கைக்குட்டையிலும் உன்
வாசம்!!
என் சட்டைகையிலும்
உன் வாசம்!!
பூத்துவாளையில் உன்
வாசம்!!
பூக்களுக்குள்ளும்
உன் வாசம்!!
தண்ணீரில் உன்
வாசம்!!
என் தலையணைக்குள்ளும்
உன் வாசம்!!
உன் வாசம்!! உன்
வாசம்!! உன் வாசம்!!
என் வீடெங்கும் உன்
வாசம்!!
உன் வாசம் முகர்ந்த
என் இதயம்..,
என் வாசல் வரை வந்து
உன்னை எதிர்பார்க்கும்!!
நீ இல்லாத நிஜம்
என்னை!!??
நிதம் நிதம் என்னை
தாக்கும்..,
கதவின் பின்னே
ஒளிந்திருப்பாய் என
ஆயிரம் கதை சொல்லும்
உன் வாசம்!!
காதலுடன் அருகில்
சென்றால்...,
காயங்களே மிஞ்சும்...,
கட்டிலடியில்..,
மாடிப்படியில்...,
உன் வாசத்தின் ஊற்றை
எங்கெங்கும் தேடி,
தேடி களைக்கையில்..,
மீண்டும் தென்றலாய்
உன் வாசம்!!!
அடி,
கண்டுபிடித்துவிட்டேனடி..., உன்
வாசத்தின்
முகவரியை!!??
அது நான் காணும்
பொருட்களில் இல்லை!!
உன் வாசமே! என் சுவாசமாகிப்
போனதின் வினைதான் அது என்பதை!!!!!!
உன் வாசமே! என் சுவாசமாகிப்
ReplyDeleteபோனதின் வினைதான் அது :)
அருமையா இருக்குது சகோதரி...
ReplyDeleteமண் வாசம் பெரிதோ..
மலரின் நல வாசம் பெரிதோ
இல்லையில்லை
என்னுள் எனக்கான
என் சுவாசமாய் இருக்கும்
உன் வாசமே எனக்குப் பெரிது...
வாசமே சுவாசமாய் ஆவதென்றால் அந்த நேசம் எத்தனை சிறந்ததாக இருக்கும்! அசத்திட்டுதும்மா கவிதை!
ReplyDeleteஅழகு.....
ReplyDelete