Wednesday, August 29, 2012

பதிவர் சந்திப்பினால் கடுப்பான முருகப்பெருமான்

                                                                                            
கொயந்தே  முருகா! முன்ன  ஒரு தரம் ஒன்லி ஒன் மாம்பழத்துக்கோசரம் உன் நைனாகிட்டயும், ஆத்தாக்கிட்டயும் கோச்சிக்கிட்டு பழனி மலையில  போய் குந்திக்கிட்டே. உன்னை கூலாக்கி உன் வூட்டு ஆளுங்ககிட்ட உன்னை சேர்க்குறதுக்குள்ள என் தாவு தீர்ந்து போச்சு. இப்போ என்னாத்துக்கோசரம் இங்க வந்து குந்திக்கினு கீறே?!

 ஆயா! நான் யாரு?

 இன்னா நைனா இப்படி கேடுப்புட்டே. நீ தமிழ் கடவுளாம் முருகன்னு இந்த  வோர்ல்டுக்கே தெரியும், ஆனா, நீ ஏன் இப்படி கேட்டுப்புட்டியே. இன்னா மேட்டர்? யாராவது உன்கிட்ட ராங்கு காட்டுனாங்களா? என்கிட்ட சொல்லு பாட்டு பாடியே கொலையா கொன்னுடுறேன்.

 நான் யாருன்னு உனக்கு தெரியுது. ஆனா இந்த தமிழ் வலைபதிவு குழுமத்துக்கு தெரியலியே ஆயா!

 ஃப்ரீயா வுடு முருகா! அதுங்களுக்கு தெரியுமா உன் மவுசு என்னன்னு.? என்ன ஆச்சு?  ஏன் இப்படி காண்டாகி பேசுறேன்னு முதல்ல சொல்லு.

 போன ஞாயித்து கிழமை சென்னையில தமிழ் வலைப்பதிவர்கள்லாம் மீட் பண்ணலாம்ன்னு ஐடியா பண்ணும்போதே எனக்கு ரெஸ்பெக்ட் பண்ணனும்னு யாருக்காவது தோணுச்சா? அதுக்கோசரம் அந்த மீட்டிங்கை சொதப்பலாம்னு மழையை பெய்ய வெச்சேன். அந்த மழையைகூட ரெஸ்பெக்ட் பண்ணாம எல்லாரும் வந்து, யாருக்கும் எந்த குறையும் இல்லாம பெஸ்டா  நடத்திட்டாங்களாம். எனக்கு காண்டா கீது ஆயா.

ஹா ஹா நைனா முருகா! விழா சிறப்பா நடந்துச்சு. ஆனா, யாருக்கும் எந்த குறையும் இல்லைன்னு உன்க்கு யாரு சொன்னது?

அதான், அவங்கவங்க பிளாக்ல போட்டு தாக்குறாங்களே. அதை பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் மெர்சலாதான் கீது கெய்வி. இப்படியே போனா உன்னைதவிர  என்னை யாரும் ரெஸ்பெக்ட் பண்ண மாட்டாங்கன்னு.

அப்படிலாம் குறையில்லாம ஃபங்க்சன் முடிஞ்சுடலை. பதிவர் சந்திப்புக்கு போன,  ராஜிக்கு நிறையவே  ஏமாற்றங்கள் கிடைச்சுதாம். புலம்பிக்கிட்டே இருக்கா.

ஐய்ய்ய்ய் கேக்கவே குஜாலா கீது ஆயா. சொல்லு சொல்லு அந்த டீடெய்ல்ஸ்...,

                                          

சரியா மார்னிங் 9.15க்கு  அவ  டாட்டர் தூயாவும், சன் அப்புவும் மண்டபத்தை ரீச் பண்ணிட்டாங்க. அங்க,  கை கூப்பி நின்னு ஒரு பொண்ணு வெல்கம் பண்ற மாதிரி  ஒரு பேனர். தூரத்திலிருந்து பார்த்துட்டு, தன் பசங்ககிட்ட, அது சசிகலா ஆண்டிதான்னு சொல்லி, கிட்ட  போய் பார்த்தா, யாரோ ஒரு மாடலிங் பொண்ணோட போட்டோ.  அதான் முதல் ஏமாற்றம்.

