செவ்வாய், ஜூலை 17, 2012

வந்தேன்.., வந்தேன்..., மீண்டும் வந்தேன் நானே!


                                                 
வணக்கம் உறவுகளே நலமா?  

என்னடா! ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு..., நீங்க  பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால்.....,

 SO, SORRY. ஏன்னா ?   I CAME BACK கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . ஏறத்தாழ 2 வருசமா வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை. ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்ன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது எனக்கு கேட்குது. 

 SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை,  குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு. 

   பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு ரொம்ப  முக்கியமாக்கும்ன்னுலாம் கேட்கப்படாது..., கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம். 

 இதுவரைக்கும் சைலண்டா இருந்த என் வலைப்பூ இனி,  தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைலாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது.)   

இனி,  பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும். அது உங்க தலையெழுத்து நான்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.  இல்லாட்டி தூங்கும்போது எதிர்க்க நிக்குறவங்க யாருன்னு தெரியாம போய்டனும்ன்னு இஷ்ட தெயமான ஆஞ்சிநேய சாமிக்கிட்ட வரம் வாங்கி வந்திருக்கேன்.

டிஸ்கி:  சில  சொந்த சூழ்நிலைகளின்  காரணமாக வலைப்பக்கம் வராம இருந்தாலும்,  நிறைய உறவுகளின் தரமான பதிவுகளை மிஸ் பண்ணி இருக்கேன்.  இனி தொடர்ந்து வந்து,  படித்து, கருத்துக்களை சொல்வேன்.

28 கருத்துகள்:

 1. வெல்கம் கேக் ச்சே... வெல்கம் பேக் :D

  பதிலளிநீக்கு
 2. வரவேற்புக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 3. வாங்க வாங்க.... படிச்சிட்டு வாறன்

  பதிலளிநீக்கு
 4. //ஏன்னா ? I CAME BACK .//

  செத்தான் சேகரு....எலேய் வாங்கல ஓடி போய் மலையா பாத்து குதிசிடுவோம்

  எதுக்கும் முழுசா படிச்சிட்டு போவோம்

  பதிலளிநீக்கு
 5. மீண்டு வந்த தங்கைக்கு நல்வரவு. மொக்கைகளைத் தாங்கிக்கறோம்கறதை விட... என் கருத்துப் பெட்டி தங்கையக் காணாமே ஏங்கிப் போயிட்டுது. அதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். வெல்கம்..

  பதிலளிநீக்கு
 6. வாங்க..வாங்க..வந்து பட்டைய கிளப்புங்க..

  பதிலளிநீக்கு
 7. மிக்க மகிழ்ச்சி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. வாங்க சகோதரி.... பதிவுகள் தொடரட்டும்..
  வாழ்த்துக்கள்...(த.ம. 6)

  பதிலளிநீக்கு
 9. என்னது? பட்டையை கிளப்பபோறீங்களா? சரக்கா?

  பதிலளிநீக்கு
 10. இந்த பதிவுக்கே சின்சியரா கமெண்ட் போட்டுட்டோம் இனிமேலும் வராமலா இருப்போம்?

  பதிலளிநீக்கு
 11. நல்வரவு... மீண்டும் பதிவுகள் போட்டு பட்டைய கிளப்புங்க!

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  வந்தனம் சகோதரி...
  வருக வருக
  ஐஞ்சுவை சமையலை
  எதிர்நோக்கி உள்ளோம்....

  பதிலளிநீக்கு
 13. யக்கா, உன்ன பாக்காம தம்பி ஒரு மாசமா துரும்பா எளச்சு போயிட்டேன் தெர்ர்ரியும்மா?

  பதிலளிநீக்கு
 14. சட்டுபுட்டுன்னு சமைக்க ஆரம்பிங்க....

  பதிலளிநீக்கு
 15. வந்துட்டாங்க வந்துட்டாங்க
  மதுரைக்காரம்மா வந்துட்டாங்க
  பதுங்கி இருந்த மதுரைக்காரம்மா
  இப்ப பாயும் புலியை போல வந்துட்டாங்க
  ஒழுங்கா நீங்க வந்து கமெண்ட் போடலைன்னா
  உங்க மேலே பாயும் புலியை போல பாய்ந்து
  கொதறி கொதறிப் போடுவாங்க
  அதனால எல்லோரும் இங்க வாங்கய்யா வாங்கம்மா

  பதிலளிநீக்கு
 16. எங்கள் அருப்புகோட்டை பெண்சிங்கம் RE ENTRY ஆகுது எல்லோரும் வழி விட்டு நில்லுங்க

  பதிலளிநீக்கு
 17. ஹய்யய்யோ... ஒருத்தர் இங்க பாயும் புலிங்கறாரு... இன்னொருத்தர் பெண் சிங்கம்ன்னு சொல்றாரு... பயமா இருக்கேம்மா... எதுக்கும நான் தள்ளியே நிக்கறேன்மா மதுரை மீனாக்ஷியே...!

  பதிலளிநீக்கு
 18. Welcome back Sister...

  /சி.பி.செந்தில்குமார்7/17/2012 5:37 PM
  என்னது? பட்டையை கிளப்பபோறீங்களா? சரக்கா?/


  Welcome back சி.பி...

  I missed you both..-:)

  பதிலளிநீக்கு
 19. வருக வருக தோழி ... நலமா!...

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்கள் சகோதரி அட்டகாசமான பகிர்வுகளுடன் உங்கள்
  ஆர்வம் குறையாமல் தொடரட்டும் வரவு .

  பதிலளிநீக்கு
 21. வாங்க.... வாங்க... வாங்க.....

  இனி பதிவர்கள், வாசிப்பாளர்கள் ஜாக்கிரதை....

  பதிலளிநீக்கு
 22. சிம்ரன் மாதிரி சண்ட மாருதமாக வாங்க..
  :))

  பதிலளிநீக்கு