலருக்கு ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்றதுன்னு கூட தெரியாது) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும். வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்ற மாதிரி செய்யக்கூடாது.////

    இது என்ன புதுக்குழப்பம்? ஜீன்சையும் பக்கவாட்டுலதானே அயர்ன் பண்ணனும்?

    ReplyDelete
  29. /////கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
    இந்த ஆட்டத்திற்கெல்லாம் நான் வரமாட்டேன்...

    நான் ராமராஜ் ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருக்கேன்...

    வீணா பதவியை இழக்குறதுக்கு நான் தயாராக இல்லை.../////

    அப்போ பவர்ஸ்டார் கெதி?

    ReplyDelete
  30. நல்ல ஆலோசனைகள்! ஆனால் எல்லாருக்கும் பொருந்துவது சந்தேகமே!

    உங்கள் ரசனைப்படியே இதை எழுதி உள்ளீர்கள் என்பதை ஆங்காங்கே தென்படும் உங்கள் கோபம் உணர்த்துகிறது!
    ////முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல்\\\\\
    ஒரு உறவினரின் திருமணத்திற்கு நான் கையை மடித்துவிட்டு முழுக்கை சட்டை அணிந்து சென்றபோது " அத்தை பெண் ஒருத்தி " கையை மடித்துவிட்டு இதை அணிவதற்கு பதிலாக அரை கை சட்டையை அணிந்து வந்திருக்கலாமே என்று கலாய்த்தாள்!

    ReplyDelete
  31. நீங்க சொன்ன சரிங்க மேடம் !

    ReplyDelete
  32. கன்னாலதுக்கு முந்தி நீங்க சொன்ன சமாசாரங்கள் சரி!என்னைப் பொறுத்த வரை கோவிலுக்கு போறதே பெரிய விஷயம். ஒழுங்கான உடை உடுத்தினா போதும்.

    கோவில்ல டாவு கட்டராதுனாத் நீங்க சொன்ன உடை தேவை. ஆமாம். கோவிலுக்கு லுங்கி கட்டக் கூடாதுன்னு ஏதாவது விதி இருக்கா? அதாங்க ஆகமவிதிகள்!! அறிவை வளர்த்துக்க ஆசை அதான் இந்தக் கேள்வி!

    ReplyDelete