Thursday, March 02, 2017

பாலியல் குற்றங்களுக்கு இத்தனை விதமான தண்டனைகளா??!!

 உலகத்துக்கே பாலியல் பற்றி எடுத்து சொன்ன தமிழ்நாட்டில் இன்று வயது வித்தியாசமின்றி  பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதோடு இன்னுயிரையும் இழக்கின்றனர். இதற்கு பாலியல் பற்றிய முறையான கல்வியும், விழிப்புணர்வும் இல்லாததாலும், கடுமையான சட்டங்கள் இல்லாததே காரணமாய் அமைகின்றது.
மதம், குடும்பம், பொருளாதாரம் உட்பட  பலவித கட்டுப்பாடுகளை போராடி தகர்த்து இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், இப்படிப்பட்ட செயல்களால் இனி பெண்பிள்ளைகளை பெற்று வளர்க்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழப்போவது நிச்சயும். தமிழ்நாடே உசிலம்பட்டியாய் மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்த மாதிரியான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை மிருகங்களைவிட கீழானவர்கள். ஏனெனில் எந்த மிருகமும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருக்க பாலியல் கல்வியும், வளர்ப்பு முறையும், சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கடுமையான தண்டனை இல்லாவிட்டால் சிறை அல்லது அபராதம்தானே என்ற அலட்சியம் வரும். மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுவர். ஆனால், நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாததாலேயே இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகம் நடைப்பெறுகிது.  மற்ற நாடுகளில் இருப்பதுப்போல கடுமையான தண்டனைகள் கொடுத்தால் ஓரளவு குறையும்.

இனி பல்வேறு நாடுகளில்  கொடுக்கும் கடுமையான தண்டனை பற்றி பார்ப்போம்...


சீனா;

 சீனாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். பாலியல் குற்றங்களிலேயே வக்கிரமான, சைக்கோக்களுக்கு ஆண்மை நீக்கப்படும். உதாரணமாய் சீனாவின்  கான்சு மாகாணத்தின் வுஷுன் நகரின் அருகேயுள்ள கிராம ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த லி ஜிஷுன் என்பவர் கடந்த 2011-2012 ஆண்டுவாக்கில் 4 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 25 மாணவிகளிடம் வகுப்பறை, தங்கும் விடுதி மற்றும் அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதியில் பாலியல்ரீதியாக முறைதவறி நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கல்வித்துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிகவும் குழந்தைத்தனமாகவும், அப்பாவியாகவும் இருக்கும் சிறுமிகளை தேர்ந்தெடுத்த லி ஜிஷுன், தனது இச்சைக்கு அவர்களை இரையாக்கிக்கொண்டது தெரியவந்தது. அவர் மீது கோர்ட்டில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபணமாகி மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரது ஆண்மையும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான்;

ஈரான்  நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரியான செயலில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக ஈரானில் மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் கொராசான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  சீனாவுக்கு அடுத்ததாக ஈரானிலேயே அதிகமானோர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மரண தண்டனை அவசியம் எனவும் தீவிரமான நீதிவிசாரணைகளின் பின்னரே மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதாகவும் ஈரானிய அரசாங்கம் கூறுகிறது. கொலைபாலியல் வல்லுறவு, ஆயுத முனைக்கொள்ளைபோதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான்;

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்துநான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள். அதேப்போல  திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்பு கொண்டால் ஆப்கானிஸ்தானில் ஆணுக்கும் பெண்ணுக்கும் 100 கசையடிகள். 20-24 வயதுகளுக்கு உட்பட்ட இருவருக்கும் இந்த கசையடி தண்டனை வழங்கப்பபட்டது. அவர்கள் திருமணத்துக்கு முன்பு  பாலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்த இருவருக்கும் கசையடி வழங்கி தண்டனை நிறைவேற்றியதாக மத்திய மாகாணமான கோர்-இல் உள்ள அதிகாரி ஒருவர் நாளிதழில் பேட்டியளித்துள்ளார். இப்படி பலவிதமான தண்டனைகள் இந்த பாலியல் குற்றங்களுக்கு கொடுக்கப்படுகிறது
ஆப்கானிஸ்தானில் குடும்பத்தினரோடு காரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்களை வழிமறித்த கும்பல் ஒன்றுஅவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடியதோடு நில்லாமல்துப்பாக்கி முனையில் ஒரு கர்ப்பிணி உட்பட காரில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இவர்களில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  குற்றம்சாற்றப்பட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த பலாத்காரம் மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்ஸ்; .