விழா ஹீரோயின் சசிகலா (கவிதை புக் வெளியிட்டதால இவங்கதான் நேற்றைய ஹீரோயின்) வாசல்ல நின்னு வரவேற்பாங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டே போனா அம்மணி லேட்டா வந்து ராஜிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்காங்க.

அந்த விழாவுல,  மின்னல் வரிகள்  கணேஷ்,  கவிதைவீதி சௌந்தர், தென்றல் சசிகலா தவிர யாரும் அறிமுகமில்லையே, நமக்கு ரெஸ்பெக்ட் கிடைக்குமான்னு நினைச்சுக்கிட்டு போன ராஜியை, அத்தனை பேரும் ராஜியக்கா, சகோதரி, ராஜிம்மான்னு வயசுக்கேத்த மாதிரி கூப்பிட்டு அவங்களே வலிய வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டு ஏமாற்றத்தை குட்த்து கீறாங்க.
                                                  

 நல்லா வெள்ளை வெளேர் சட்டையில, அரவிந்த சாமி கலர்ல ஃபுரஃபைல் ஃபோட்டோவுல அசத்துற  “வசந்த மண்டப” மகேந்தரன் விஜயகாந்த் கலர்ல ஃபேண்ட் சர்ட்ல அன்புநிறை சகோதரி நாந்தான் மகேந்திரன்னு இண்ட்ரொடியூஸ் குட்த்து ரெண்டாவது ஏமாற்றத்தை குட்த்து கீறார்.

தாடிக்குள்ள முகத்தை வெச்சுகிட்டு ஆறடி உசரத்துல ஒரு அங்கிள் இருப்பார். அவர்தான் ”தூரிகையின் தூறல்”மதுமதின்னு பசங்ககிட்ட சொல்லிக்கிட்டு மண்டபத்துல எண்டரான ராஜிக்கிட்ட, சகோதரி நாதான் மதுமதின்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா ராஜிக்கு ஏமாற்றத்தை குடுத்து கீறார்.

                                            
முறுக்கு மீசையில பயமுறுத்துற ”திண்டுக்கல் தனபாலன்” சகோதரி நாதான் திண்டுக்கல் தனபாலன்ன்னு ஒரு குழந்தை கணக்கா சிரிச்சுக்கிட்டே அறிமுகப்படுத்திக்கிட்டு ஏமாற்றத்தை குட்த்து கீறார். உஜாலா விளம்பரத்துக்கு போஸ் குடுக்குற மாதிரி வெள்ளை டிரெஸ்ல  எம்பி கணக்கா புரஃபைல் போட்டோவுல அசத்துற ரமணி ஐயா, டீசர்ட் ஃபேண்ட்ல வந்து நான் யூத் பதிவர்ம்மான்னு ராஜியை ஏமாத்தி கீறார்.

வயசுலயும், அனுபவத்துலயும்  பெரியவங்களான ராமானுஜம் ஐயா, சென்னை பித்தன் ஐயாலாம் ஒரு கெத்தா இருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டு போன ராஜியை, தன் டாட்டர் போலவும், தூயாவை பேத்தியாவும் ட்ரீட் பண்ணி விஷ் பண்ணி ஏமாற்றத்தை குடுத்தாங்களம்.

ரொம்ப பெரிய  ஆளு ருக்மணியம்மா, டிவிலலாம்  வராங்க நம்மளைலாம் எங்க மதிக்க போறாங்கன்னு நினைச்சு ஒதுங்கி இருந்த ராஜியை கூப்பிட்டு பேசியதும் இல்லாம  தூயாவுக்கு நீதிநெறி கதைகள் இருக்குற  புக்கை கிஃப்ட் குடுத்து ஏமாத்தியிருக்காங்க.
                                                
சென்னை லேடீஸ்லாம்லாம் பக்கத்து வூட்டுல கீறவங்ககிட்ட கூட பேசமாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்த ராஜியை வல்லிசிம்ஹன் அம்மா ராஜிக்கும் அங்கு வந்த எல்லா பெண்களுக்கும் பூவும், குங்குமமும் தந்து அசத்தி ஏமாத்தி இருக்காங்க.ஆமினா, ஷாதிகாலாம் பல வருட பழக்கம் போல நல்லா பேசி ஏமாத்தி கீறாங்க

