Wednesday, February 26, 2014

ரேடியோவின் தந்தை - மௌனச்சாட்சிகள்

திரைச்சித்திரம், நாடகம், புதுப்பாடல்கள்லாம் கேட்டு ரசித்தது..., உலக நடப்புகள்,எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி மரணம் இதெல்லாம் அறிய வந்தது வானொலி மூலம்தான். அந்த வானொலியைக் கண்டுப்பிடித்தவர் பத்திதான் இன்றைய மௌனச்சாட்சிகளில் பார்க்கப் போறோம்.

கம்பியில்லாத் தந்தி முறையையும், வானொலியையும் நமக்காகக் கண்டுப்பிடிச்ச மார்க்கோனியின் படம்தான் மேல இருக்கும் படத்தில் நீங்க பார்ப்பது. 1874ம் ஆண்டு ஏப்ரல் 25ம் நாள் இத்தாலியில் பொலொனா நகரில் பிறந்தார். இவரோட முழுப்பெயர் குலீல்மோ மார்க்கோனி. இவர் வசதியான வீட்டில் பிறந்தவர். புத்தகம் படிப்பதுதான் இவருக்குப் பொழுதுபோக்கு. 

இயற்பியல், மின்சக்தி ஆராய்ச்சியில்தான் இவரோட ஆர்வம் இருந்துச்சு. தன் வீட்டிலேயே சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவி மின்சக்தி ஆராய்ச்சி செஞ்சார்.

மார்கோனியின் இளவயதில் கம்பியில்லாமல் ஒலி அலைகளை அனுப்புவதுப் பற்றிய ஆராய்ச்சிகளை படிக்க நேர்ந்தது. அதில் அவர் மனது ஒன்றிப் போகவே அதைப்பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராஃப் அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுப்பிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி நாட்டு அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரையின்படி  1896ல் லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி.

இங்கிலாந்தின் பிரிட்டீஷ் அஞ்சல் துரை இவரின் கண்டுப்பிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று உலகத்துக்கு அறிமுகம் செய்தது.அதே ஆண்டு கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் பறக்க விட முடியும் என்பதை உணர்ந்த மார்க்கோனி அதனைச் சோதிக்க பலூன், பட்டம்லாம் பறக்க விட்டு சோதித்தார். பல சோதனைகளுக்குப் பின் பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில்  9 மைல் சுற்றுவட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அவரது சோதனைகளைக் கண்டு நகைத்தவர்கள்தான் அதிகம். 

அத்தனை ஏளனப்பேச்சுக்களையும், அவமானங்களையும் புறம்தள்ளி தனது குறிக்கோள் ஒன்றே நினைவில் கொண்டு தனது சோதனைகளை டவிடாமல் தொடர்ந்தார். 



தந்தி இல்லாமயே காற்றில் வலம் வந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் தேனென ஒலித்தது. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும்ன்னு சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. 

மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையில் கம்பியில்லா தந்தி முறையை நிறுவினார், அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம்லாம் மாஸ்கோட் என்னும் குறியீட்டு முறையில் மட்டுமே இருந்தது. அதே மாதிரி மனிதக் குரலையும் அனுப்பமுடியும் என நம்பிய மார்க்கோனி 1915ம் ஆண்டு அதற்கான முயற்சியைத் தொடங்கினார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பின் 1920 ஆண்டில் நண்பர்களை தன் படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பப் பட்டது. வானொலியும் பிறந்தது.


இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த அவரின் ஆய்வின் முடிவில் 1922 ம் ஆண்டு பிப் 14ம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்பி, உலகத்தார் அனைவருக்கும் மகத்தான சேவைப் புரிந்த மார்கோனிக்கு 1909ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏளனமாய் கைக்கொட்டி சிரித்த அனைத்துப் பல்கலைக் கழகங்களும் நீ, நான் என அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1937 ம் ஆண்டு ஜூலை 20ம் நாள் தனது 63வது வய்தில் மார்க்கோனி ரோம் நகரில் காலமானார். வெறும் பொழுது போக்கு சாதனாமாக மட்டுமின்றி, தகவல் களஞ்சியமாகவும் வானொலி இருக்கின்றது. அலைப்பேசி,தொலைக்காட்சி, இணையம்ன்னு பல பொழுதுப்போக்கு சாதனங்கள் வந்தாலும், இன்றும் கிராம, நகர்புறத்தாருக்கு வானொலியின் மவுசு குறையவில்லை.

வேற ஒரு தகவல்களோடு அடுத்த வாரம் மௌனச்சாட்சிகள் பகுதியில் சந்திக்கலாம்.


15 comments:

  1. வானொலி பற்றி அருமையாய்ப் பதிவு செய்துவிட்டீர்கள் ராஜி..வாழ்த்துகள்!!

    ReplyDelete
  2. 1922 ம் ஆண்டு தான் வானொலி புழக்கத்திற்கு வந்ததா...?
    அறியாத தகவல்.

    மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  4. என்ன அஞ்சல் வழிக் கல்வி பயில ஆரம்பித்து இருக்கீங்களா? வரலாறு விஞ்ஞானம் என்று பதிவுகளா போடுறீங்க

    ReplyDelete
  5. வலைச்சரமும் கலக்குறிங்க
    இங்கயும் இவ்ளோ நுணுக்கமா இப்டி பதிவு போடுறிங்க
    இப்டிக்கா ?!! பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  6. வானொலி பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  7. வானொலி பற்றியும் மார்கோனி பற்றியும் அறியாத செய்திகளை அறியச் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  8. வானொலி பற்றி அருமையாய்ப் பதிவு செய்துவிட்டீர்கள் ..வாழ்த்துகள்!!

    ReplyDelete
  9. வானொலி பற்றிய தகவல்களை மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

    நிறைய வரலாற்று சார்ந்த பதிவுகளை பதித்துள்ளீர்கள். அந்த பயன் எல்லோருக்கும் சென்றடைய தமிழ் விக்கிபீடியாவில் பதிவு செய்யுங்களேன் சகோ.

    தற்போது தமிழ் விக்கிபீடியாவில் ஒரு போட்டி நடத்துகிறார்கள்.

    http://ta.wikipedia.org/s/2zg3

    நேரம் கிடைத்தால் சென்று பார்த்து அந்த போட்டியில் கலந்துக்கொண்டு, உங்களின் படைப்புகளையும் வெளியிட்டு, பரிசினையும் வெல்லுங்கள்.

    ReplyDelete
  10. அக்கா இந்த வானொலியின் வரலாற்றின் பின்னே மறைக்கப்பட்ட இன்னொரு வரலாறும் உண்டு. அது ஜெகதீச சந்திரபோஸ் என்னும் இந்திய அறிவியலாளர் ஒருவரின் கண்டுபிடிப்புக் குறித்த வரலாறு.
    இவரை ஒரு தாவரவியலாளராகவே நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த பௌதிகவியலாளரும் கூட.

    1899இல் கல்கத்தாவில் நகர அரங்கில் ஒலியை மின்காந்த அலைகளாக மாற்றி பிறகு ஒரு குறிப்பிட்ட தொலைவில் மீண்டும் ஒலி அலைகளாக மாற்றும் ஒரு கருவியை செயல்படுத்திக் காட்டினார். அதன் பெயர் கொஹரர். அதுவே வானொலியின் முன்னோடி. ஆனால் காப்புரிமை பிரச்சினைகளின் காரணமாக ஜெகதீசருக்கு அந்தப் பெயர் கிடைக்கவில்லை. இந்த உண்மை மார்க்கோனியும் ஏற்றுக் கொண்டதே. அவருக்கு நோபல் பரிசு கிடைத்த போது இந்தியா வந்து ஜெகதீசருக்கு அதில் பாதியை அளிப்பதாக கூறினார், ஆனல் ஜெகதீசர் அதை வாங்க மறுத்து விட்டார் இதுவெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அக்கா...

    நான் இதனை இங்கே கூற ஒரு காரணம் உண்டு அக்கா உங்களுடைய மௌன சாட்சிகள் பகுதியில் எப்பொழுதும் பொதுமக்களாலும் அரசாங்கத்தாலும் புறக்கணிக்கப்பட்ட பல புராதான கட்டிடங்களைக் குறித்தும் இடங்களைக் குறித்தும் தேடிதேடி எழுதி வருகிறீர்கள். அதைப் போலவே அறிவியல் தொடரிலும் மறைக்கப்பட்ட மறுக்க்ப்பட்ட இந்திய அறிவியலாளர்கள் குறித்தும் எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (ஜி.டி, நாயுடு போன்றவர்கள்). :)

    ReplyDelete
    Replies
    1. கலக்கிடீங்க பிரியா !
      அருமையான தகவல் !
      ராஜியக்கா இந்த பொண்ணு சொன்னதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க!

      Delete
  11. வானொலியின் தந்தை பற்றிய தகவல்களை தேடிப் பகிர்ந்தமைக்கு நன்றி! அருமையான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  12. வானொலி பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  13. வானொலி பற்றிய சுவையான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete