Wednesday, February 12, 2014

பாரிஸ் கார்னர் -மௌன சாட்சிகள்

நமக்கு தெரிந்த இடங்கள்தான்,  ஆனா தெரியாதக் கதைகளைத் தன்னுள் கொண்டு மௌன சாட்சிகளாய் நிற்கும் கட்டிடங்கள். அப்படிப்பட்ட இடங்கள்லாம் நம்மை சுற்றியே இருக்கும்.  இந்த அவசர உலகில் நமக்கு அதெல்லாம் தெரிஞ்சுக்கக் கூட நேரமில்லாம,  எதை எதையோத் தேடி கடைசியில் நாம் ஓடி, ஓடித் தேடிய நிம்மதி நம் காலடியில் மிதிபட்டுக் கிடப்பதைக் கூட அறியாமல் இருக்கும் அற்ப மானிடராய் இருக்கிறோம்.


அதனால் இந்த அவசர காலக்கட்டங்களில் அனைவரும் தெரிந்துக் கொள்ளமுடியாத பல  கதைகளைத் தன்னுள் கொண்டிருக்கும் இடங்களை மௌன சாட்சிகள மூலம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்னைக்கு நாமப் பார்க்கப் போறதுப் பழைய மெட்ராஸ் பிரெசிடென்சில இருந்த சில முக்கியமான இடங்களை.


கால சக்கரத்துல சிக்கி சின்னா பின்னமாகி அவை எல்லாம் இன்னைக்கு வெறும் எச்சங்களாக மட்டுமே இருக்கு. அதுல முக்கியமான ஒரு இடத்தைதான் நாம இன்னைக்கு பார்க்கபோறோம்.

மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்டது நம் சென்னை.  அதன் நானூறு வருட வரலாற்றைப் பார்த்தோம்னா, நமக்கு நிறைய விஷயங்கள் புரியாத புதிராகவே இருக்கும். பழைய சென்னைப்பட்டிணத்தைப் பார்த்தோம்னா அதற்கு அதிக பெருமைகள் இருக்கு.


ஒரு சாதாரண மீன்பிடிக் கிராமமாகத் தோன்றி இன்று இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக விளங்கும் சென்னை நகர் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதிதான் இப்போது சென்னை என்று அழைக்கப்படும் 'மெட்ராஸ்' உருவானது. சென்னையில், ஐரோப்பியர்கள் வந்து குடியேறத் தொடங்கிய பின்னரே அது நகரமாக வளர ஆரம்பித்தது. 


இங்கு, முதலில் குடியேறியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இவர்கள் 1552-ம் ஆண்டு சென்னையின் ஒரு பகுதியாகவும், கடற்கரை பகுதியாகவும் இருந்த சாந்தோமில் குடியேறி வணிகம் செஞ்சு வந்தாங்க. தற்போது உயர்நீதிமன்றக் கட்டடம் இருக்கும் இடத்தில் சென்னக்கேசவர் கோயில் இருந்தது. அந்த கோயிலைச் சுற்றி ஒரு குப்பம் இருந்தது. அதற்கு 'சென்ன கேசவப்புரம்' என்பது பெயர்.


1639 ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஃபிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது. சென்னப்பட்டினத்துக்கு தெற்கே உள்ள ஊர் 'மதராசு' என்று அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஆங்கிலேயர்கள் ஒன்று சேர்த்து 'மெட்ராஸ்' என்றும் தமிழர்கள் 'சென்னப்பட்டினம்' என்றும் அழைத்தனர். மக்களின் கலாச்சாரமாகட்டும் பழக்கவழக்கங்களாகட்டும் நிறைய மாறுதல்களை சந்தித்து கொண்டுவருகிறது இப்பகுதி.  

சென்னை வரும் போது சில பஸ்கள் பாரீஸ் என் பெயர் பலகை தாங்கி ஓடும். அப்ப கூட நினைச்சுப் பார்த்தது உண்டு ஏதோ பாரீஸ் காரங்க அங்கே வசிச்சிருக்காங்கப் போல. அதான் பாரீஸ் கார்னர்ன்னு சொல்றாங்கன்னு நினைச்சுகுவேன். அந்தக் கதையெல்லாம் அப்போ.  இப்பதான் எல்லா விசயங்களையும் ஆராய்ந்து பார்க்கிற பதிவர் ஆகிட்டேன் இல்ல ..அதனால ஏன் இந்த இடத்துக்கு இந்தப் பெயர் வந்ததுன்னு அலசி ஆராய்ஞ்சதால வந்ததுதான் இன்றைய மௌன சாட்சிகள் பதிவு. வாங்க பதிவுக்குள் போகலாம்....,