அதுலயும் ஆமினா பையன் தன்வீர்,  ஆண்டி, அண்ணா, அக்கான்னு ராஜி குடும்பத்தோட செம அட்டாச் ஆகி அவனும் ஏமாத்தி இருக்கான்.
                                        

                                                
                      
டிவி பொட்டிக்குலாம் பேட்டி குட்த்து டயர்டாகி போய்ட்டாங்க. நம்மக்கிட்டலாம் எங்க பேசப்போறாங்கன்னு நினைச்ச ராஜியை,  அப்பப்போ வந்து என்ன சகோதரின்னும், என்ன வேணும்ன்னு பேச்சுக் குடுத்துக்கிட்டே இருந்த சசிகலாவும், “வீடு திரும்பல்”மோகனும் ஏமாத்தி கீறாங்க.

மருத்துவர்ன்ற பந்தா இல்லாம அக்கான்னு பாசமா கூப்பிட்ட ”மயிலிறகு” மயிலனை தொடர்ந்து , உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆருக்கு போட்டியா ஊர் ஊரா போய் ஹோட்டல்ல சாப்பிட்டு பதிவை தேத்துற ”கோவைநேரம்” ஜீவாவை நல்லா பூசணிக்கா சைசுல எதிர்பார்த்திருந்த ராஜியை,  ” கொஞ்சம் பூசுனாப்புல” வந்து ஏமாத்தியிருக்கார்.

                                           

 அதிகம் பரிச்சயமில்லாத விசேசத்துக்கு போனா நாம தனியே உக்காந்து மோட்டுவளையை முறைச்சுக்கிட்டு குந்திக்குனு இருக்கனும். அதுப்போல இங்கயும் ஆகிடுமோன்னு நினைச்சுக்கிட்டே போன ராஜியை ஒரே குடும்பத்தவர் போல எல்லா பதிவர்களும் பேசிக்கிட்டு லோன்லியா ஃபீல் பண்ண விடாம ஏமாற்றத்தை குட்த்து கீறாங்க.
                                                             
கறுப்பு கண்ணாடி போட்டு, தன்  கிளாமரை கூட்டிக்குவார்ன்னு நினைச்ச அட்ராசக்கை சிபியும், அப்பாடா ஓசி சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டு போறான். ஐ ஜாலின்னு நினைச்சுக்கிட்டு  இருந்த போது,  கரெக்ட் டைமுக்கு வந்து சாப்பிட்ட சிரிப்பு போலீஸ் ரமேசையும் சேர்த்து  ராஜியை ஏமாத்தின பட்டியல் இன்னும் நீளுது நைனா.

ஹா ஹா ச்சூப்பர் ஆயா, இப்பதான் எனக்கு குஜாலா கீது. பதிவர்கள்தான் ராஜிக்கு இம்புட்டு ஏமாற்றத்தை குடுத்து கீறாங்கன்னா, லஞ்ச் எப்படி? அதுவாவது ராஜி மனசுக்கு திருப்தியா இருந்துச்சாமா?

அத்த ஏன் கேட்குற முருகா?! அதுலயும் ஏமாத்தந்தான் ராஜிக்கு.

என்ன மேட்டர் ஆயா?

ஃபங்க்‌ஷன் நடந்தது ஞாயித்துக்கிழமை. சோ, நான் வெஜ் இருக்கும்ன்னு நினைச்ச ராஜிக்கு நான், வெஜ்ன்னு சொல்லிக்கிட்டே வந்துச்சாம் இலையில் வச்ச பதார்த்தம்லாம். சாலட் ல தொடங்கி ஊறுகா வரை போட்டிருக்காங்க. டாக்டர்சும், ஊடகங்களும் பெப்சி மாதிரியான கூல்டிரிங்க்ஸ்லாம் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லியும் கேட்காத ராஜியை பொவண்டோ குடுத்து குடிக்க சொல்லியிருக்காங்க.

அடடா! ராஜியை இப்படிலாமா பதிவர் சந்திப்புல ஏமாத்தியிருக்காங்க. கவியரங்கத்துல என்ன நடந்துச்சு ஆயா?

