Monday, April 17, 2017

தீரன் சின்னமலை - ஐஞ்சூவை அவியல்

என்ன புள்ள! உம்முன்னு உக்காந்திட்டிருக்கே?!

ரொம்ப நாளாச்சு மாமா நாம உக்காந்து கதைப்பேசி... என்னாச்சு நமக்குள்ள.. இப்பலாம் உனக்கு எம்மேல ஆசையே இல்ல. அப்பிடி ஊர்கதை பேச  மனசு ஏங்குது. அதான். 

அதுவா புள்ள. ஆண்ட்ராய்டு போன் வாங்குனாலும் வாங்குனேன். இந்த மூஞ்சிபுக்கை ஓப்பன் பண்ணதுல அங்கனயே உக்காந்துட்டேன். அப்புறம்  கொஞ்சம் கோவில் குளம்ன்னு போய் வந்தேன். அதான் உன்கிட்ட பேசமுடில. இனி பேசலாம்.

கவனிச்சேன் மாமா. நீ கோவில் குளம்ன்னு சுத்தினதுல எங்க சாமியாரா போயி என்னை மறந்திடுவியோன்னு நினைச்சேன்.  சரி ஸ்மார்ட் போன் வாங்குனியே! அதை எப்படி பத்திரமா பார்த்துக்கனும்ன்னு தெரியுமா?!

ம்ஹூம் தெரியாது புள்ள. உனக்கு தெரியுமா?! 


சரி நான் சொல்றேன். கேட்டுக்கோ.  மொபைலை வாங்கினதும்  *#06#ன்ற நம்பரை அழுத்தி அது சொல்லும் ஒரு நம்பரை  (International Mobile Equipment Identity no ) டைரில குறிச்சு வச்சுக்கனும்.  மொபைலோட கேரண்டிக்கும், மொபைல் தொலைஞ்சி போய்ட்டாலோ இந்த நம்பர் யூஸ் ஆகும். தொடர்பு எல்லைக்கு வெளியே போய்ட்டா மொபைலை ஆஃப் பண்ணுறது நல்லது. இல்லன்னா பேட்டரி வேஸ்ட்டாகும்.   மொபைல்  லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD)ஐ லேசா தொட்டா போதும். ரொம்ப அழுத்தினா நாளடைவில் ஸ்க்ரீன் பாழாகிடும். மொபைலோடு சில்லறை காசு, வண்டிச்சாவி மாதிரியான பொருட்களை வைக்காதீங்க. ஸ்க்ரீன்ல கீறல் விழும். மொபைலுக்குண்டான பவுச் இல்லன்னா போம் கவர்ல போட்டு வைங்க.  போனில் சிக்னல் குறைவா இருக்கும்போது ரேடியேஷன் அதிகமா இருக்கும். கூடவே பேட்டரியும் அதிகம் செலவாகும். அதனால, சிக்னல் குறைவா இருக்கும்போது பேசுறதை குறைச்சுக்கோங்க.  

ஆத்தாடி இம்புட்டு விசயம் இருக்கா?!

இன்னும் இருக்கு மாமா. சொல்லவா?!

வேணாம்டி.  இதுவே நினைவில் வச்சுக்க முடியாது. இன்னிக்கு யாரோட பொறந்தநாள்ன்னு தெரியுமா?! 

