Friday, October 07, 2016

பர்வதமலை ஒரு பரவசபயணம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

பார்போற்றும் அதிசயங்களில் ஒன்று பர்வத மலை.இது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகா தேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைபிரதேசமாகும்.போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை,சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று, பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். பர்வதம்ன்னு சொன்னாலும் மலைன்னு தான் அர்த்தம்,பர்வதமலைன்னா மலைகளுக்கெல்லாம் மலைன்னு சொல்லுவாங்க.இந்தமலைக்கு நவிரமலைதென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்று பலபெயர்களும் உண்டு.அப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பர்வதமலையில் இன்று நமது குழுவினருடன் புண்ணியம் தேடி ஒரு பயணம் செலல்லாம் வாங்க.
நாங்கள் பர்வதமலை செல்லும் போது,அதிகாலை 4 மணி,குளித்துவிட்டு மலை ஏறினால் புத்துணர்ச்சியாகவும்,அதேசமயம் வெயில் இல்லாதநேரம் மலை ஏறினால்,களைப்பு தெரியாமலும் குளுமையாகவும் இருக்கும் என்பதால், அதிகாலை குளித்துவிட்டு ,மலை ஏற தொடங்கினோம்.அதற்கு  முன், இந்த மலைக்கு ஏன் பர்வதமலை என பெயர் வந்தது என பார்த்தோம்னா அன்னை பார்வதி தேவி இங்கு வந்து தவம் செய்ததால், இதற்கு பர்வத மலைஎன்று பெயர் வந்ததாகவும், இமயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது முதன் முதலாக சிவன் காலடி எடுத்து வைத்த இடம் இந்த பர்வதமலை என்றும் சொல்லபடுகிறது.திருவண்ணாமலையில் தீ ப்பிழம்பாக தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு ஐதீகம் உண்டு.அதனை  உண்மையாக்கும் விதத்தில் மலையின் மேலே அண்ணாமலையார் பாதமும் இருக்கிறது.ஆஞ்சநேயர் இமயதிலிருந்து சஞ்சீவி மலையை தூக்கிவந்தபோது விழுந்த ஒரு துளிதான் என்றும், மேலும் இது ஏழு சடை பிரிவுகளை கொண்டது என்றும் சொல்லபடுகிறது.
அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை,பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என சொல்லபடுவதுண்டு,ஆகாயத்தில் ஒரு ஆலயம் என்றும் இந்த பர்வதமலை அழைக்கப்படும்.இந்த இடத்துக்கு பேரு தென்மகாதேவ மங்கலம் ஆகும்.தூரத்தில் இருந்து பார்க்கும் போது, ஒரு நந்தியின் வடிவில் தெரிகின்றது..படியேற தொடங்கும் முன்,இறைவனை மனதில் தியானித்து படிகள் ஏறுவதற்கு உடல் சக்தியும்,,வழிகளில் எந்தவித தங்குதடைகள் இல்லாமலும் இருக்க தியானித்து,பயணத்தை தொடர்ந்தோம்.முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் இருக்கும் மலையடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன.அங்கே ஒரு பலிபீடமும் அதன்முன்னே இடப்பக்கம் விநாயகரும்,வலப்பக்கம் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேத காட்சி தருகிறார்.அவரையும் வணங்கிவிட்டு மலையேற தொடங்கினோம்.  