ம்ம் எல்லா பதிவர்களும் அப்பப்போ சேரைவிட்டு எழுந்து நடந்துக்கிட்டு இருந்தாங்களே முருகா?

உன் குசும்பை என்கிட்டயே காட்டுற பார்த்தியா கெய்வி?

சும்மா தமாசு  பண்ணேன் முருகா. ஏன் குசும்பு உங்க வீட்டு சொத்தா என்ன? நான்லாம் பண்ண கூடாதா? லஞ்சுக்கு முன்னாடி இவங்க பண்ண அலப்பறையை பார்த்து எங்க பாப்பா ஹாஸ்டலுக்கு கொண்டு போய் விடனும். டைம் ஆச்சுன்னு கிளம்புன ராஜியை போக வேணாம். நாங்க உங்களை கொண்டு போய் விடுறோம்ன்னுஅன்புத் தொல்லை செஞ்சு கிளம்ப பார்த்த ராஜியை ஏமாத்தி கீறாங்க.

ஸ்ஸ்ஸ் அபா. ஆயாவுக்கு வயசாய்டுச்சு முருகா. முன் போல ரொம்ப நேரம் பேச முடியல.  அப்பாலிக்கா ஃபங்கஷன்ல நடந்த ஜோக்கான மேட்டரும், அடுத்த தபா பதிவர் சந்திப்பு நடதினா எப்படி நடத்தனும்ங்குற அடவைஸ்லாம் சொல்றேன்.  போட்டோலாம்.
நன்றி:“வீடு திரும்பல்”மோகன். 

63 comments:

 1. மிக்க நன்றி சகோதரி...

  உங்கள் பாணியில் கலக்கல் வர்ணனை...

  அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...

  அனைவரிடமும் பேச முடியவில்லையே என்று வருத்தமும் உண்டு...

  பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததற்கு நன்றி சகோ. வெறும் அறிமுகப்படுத்திக் கொண்டதோட சரி. அதிகம் பேச முடியலியேன்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. விடுங்க விடுங்க அடுத்த பதிவர் சந்திப்புல பார்த்துக்கலாம்.

   Delete
 2. துள்ளலான பழைய உரையாடல் பாணியில் பதிவர் சந்திப்பு ஸ்பெஷல்! :)

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றிங்க ச்கோ

   Delete
 3. Replies
  1. Thanks க்கு நன்றிங்கோ

   Delete
 4. என்னா பாஷைப்பா முடியல்ல ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இது மெட்ராஸ் பாஷைங்கோ. இது தெரியலியே. நீங்க தமிழர்தானே?!

   Delete
 5. Replies
  1. அதான் எல்லாருக்கும் தெரியுமே.

   Delete
 6. கலக்கல்..கை தட்டல்..நான் தான் மதுமதின்னு சொன்னவுடனே உங்க பொண்ணு தூயா மேலும் கீழுமா என்னை ஒரு பார்வை பாத்தா பாருங்க...

  ReplyDelete
  Replies
  1. நொந்துட்டீங்களா? பாப்பாவை மன்னிச்சிக்கோங்க சகோ

   Delete
 7. இவ்வளவு ஏமாற்றங்களா... மனசு தாங்குமா தாயி.. உன்னோட தனி ஸ்டைல்ல அமர்க்களமா சொன்னதுக்கு ஒரு கை குலுக்கல் இப்ப. அப்பாலிக்கா பார்ட்டியே உண்டு.

  ReplyDelete
  Replies
  1. பார்ட்டிக்கு தேங்க்ஸ்ண்ணா. சண்டே வந்த அத்தனை பேரும் உண்டுதானே?! இனி அவங்கலாம் இல்லாம ஒரு பார்ட்டியா?! நினைச்சுக்கூட பார்க்க முடியாதுண்ணா.

   Delete
 8. முருகா..முருகா..

  ReplyDelete
  Replies
  1. முருகனை துணைக்கு கூப்பிடும் அளாவுக்கு நொந்து போய்ட்டீங்களா?

   Delete
 9. அடி ஆத்தீ..ஒரு நாள் சென்னை வந்ததுக்கே இப்படியா.......... சரியா போச்சீ.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா எனக்கு எல்லா ஊர் பாசையும் நல்லா பேச வரும்.