பிரான்ஸ்  நாட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்குமரண தண்டனையோ அல்லது சுடவோ செய்யமாட்டார்கள். மாறாகஅவர்களுகு 15 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். குற்றவாளியின் மோசமான செயலைப் பொறுத்து, 30 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறையிலேயே இருக்கக்கூடும்.
வடகொரியா;

வட கொரியாவில் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.
ரஷ்யா;

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஸ்யாவிலும் நம் நாட்டைப்போல கடுமையான சட்டங்கள் இல்லை. இங்குபாலியல் பலாத்காரம் செய்தால் 3-6 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். மோசமான சூழ்நிலையில் 10-20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.
அமெரிக்கா;
 அமெரிக்காவில் பாலியல் பலாத்காரத்திற்கு அந்நாட்டு சட்டத்தின் கீழ்சில வருட சிறை தண்டனை முதல் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய மரண தண்டனை வழங்கப்படும். ரஷ்ய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அமெரிக்கர் ஒருவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் அப்ரமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். அப்ரமோவ்கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூனில் ரஷ்யாவுக்கு சென்றிருந்தபோது 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். போலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்ரமோவ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்ரமோவ்சிறுமியை ஈவிரக்கமின்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஓடிஸ் ரைட் தீர்ப்பளித்தார்.
சவுதி அரேபியா;

சவுதி அரேபியா உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும்படியான தண்டனை வழங்கப்படுகிறது எனலாம். ஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால்பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டிவிடுவார்கள்.

இந்தியா;


இந்தியாவில் பாலியல் பலாத்காரத்திற்கான சட்டம் மிகவும் மோசமாக உள்ளது. டெல்லி நிர்பயா வழக்கில் ஈடுபட்டவனுக்கு தையல்மெஷின் கடை வைத்து கொடுத்த கூத்துலாம் இந்தியாவில் நடந்தேறியது. ஜாதி, மதம், அரசியல், பண தலையீடுகளால் இத்தகைய பல குற்றங்கள் வெளிஉலகிற்கு வராமலே புதைந்துள்ளது. இதனால்தான் இந்தியாவில் சமீப காலமாக பல பெண்கள் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும்இந்திய அரசாங்கம் இப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குகிறது. அதனால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கு சவுதியைப் போன்று மிகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான்யாரும் இந்த மாதிரியான வெட்கக்கேடான செயலில் ஈடுபடமாட்டார்கள்.
இத்தகைய பாலியல் குற்றங்கள் இனி தொடர்ந்து நடைப்பெறாமலிருக்க பாலியல் கல்வி, குழந்தை வளர்ப்பில் மாறுதல், உணவு கட்டுப்பாடு, சமூக மாற்றத்தோடு முறைப்படுத்தப்பட்ட ஆன்மீகமும் கொண்டு வரவேண்டும்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்...
நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. கடுமையான சட்டம், அதைச் சரியாக செயல்படுத்தும் நீதிபதி/அரசாங்கம், தனிமனித ஒழுக்கத்தினை ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்கள்/பள்ளி/ஆசிரியர்கள் என செய்ய வேண்டிய விஷயங்கள் இங்கே அதிகம்.

    எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு, சாதி/மதக் குழப்பங்கள், சந்தர்ப்பம் பயன்படுத்திக்கொள்ளும் நீசர்கள் என பிரச்சனைகள் இங்கே அதிகம்.....

    ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கும்போது/கேட்கும்போது மனது பதறுகிறது.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. இப்பலாம் பெண்குழந்தைகளை வச்சிருக்கவே பயமா இருக்கு. பசங்க வெளில போய் வீட்டுக்கு வர்றதுக்குள்ள உசிர் போய் உசிர் வருது.

      Delete
  2. Replies
    1. வெட்கக்கேடான விசயத்தை தடை செய்ய "உடனே வெட்டப்படும்"- சட்டம் வந்தால் தான் தீரும்...

      Delete
    2. அது போதுமாண்ணே. அப்பிடிப்பட்ட சட்டம் இருக்கும் ஊர்லயும் இது மாதிரியான விசயங்கள் நடந்துக்கிட்டுதான் இருக்குண்ணே. தனிமனிதன் மாறனும்.. அப்பதான் விடிவுகாலம் பொறக்கும்.

      Delete
  3. "கடுமையான சட்டம், அதைச் சரியாக செயல்படுத்தும் நீதிபதி/அரசாங்கம், தனிமனித ஒழுக்கத்தினை ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்கள்/பள்ளி/ஆசிரியர்கள் என செய்ய வேண்டிய விஷயங்கள் இங்கே அதிகம்." என்ற அறிஞர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete