Thursday, October 13, 2016

அர்ஜுனன் ஏன் யுதிஷ்டிரரை கொல்ல நினைத்தார்? - தெரிந்த கதை தெரியாத உண்மை

நமது இருபெரும் காவியங்களான ,இராமாயணம் மற்றும் மகாபாரதம் இவை இரண்டிலும் பல சொல்லப்படாத திருப்பங்களும் சுவாரஷ்யங்களும் விந்தையான சில சம்பவங்களும் நிறைந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தைத்தான் நாம் இப்பொழுது நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கப்போகிறோம்.
இந்து மதத்தில் மிகவும் சமயப்பற்றான காவியமாக கருதப்படுகிறது மகாபாரதம். பகவத் கீதையும் கூட இந்த காவியத்தின் ஒரு பகுதியே. மகாபாரதகதை சுவாரசியமானதோடு, மிகவும் விந்தையான ஒன்றும் கூட. மகாபாரதத்தில் பல பேருக்கு தெரியாத பல விஷயங்கள் அடங்கியுள்ளது. இதில் ,பீஷ்மரில் இருந்து ஆரம்பித்தால்,அதற்கு முன்பு இந்தகதை,இங்கே விவரிக்க முடியாத அளவு,நீண்டு கொண்டே ,செல்கிறது.அவர்களின் பரம்பரை அட்டவணையை பார்த்தால் ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு, சுவாரஸ்யமான வரலாறுகள் இருக்கின்றன..ஆனால் நமக்கு தெரிந்தது எல்லாம் ,கௌரவர்கள் 101 பேர் ,பாண்டவர்கள் 5 பேர்தான் ,ஆகவே முதலில் நமக்கு தெரிந்த இவர்களுக்குள் நடந்த தெரியாத கதைகளை, நமது தெரிந்தகதை தெரியாத உண்மையில் பார்க்கலாம். 
இப்படி ஒற்றுமையாக இருந்த ஐவரில் ,முதன்மையானவர்,தருமன்,அவரை யுதிஷ்டிரர் எனவும் அழைக்கப்படுவதுண்டு,அவர்மீது மற்ற தம்பியாரெல்லாம் பாசமாக இருந்தனர் என்கிறது மஹாபாரதம்.இருப்பினும் ஒரு சமயத்தில் அர்ஜுனன், யுதிஷ்டரை கொல்ல நினைத்தது நம்மில் பலருக்கும் தெரியாது,. அவரது பாசமிகு தம்பியான அர்ஜுனன்  யுதிஷ்டிரரை கொல்ல நினைத்தாரா? என கேட்கும் போது நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.அது பற்றி இங்கே பார்க்கலாம்.
மகாபாரத யுத்தம் பாண்டவர்களுக்கும்,கௌவர்களுக்கும் பங்காளி சண்டையாக நடக்கிறது.ஒவ்வாரு நாள் யுத்தத்திலேயும் ஒவ்வொருவராக வீழ்த்த படுகின்றனர்.போர் தொடங்கிய பத்தாவது நாளில் ,பீஷ்மர் வீழ்த்தப்படுகிறார்.குரு துரோணாச்சாரியார் கூட பதினைந்தாம் நாளில் வீழ்த்தப்பட்டுவிட்டார் .அவருக்கு அடுத்தது யார் படையை தங்குவது என ஆலோசனை நடக்கிறது.கர்ணன் மட்டுமே எஞ்சி இருக்கிறான் எல்லோரும் ஒருமனதாக கூடி தேரோட்டி மகனாக வளர்ந்த கர்ணனை தலைமை தங்குமாறு சொல்கின்றனர்.துரியோதனனும்,அவன் வீரத்தை மெச்சி கௌரவர் படையை தலைமை தாங்க அழைக்கின்றான்.படை சேனாதிபதியானவுடனே பாண்டவ படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றான் கர்ணன், பாண்டவப்படை திணறுகிறது.    .    
