செவ்வாய், பிப்ரவரி 25, 2014

வெள்ளைக் கொண்டைக் கடலை குருமா -கிச்சன் கார்னர்

பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் நல்லா இருக்கும். ஒரு முறை சென்னா மசாலா செய்யப் போய் அது குருமாவாகி, இப்ப பூரிக்கு அதான் செட்டாகுது. யாராவது விருந்தாளிகள் வந்தால் பூரி, சென்னா குருமா செஞ்சிடு. அது மட்டும்தான் உனக்கு நல்லா செய்ய வரும்ன்னு சொல்வார்.

தேவையானப் பொருட்கள்:
வெங்காயம் -2
தக்காளி- 2
ப.மிளகாய் -2
தேங்காய் - 2 பத்தை
பூண்டு - 10 பல்
சோம்பு- சிறிது
கிராம்பு- 3
அன்னாசிப்பூ- 1
பட்டை- 1
இஞ்சி- ஒரு துண்டு
கறிவேப்பிலை,கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
எண்ணெய் -2 டீஸ்பூன்
வேக வச்ச வெள்ளைக் கொண்டைக்கடலை - 1 கப்
கரம் மசாலா - 1டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய் தூள்- தேவையான அளவு
உடைத்தகடலை - 1 டீஸ்பூன்
கடுகு - கொஞ்சம்

கொண்டைக்கடலைய 6 மணி நேரம் ஊற வச்சு உப்பு போட்டு வேக வச்சுக்கோங்க. வெங்காயம், இஞ்சி தோல் சீவி கழுவி வெட்டி வச்சுக்கோங்க.தக்காளி கழுவி வெட்டிக்கோங்க. பூண்டை உரிச்சு வச்சுக்கோங்க.

வெங்காயம், தக்காளில பாதி, இன்சி, பூண்டு, தேங்காய், உடைச்ச கடலை, சோம்பு,கிராம்பு, அன்னாசிப்பூ, பட்டைலாம் போட்டு அரைச்சுக்கோங்க.

அடுப்பில் கடாயை வச்சு எண்ணெய் காய்ஞ்சதும் கடுப் போட்டு பொரிஞ்சதும் வெங்காயம் போடுங்க.

அடுத்து பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கு.

தக்காளிப் போட்டு வதக்குங்க.

உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்குங்க.


அடுத்து அரைச்சு வச்சிருக்கும் விழுது, கற்வேப்பிலை, கொ.மல்லி போட்டு வதக்குங்க.


தேவையான அளவு மிளகாய்த்தூள் சேருங்க.


மிளகாய்தூள் வாசனை போனதும் வேக வச்ச கொண்டைக்கடலையை சேருங்க.

எல்லாம் சேர்ந்து நல்லா கொதிச்சப் பின் கரம் மசாலா தூள் சேருங்க.


குருமா மாதிரி தண்ணியா இல்லாம கொஞ்சம் கெட்டியா வரும்போது இறக்கிடுங்க. பூரிக்கு தொட்டுக் கொள்ள குருமா ரெடி.

24 கருத்துகள்:

 1. நம்மதான் பூரிக்கு கிழங்கு வைச்சு சாப்பிடுறோம் நார்த் இந்தியன் குடும்பங்களில் சென்னதான் சேர்த்துகிறாங்க. நார்த் இந்தியன் ஹோட்டல்களில் சென்னாபட்டுரா என்று விற்கிறார்கள்


  பதிலளிநீக்கு

 2. சரி சகோ நீங்க பண்ணிய சென்னா மிக நன்றாக வந்திருக்கிறது அப்படியே நமக்கு பார்சல் கட்டி ஒரு ஸ்பெஷல் விமானத்தில் அனுப்பிடுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்க்கும் இப்படியே சகோதரிகள்கிட்டயே எல்லா வாங்கி மங்களம் பாடுங்க. சகோதரிகளுக்கு ஒண்ணும் செய்துடாதீங்க.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 4. பூரிக்கு வட இந்தியாவில் சன்னா தான்... உங்க குருமா நல்லா இருக்கு. அடுத்த தடவை இப்படி செஞ்சு பார்க்கிறேங்க.

  நான் முன்பு செய்த சன்னா (அ) சோலே மசாலா இதோ..

  http://kovai2delhi.blogspot.in/2011/01/b-b-cho.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதென்னமோ எனக்கு சோலே மசாலா செய்யவே வரலங்க ஆதி!

   நீக்கு
 5. நானும் இதுபோல செய்வேன் ஆனா அன்னாசிப்பூ மட்டும் மிஸ்ஸிங்... அடுத்த முறை சேர்த்திடலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கைக்கு கிடைக்குறதெல்லாம் போட்டு சமைப்பேன்.

   நீக்கு
  2. அட என் கட்சி..இன்னும் எதடாப் போடலாம்னு பாத்து கைக்குக் கிடைச்சதைப் போட்ருவேன்..சில சமயம் நல்லா இருக்கும், சில சம...ய..ம்.......சொல்லமாட்டேன்.. :)

   நீக்கு
 6. படிக்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கிறது
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வூட்டம்மாவை சமைச்சுப் போடச் சொல்லுங்க ஐயா!

   நீக்கு
 7. சூப்பரா இருக்கு சகோதரி... செய்து பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செஞ்சுப் பார்க்காதீங்கண்ணா! சாப்பிடுங்க!

   நீக்கு
 8. படங்களுடன் விளக்கம் அருமை...
  செய்து பார்த்திடலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

   நீக்கு
 9. பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு ஒரு நாளைக்கு உங்க வீட்டுக்கு வர்றேன் செய்து தர்றீங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா வாங்க உஷா சமைச்சுத் தரேன். வேலூரிலிருந்து ஆரணி வெறும் 400 கிமீதான்.

   நீக்கு
 10. சென்னா பத்தி சொன்னா நல்லாவே இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிங்க

   நீக்கு
 11. பூரி சென்னா அருமை...அதிலும் குட்டிப் பூரி ரொம்ப அருமை..
  http://thaenmaduratamil.blogspot.com/2013/03/blog-post_9562.html இதப் பாருங்க :)

  பதிலளிநீக்கு
 12. சன்னா மசாலா.....

  வட இந்தியாவில் உள்ள முக்கியமான உணவு. பலமுறை செய்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. உங்க பிளாக் பார்த்து நேற்று தான் வீட்ல செய்தாங்க, நல்லா வந்தது.. ப‌கிர்விற்கு நன்றி சகோ..

  பதிலளிநீக்கு