ம்ம்ம் பாய்ஸ், அரண்மனை 2 படத்துலன் நடிச்ச சித்தார்த்தோட பொறந்த நாள். அப்புறம் நம்ம ஸ்பையோட பிறந்த நாள். 
உன் தம்பியோட பொறந்த நாளையும், சினிமாக்காரன் பொறந்தநாளையும் நினைவு வச்சுக்கிட்ட உனக்கு  விடுதலை போருக்கு முதன்முதலாய் வித்திட்ட தீரன் சின்னமலையோட பிறந்தநாளை தெரியலியே!.  தீரன் சின்னமலையோட பேரு தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டர். அப்பா பேரு ரத்னசாமி கவுண்டர், அம்மா பேரு பெரியாத்தா. 1756 ஏப்ரல் மாசம் 17 ந்தேதி ஈரோடு சென்னிமலைல பாளையக்காரர் பரம்பரைல  பிறந்தார்.  சின்ன வயசுலயே மல்யுத்தம், தடி வரிசை, வாள், வேல் போர்ப்பயிற்சி, சிலம்பாட்டம் மாதிரியான் வீரவிளையாட்டுகளை சிவந்தாரையர் என்பவரிடம் கற்று தேர்ந்தார். மைசூர் அரச குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்த கொங்குநாட்டின் வரிப்பணம் சங்கக்கிரி வழியாக மைசூர் அரண்மனைக்கு சென்றது. வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ’சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி வரிப்பணத்தை  அபகரித்து ஏழை மக்களுக்கு கொடுத்தார்.  அன்றுமுதல் தீர்த்தகிரி சின்னமலையானார்.

The Sepoy Mutiny (1857) was a mistrust and cultural differences between the British and Indians led to violent conflict. Causes: 1. Increase of British power in India 2. A growing distrust of British 3. British disrespect of Indian religions and culture. Effects: End of the Mogul Empire, Beginning of direct British rule in India, and India nationalist movement:
ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தபோது அதை தடுக்க விரும்பிய சின்னமலை, கேரளத்திலும் கொங்குநாட்டின் சேலம் பகுதியிலும் கிழக்கிந்திய கம்பெனி வேரூன்ற பெரும் தடையாய் இருந்தார்.  டிசம்பர் 7, 1782 இல் ஐதர் அலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும்போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகளுக்கு பெரும் தலைவலியாய் இருந்தார்.
British Bush Fighting on the Cape Frontier:
திப்புசுல்தான் மறைவுக்கு பின், ஆட்களை தேர்ந்தெடுத்து சிவன்மலையில் வைத்து போர்பயிற்சி கொடுத்தார். 1801ல  ஈரோடிலும், 1802 ல ஓடாநிலையிலும், 1804 ல அறிச்சலூர்ல நடப்பெற்ற போர்களில் சின்னமலையே வென்றார்.  கள்ளிக்கோட்டையிலிருந்து பெரும் பீரங்கிப்படையோடு வந்த வெள்ளைக்காரங்களை எதிரித்து நின்றார். ஆனால், போரில் சின்னமலையால் ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்த சுபேதார் வேலப்பன்  சின்னமலையை தப்புவித்து பழனிமலைத்தொடரிலிருக்கும் கருமலைக்கு அனுப்பி வைத்தார்.  நேருக்கு நேர் நின்னு சின்னமலையை ஜெயிக்க முடியாத வெள்ளைக்காரர்கள்  சூழ்ச்சி செஞ்சு பிடிச்சு 1805 ஜூலை 31   சின்னமலையையும், அவரின் தம்பி, படைத்தலைவர்களையும் தூக்குல  போட்டாங்க.

ம்ம்ம் இத்தனை போராடி சுதந்தரம் வாங்கி என்ன பிரயோஜனம் மாமா?! ஊழல், பொய், களவுன்னு நாடு சீரழிஞ்சு போய் கெடக்குதே. 

ம்ம்ம் இந்தமாதிரியான கதையெல்லாம்  பசங்களுக்கு பெரியவங்க நாமதான் சொல்லி புரிய வைக்கனும். அதைவிட்டு எப்பப்பாரு சினிமா, சீரியல், மூஞ்சிப்புக்குன்னு அரட்டைல இருந்தா எப்பிடி புள்ள?!

என்னை மட்டம் தட்டுனது போதும்.  உனக்கு அறிவிருக்குன்னு ஒத்துக்குறேன். இப்ப நான் ஒரு கணக்கு கேக்குறேன். பதில் சொல்லு பார்ப்போம். 0 லிருந்து 9க்குள் ஒரு நம்பர் அதை எட்டு முறை மட்டும் யூஸ் செஞ்சு  கூட்டல் மட்டுமே செஞ்சு 250ன்னு விடை வரனும். எப்பிடின்னு சொல்லு பார்க்கலாம். 

இரு யோசிக்குறேன். அதுக்குள்ள இந்த மீம்சை பார்த்துக்கிட்டிரு. 

சின்ன வயசுல சப்போட்டாவுக்கும் உருளைக்கும் வித்தியாசம் தெரியாது மாமா. சரி.  கணக்குக்கான விடையை யோசிச்சீங்களா?! 

ம்ம்ம் கொஞ்சமிரு. யோசிச்சுக்கிட்டேயிருக்கேன்.  உனக்கு முடிக்கொட்டுதுன்னு சொன்னேல்ல. அதுக்கு வேப்பிலை 6, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தையும் வேப்பங்குச்சியையும் சேர்த்து அரைச்சு  தலையில் பேக் போட்டு கொஞ்ச நேரம் ஊற வெச்சு அலசு. ஈறு, பேன், பொடுகுலாம் இல்லாம போறதோடு முடியும் உதிராது. அடிக்கடி இப்படி செய்ய முடியாதவங்க சீயக்காய்ல இதுலாம் போட்டும் அரைச்சு வச்சுக்கலாம். 

ஓ. ஆன்சரை சொல்லு மாமா. 

விடமாட்டியே!  222+22+2+2+2 = 250  இதான் ஆன்சர் சரியா?!

உனக்கு எல்லாமே தெரியுது மாமா. யு ஆர் பிரில்லியண்ட்..
..
மீண்டும் வேறு ஒரு பதிவில்  சந்திப்போம் அதுவரை சிந்திப்போம்.நன்றியுடன்,
.தேங்க் யூ....  தேங்க் யூ.

17 comments:

 1. உண்மையில் எவ்வளவு தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம் அதற்கு மரியாதை இல்லாது போய் விட்டதே... வேதனைதான்.

  விடையை சொல்லணும்னு நினைச்சேன் அதுக்குள்ளே மாமா ஜொள்'ளிட்டாரு...

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கு தமிழக அரசியலை பார்த்தா வெள்ளக்காரன் ஆட்சியே மேல்ன்னு தோணுதுண்ணே

   Delete
 2. ... முந்தைய ஐஞ்சூவை அவியலில் புதிர் புதிராக இருக்கும்... இன்று மாமாவுக்காக...?(!)

  இனிய நண்பர் ஸ்.பை-க்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. விடைய தெரிஞ்சுக்க முன்போல வருவாங்களான்னு ஒரு சந்தேகம்ண்ணே

   Delete
 3. ஐஞ்சுவை அருமை...
  கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரத்துக்கு உரிய மரியாதை இல்லாமல் போய்விட்டது அக்கா....
  புதிர் அருமை...
  ஸ்கூல் பையனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பதிவை பாராட்டியமைக்கும், ஸ்பைக்கு வாழ்த்து சொன்னதுக்கும் நன்றி சகோ

   Delete
 4. அட மாமா ஸ்மார்ட் போன் வைச்சுக்க பெர்மிஷன் கொடுத்த உங்கள் மனசை பாராட்ட வேண்டும் அதுமட்டுமல்லாமல் மாமாவுக்கு அதை எப்படி பாதுக்காக்கிறது என்று சொல்லி தந்தது அபாரம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா, அப்பதான் உங்களைப்போலவே உங்க மச்சானும் IMO ல பேசி பிகரை கரெக்ட் பண்ணுவாப்ல

   Delete
 5. ஆகா அருமையான் அவியல்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 6. ஐஞ்சுவை அவியல் நல்ல சுவை!

  ReplyDelete
  Replies
  1. அவியலை சுவைத்தமைக்கு நன்றிண்ணே

   Delete
 7. ஐஞ்சுவையை ரசித்தேன். தீரன் சின்னமலை பற்றிய விவரங்கள் அறிந்துகொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அவியலை சுவைத்து பாராட்டியமைக்கு நன்றி சகோ

   Delete