கர்ணனின் தொடர்தாக்குதலால் ,பாண்டவர் படை பெருமளவில் குறைகிறது.காற்றை போல் சுழன்று ,சுழன்று, பாண்டவப்படைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தினான் கர்ணன்.அதைக்கண்டு கோபமுற்ற யுதிஷ்டிரன்,ஒரு பெரும் சேனையுடன்,கர்ணனை தாக்க தொடங்கினான். கர்ணனின் தாக்குதலுக்கு முன்பு யுதிஷ்டிரரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை  கடுமையான போரில் யுதிஷ்டிரர் தாக்கப்பட்டார்.கர்ணனின் அம்புகளால் அவர் காயமடைந்தார்.உடனே அவரை சிறை பிடிக்குமாறு கர்ணனுக்கு ,துரியோதனன் உத்தரவு பிறப்பித்தான்.யுதிஷ்டிரர் காயமடைந்ததை கண்டு அவருடைய தேரோட்டி அவரை ,போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்தி வேகமாக வெளியேறினான்.அப்பொழுதும் துரியோதனன் ,கர்ணனிடம் ,யுதிஷ்டிரரை சுற்றி வழைக்க பரிந்துரை செய்தான் .தன தாய்க்கு கொடுத்த சத்தியத்தின் படி ,பஞ்ச பாண்டவர்கள் உயிருக்கு தன்னால் எந்த வித ஆபத்தும் வராது,என சத்தியம் செய்து கொடுத்துத்திருந்ததினால் கர்ணன்,அதில்அக்கரை காட்டவில்லை.துரியோதனனும், பிற போர் வீரர்களும் யுதிஷ்டிரரை பின் தொடர்ந்தனர்.
ஆபத்தான சூழ்நிலை உருவானதை புரிந்து கொண்ட நகுலனும், சகாதேவனும், அவர்கள் மீது அம்புமாரி பெய்து அவர்களை ,தடுத்து நிறுத்தினர்.கர்ணனிடம் தோற்றுப்போன யுதிஷ்டிரர் அவமானம் அடைந்தார். காயமடைந்த யுதிஷ்டிரரை உடனே போர்க்களத்தில் இருந்து ,நகுலனும் ,சகதேவனும் அப்புறப்படுத்தினர்.காயமடைந்த யுதிஷ்டிரரை தங்கள் பாசறைக்குள் கொண்டுவந்து ,சிகிச்சை அளிக்க தொடங்கினர்,இதை கேள்விப்பட்ட அர்ஜுனன் உடனே கண்ணனுடன் அங்கு விரைந்து சென்றான்.இருவரையும் ஒன்றாக கண்ட யுதிஷ்டிரர்,தம்பியுடையான் ,படைக்கு அஞ்சான் ,என்பதற்கிணங்க,   தன்னை போரில் தோற்கடித்த கர்ணனை அர்ஜுனன் ,தோற்கடித்து பழிக்கு பழி வாங்கி வெற்றியுடன் தன்னைவந்து காண்கிறான் என நினைத்து ,யுதிஷ்டிரர் ,அர்ஜுனனை ஆரத்தழுவினார்.
அர்ஜுனன் எப்படியும் ,கர்ணனை கொன்றுவிடுவான் என்று ஆவலுடன் இருந்தவருக்கு ,அவன் காயமுற்ற தன்னை பார்க்கத்தான் வந்துள்ளான். மற்றபடி கர்ணனை போரில் வெல்லவில்லை,என தெரிந்து கொண்ட யுதிஷ்டிரர் ,அர்ஜுனன்   மேல்  கோபம் கொண்டார் .அதனால் அவர் அர்ஜுனனை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். அர்ஜுனனுடைய ஆயுதங்களை யாரிடமாவது கொடுத்துவிட சொன்னார். இதைக்கேட்ட அர்ஜுனனை கோபம் கொண்டு யுதிஷ்டிரரை கொல்ல பாய்ந்தான். அங்கே ஒருபெரிய களோபரம்மே நடந்தது 
பாணடவர்களை எள்ளி நகையாடியதை மேற்கோள் கட்டிய யுதிஷ்டிரன். அவனை கொன்றிருந்தால்,நம்முடைய எதிரி ஒழிந்தான் என சந்தோசப்பட்டு இருப்பேன் ,என கோப்பட்டார். இப்போது,குறுக்கே வந்த கிருஷ்ணர்,அர்ஜுனனை தடுத்து, உங்களுக்குள் ஏன் சண்டையிட்டு கொள்கிறீர்கள் .நீங்கள் சண்டையிட வேண்டியது  எதிரிகளிடம் மட்டும்தான் என கூறினார்.அதற்கு பதிலளித்த அர்ஜுனன்,தன் ஆயுதங்களை கொடுத்து விடும்படி யாராவது கூறினால் அவர்களின் தலையை எடுத்து விடுவதாக தான் போட்டிருக்கும் சபதத்தை பற்றி கூறினான்.இப்பொழுது நான் என்ன செய்வது என கிருஷ்ணரிடம், ஆலோசனை கேட்டான் ,அர்ஜுனன்.       
துரோணாச்சாரியாரை விட நம் பக்கம் அதிக அழிவு ,ஏற்படுத்தியவன் ,கர்ணன். அவன் இறந்தான் ,என்ற சேதி கேட்டால்தான் ,எனக்கு நிம்மதி.நீங்கள் இருவரும் வந்த வேகத்தை பார்த்தவுடன் ,அவனை கொன்று இருப்பீர்கள் என நினைத்தேன் என்றான்.சரி தன்னுடைய சபதமும் வீணாக கூடாது ,அதேசமயம் ,யுதிஷ்டிரனுக்கும் ஒன்றும் ,ஆக கூடாது ,என்ன வழி ,என உபாயம் கேட்கும் போது ,நம்முடைய கண்ணன் தான் மாய கண்ணனாயிற்றே,தன்னை பிறர் மதிக்கும் வரையில் தான் ஒருவன், உயிருடன் இருக்கிறான். என்று ஒருவன் தன் மரியாதையை இழக்கிறானோ அன்றே அவன் இறந்ததற்கு சமமாகும். அதனால் யுதிஷ்டிரருக்கு மரியாதை அளிக்க வேண்டாம் என கிருஷ்ணர் கூறினார். இப்பொழுது போரின் போக்கு என்ன ,கர்ணனை எப்படி கொல்லப்போகிறாய் ,என அர்ஜுனனிடம் கேட்டார் யுதிஷ்டிரர்.
எதற்காக மாயக்கண்ணன் இந்தஇரு சகோதர்களுக்கிடையே , சண்டையை .மூட்டி  விடுகிறார் என்றால்,அவர்களை காப்பாற்ற அவர் நடத்தும் மாய யுக்திகளில் இதுவும் ஒன்று .இதனால் கோபப்பட்டு வார்த்தைகளை விடும்போது ,அர்ஜுனன் தன அண்ணனை அவமதித்தது போல் ஆகும்..மேலும், யுதிஷ்டிரரை தன் மூத்த சகோதரன் என நினைக்காமல், அவரை மரியாதை இல்லாமல் அர்ஜுனனை அழைக்க சொன்னார் கிருஷ்ணர்.அதனால் யுதிஷ்டிரர் தன் மரியாதையை இழந்து விடுவார். இந்த அவமரியாதை அவர் இறந்ததற்கு சமமாகும். கிருஷ்ணர் கூறியதை கேட்ட அர்ஜுனன், யுதிஷ்டரிடம் சென்று அவரை பல விஷயங்களுக்காக அவமதிக்க தொடங்கினார்.