இந்த திருக்கோவில் சரியாக எப்போது கட்டப்பட்டது என்ற குறிப்பு எதுவும் இல்லை.கிட்டத்தட்ட 4,500 அடி உயரம் உள்ள கடப்பாறைமலை என்ற செங்குத்து பாறை மேல்,உள்ள ஒரு கடினமான நிலப்பரப்பின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது.ஆனால், வரலாற்று பதிவு கி.பி 300 -ம் ஆண்டு 'நன்னன் என்று ஒரு மன்னர் கூட அடிக்கடி இந்த மலை கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்று மலைபடுவடாகம் என்னும் நூலில் ஒரு குறிப்பு உள்ளது.சுமார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் யோகிகள் தியானம் செய்வதற்கு இந்த கோவில் கட்டப்பட்டது என்றும்,கூறப்படுகிறது.ஆனால், சில செவிவழி கதைகளில்,சொல்லபடுவது என்னனா ,ஒரு முறை சிவனும் பார்வதியும், கைலாயத்தில் உரையாடிக்கொண்டு இருந்தபோது, அன்னை ,சிவனிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்,சுவாமி இந்த உலகத்திலேயே அறம்,பொருள்,இன்பம்,வீடு இந்த நான்கையும் ஒருசேர அடைய மனிதர்கள் எந்த சிவஸ்தலத்தை வழிபடவேண்டும். என்று கேட்டார். அதற்க்கு பதில் கூறும் வண்ணம் சிவபெருமானால் அடையாளம் காட்டப்பட்ட மலைதான் இந்த பர்வதமலை  என்றும் சொல்லப்படுவதுண்டு.
அண்ணாந்து மலையை பார்க்கும் போது,நமக்கே பிரமிப்பாக இருந்தது ,நம்மால் முடியுமா என்ற எண்ணம் வரும்போது, ஏற்கனவே இந்த மலைக்கு அடிக்கடி செல்பவர்கள் .நமக்கு  உற்சாக மூட்டினர்.உங்களால் முடியும் ,என்று நம்பிக்கை சொல்லி மனதில் ,தைரியத்தை வரவழைத்தனர்.ஆகவே ஏற்கனவே மலை ஏறிபழக்கப்பட்டவர்களுடன் செல்வது நல்லது. இந்தமலையில் ஏறுவது ஏன் இவ்வுளவு கஷ்டம் என்றால்,இதில் உள்ள தத்துவம் என்னனா 4 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் வீசும் மூலிகைக் காற்று, தீராத நோயும் தீர்க்கும்.மேலும் இதற்க்கு எடுத்துக்காட்டாக ,குண்டலினி சக்தி ,மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்,என்பதை தான் இந்த மலை சூசகமாக உணர்த்துகிறது.  .
நாம மலையில் ஏறும் போது மிகுந்த களைப்பு வரும்,தண்ணீர் தாகம் எடுக்கும்,அபொழுது சில அடிதூரங்களுக்கு இடைஇடையே சில கடைகளும் இருகின்றன,அங்கே 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் எனவும்,லைம் கலந்த சோடவுக்கு 50 ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.ஆனால் காலம்காலமாக வரும் சில பக்தர்கள் மலையின் இடையே இருக்கும் சில சுனைகளில் இருந்து தண்ணீர் எடுத்து கொள்கின்றனர்.இங்கே மலைகளில் நூற்றுக்கணக்கான குகைகள் காணபடுகின்றன எனவும்.அதில் இபோழுதும் சித்தர்கள் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் இந்த பர்வதமலையில் ஜமதக்னிமுனிவர்,விஸ்வமித்திரமகரிஷி,போகர் ,அகஸ்தியர்,போன்ற பலசித்தர்கள் இங்கே தவமிருந்ததாகவும் சொல்லபடுகிறது.மேலும், பலருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. .
சுமார் 1300 படிகளை கடந்து வந்தபிறகு இந்த இடத்தில் தான் படிக்கட்டுகள் முடிவடைந்து, கரடு முரடான மலைப்பாதைகள் ஆரம்பிக்கின்றன.வழியில் சிறிய சிறிய தற்காலிக கடைகளில் இளனீர்,பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர்பாட்டில், குழிபணியாரம் எல்லாம் கிடைக்கும்.அங்கு சிலநேரம் ஓய்வெடுக்க வசதியாக கூடாரங்கள் அமைத்துள்ளனர்..அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் மலையேற சற்று கஷ்டமாக இருக்கும்.இந்த மலையில் மூலிகைகள் நிறைய இருப்பதால் அவைகளின் மேல் பட்டு வீசும் காற்றினை சுவாசிக்கும் போது நோய்கள் குணமாகும் என்றும் சொல்லபடுகிறது.மலைப்பாதையில் குரங்குகளை தவிர வேறு காட்டு விலங்குகள் அல்லது பூச்சிகளின்  தொல்லை எதுவும் இல்லை வயதானவர்கள் கூட மன உறுதி இருந்தால் சுபலமாக மலையேறி விடலாம்.
இந்த இடத்தில ஒரு சிறிய மண்டபம் இருக்கிறது,அதில் சிவலிங்கமும் நந்தியும் இருக்கிறது.அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது, ஒரு அதிர்வு நிலையை நம்மால் உணர முடிகிறது.மேலும் நம்முடைய முன்னோர்கள் மற்றும் குடும்பத்தில் இறந்தவர்களின் பெயரை சொல்லி இங்கே,ஆன்ம விமோசனத்திற்கு பிரார்த்தனை செய்தால் அது நிறைவேறும் என்றும் சொல்லபடுகிறது..நாங்களும் சிறிதுநேரம் அங்கே பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து மலையேற தொடங்கினோம். மேலும் இந்த இடம் மலையின் பாதிஅளவு இருக்கும் என தெரிகிறது. சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் நடக்க தொடங்கினோம்.
தொடர்ந்து 48 முறை பௌர்ணமி,அமாவாசைகளில் எவர் ஒருவர் தொடர்ந்து இங்கு வந்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு ஞானம் சித்திக்கும் என்பதும் ஐதீகம்.மேலும், இந்த பர்வதமலையின் ஒவ்வொரு பகுதியும்,அதாவது இந்த ஏழு சடை பிரிவுகளிலும்,பிரம்மா ,விஷ்ணு ,முப்பத்து முக்கோடிதேவர்களும்,  சித்தர்களும்,  மாகான்களும், முனிவர்களும்,ரிஷிகளும் தவம் செய்து கொண்டிருப்பதாக சொல்லபடுகிறது.மேலும் தேவேந்திரன் இந்த கலிகாலத்திலும் இடி மின்னல் வடிவில் வந்து ,மல்லிகர்ஜுனருக்கும் ,பிரம்மராம்பிகைக்கும் பூஜை செய்வதாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. மேலும், திருவண்ணமாலையை சுற்றி உள்ள 30 கிமீ தொலைவில் இருப்பவர்களுக்கு எந்த குருவும் தேவைபடாது.அவர்களுக்கு நானே குருவாக இருந்து வழிநடத்தி செல்வேன் என ரமண மகரிஷி கூறியுள்ளார்.ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் இங்கு வந்து யோகம் செய்தால் ஞானம் பெறுவது உறுதி.
நாம் பார்க்கும் இந்த இடம் குழந்தை சித்தர் சமாதி என சொல்லபடுகிறது. ஆனால் அதுபற்றிய குறிப்போ தகவலோ சரியாக இல்லை. சிலர் அதில் ஒன்றுமில்லை இடைக்காலங்களில் வைக்கப்பட்டது எனவும் சொல்கின்றனர்.ஆனால், மதவேறுபாடுகளை களைந்து முஸ்லீம் நண்பர்கள் கூட இங்கே வரும் பக்தர்களுக்காக கடைவைத்து உள்ளனர்.சித்ரா பௌர்ணமி ,ஆடி 18, ஆடி பூரம் ,புரட்டாசி ,ஐப்பசி,கார்த்திகை தீபம்,மார்கழி,மகா சிவராத்திரி,பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இங்கே விசேஷ வழிபாடுகள் உண்டு.குழந்தை பேறு இல்லாதவர்கள் மலையை கிரிவலம் வர குழந்தைபாக்கியம் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.அதேபோல இரவினிலில் திசைமாறி போனாலோ  இல்லை, கடைகள் அருகில் இருப்பதையோ உணர்த்தும் வைகயில் பைரவ மூர்த்தியார் ஓசை எழுப்பி , நம்மை வழிகாட்டுவதை நாம் ஒவ்வொருவரும் அனுபவமாக உணரலாம்..
