புதன், ஆகஸ்ட் 01, 2012

ஊடலுக்குப் பின் கூடல்


                                                 
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும்  உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின்  மனநிலையை இப்படி வடித்திருந்ததாக  நன்பரொருவர் மெயில் அனுப்பியிருந்தாங்க.  இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக  பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடலொன்று.  "வாராயோ தோழி வாராயோ!" மெட்டில்...


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
அதிகாரம் கையில் இருக்கிறவரைக்கும்
ஆதாயம் தேட வாராயோ?
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!


வழக்குண்டு இங்கு நூறு!- அதில்
வாய்தாவை வாங்கப் பாரு!
எதிர்க்கின்ற பேர்கள் யாரு?-இது
எதற்கும் தேறாத ஊரு!

தமிழ்நாட்டில் ஏது தகராறு!
தலையாட்டும் பொம்மை வரலாறு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!

அவர் செய்த ஊழல் பெரிதா-இல்லை
இவர் சேர்த்த செல்வம் பெரிதா

வழக்காடு மன்றம் புதிதா-அவர்
வாய்பூட்டும் வழிகள் அரிதா
மகத்தான கொள்கை பணம்தானே?
மடசாம்பிராணி ஜனம்தானே?

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!பொதிமாடு போல தினமும்-சுமை
புலம்பாமல் தூக்கும் ஜனமும்
அரைக்கில்லை முண்டுத்துணியும்-என்றும்
அடிமாடு போலப் பணியும்
அவலங்கள் தீர எதுவுண்டு?
அரசாங்கம் தந்த மதுவுண்டு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
டிஸ்கி: எனக்கு அரசியல் புரியாது அதனால பிடிக்காது. ஆனா, வலையில படிச்சதும் இந்த பாடல் பிடிச்சுட்டுது. அதனால இந்த பதிவு.

28 கருத்துகள்:

 1. அட... நாஞ்சில் வேணுவோட உனக்கு பரிச்சயம் உண்டா தங்கச்சி... நிறைய சினிமாப் பாடல்களை அரசியல் கலந்து இப்படி அவர் எழுதி என்னை ரசிக்க வெச்சிருக்கார். அருமையான பாடலாசிரியர்தான். தேடிப்பிடிச்சு தந்ததுக்கு நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு நாஞ்சில் வேணு பரிச்சயம்லாம் இல்லை. வேற ஒரு நண்பர் இந்த பாடலை எனக்கு மெயில் பண்ணி இருந்தார் அண்ணா.

   நீக்கு
 2. அரசியல் கலந்த அழகான பாடல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பாராட்டு பாடல் எழுதிய நாஞ்சில் வேணு அவர்களையே சாறும்.

   நீக்கு
 3. அருமையாக பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ...

  வாழ்த்துக்கள்...
  நன்றி...
  (த.ம. 4)

  பதிலளிநீக்கு
 4. பாடல் அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி! ம்நம தலத்துல....
  ப்ரபல பதிவருடன் அலைபேசியில் நான்!கருத்துக்  கனிப்புகள்.... ஒரு பார்வை!
  http://sindanaisiragugal.blogspot.in/2012/07/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 5. எம்மாம் தில்லு இருந்தா இந்த வரிகளை ஷேர் பண்ணுவிங்க?

  ஆட்டோ உங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டோவா....யாருகிட்டே..........எட்றா அந்த அருவாளை...தீட்டிபுடுவேன் தீட்டி.....

   நீக்கு
 6. அம்மாவை நக்கலடிக்கும் பாடல் சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. அருமையான கருத்துள்ள் பாடலே
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. உடன்பிறவா சகோதரிகள் பிரிந்தது ஊரை ஏமாத்துன நாடகம்....!

  பதிலளிநீக்கு
 9. நான் போட்ட கமென்ட் ஒன்றை காணோம்....!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காக்கா தூக்க்கி போயிருக்கும்

   நீக்கு
 10. ரசனையான அரசியல் வரிகள்.பாக்கணுமே சம்பத்தப்பட்டவங்க !

  பதிலளிநீக்கு
 11. ///எனக்கு அரசியல் புரியாது அதனால பிடிக்காது. ஆனா, வலையில படிச்சதும் இந்த பாடல் பிடிச்சுட்டுது. அதனால இந்த பதிவு.///

  அட அட என்னா சாமர்த்தியம் அரசியல் வாதி போல பட்டும் பாடாமலும் சொல்லி இருக்கீறீங்க....உங்களுக்கு வருங்கால எம் எல் ஏக்காவுக்கான தகுதி இருக்கிறது வாழ்த்துக்கள் ராஜி

  பதிலளிநீக்கு
 12. நல்ல குசும்பு அரசியல் கவிதை!ம்ம்

  பதிலளிநீக்கு
 13. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. என்று கவுண்டமணி ஸ்டைலில் கண்டுக்காமல் போக வேண்டியதுதான். இதில் கொடுமை என்னவென்றால் சில அரசியல் தலைவர்களின் போக்கு புரியாமல் அப்பாவிகள் சிலர் தீக்குளிக்கிறேன் என்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதுதான். காலத்துக்கேற்ற பகிர்வு. பாராட்டுகள் ராஜி.

  பதிலளிநீக்கு
 14. சந்தர்ப்பவாதிகள்
  சாமர்த்தியசாலிகள் தங்கள் சுயநலத்தில் மட்டும்..
  அரசியல்க் கவிதை நன்று..

  பதிலளிநீக்கு
 15. நல்லா இருக்கு கவிதை!

  கவிதை எழுதிய கவிஞருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. சகோ என்னாது இது பாட்டு,.. பாடுங்க பாடுங்க - நல்லா சொன்னீங்க போங்க

  பதிலளிநீக்கு