இருப்பினும், தன் மூத்த சகோதரரான யுதிஷ்டரை அவமரியாதை செய்த பிறகு, அர்ஜுனன் மிகுந்த மனக்கவலை அடைந்தார். பொறுமையை இழந்த அர்ஜுனன் மீண்டும் தன் வாளை எடுத்தார். ஏன் மீண்டும் வாளை எடுக்கிறார் என கிருஷ்ணர் கேட்டார். நான் என் சகோதரனை அவமானப்படுத்தி விட்டேன். அதனால் அதற்கு தண்டனையாக தன் தலையை வெட்டிக் கொள்ள போவதாக கூறினார்.தன் சகோதரனை கொல்வதை காட்டிலும், தன்னை தானே கொல்வதற்கு நரகத்தில் தண்டனை மிகவும் அதிகம் என கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கினார். தன்னை தானே புகழ்ந்து கொள்ளும்படி அர்ஜுனனிடம் கிருஷ்ணர் கூறினார். இது தன்னை தானே கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை போக்கும் என்றும் கூறினார்,பதினாறு நாள் ஓய்வில்லாமல் சண்டை இட்டு கொண்டிருக்கும் மனநிலையில்,வீரர்கள் ,மனதளவிலும் ,உடலளவிலும், சோர்ந்து போய் காணப்படுவர்.அதுபோல முடிவும் எடுக்கமுடியாமல், தடுமாறும் போது ,கிருஷ்ண பரமாத்மா,அங்கே வழிகாட்டியாக இருக்கிறார்.       
கிருஷ்ணர் கூறியதை கேட்ட அர்ஜுனன், தொடர்ச்சியாக தன்னை தானே புகழ்ந்து கொண்டு, தன் ஆயுதங்களை தூக்கி எறிந்தார். பின் யுதிஷ்டரின் காலில் தலை வணங்கி மன்னிப்பு கோரினார். பின் யுத்த களத்திற்கு தயாரானார்.தன்னுடைய முட்டாள் தனத்தால் இப்போது பெரும் பிரச்சனையில் உள்ளதாக அர்ஜுனனிடம் யுதிஷ்டர் கூறினார். அதனால் இனியும் தான் இங்கே இருக்க தனக்கு அருகதை இல்லை என்றும் கூறினார். இதனை கூறி விட்டு, யுதிஷ்டர் காட்டிற்குள் சென்றார். இருப்பினும் அர்ஜுனனின் சபதத்தை யுதிஷ்டருக்கு நினைவு கூறிய கிருஷ்ணர், அவரை காட்டிற்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினார். இறுதியில் இங்கேயே இருந்து, கௌரவர்களுக்கு எதிரான போரில் தன் சகோதர்களுக்கு உதவி செய்ய ஒத்துக் கொண்டார் யுதிஷ்டர்.இறுதியில் ஒன்றாக இருந்து,போரில் வெற்றி கொண்டனர்,இதேபோல் இனி ஒரு சுவாரஸ்யமான கதையுடன்,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி.     
 

