புத்தம் புது உறவே!
என் ஆசை சொல்லவா!!??
பொத்தி வைத்து மறைத்தேன்..,
அதை வெட்கம் விட்டு சொல்லவா!!?
மெல்லிய சாரல் மழையில் தோளுரசி நடந்திட ஆசை!!
உன் கைக்கோர்த்துவீடெங்கும் சுற்ற ஆசை!!.
உன் கைக்கோர்த்துவீடெங்கும் சுற்ற ஆசை!!.
உன்
கால் பிடித்து.., கை விரல் சொடுக்கெடுக்க ஆசை!!
உன் மடிமீது தலை சாய ஆசை!!
சாயும் தலைக்கோத ஆசை!!
கோதும் விரல் பிடித்து முத்தமிட ஆசை!!
தாயாய்,, சேயாய் மாறிட ஆசை!!
உன் கைக்குட்டை திருட ஆசை!!
அதை என் இடுப்பில் எப்போதும் செருகி வைக்க ஆசை!!
பின்னிரவிலும் உனக்காக காத்திருக்க ஆசை!!
காலதாமதாமாய் வரும் நீ..,
என் மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை!!
சின்ன சின்ன
சண்டை ஆசை!!
ஊடலுக்குப் பின் கூடல் ஆசையோ ஆசை!!
உன் விரல்
தொட்டு சூடும் மல்லிகைப்பூ ஆசை!!
உன் விழி பார்த்து வெட்கப்பட ஆசை!!
கரும்பாம்பாய் நீண்டிருக்கும் சாலையில்...,
மோட்டார்சைக்கிளில் உலா வர ஆசை!!,
நீ சுட்டு தரும் தோசையும், ஆம்லெட்டும் ருசிக்க ஆசை!!
சிறு பிள்ளையாய் மாறி பருப்புசோறும், நெய்யும் ஊட்டிக் கொள்ள ஆசை!!
முழுமதி உடல் நனைக்க நிலா சோறு உண்ண ஆசை!!]
சின்னஞ்சிறிய கதைகள் பேசி..,
உன்
மடியினில் குழந்தை போல் துயில ஆசை!!
ரசிக்க வைத்தது ஆசைகள்...
ReplyDeleteமுடிவில் ஏனிந்த ஆசை...?
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல ஆசைகள்தான்.....இதெல்லாம் நிறைவேறக்க் கூடிய ஆசைகள்தான் அதானல் ஆசையை நிறைவேற்றுங்கள்( நான் கடைசி ஆசையை சொல்ல வில்லை ஹீ..ஹீ )
ReplyDeleteசெல்லச், செல்ல ஆசை.
ReplyDeleteநாட்கள் செல்லச் செல்ல
செல்லாக் காசாகிடுமிந்த ஆசை
பின் பொக்கிஷமாகி மனப்பெட்டியில்
சேர்ந்துவிடும்,...
//உன் விழி பார்த்து வெட்கப்பட ஆசை!!//
ReplyDeleteநியானமான ஆசை ஆனா கொஞ்சம் கஷ்டமான ஆசை மாதிரி இருக்கே.
// உன் விரல் தொட்டு சூடும் மல்லிகைப்பூ ஆசை!!
ReplyDeleteஉன் விழி பார்த்து வெட்கப்பட ஆசை!!//
வரிகள் அழகு!
யப்பா எவ்வளவு ஆசைகள் முடிவிலும் ஆசையா ?
ReplyDeleteஉங்க ஆசைகளை படித்ததும் கல்யாணம் பண்ற ஆசையை முடிஞ்ச வரை தள்ளி போடுறா என்று உள் மனசு கதறுது அக்கா ... சும்மா சொன்னேன் ...
ReplyDeleteஆசைகள் மழைச்சாரல் போல ரசனையாக இருக்கிறது அக்கா...
இறுதி ஆசை என்பது நம் கையில் இல்லையே ...
நியாயமான ஆசைகள்தான்..!
ReplyDeleteஎத்தனை எத்தனை ஆசைகள்.... :)
ReplyDeleteஆசைகளுக்கு முடிவேது ..... தொடரும் ஆசைகள் இனிதாகட்டும்.
ReplyDeleteரசிக்க முடிகிற ஆசைகள்.
ReplyDeleteகனவுகள் காணும் பொழுது பசுமையாக நினைவில் இருக்கும். ஆசை
ReplyDeleteகாலதாமதாமாய் வரும் நீ..,
ReplyDeleteஎன் மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை!!
அழகான ஆசைகள்..
ஆசையோ ஆசை .
ReplyDelete