சென்னை நகரத்தில மிகவும் பிரபலமான ஜங்ஷன்களில் ஒன்றுதான் இந்த பாரீஸ் கார்னர். இது ஒரு வெளிநாட்டின் பெயராக தோன்றினாலும் மெட்ராஸ், சென்னையாக மாறிய போதுக் கூட இதன் பெயர் மாறவில்லை.  இன்னுமும் பாரீஸ் கார்னர்தான். இது 1895 ம் ஆண்டுகளில் ட்ரம்ஸ் வண்டிகள் ஓடத்தொடங்கிய காலங்களிலையே மிகவும் பிரதான ஜங்ஷனாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ்காரங்க இந்தியாவை கைப்பற்றி அரசாட்சி புரிந்தபோது இங்கிலாந்து, வேல்ஸ்அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துலிருந்து நிறைய பேர் வியாபாரத்திற்காகவும், பிழைப்பு தேடியும் இந்தியாவிற்கு வந்தாங்க.

அப்படி வந்தவர்களில் ஒருவர்தான்  தாமஸ் பாரி (1768-1824) இவர் ஒரு வெல்ஷ் வணிகர். இந்தியாவின் செல்வச் செழிப்பை அறிந்து இங்கே வியாபாரம் செய்வதற்காக 1780 ல் சென்னைக்கு வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், 17 ஜூலை 1788 ல தான் தாமஸ் பாரி அவங்க நாட்டு பொருட்களை வியாபாரம் செய்யும் தொழில்  மற்றும் வங்கியையும் தொடங்கினார்.

பாரி ஒரு பெரியத் தோட்டத்தில்  பல்லடியன் பாணி கட்டிட அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தன்னுடையத் தங்கும் இடத்தையும்  அலுவலகத்தையும் தொடங்கினார். இதற்குப் பெயர் பாரி & லேன் என பெயரிடப்பட்டது.

இதில் தரைத்தளங்களில் குடோனும், முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகளில் அலுவலகங்களும் இயங்கினதாம். காலப்போக்கில் பல அடுக்கு மாடிகள் கட்டப்பட்டதாம்.  பாரி அந்த சமயதில் எல்லா வித வாணிகங்களுக்கும் உரிமை பெற்று இருந்தாராம். ஏன்னா அந்த சமயம் மதராஸ பிரெசிடென்சி ல 11 எழுத்தாளர்களும், 87 துருப்புகளும், 110 கடற்படை வீரர்களும், 11 அறுவை சிகிச்சை நிபுணர்களும் மட்டுமே இருந்தார்களாம். இது வெறும் பிரிட்டிஷ்காரர்களின் எண்ணிக்கை மட்டுமே.

அந்தக் காலகட்டத்தில்தான் அவருடைய மைத்துனர் கில்பர்ட் ராஸ் என்பவரது நண்பரான தாமஸ் சேஸ் என்பவருடன் சேர்ந்து முதலீடு செய்து வியாபாரம் செய்யத் தொடங்கினார். இந்த தாமஸ் சேஸ் அப்போதையக் கிழக்கிந்திய இந்திய கம்பெனியின்  ஏஜென்ட் ஆக இருந்தார். ஆனால் அவர்களுடைய முக்கியமான வணிகம் வங்கி தொழிலாக இருந்தது. அதன் பிறகு இவர் ஜென் மெடோஸ்ஸில் கணக்காளராகவும், செயலாரகவும் பணியாற்றினார்.

அப்பொழுது வெளியே கொடுக்கப்பட்டப் பணத்திற்கு 12% மற்றும் 1 6 % கமிசனாகவும் வாங்கப்பட்டதாம். இதன் முக்கியமானப் பங்குதாரர்களில் இளவரசர்களும், கிழக்கிந்திய கம்பெனியும்  இருந்ததாம். இதன் கமிசன் அதிகமாகவும் மேலும் பணத்திற்கான அத்தாட்சியோ. பாதுக்காப்போ ஏதும் சரியாக இல்லாத நிலையில் அவருக்கு நல்ல லாபகரமானதாக இருந்ததாக சொல்லபடுகிறது.

அந்தச் சமயத்தில் கிடைத்த லாபகரமான தொடக்கத்திற்கு பிறகு பாரி தன்னுடைய சொந்த நிறுவனத்தை 1792 ல் தொடங்கினார். அதன் பிறகு இவரது நிறுவனம் திப்புவுடன் நடந்த சண்டைக் காரனாமாக கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிக தேவைக்கைகாக நிறைய பணம் கொடுக்கப்பட வேண்டியதாகிவிட்டது..அதன் பிறகு பாரி 1794  ல் மேரி பியர்ஸ் என்னும் விதவையை மணந்தார். இவரது திருமண வாழ்க்கை 1807 வரை அமைதியாகவே சென்றது. அதன் பிறகு ஏற்பட்ட தன்னுடைய குழந்தைகளின் இழப்பிற்கு பிறகு அவரது மனைவி இங்கிலாந்து திரும்பிவிட்டார். இந்த காலக்கட்டங்களில் அவரது நிறுவனம் லாபகரமாக இயங்கவில்லை 
 இது 1860 களில் எடுக்கப்பட்ட பாரிஸ்சின் புகைப்படம். அதன் பிறகு இவரால் மெட்ராஸ் நகரத் தெருக்களில் கேளிக்கை மற்றும் நிகழ்சிகள் நடத்தபட்டன. இந்தச் சமயத்தில் லார்ட் கிளைவ் தனியாருக்கான வியாபாரத்தை நிறுத்தி அவர்கள் எல்லோரையும் கோட்டையில் இருந்து வெளியேற்றினார். 


இந்தச் சமயத்தில் தான் பாரி தன்னுடைய நிறுவனத்தை வெளியிடத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டார். இப்பொழுது இருக்கிற இந்த இடம் அப்பொழுது பிரபலமாக இல்லை. கரடுமுரடான கற்கள் நிறைந்த கடற்கரை ஒருபக்கம், மற்றொரு பக்கம் நம் ஆட்கள் வசிக்கும் பிளக் டவுனும், இதிலிருந்து கொஞ்ச தொலைவில் பிரிட்டிஷ்காரர்கள் வசிக்கும் வொயிட்ஸ் டவுனும் இருந்தது. இந்த இடத்தைப் பாரி கையப்படுத்தினார். அதற்கு முன் இந்த இடம்  வாலாஜா நவாபின் மகள் பேகம் மல்லிகுநிசா என்பவரிடம் இருந்தது. ஒரு ஓரமாக இருந்த அந்த இடம் கார்னர் என அழைக்கப்பட்டது. பாரியின் வருகைக்குப் பிறகு அது பாரிஸ் கார்னர் என அழைக்கப்பட்டது.

அதலிருந்து பாரியின் மறைவு மற்றும் அவரின் டேர்கவுஸ் பங்களிப்பு பற்றிய நிறைய வரலாற்று தகவல்கள் இருக்கின்றன. அவை எல்லாம் விரிவாக வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

மீண்டும் மௌனச்சாட்சிகளுக்காய் வேற ஒரு இடத்திலிருந்து மீண்டும் சந்திப்போம்!!!

23 comments:

 1. பெயர்க்காரணம் உட்பட பல வரலாற்று தகவல்களுக்கு நன்றி சகோதரி...

  எதையும் "உண்டு இல்லை" என்று ஆராய்ந்து பார்க்கிற பதிவர் என்பது எல்லோருக்கும் தெரியும்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. இப்படியா போட்டு உடைப்பீங்கண்ணா!

   Delete
 2. அப்படியே தி.நகர் பக்கமும் வாங்களேன்

  ReplyDelete
 3. வணக்கம்
  அறிய முடியாத தகவலை அறிந்தேன் தங்களின் பதிவின் வழி... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்

   Delete
 4. மெட்ராச சுத்திப் பாக்கப் போறோம்.....நல்ல விளக்கம்! மதராசப் பட்டணத்திலேயே பிறந்து, மெட்ராசாகி, சென்னையாகி உள்ளது வரை வாழும் பெரியவர்களுக்கே கூட நிறைய தகவல்கள் தெரியவில்லை! தங்கள் தகவல்கள் புதியது!

  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் தெரியாது. இனி தெரிஞ்சுக்கலாம்ன்ற ஆர்வத்துல வந்ததுதான் இந்தப் பதிவு.

   Delete
 5. அருமையான தகவல்.
  அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 6. மெட்ராஸ் வாசியாக இருக்கும் பலருக்கும் தெரியாத பல தகவல்களை சிறப்பாக பகிரும் விதம் சிறப்புங்க ...