8 comments:

 1. கதை என்று எப்பொழுது நாம் தொடர்ச்சியில் சொல்லிவிடுகிறோமோ பின் அதற்குள் நடப்பவை, நடந்ததாக நாம் நினைப்பவை , எல்லாமே கதையின் நிகழ்வுகள் தான்.
  அந்த நிகழ்வுகளுக்கும் இது உண்மை இது கற்பனை என்று
  பிரித்துப் பார்த்தல் சரிதானா என்று தோன்றவில்லை.

  இருக்கட்டும். கிரேக்க நாட்டு இதிகாசங்கள், புராணங்கள், கடவுளர் கதைகள் போலத்தான் இராமாயணம் மஹாபாரதம் எல்லாமே வளமான கற்பனையின் எழுதப்படட காவியங்கள் என்று சொல்லலாம். தவறு என்று சொல்ல இயலாது. அவரவர்
  நம்பிக்கை சார்ந்த கருத்து .

  இருந்தாலும், நீங்கள் படித்த இருப்பதாக குறிப்பிடும் நிகழ்ச்சி, வியாசரின் பாரதத்தில் இல்லை. (நான் படித்த வரை)

  இருப்பதாக நீங்கள் கருதினால் அருள்கூர்ந்து, அதற்கான அத்தியாயம், ஸ்லோகம் எண் கூறினால் நன்றி.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி ,எல்லாவித கதைகளுக்கும் ,இரண்டுவிதமான பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று எழுத்துபூர்வமாக இருப்பது இரண்டாவது செவிவழிக்கதைகள் .இந்த தெரிந்தகதை தெரியாத உண்மைகளில் ,ஆரம்பத்தில் இங்கே சொல்லி இருக்கிறேன் .என்னுடைய சிறிய வயதில் ,ஒரு தாத்தா எனக்கு கூறிய கதைகளில் உள்ள ,சில உண்மைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன் என்று,.அதில் உண்மை பொய் என்பது .அவரவர் ஆராய்ந்து தெரியப்படுத்தினால் ,எல்லோரும் ,பயன்பெறலாம் ,என்று இந்த தெரிந்த கதை தெரியாத உண்மை தொடரை ஆரம்பிக்கும் பொது தெளிவாக சொல்லி இருக்கிறேன் .அதே சமயம் ,அவர் சில கதைகளுக்கு ,சில மேற்பாடல் வரிகளை மேற்கோள் காட்டி இருக்கின்றார் .அப்படி சொல்லிய விவரங்கள் மட்டும் ,புள்ளிவிவரமாக குறிப்பிட்டுள்ளேன் .மற்றபடி ,உள்ளவைகளில் உண்மை என்பது , இந்த கதைகளை நன்கு படித்து ஆராய்ந்த நண்பர்கள் தெரிவிக்கவும் எனவும் குறிப்பிட்டு இருந்தேன்

   Delete
  2. இதுபோல இராமாயணத்தில் மயில் ராவணன் கதை கூட ..செவிவழி கதையாக கேட்டு அறிந்தவைகளை மட்டும் தொடராக எழுதினேன் .அதற்கு ஆதாரம் தோல்பாவை தெருக்கூத்து கலைஞர்கள். .அந்த கதைகளை எல்லாம் இப்பொழுது வழக்கத்திலையே இல்லை, .நம்மில் எத்தனை பேருக்கு மயில் இராவணனை தெரியும் ,

   Delete

  3. அதுபோல கிரேக்க ,நாட்டுக்கு இதிகாசங்களான ,எல்லாமே ,நம்முடைய இராமாயணம்,மஹாபாரதத்தோடு ,ஒத்துபோகின்றன ,அதன் ஒப்பீடும் ஒரு பதிவாக எழுதுகிறேன் .குறிப்புகள் கட்டாயம் பதிவு செய்கிறேன் .நன்றி

   Delete
 2. கதையை ரசித்தேன். வித்தியாசமாக இருந்தது. பொருத்தமான படங்களைத் தெரிவு செய்து சேர்த்தமைக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ,,சகோ ,மிக விரைவாக ,தொகுத்தமையால் சில ஆதாரங்களை இங்கே குறிப்பிட முடியவில்லை .உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி ...

   Delete
 3. நல்ல பகிர்வு. நிறைய கிளைக்கதைகள் மஹாபாரதத்தில் உண்டு. சில கதைகள் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. கிளை கதைகள் பல உண்டு ,பட்டத்து,அரசிகள் ,மற்றும் பட்டத்து வாரிசுகள் பற்றிய கதைகள் மட்டும் தான் ,வெகுவாக எல்லோருக்கும் சொல்லி கொடுக்கப்பட்டவை ,மீதி கதைகள் எல்லாம் செவி வழிக்கதைகள் தான் ,அதில் சுவாரஸ்யங்களும்அதிகம் ,பதிவுகள் இனியும் தொடரும் ,அண்ணா ..உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ..

  ReplyDelete