   Delete
 10. நல்ல பதிவு ! பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. ரசித்து பாராட்டியமைக்கு நன்றிகள்

   Delete
 11. ஆகா மொத்தத்தில் என்னை உங்களோட சேர்த்து 2 பேர் அழகா இருக்கிறதா சொல்லிடிங்க. (மாலதி)

  ReplyDelete
  Replies
  1. த்த்தூரத்துல பார்க்கும்போது சசி அழகா இருக்கங்களேன்னு பொறாமைக்கூட வந்துச்சு. அதான் கிட்ட வந்தபின் அது சசியில்லை. மாடலிங்க் பொண்ணு. சசியாவது அழகாகவாவதுன்னு தெரிஞ்சு போச்சே.

   Delete
  2. இதெல்லாம் ஓவரு ஆமா நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன் நான் போய் எங்க அண்ணனை கூட்டிட்டு வருவேன். அண்ணா◌ா◌ா◌ா◌ா◌ா◌ா◌ா◌ா

   Delete
 12. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்தான் சகோ. அறிமுகத்தோட முடிந்த வரையில் ஆதங்கமே

   Delete
 13. டைட்டிலில் ஒரு சின்ன திருத்தம், பதிவால் கடுப்பான முருகன்

  ReplyDelete
  Replies
  1. யார் பதிவால்ன்னு சொன்னா நல்லா இருக்கும்

   Delete
 14. முருகா...இதென்ன சோதனை...அப்புறம் யாருக்கும் தராம அம்மாவும் பொண்ணும் மட்டுமே குச்சி ஐஸ் வாங்கி தின்னு ஏமாத்தி புட்டாங்க..இன்னும் ஒண்ணு இருக்கு..குடும்பமே உட்கார்ந்து ஒட்டு போட்டு இவங்க பதிவ இவங்களே ஹிட் ஆக்கிறாங்க ...என்ன முருகா பண்றது...ஒரே ரோதனை...சாரி சோதனை...

  ReplyDelete
  Replies
  1. ஹைய்யோ ஹைய்யோ ரெண்டு ஓட்டுனால ஒரு பதிவு ஹிட்டாகிடுமா? சிபிதான் சொன்னாருன்னா நீங்களும் நம்புறீங்களே சகோ

   Delete
 15. ////நல்லா வெள்ளை வெளேர் சட்டையில, அரவிந்த சாமி கலர்ல ஃபுரஃபைல் ஃபோட்டோவுல அசத்துற “வசந்த மண்டப” மகேந்தரன் விஜயகாந்த் கலர்ல ஃபேண்ட் சர்ட்ல அன்புநிறை சகோதரி நாந்தான் மகேந்திரன்னு இண்ட்ரொடியூஸ் குட்த்து ரெண்டாவது ஏமாற்றத்தை குட்த்து கீறார்.

  தாடிக்குள்ள முகத்தை வெச்சுகிட்டு ஆறடி உசரத்துல ஒரு அங்கிள் இருப்பார். அவர்தான் ”தூரிகையின் தூறல்”மதுமதின்னு பசங்ககிட்ட சொல்லிக்கிட்டு மண்டபத்துல எண்டரான ராஜிக்கிட்ட, சகோதரி நாதான் மதுமதின்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா ராஜிக்கு ஏமாற்றத்தை குடுத்து கீறார்.
  ////

  ஹா.ஹா.ஹா.ஹா............. இப்புடித்தான் நான் ஒரு முறை சமாதான காலத்தில்(2005)எங்க ஊருக்கு (இலங்கையில் கிளிநொச்சி) நடிகை மதுமிதா வந்து இருந்தார்.நானும் படத்தில போல சோக்கா இருப்பாருனு பாய்ந்து அடித்துகொண்டு போய் மதுமிதாவை பார்த்தேன் எனக்கு ஏமாற்றம் தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. ஐயோ சகோ இந்த பதிவுலகத்துல நுழைஞ்சு,எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் பதிவரை மனசுல நினைச்சுக்கிட்டு, அவரா இருப்பாரோன்னு உத்து பார்த்துக்கிட்டு இருப்பேன். என்னிக்கு தர்ம அடிவாங்க போறேனோ?