அதுபோல புதியதாக மலை என்ற தொடங்குபவர்கள் முதலில், மலைக்கு கீழே இருக்கும் தலைக்கோவிலில் இருக்கும் பிரம்மாண்டமான ,சூலத்தை வழிபட்டு,அங்கிருந்து நேரே வந்தோம்னா ,அங்கிருக்கும் பச்சைஅம்மனை தரிசித்து ,பின்னர் வெளியே இருக்கும் ,சப்த முனிவர்கள் அதாவது ஏழு முனீஸ்வரர்களுடைய உருவங்கள் பிரம்மாண்டமாக ,இருக்கின்றன ,அவர்களிடமும் மலையேற சக்தியும் அருளும் வேண்டும் என பிரார்த்தித்து ,அதற்க்கு எதிரிலேயே அமைந்து இருக்கும் புற்றுக்கோவிலையும் ,தரிசித்து ,நேர் பாதையில் வரும் போது, ஆஞ்சநேயரையும் தரிசித்து ,அங்கிருந்து வீரபத்திரர் ,வனதுர்க்கை ,ரேணுகா பரமேஸ்வரி ,இவரைகளையெல்லாம் தரிசித்து ,பர்வதமலை ஏற தொடங்கினா சிறப்புன்னு சொல்லப்படுது.
ஒருவழியாக முக்கால்பாகம் மலை எறிவந்துவிட்டோம்.நமது குழுவினர் எல்லாம் சோர்ந்து போய்ட்டாங்க,மலையின் எந்த உச்சிக்கு போனாலும், கடைகள் இருக்கின்றது.மலையேறுபவர்களுக்கு அது வசதியாக உள்ளது ,அதே சமயம் விலைகள் கொஞ்சம் அதிகம் தான்,ஏன்னா எல்ல பொருட்களையும் அவ்வுளவு உயரத்திற்கு தூக்கிகொண்டு வருவது மிகவும் சிரமான விஷயம்.பக்தர்களில் சிலர் பாடிக்கொண்டு வருகின்றனர்,சிலர் கால்வலியில்,ஐயோ ,அம்மா என சொல்லும்போது அப்பனே,அம்மையே என கூறிக்கொண்டு ,மலையேறுவாதாக தான் எனக்கு கேட்கிறது.மற்ற மலைகள் போல் அல்லாமல், பர்வத மலை செங்குத்தான (மலை) பாறை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போது அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த மலை சுற்றி எட்டு திசைகளில் இருந்து எட்டு வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறது.மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது 50 கி.மீ. வரை கூட கீழே இயற்கைஅழகு தெளிவாக தெரிகிறது.
மலையேறிவந்த ,பாதைகளும் தெளிவாக தெரிகின்றன.அமாவாசை இருட்டில் கூட பாதைகளை ,மட்டும் தெளிவாக ஒளிருமாம்,இந்த பர்வதமலையில்,சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வார்களாம்,அந்த சமயத்தில். அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி, சாம்பிராணி போன்ற பொருட்களின் வாசனை மூலம்தான் அவர்கள் கடப்பதை அறியமுடியுமாம்.சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர், போன்ற வடிவத்தில் கூட உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறுவதற்கு உதவி செய்வார்களாம்.
இந்த இடத்தில கொஞ்சம் இளைப்பாறலாம்,ஏன்னா இனி நாம ஏறபோறது கொஞ்சம் செங்குத்தான பாறை.அதை ஏறுவதற்கு ,வசதியாக கம்பிகளை நீளவாக்கில் வேலிபோல் வச்சு இருக்கிறாங்க அதை பிடிச்சு,அழகா ஏறலாம். இதுல முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது ,கடலாடிங்கிற இடத்தில இருந்தும் மலைக்கு மேலே ஏறலாம்,அப்படி ஏறும்போது,கடலாடி ஆஸ்ரமத்தைத்தையும் தரிசிக்கலாம்,தென்மாதிமங்கலத்தில் இருந்தும் மலைமேல் ஏறலாம்,இப்படி இரண்டு வழிகள இருக்கு,எங்களுடன் வந்த வழிகாட்டி நண்பர் ,ஒருவர் சொன்ன தகவல் இது, அவர் முதன் முதலில் மலையேறும் போது ,கடப்பாரை மலையின் அருகே இராத்திரி 8 மணி அளவில் தனியாக நின்று கொண்டு இருந்தாராம்,கீழே பார்த்தா பள்ளம் ,மேலே பார்த்தா மலை,ஆனா போகிற வழி தெரியல.ஏன்னா செய்வது வழி மாறி வந்திட்டமோன்னு,தயங்கி நிற்கும் போது,அங்கெ ,வயதான ஒருவர் வந்து என்ன,மலைக்கு போகணுமான்னு கேட்டுட்டு சூடம் ஏத்தி கும்பிட்டுட்டு ,கடப்பாரை மலை ஏற வழிகாட்டினாராம்.மலைக்கு மேலே செல்ல செல்ல ,இவருக்கு ஓய்வு தேவைப்பட்டுதாம்,சரிங்க நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துகிறேன்ன்னு சொன்னாராம்.அப்ப அந்த பெரியவர் சரிப்பா,நான் கிளம்புறேன்னு கிள்ளம்பிட்டாராம்.அதன்பிறகு ,அவரை அந்த மலை பகுதியிலேயே பார்க்கவே இல்லையாம்.என்று கூறி ஆனந்த பட்டார்.இப்படி நிறைய அதிசயங்கள் கொண்டது இந்த பர்வதமலை.
இந்த கம்பியை பிடித்துத்தான் இனி இருக்கும் செங்குத்துது பாறைகளில்,ஏற வேண்டும்,இருபதுவருடங்களுக்கு முன்பு ,இங்கு தங்கி இருந்த ஸ்வாமிகள் ,அப்ப வர 50 பைசா 1 ரூபாய் காணிக்கைகளை கொண்டு மலைக்கு மேலே வரவங்களுக்கு கஞ்சிகாய்ச்சி கொடுப்பாராம்.ஒருசமயம் .நல்லமழை அவருக்கோ பாசியாம்,மழையில் சுருண்டு படுத்து இருந்தாராம் ,பசிமயக்கத்தில் எலி காலில் கடித்தது கூட தெரியாமல்,இரத்தம் வடிந்த நிலையில் படுத்து இருந்தபோது, கீழே கடைவைத்திருக்கும் பெண்மணி ,ஒருவர்,மேலே போன ஸ்வாமி 2 நாள் ஆகியும் கீழே வரவில்லையே என பார்க்கப்போகும் போது,அவர் இரத்தம் வடிந்த காலோடு இருப்பதை பார்த்து இரத்தத்தை துடைத்து துணியால் கட்டுப்போட்டு,பின் சாப்பாடு கொடுத்தாராம்.அன்றிலிருந்து, இனியாரும் இங்கே வந்து பசியோடு செல்லக்கூடாது என முடிவெடுத்து,மலையேறி வரவங்க வெறும் வயித்தோட போக கூடாதுன்னு,அன்னதான மடம் ஏற்பாடு பண்ணினாராம்.ஒருமுறை காஞ்சிபுரத்திலிருந்து ஒரு மனிதர் சாமிகும்பிட மலையேறினாராம், மலைமேல் ஏறினபோது, பசி தாங்காமல் சிவன் சன்னதியில் மனமுருகி நின்றாராம்,எனக்கு சொந்தமா அரிசிஆலை இருக்கு ஆனா ஒருபிடி சோறு இல்லையே ஆண்டவான்னு கண்ணீர்ரோட நின்னுகிட்டு இருக்கும் போது ,மேலே அன்னதான கூடம் இருக்கு அங்கெ போங்க சாப்பாடு போடுவாங்கன்னு சொல்லி இருக்கிறார் .கூட்டத்தில் ஒருவர்.மேலே இருப்பவன் யாரு என் அப்பன் சிவனாயிற்றே ,ஆண்டியும் ஒண்ணு,அரசனும்  ஒண்ணு ,இருப்பவனுக்கும் ,ஒரே மாதிரி ,இல்லாதவனுக்கு ஒரே மாதிரித்தான் நடத்துவான்.தான் என்கிற அகந்தை அழிப்பது தானே அவன் வேலை,அங்கு சென்று வயிறார சாப்பிட்டு,பின் இறைவனுக்கு நன்றி சொல்லி,முன்பு ஸ்வாமிகள் இருக்கும் போது ,அன்னதானத்திற்கு அரிசி மூடைகள் அனுப்பிக்கொண்டு இருந்தாராம்.
ஒருவழியாக எல்லாம் முடித்துக்கொண்டு ,நாம மலை உச்சிக்கு வந்துவிட்டோம்,இங்கேதான் அபாயகரமான ,கம்பிப்பாறை ,தண்டவாள பாறை படிகள் ,ஆகாச படிகள் என இருக்கின்றன .மிகவும் கனமாக சொல்லவேண்டியது அவசியம் சூரியனோ மேற்கில் மெல்ல சாய்கிறான் .இந்த இடத்தில முக்கியமா கவனிக்க வேண்டியது என்னனா ,ஏற்கனவே பலமுறை மலையேறினவங்களோட வழிகாட்டுதல் ,இல்லை உதவி கட்டாயம் வேணும் ,அது மிக மிக அவசியம் ,ஏன்னா , பாறைகள் எல்லாம் செங்குத்து பாறை கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சாது.ஆனா, கடவுள் அருளாலே இதுவரை ஒரே ஒருத்தத்தான் அப்படி வழுக்கி விழுந்தாராம் ,மற்றவங்க யாருக்கும் ஒரு பாதிப்பு இல்லையாம்.நாங்கள் போகும் போது ஒரு 10 வயது குழந்தை ஓடும்போது கால்தவறி விழுந்தது ,சிவன் அருளால் அது பாறை இடுக்கில் மாட்டி கொண்டதால் உயிருக்கு ஒன்றும் இல்லை,ஆகவே குழந்தைகளை மற்றும் சின்ன பிள்ளைகளை கூட்டி செல்பவர்கள் கவனமாக செல்லவேண்டும்.
சின்ன கரடு முரடான ,கடைசி பகுதி ,மிகவும் கடினமானது.அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது மலையைச்சுற்றி மேகங்கள் ஓடுவது அழகாக காட்சியாக இருக்கிறது.மேலிருந்து பார்க்கும் போது ஊரே முழுவதுமாக நாம் வானத்தில் இருந்து பார்ப்பது போல அழகாக தெரிகிறது.இந்த இடங்களில் எல்லாம் கட்டாயம் வழிகாட்டிகள் உதவி அவசியம் தேவை,புதியதாக மலை ஏறுபவர்கள் ,கடலாடி,அன்னதான மடத்திலுள்ள சுப்பிரமணி(9003161140) என்பவரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.அவர் மலையேறும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கிறார்.
அந்திசாய தொடங்கிவிட்டது ,இனியும் மலையேறுவது கஷ்டம்,ஆனால் ,வழிகாட்டி நண்பர் கொடுத்த தைரியத்தில் மீண்டும் மலை ஏற முடிவு செய்தோம் .இங்கே மலையின் மேல் ஒரு சிறப்பு உண்டு.கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனமும் ,உதயமும் எப்படி பார்க்கிறோமோ அதேபோல் இங்கே மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பொறுத்திருந்து அதைப்பார்த்து விட்டு செல்லலாம்.இரவு கடப்பாரை மலையில் ஏறினால்,கீழே பள்ளத்தை பார்க்கும் இருட்டில் தெரியாது.வெளிச்சத்தில் பார்க்கும் போது,பயமாக இருக்கும் என்பதால்,எல்லோரும் மலையேற அவசர படுத்தினார்கள்.ஆனால் நான் தான் பிரபல பதிவராயிற்றே,நான் ஒருத்தி பார்த்தேன்னா லட்சம் பேர் பார்த்ததுக்கு சமம்ன்னு சொல்லிட்டு அங்கேயே தங்க முடிவெடுத்தேன். உண்மையில் காலைலயில் அந்த இடங்களை பார்க்கும் போது எவ்வுளவு அழகாக இருந்தது தெரியுமா.இரவில் மலையேறி இருந்தால் ,இந்த காட்சிகளையெல்லாம் ,என்னுடைய ,சகோதர ,சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும் .கடப்பாரை மலையிலிருந்து, தொடங்கிய(தொங்கிய) திரில் பயணம், இதுவரை யாரும் ,இந்த மலையை பற்றி சொல்லாத விஷயங்களுடன் ,அடுத்தவாரம், நமது புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் சந்திக்கலாம் .நன்றி. 
 


17 comments:

 1. இவ்வளோவ் பெரிய பதிவாகவா எழுதுவது ஹும்ம் புண்ணியம் தேடி பர்வதமலைக்கு பரவசபயணம் - புண்ணியம் தேடி ஒரு பயணம் மேற்கொள்வத்தை விட இந்த பதிவை படித்தாலே புண்ணியம் வந்து சேரும்தானே

  ReplyDelete
  Replies
  1. பதிவு பெரியாதா ,சுருக்கமானதா என நாம் பார்க்க தொடங்கியதே ,மனசு சுருங்கி போனதால்தான் ,கணக்குகளை ,எண்சுவடி கொண்டு ,மனதிற்குள் ,கூட்டிக்கழித்த காலம் போய், வீட்டு நம்பர்களை மனதில் வைத்து ஞாபக படுத்திய காலம் போய்,தன சொந்த நம்பரையே , தன்னுடைய மொபைல் இருந்தால்தான் ,சொல்லக்கூடிய அளவு ,நாம் சுருங்கி போய்விட்டோம் .,காரணம் ,நுனி புல் மேயும் ,ஆடு ,மாடுகளாகி விட்டோம் .படிப்பு கூட இன்று .அப்படிதான் இருக்கிறது .100 க்கு 99% மருத்துவர்கள் நுனிப்புல் மேயும் படிப்புகள் படிப்பதால் அவர்கள் நோயை கண்டு பிடிக்கும் முன் ,நோய் ,ரோகியை கொண்டே போய்விடும் காரணம் , பொறுமையா ஆழ்ந்து படிக்காமை

   Delete

  2. ஏ..மானிடர்கள் !...எதை தேடி அலைகின்றீர்கள் .எதற்க்காக இந்த ஓட்டம் ,இதனால் உங்கள் பெண்ட்டாட்டி பிள்ளளைகளை,மறந்து ஓடி ,அவர்களை வயதான காலத்தில் இதேபோல் மறக்கும் நிலைக்கு ..தள்ளவா..மானிடர்களே..

   Delete
  3. குறுக்கு வழியில் ,பணம் வேண்டும் ,என்வாதற்க்காக விளை நிலங்களை ,பிளாட் போட்டு மனசாட்சியை அடமானம் வைத்து விற்கிறதும்,லஞ்சம் வாங்கி எப்படியாவது யாரையாவது , ஊரை அடித்து பணம் சம்பாதிக்கும் ,அரசியல் வாதியாகும் ,அளவு ஆகிவிட்டதும் ,அடுத்தவன் ,எப்படி போனாலும் பரவா இல்லை ,தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என மிருகங்களின் குணம் வருவது எதனால் ..எல்லாம் இந்த பாழாய்ப்போன பணம் ..பணம் ..ஏன் ஓடி ..எனக்கு படிக்க கூட நேரமில்லை ..நிற்க கூட நேரமில்லை என சொல்லும் ..போலி மானிடர்களை வளர்த்தது எது ..ஆழ்ந்த படிப்பு இல்லாததினால் ..எங்கே ஆழ்ந்த படிப்பு இருக்கிறதோ..அங்கெ நிறைவு உருக்கும் ..எங்கே நிறைவு இருக்கிறதோ அங்கெ நிம்மதி இருக்கும் ..எங்கே நிம்மதி இருக்கிறதோ ..அங்கெ கடவுள் இருப்பான் ..ஏகே கடவுள் இருக்கிறானோ அங்கே எல்லாம் செழித்து ஓங்கும் ...

