Tuesday, January 29, 2013

சக பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் திருவிழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சமீபத்துலதான் நாம கொண்டாடினோம். பிரபல பதிவர்கள்லாம் அவங்கவங்க வீட்டுல எப்படி கொண்டாடுனாங்கன்னு பதிவா போட்டு இருப்பாங்க. நீங்களும் படிச்சு, பார்த்து ஆஹா, ஓஹோன்னு கமெண்ட் போட்டுட்டு வந்திருப்பீங்க. அதுலாம் பதிவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி இருக்கும்.

அதனால, நம்ம சக பதிவர்கள்லாம் நிஜமாவே எப்படி அவங்க  வீட்டுல எப்படி பொங்கல் கொண்டாடினாங்கன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சதால கொஞ்சம் லேட்டாகிட்டுது.., சாரி..., இனி ஒவ்வொரு பதிவரும் அவங்க வீட்டுல எப்படி கொண்டாடினாங்கன்னு அவங்கவங்க குடும்பத்தார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டது...,


”மின்னல் வரிகள்” கணேஷ் அண்ணா வீட்டில்...,
சரிதா: ஏங்க! பொங்கல் வைக்க டைம் ஆகிட்டுது. எல்லாம் ரெடி.., அடுப்பை  பத்த வச்சு பொங்க பானை வெக்கலாம். வாங்கன்னு கூப்பிட்டா அங்க என்னத்தை தேடுறீங்க?! ஏங்க! ஏங்க!
கணேஷ் அண்ணா: நீ பட்டுப் புடவைக்கும், தங்க வளையலுக்கும் ஏங்குறது தெரிஞ்சும் கண்டுக்காமத்தானே இருக்கேன்..

சரிதா:  நான் கரடியா கத்துறது உங்க காதுல விழலியா?!

கணேஷ் அண்ணா: எனக்கு கரடி பாசைலாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்கேன். சர்க்கஸ்ல போய் ரிங்க் மாஸ்டராகி நல்லா சம்பாதிச்சு இருப்பேனே!

சரிதா: என்னாது அங்க முணுமுணுப்பு??!! 

கணேஷ் அண்ணா: ஒண்ணுமில்லம்மா! சாண்டில்யன் தன்னோட ஒரு நாவல்ல பொங்கல் வைப்பதன் சிறப்பு என்ன? எப்படிலாம் வெக்கனும்ன்னு எழுதி இருக்கார் அதைதான் தேடிக்கிட்டு இருக்கேன்.

சரிதா: ம்க்கும்.., நீங்க எப்போ தேடி நாம எப்போ பொங்கல் வைக்குறது??!!  உங்க பாச மலர்கள்ல ஒண்ணு சசிக்கிட்ட போன் போட்டு கேட்டு பாருங்க...,

கணேஷ அண்ணா: அது பாவம், சின்ன பொண்ணு அதுக்கு ஒண்ணும் தெரியாது..,

சரிதா: அப்படின்னா, அடுத்த பாசமலர் ராஜிக்கிட்ட கேளுங்களேன்.

கணேஷ் அண்ணா: உன்னை கட்டிக்கிட்ட நாள் முதலா இன்னிக்குதான் உருப்படியா ஒரு யோசனை சொல்லி இருக்கே. ராஜிக்கு எல்லாம் தெரியும் அவளை கேட்டுட்டு வரேன்.

 ”வீடு திரும்பல்” மோகன்குமார்...,

ஹவுஸ் பாஸ்: குட்டிம்மா! உங்கப்பா எங்கேம்மா?!

குட்டி பாப்பா: கரும்பு, பானை வாங்கி வா!ன்னு நீதானேம்மா அனுப்பினே?!

ஹவுஸ் பாஸ்: அட, ஆமாம்! மறந்தே போச்சு. என்னடா குட்டி.., மதியமாச்சு.., காலையில போன உங்கப்பாவை இன்னும் காணோமே! என்ன ஆச்சுனு தெரியலியே! வா போய் பார்த்துட்டு வரலாம்..,,

குட்டி பாப்பா: அய்.., அம்மா, அப்பா வந்துட்டாங்க..,அப்பா ஏன் லேட்டு?!

ஹவுஸ் பாஸ்:  ஏங்க இம்புட்டு நேரம் நாங்க பயந்துட்டோம். ஏன் இவ்வளவ் நேரம்?! எதாவது பிராப்ளமா?!

ஐய்யா சாமி: பிரபல பதிவராயிட்டேனே அதான் பிராப்ளம்.

ஹவுஸ் பாஸ்:  புரியுற மாதிரி சொல்லுங்க.

ஐய்யா சாமி: கரும்பு, மஞ்சள், பானை விக்குறவங்களைலாம் பேட்டி  எடுத்து வந்தேன். அதுமில்லாம கோடி வீட்டு கோமளம் மாமி பொங்கல் வெச்சுகிட்டு இருந்தாங்க அதை போட்டோலாம் எடுத்து வந்தேன் பதிவு போட..., அதானுங்க லேட்.

ஹவுஸ் பாஸ்: !@#$%  )(*&^$#  @#^&*


”அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க, கூட மாட ஒத்தாசை பண்ணாம அங்க என்ன செல்லை நோண்டிக்கிட்டு இருக்கீங்க.

மதுரை தமிழன்: வரேன் இரு.

ஹவுஸ் பாஸ்: ஏங்க இங்க வந்து ஹெல்ப் பண்ணா சீக்கிரம் சாமி கும்பிடலாமில்ல.

மதுரை தமிழன்: இரும்மா! யாராவது பொங்கல் பத்தி எஸ்.எம்.எஸ் இல்லன்னா மெயில் அனுப்புவாங்க அதை வெச்சு பதிவு தேத்தலாம்ன்னு பார்த்தா யாரும் அனுப்பலியே!

ஹவுஸ் பாஸ்: !@#$% *!@^&* )^$#@\


” கோவை நேரம்” ஜீவா வீட்டில்..,

ஹவுஸ் பாஸ்: ஏனுங்க! இன்னிக்கு பொங்கல் பண்டிகை. சர்க்கரை பொங்கல் செய்யனும்.., பொங்கல் குழம்பு வைக்கனும்.., கொஞ்சம் மளிகை சாமான் வாங்கி வர்றீங்கள்?!

ஜீவா: இதோ பாரும்மா! சர்க்கரை பொங்கல், நம்ம மூணவது தெருவுல இருக்குற ------- ஹோட்டல்ல நல்லா இருக்கும். காலையில  8மணிக்கு கூட்டம் கம்மியா இருக்கும். அங்க வாங்கிக்கலாம்.பொங்கல் குழம்பு லாங்க் பஜார் ரோடுல இருக்குறா------- ஹோட்டல்ல நல்லா இருக்கும் அங்க வாங்கிக்கலாம். டேஸ்ட் கொஞ்சம் மட்டமா இருந்தாலும் அம்மணிகள்லாம் வருவாங்க.

ஹவுஸ் பாஸ்: !@#$%^  +)&^%$ !@#%^&&

ஜீவா: நல்ல நாளும் அதுவுமா, நிம்மதியா  ஒரு பக்கார்டியா  அடிக்க உடுறாளா?! நொய், நொய்ன்னு சே இதுக்கு நான் டூர் இருக்குன்னு வழக்கம்போல எங்கிட்டாவது கிளம்பி போய் இருக்கலாம்


”தூறிகையின் தூறல்” மது மதி வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏனுங்க! பொங்க வைக்கனும். இப்போ நல்ல நேரம் வாங்க.., ஆரம்பிக்க்லாம்..,

மதுமதி: இதோ பாரும்மா! நான் பெரியார் பொறந்த மண்ணுல பொறந்தவன் அதனால, இந்த ஈர வெங்காயம்லாம் எனக்கு வேணாம். நீ வேணும்ன்னா பாப்பாக்காக பொங்கல் வெச்சுக்க.

ஹவுஸ் பாஸ்: ம்க்கும், அந்த மாதிரி நல்லவங்க பேச்சைல்லாம் நீங்க கேக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.., வேலை செய்ய சோம்பேறித்தன பட்டுக்கிட்டும், பதிவு தேத்தவும்தானே நீங்க வரமாட்டேன்னு சொல்றீங்கன்னு எனக்கு தெரியும். படைச்ச பின் இலையில் கை வெச்சு பாருங்க..  அப்புறம் இருக்கு உங்களுக்கு கச்சேரி...,

மதுமதி: ங்ங்ங்ங்ங்ங்ஙேஙே 


”அட்ரா சக்கை” சி.பி.செந்தில் குமார் வீட்டில்...,

 அம்மா: ஏம்மா! அந்த பானையை எடுத்து மஞ்சள் துண்டு கோர்த்து கட்டும்மா

 ஹவுஸ் பாஸ்: கட்டிடேனுங்க அத்தை. அரிசி களைஞ்சு வெச்சுட்டேன். குழம்பு வைக்க காய்லாம் கூட கட் பண்ணி வெச்சுட்டேன்.