  ReplyDelete
  Replies
  1. இனியாவதுத் தெரிஞ்சுக்கோங்க மேடம்!!

   Delete
 7. பாரி மிட்டாய் மறக்கமுடியாத ஙிசயம பாரி நிறைய தொழில் செய்தார் அதெல்லாம் சேர்த்து பாரி முனையம்னு சொல்வாங்க அந்த முனையம் ஆங்கிலத்தில கார்னர்னு சொல்லபடுவதாகவும் தகவல் உண்டு எப்படி இருந்தாலும் தெரியாத. விசயங்களை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம்

  ReplyDelete
  Replies
  1. வருகக்கும் கருத்துக்கும் நன்றி ராஜன்!

   Delete
 8. புகைப்படங்கள் அருமை..


  வரலாறை சுவாரஸ்யமாக கூறியதற்கு நன்றி....

  ReplyDelete
 9. சுவராஸ்யமான வரலாற்றுத் தகவலை மிக அருமையான படங்களுடன் தொகுத்திருக்கிறீர்கள் அக்கா... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பாரிமுனையின் பெயர் காரணமும், வரலாற்று சம்பவங்களும் நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
  வரலாற்று பாடப்புத்தகத்தை படித்த மாதிரி இருந்தது. நன்றி சகோ.

  ReplyDelete
 11. தாங்கள் ஒரு வலைப்பதிவு முத்தையா என்றே தோன்றுகின்றது எவ்வளவு தகவல்கள் சேகரிப்புக்கள் மிக மிக அருமை. இவற்றை எல்லாம் தொகுத்து தாங்கள் சென்னையின் மவுன சாட்சிகள் என ஒரு புத்தகமே எழுதலாம். வாழ்த்துக்கள் சகா. :)

  ReplyDelete
 12. சில தகவல்கள் நான் அறிந்தவை; சில புதியவை. ஆனால் அதற்காக நீ தேடிப் பிடித்திருக்கும் படங்கள் அனைத்துமே அற்புதம். மிகமிக ரசிக்க வைத்தன. விவரணன் ஸார் சொன்ன மாதிரி நிச்சயம் இந்தத் தொடரை புத்தகமாக்கிடணும்மா!

  ReplyDelete
 13. ராஜி அவர்களே அது ட்ரம்ஸ் வண்டிகள் இல்லை, டிராம் வண்டிகள். இது பற்றிய எனது பதிவு ஒன்று... மறக்க முடியாத மெட்ராஸ் – சென்னை நகர வீதிகளும் டிராம் வண்டிகளும். இணைப்பு; http://kavipriyanletters.blogspot.com/2012/02/blog-post_18.html
  ஐயப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை முத்துராசு சென்னப்ப நாயக்கன் என்று எங்கோ படித்திருக்கிறேன். அதனால் அவரின் நினைவாக அவர் பெயரையே இந்த இடத்திற்கு வைத்தார்களாம். அந்த ''முத்துராசு''தான் நாளடைவில் மருவி 'மதராஸ்' அப்புறம் மெட்ராஸ் ஆனதாக ஒரு செய்தி உண்டு. வழக்கம்போல அனைத்து விபரங்களும் அருமை.

  த.ம.13

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தெரிந்த வரையில் பல்வேறு விதமான அனுமான்கள் சொல்கிறாங்க சென்ன கேசவர சென்ன காளி இப்படி எல்லாமே சென்ன என்கிற பெயர்ல சொல்லி இருகிறதுனால ஏதோ ஒரு சக்தி இல்ல எதோ ஒரு கருபொருள் இருந்திருக்கணும் சென்ன ங்கிரதுக்கு சிவாப்புன்னு ஒரு அர்த்தம் உண்டு அதுனால சிவப்பு சம்பத்தப்பட்ட ஏதோ ஒரு அடிப்படையாகவும் கூட இருக்கலாம் உங்கள் அனுமானமும் சரியாக இருக்கலாம் வருக்கைக்கு நன்றி சகோ

   Delete
 14. அருமையான தகவல்கள்! அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. wow... உங்கள் ப்ளாக் supero சூப்பர் ....

  தங்கள் தளத்தை தொடர்ந்து விட்டேன் ...!!!(Follower)

  எழுத்து பணி ...தொடர வாழ்த்துக்கள் ...!!!

  ReplyDelete
 16. அருமையான தகவல்கள்.....

  தேடித்தேடி தகவல்கள் தருவதற்குப் பாராட்டுகள்.

  ReplyDelete