வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

கண்ணிரிலும் சுய நலமே?!அவர்கள் இல்லை.. 
இல்லை,  இவர்கள்
யார் யார் அழுவார்கள் நம்
மரணத்தில்?! 

அன்று,
நமக்காய் அழுபவர்களின்
அடையாளங்களை தேடுகிறது
பாழ்மனது.

இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ?!

நம்
துக்க மனதை ரணப்படுத்தும்
பிறரின் நமக்கான அழுகையின்
வேஷங்கள்.

தன்
இருப்பை உணர்த்துவதற்காக
படைப்பின் அடையாளங்களில்
இறைவன், 

தாய்
தந்தையென எத்தனையோ
பாச நேச சுயநல அடையாளங்களில்
உறவுகள்..., 

உருவமற்ற
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
பெயர் சமைத்து மரணம் வரையிலான
அற்ப வாழ்க்கை..., 

உணர்ந்தால்
உணரலாம் அதனுள் இழையும்
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான
சுயநலங்கள். 

உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுமுண்டு!!!!

அந்த
தனித்த நம் அழும் தருணத்தில்தான்
நாம் நமக்காக அழுகிறோம்.  யாரும் நமக்காக
அழுவதில்லை.

நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்..ஆனால்,
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்!! 

ஆம்,
யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை..

23 கருத்துகள்:

 1. உலகம் ஒரு நாடக மேடை... என்ன செய்வது...?

  நல்ல வரிகள்... நன்றி சகோதரி... (TM 1)

  பதிலளிநீக்கு
 2. நல்லாருக்கு...:)

  அழுவது பொய் என்று சொல்லாமல் சுயநலம்ன்னு சொன்னதுதான் ஒட்ட செய்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்காவின் கருத்தோடு ஒத்து போனதற்கு நன்றி தம்பி

   நீக்கு
 3. பதில்கள்
  1. கவிதையை ரசித்து ம் சொன்ன நண்பருக்கு நன்றி

   நீக்கு
 4. ஆழமான சிந்தனை
  அழுத்தமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அந்த
  தனித்த நம் அழும் தருணத்தில்தான்
  நாம் நமக்காக அழுகிறோம். யாரும் நமக்காக
  அழுவதில்லை.


  நாம்
  நமக்காக மட்டுமே அழுகிறோம்..ஆனால்,
  பிறர்க்காக நாம் அழுவதாய்
  பாவிக்கிறோம்!!


  ஆம்,
  யாரும் யாருக்காகவும்
  அழுவதில்லை..
  -அருமை! அருமை! பகிர்விற்கு நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 6. //யாரும் யாருக்காகவும்
  அழுவதில்லை..///

  உண்மை அக்கா..

  பதிலளிநீக்கு
 7. காலத்தின் நிஜம்...
  வாழ்க்கையின் சூட்சமம்...

  பதிலளிநீக்கு
 8. ஒவ்வொருவரும், தனக்கு யாரும் இல்லை என்கிற உணர்வு வாழ்க்கையில் அனுபவிக்கும் தருணம் அமைந்தே தீரும்! தன்னை அறிய நடக்கும் நிகழ்வு! இனி என்ன செய்ய வேண்டும்? என்பதனை சிந்திக்க வேண்டிய தருணம்! கவிதை அருமை.... இந்தக் கவிதையினைத் தொடர்ச்சியாக தொடரவும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. ////இன்றைய
  அவர்களுடனான நேசம்
  நாளை நமக்காக அழுவதற்கான
  சுயநலமோ?!
  ////

  நிதர்சனமான வரிகள் அக்கா

  பதிலளிநீக்கு
 10. சொற்கள் பிரயோகம் அருமை, நல்ல கவிதை (TM 6)

  பதிலளிநீக்கு
 11. உண்மைதான் ராஜி. இறந்தவர் போயாச்சு. இருப்பவர் நாம். அவர் துணை நமக்கு இல்லையே என்றுதானே அழுகிறோம். மரணவீட்டின் அழுகை நமக்காகத்தான்.

  பதிலளிநீக்கு
 12. ஆழ்ந்த கருத்துள்ள கவிதை.

  பதிலளிநீக்கு
 13. அருமையான கவிதை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  சித்துண்ணி கதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
  பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

  பதிலளிநீக்கு
 14. நிதர்சனம். நானும் பலமுறை இது போன்று யோசித்துக் கொள்வதுண்டு,

  பதிலளிநீக்கு
 15. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. மனிதன் செய்யும் அனைத்திலும் சுயநலம்தான்

  பதிலளிநீக்கு
 17. ராஜி: எனது மெயில் ஐ. டி: snehamohankumar@yahoo.co.in

  இதற்கு உங்கள் மெயில் ஐ. டி அனுப்பவும்.

  (உங்கள் மெயில் தெரியாததால் தான் இங்கு பகிர்கிறேன். நீங்கள் இந்த கமன்ட் போடணும் என்றில்லை)

  பதிலளிநீக்கு