 அம்மா: பொங்க பானை அடுப்புல வெக்கனும் சிபி எங்கே? சிபி! சிபி....,

ஹவுஸ் பாஸ்: ம்க்கும். அவர் எங்கே இங்க இருக்க போறார். இன்னிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  12 படம் ரிலீஸ் அதனால, நேத்து நைட்டே பாய், தலைகாணிலாம் எடுத்துட்டு போய் அங்கயே போய் படுத்துக்கிட்டார்.


  ”காணாமல் போன கனவுகள்” ராஜி மற்றும் “தேவதை கனவுகள்” தூயா வீட்டில் ...

பெரியப்பா: ஏம்மா தூயா! செங்கல் கொண்டு வாம்மா!

தூயா: இந்தாங்க பெரியப்பா.

பெரியம்மா: அந்த அரிசில இருக்குற கல்லு, நெல்லுலாம் பொறுக்கி சுத்தம் பண்ணும்மா.

தூயா: சரி பெரியம்மா. என்ன காய்கறின்னு சொன்னா.., நான் கழுவி நறுக்கி தருவேன்.

ராஜியோட ஹவுஸ் பாஸ்: ஏய் தூயா! நீதான் வேலை செய்யுறே. உங்கம்மா எங்கே?!

தூயா: ம்க்கும் அம்மா என்னிக்குப்பா வீட்டு வேலைகள் செஞ்சு இருக்காங்க?! அதோ பாருங்க பதிவுல போடுறதுக்காக வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறதை..., மனசுக்குள் பிரபல பதிவர்ன்னு நினைப்பு...,

ராஜியோட ஹவுஸ் பாஸ்:     1{@}%:&{)_!?$<>^&*&))()@<>{}][’;./,

டிஸ்கி: நெட் கனெக்‌ஷன் பிரச்சனைனால பொங்கல் கழிஞ்சு இத்தனை நாள் ஆகி இந்த பதிவு.

12 comments:

 1. "ராஜிக்கு எல்லாம் தெரியும் அவளை கேட்டுட்டு வரேன்"

  சொய்ங் சொய்ங்.. பபப..
  சொய்ங் சொய்ங்.. பபப..

  ReplyDelete
  Replies
  1. ம் ம் ம் கரெக்ட் பொங்கல் பொன்கி வரும்போது இப்படித்தான் சொய்ங்ன்னு சத்தம் வந்துச்சு

   Delete
 2. ஹா..ஹா..

  அவங்க பொங்கல் கொண்டாடினாங்களோ இல்லையோ! நீங்க நன்னா பதிவு தேத்திடீங்க.....கலகலப்பாக இருக்கு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. பதிவு நல்லா இருந்துச்சுங்களா?! ரசிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றிங்க

   Delete
 3. கடைசி பதிவர் வீட்டில் நடந்தது மட்டும் உண்மையாமே ?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானுங்க. அதான் போட்டோ ஆதாரத்தோடு போட்டுட்டேனே. அதேப்போல மத்த வீட்டுல நடந்ததும் உண்மைதானுங்க

   Delete
 4. ஹா..ஹா.. செம கலக்கல் பொங்கல்தான்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி

   Delete
 5. ஹா... ஹா... ஹா... எல்லாரோட கேரக்டரையும், எழுதற ஸ்டைலையும் உள்வாங்கி எழுதி அசத்திட்டம்மா. ஒரே ஒரு திருத்தம்- என் பாசமலர்கள்ல முதலாவது ராஜிதான்! சரியா?

  ReplyDelete
  Replies
  1. அப்படியாண்ணா?! மிக்க மகிழ்ச்சி. ஆனா, எப்பவுமே கடைக்குட்டிதான் செல்லம். சசி நமக்கு இளையவள்தானே?! அதான் அவளுக்கு முதலிடம் கொடுத்தேன்.

   Delete
 6. நல்லாத் தான் பொங்கல் கொண்டாடி இருக்காங்க!

  நல்ல நகைச்சுவை.... பாராட்டுகள்.

  ReplyDelete
 7. எல்லாரையும் நல்லா படிச்சி வைச்சிருக்கீங்க ... உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல .... :)

  ReplyDelete