   Delete
 16. சிறப்பான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்!
  கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
  ஹன்சிகா ரகசியங்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி. அவசியம் வரேன்.

   Delete
 17. என் மனதைக் கவர்ந்த அக்கா மகள்...ன்னு ஒரு பதிவு எழுதலாம்ன்னு இருக்கேன்... தூயா அடிக்காம இருந்தா.... :)

  ReplyDelete
  Replies
  1. தூயா கோவிச்சுக்காம இருக்க நான் பொறுப்பு. பதிவை போட்டு ஜமாய்ங்க.

   Delete
 18. எத்தனை இனிய ஏமாற்றங்கள்!சந்தித்ததில் மகிழ்ச்சி ராஜி&தூயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்சியே ஐயா!

   Delete
 19. சிறிய அறிமுகத்துக்கே இப்படி ஒரு பதிவு போட்ட நீங்க எல்லா பதிவர்கூட உட்கார்ந்து பேசியிருந்தா டிவி சீரியல் மாதிரி ஒரு பெரிய சீரியல் போல ஒரு தொடர் பதிவு ஒருவருஷத்திற்கு குறையாம போட்டு இருப்பீங்க..


  நான் வரல்லைன்னு கொஞ்சம் கூட கவலைப்படமா எல்லா சகோக்களும் கொட்டம் அடித்து இருக்கீறீர்கள் ஹும்ம்ம்ம்ம். இவ்வளவு அக்காமார்களும் அண்ணன்மார்களும் இருந்து என்ன பிரயோசனம். ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


  பதிவு அருமை அதை எழுதியவிதம் நன்றாக இருந்தது அக்கா மேலே கோபம் இருந்த்தாலும் பாராட்டுவது தம்பியின் கடமை( உங்களுக்கு வயது என்றும் 20 என்று ஏதோ பதிவில் சொன்னதாக ஞாபகம் அது போல எனக்கு வயது என்றும் 16தான் அதனால நான் உங்க தம்பிதானே?)

  ReplyDelete
  Replies
  1. கவலைப்படாதீங்க சகோ. சென்னை வந்த அத்தனை பதிவர்களும் உங்க செலவுல அமெரிக்காவுக்கு வந்து தமிழ் பதிவர் சந்திப்பு மாநாடு நடத்தி அசத்துறோம். நீங்க எனக்கு தம்பியேதான். எல்லாருக்கும் இஇஇஇளைய தம்பி.

   Delete
 20. செம செம ! கலக்கல் பதிவு ! சோக்கா கீது மே !

  சென்னைத் தமிழ் கூட ஒருவித அழகு தான் !!! மண்வாசனையை உணர முடிந்தது உங்கள் பதிவில் !!!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து பாராட்டியமைக்கு நன்றி

   Delete
 21. கலக்கலா கலாய்ச்சு இருக்கீங்க சகோ. நல்லாத்தான் ஓட்டறீங்க போங்க! :)

  ReplyDelete
  Replies
  1. ரசித்து பாராட்டி கருத்துரைத்தற்கு நன்றி சகோ

   Delete
 22. ஏன்க்கா, உங்களுக்கு என்னைப் பார்த்தா பயமா இருக்கா? நீங்க வேற நான் ஒரு காமெடி பீசு. ஆளு தான் கரடுமுரடா இருக்கும். பேசிப் பாருங்க. மற்றப்படி இலையில் தெளித்த தண்ணீருக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மன்னிச்சுக்கோங்க. நிஜமாவே நீங்க, திண்டுக்கல் தனபாலன்னா எனக்கு பயம். அதனாலதான் பதிவர் சந்திப்புல உங்ககிட்ட வந்து பேசலை. உங்க பிளாக்குக்கு வந்து பதிவை படிச்சாலும் கமெண்ட்லாம் போட மாட்டேன். இந்த லிஸ்ட்ல இன்னும் சில பேர் இருக்காங்க.

   Delete
 23. என்னா கிண்டலு ! நக்கலு ! உங்க எழுத்தை எப்படி இவ்ளோ நாள் தவற விட்டேன்னு தெரியலை ! பதிவர் சந்திப்பால் தான் உங்கள் ப்ளாகே படிக்க ஆரம்பிசுருக்கேன். அசத்துங்க

  உங்களை பற்றி டெர்ரர் -ஆ நான் ப்ளாகில் எழுத போறேன் பிளீஸ் வெயிட்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா எழுதுங்க. நீங்க டெரர் ஆகுற மாதிரி பதில் தரேன்.

   Delete
 24. மதியம் இந்த பதிவின் உள்ளே நுழைஞ்சு ஒரு ஓட்டு மட்டும் போட்டேன். அப்ப அடிச்சுது ஒரு இன்டர்காம் போனு . போனில் வந்த வேலை எட்டு மணி வரை நிமிர முடியாம பண்ணிடுச்சு. எட்டு மணி ஆச்சு கிளம்ப ஹோட்டல் போயிட்டு வந்து இப்போ தான் நிதானமா வரி வரியா இந்த பதிவை படிச்சேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும்ன்னு சொல்வாங்க. ஒருமுறை ஃபோன் வந்து உங்களை என் மொக்கையிலிருந்து காப்பாத்தியும் வலிய வந்து சிக்கிக்கிட்டீங்களே சகோ!?

   Delete
 25. இப்படி எல்லா நண்பர்களும் ஜாலியா கலாய்க்கும், பதிலுக்கு செம ஈசியா எடுத்துகிட்டு கலாய்க்கும் ஒரு பெண் பதிவர் இப்போ தான் பாக்குறேன்; நான் ரெகுலரா வாசிக்கும் பெண் பதிவர்கள் குறைவு என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம் ( நோ நோ கிரையிங். கடமையில் பாசத்துக்கு இடம் தரகூடாது)

  கமன்ட் மாடரேஷன் வைக்காத பெண் பதிவர்களே மிக மிக குறைவு ( பெண்களுக்கு அந்த ஜாக்கிரதை ஒரு விதத்தில் நல்லது தான்)

  ReplyDelete
  Replies
  1. அஞ்சுவது அஞ்சாமை பேதமை. ஆனா, எல்லாத்துக்கும் அஞ்சுவதும் தப்பு. எல்லாரும் நல்லவங்களே, தூய நட்புடனும், சகோதரத்துவமுடன் பழகலாம் என்பது என் நினைப்பு. ஆனா, தவறான ஒரு சொல், பார்வை வந்தாலும் உறவை கட் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பது என் வழக்கம்.

   Delete
 26. Replies
  1. உங்க கருத்தும் அருமை

   Delete


 27. அருமை சகோதரி!வேடிக்கையான நல்ல பதிவு! உடன் காணவும் பதிலிடவும்
  இயலவில்லை! உடல்நிலைக் காரணம்.
  வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் உடல்நிலையே முக்கியம் ஐயா! தாங்கள் தளத்திற்கு வராவிட்டாலும் தங்கள் ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு.

   Delete
 28. நல்ல கற்பனையுடன் கூடிய வர்ணனை
  அருமையா இருந்துச்சு

  ReplyDelete
 29. ரொம்ப காலம் பழகியது போல் நீங்கள் பழகிய விதம் என்னை ரொம்பவே ஆச்சர்யப்பட வச்சது! மண்டபத்துக்கு வரும் போது ரொம்பவே படபடப்பா... ஒருவித பயம் இருந்தது! ஆனா தூயா ஷாம் சட்டையில் இருந்த என் ஐடியை பார்த்ததும் 'நான் தான் குட்டிபதிவர்ன்னு இவ்வளவுநாளா தப்பு கணக்கு போட்டுட்டேன்" என சொன்னதும் தூயாவுடன் , உங்களுடன் என அனைவரிடமும் பேச ஆரம்பிச்சேன்! நல்ல சந்திப்பு! அடுத்த முறை கண்டிப்பா கலந்துக்கலாம் (இறைவன் நாடினால்)

  ReplyDelete
 30. அன்பு ராஜி,
  வெகு தமாஷாக எழுதியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்.
  என் பதிவு படிக்க: ranjaninarayanan.wordpress.com
  அன்புடன் ரஞ்ஜனி

  ReplyDelete
 31. வர மிகவும் ஆசை பட்டேன்.அடுத்த முறை கண்டிப்பாய் கலந்துக்க வேண்டும்.

  ReplyDelete