Thursday, June 28, 2012

பிரிவோம்..., சந்திப்போம்...,

ஆனந்தத்தின் உச்சியில் அமர்ந்து ஏகாந்திருந்த வேளையில் நன்பனின் தோழியாய் அறிமுகமானாய்...,
 
ஏதோ சில பொழுதுகளில் சந்தித்த போது ஒரு சில வார்த்தைகளில் கருத்துகளை பரிமாறி கொண்டோம்...,

என்னை வீழ்த்த நான்கு  திக்கிலுமிருந்து  அம்புகள் பறந்து வந்து தாக்கிய போது, என்னை காயத்திலிருந்து மருந்திட்டு  காப்பாற்றியவள் நீ....

சோக மேகம் மீண்டும் சூழாமல் என்னை தாயென தாங்கியவள் நீ அந்த நன்றியை என்றும் மறவேன்...,

என் கருத்துக்களை முகம் சுளிக்காமல் கேட்டு...,  நிறை குறைகளை எடுத்து சொல்லி பாராட்டி, என் தகுதிக்கும் மீறிய இடம் அளித்தவள் நீ...,

என் கிறுக்கல்களுக்கு காமதேனுவாய்  நினைத்து கூட பார்த்திராத  இடங்களிலிருந்து,  முகம் தெரியா பல உன்னத உறவுகளை எனக்கு பரிசளித்தாய்...,

மீண்டும் அதே போல் எட்டு திக்கிலிருந்தும் ஒரு தாக்குதல்...,


ஆறுதல் தேடி உன்னிடம் வரலாம் என்றால், என் விரக்தியினால் வரும் வார்த்தைகள் உன்னை காயப்படுத்தி நம் நட்பை உடைக்கலாம்..,

சோகத்திலும், கோபத்திலும் வார்த்தைகள் தடிக்கும் என்பது நான் கண்கூடாக கண்டது..., தேவையா அந்த விசப்பரிட்சை?! 

எனவே, சில காலம் பிரிந்திருப்போம்...,  கால ஓட்டத்தில் என் காயம் ஆறும்... அப்போது சந்திப்போம்...,

மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்  என் பதிவுலக தோழியே!

20 comments:

 1. நெருங்கிய உறவு சற்று காலம் பிரிந்தாலும் மனம் வலிக்கத்தான் செய்கிறது. காலம் உன் காயத்தை ஆற்றும். புத்துணர்வுடன் திரும்பி வா தங்கையே. அதுவரை பொறுமையுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. எழுதுவதற்கு நல்ல மனநிலை அவசியம் அதனை தாங்கள் விரைவில் பெற்று புதிய வேகத்துடன் திரும்பி வர வேண்டுகிறேன்

  ReplyDelete
 3. அக்கா... ஏன் இந்த திடீர் முடிவு...

  ReplyDelete
 4. தங்கள் பதிவுலகப் பிரிவு உண்மையில்
  என்னை பாதிக்கவே செய்கிறது
  ஆனாலும் கூட மிகச் சரியான காரணம் இல்லாமல்
  இப்படி ஒரு முடிவு தாங்கள்
  எடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்
  கனவுகள் காணாமல் போனால்
  உலகம் நரகமாகிவிடும்
  நிச்சயம் சந்திப்போம்... வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 5. மணீரத்னம் படம் பார்த்த எஃபக்ட் உங்க பதிவுல இருக்கு.. ஹி ஹி 1ம் புரியல

  ReplyDelete
 6. என்ன ஆச்சு ?

  ReplyDelete
 7. வருகைக்காக காத்திருக்கிறேன் சகோதரி.

  ReplyDelete
 8. காணாமல் போன கனவுகள் !!!!

  ReplyDelete
 9. sako!

  enge poneenga!
  ini engeyum pokaatheenga!

  ReplyDelete
 10. ஏ என்னாச்சும்மா...? கவலைகளை தூசு தட்டிவிட்டு எழுந்து வா......ஏன்னா நீ என் தங்கச்சியாக்கும்.

  ReplyDelete
 11. என்னாச்சும்மா...?தங்கள் ஒரு நல்ல கருத்துக்களை செய்திகளை பகிரும் ஒரு வலைப்பதிவாளர் உங்களின் இந்த முடிவு எங்களைப் போல உள்ளவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை த்ருகிறது ஆனாலும் மிகச் சரியான காரணம் இல்லாமல் இப்படி ஒரு முடிவு நீங்கள்
  எடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் பதிவை கண்டதுடன் சந்தோஷத்துடன் வந்த எனக்கும் உங்களின் இந்த முடிவு பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. மீண்டும் பல புதிய சிந்தனைகளுடன் மிக சக்தி பெற்று வருவீர்கள் என எதிர்பார்க்கும் உங்களின் சகோ
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தவறான கண்ணோட்டத்துடன் எறியப்படும் கற்கள் தரும் வலியை
  எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது .சிறு வலி எனினும் மனதிற்கு
  அமைதி வேண்டும் எதையும் எழுதுவதற்கு .இந்தப் பிரிவு ஒரு சிறு
  இடைவேளையாகமட்டும் இருக்கட்டும் சகோதரி அதுவும் உங்ககளுக்கு
  மன அமைதியை அளிக்கட்டும் விரைந்து வாருங்கள் மேலும் நல்ல
  படைப்புகளுடன் .நான் திரும்பி வந்துவிட்டேன் அதுபோல் உங்கள்
  வரவுக்காகவும் காத்திருப்போம் !....

  ReplyDelete
 13. அக்கா.... என்ன திடீர்னு இப்படி?

  தங்களின் மனக்கஷ்டம் நீங்கி மீண்டும் விரைவில் பதிவுலகம் திரும்ப வேண்டும்.

  ReplyDelete
 14. சற்று ஓய்வெடுங்கள் தவறில்லை.ஓய்வை விரைவில் முடித்துவிட்டு வாருங்கள்..

  ReplyDelete
 15. ஓய்வு அவசியம் தான். விரைவில் மீண்டும் பதிவுலகினைக் கலக்க வாருங்கள்....

  ReplyDelete
 16. நீங்கள் விரைவில் நல்ல மனோதிடத்துடன்
  திரும்பிட விரும்பும் இதயங்களுள் ஒன்றாய் நானும் சகோதரி...

  ReplyDelete
 17. வெகு விரைவில் திரும்பி வாருங்கள் வலையுலகிற்கு....

  ReplyDelete