   Delete
  4. முதலில் நேரம் போவதற்காக ..பதிவுகள் எழுதினேன் ...அதன்பிறகு ..மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் ..என எழுதுகிறேன் ..யார்படித்தலும் ..படிக்காவிட்டாலும் ..என்னுடைய கடமையை நான் செய்து கொண்டு தான் இருப்பேன் யாருக்கு சென்று ..சேர வேண்டுமோ ..அவர்கள் நிச்சயம் இந்த பயண அனுபவம் சென்று சேரும் அது அவர்களுக்கு ,பயணம் மேற்கொள்ள நிச்சயம் உதவியாக இருக்கும் .

   Delete
  5. நன்றி சகோ உங்கள் வருகைக்கும் ..கருத்துக்களுக்கும் ...

   Delete
  6. வெளி உலக விவகாரங்களில் தான் சுகம் இருக்கிறதென்று நினைத்து மனிதன் துன்பத்தையே தேடி அலைகின்றான். மாயையால் உலகம் பொய்யைத் தேடி ஓடுகின்றது. நன்மை தருவதாகவும், இன்பம் தருவதாகவும், முதலில் தெரிபவை கடைசியில் துன்பம் தருவனவாகவே அமைகின்றன.

   Delete
 2. நான் பார்க்க ஆசைப்பட்ட மலைகளில் ஒன்று பர்வதமலை. உணர்ந்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். மிகவும் அருமையாக இருந்தது. இந்தப் பதிவினைப் படிக்கும்போது 1980இல் வெள்ளியங்கிரி மலை சென்ற அனுபவம் எனக்கு நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. பர்வதமலை ...மிகவும் ,அருமையான ,அதேசமயம் ,ஆபத்துகளும் நிறைந்த மலையும் கூட ..அடுத்தவாரம் இதன் தொடர்ச்சி வரும் அதையும் ..கட்டாயம் படியுங்கள் ...நன்றி சகோ ...
   ..

   Delete
 3. படங்களுடன் பகிர்வு அருமை அக்கா...
  என்னைய எல்லோரும் ரொம்ப பெரிய பகிர்வா எழுதுறேன்னு சொல்றாங்க... இங்கே என்னைவிட நீளமான பகிர்வு....

  ReplyDelete
  Replies
  1. பதிவு ..பாகமாக பதிவு செய்தால் ..என்ன இன்னுமா மலை ஏறி முடியலைங்கிறீங்க ..ஓடியாக பதிவு செய்தால் நீளமாக இருக்கிறது என்கிறீங்க ..ஆனால் பதிவில் எங்கேயாவது ..தொய்வு இருந்தால் ..சொல்லுங்கள் தம்பி ..அடுத்த பதிவில் குறைத்து பதிவிடுகிறேன் ...நன்றி தம்பி ..
   ...

   Delete
 4. sivan malaiku azaithal kandipaga selveenn.

  ReplyDelete
 5. அருமையான பதிவு ராஜி.அடுத்த பதிவு எப்படி எடுத்துப்படிப்பது ராஜி?

  ReplyDelete
 6. மனைவி,குழந்தைகளுடன் தரிசிக்க செல்லாமா?

  ReplyDelete
 7. உங்கள் பதிவு மிகவும் அருமையான இதுபோன்ற சேவைகளை செய்யும்பொழுது சிலர் சென்று பார்க்கமுடியாத இடத்தை இதுபோன்ற கட்டுரையில் பார்த்தது போன்ற அனுபவத்தை பெற முடியும் நன்றி சிவாயநம

  ReplyDelete
 8. உங்களுடைய குறிப்பில் நான் படித்தேன் நான் எனது கடமையை நான் செய்கிறேன் பலனை எதிர்பார்க்க வில்லை நிச்சயமாக கீதையில் சொல்லக்கூடிய வார்த்தையைத் தான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் சேவை மென்மேலும் தொடர எம்பெருமான் சிவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  ReplyDelete
 9. அருமையான தொய்வில்லாத பதிவு..

  ReplyDelete