Saturday, April 22, 2017

பொழுது போக்க டிவியா இல்ல பொழுதன்னிக்கும் டிவியா??!! - கேபிள் கலாட்டா


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 7.30 வரையும்.. சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 6.45 முதல் 7 மணி வரையிலும் சன் டிவில ’நல்ல நேரம் பொறக்குது’ன்னு ஒரு நிகழ்ச்சி. வெறும் ராசிப்பலன் மட்டும் சொல்லாம பரிகார தலங்கள் பற்றியும், சித்தர்கள் பற்றியும் அழகான உச்சரிப்போடும், எளிய நடையில் ஜோதிடர் சிவக்குமார் சொல்றாரு.


நியூஸ் 7 சேனல்ல  ‘உணவே அமிர்தம்’ன்ற நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியானம் 2.30க்கு ஒளிப்பரப்பாகுது. தினமும் ஒரு ஆரோக்கிய சமையலை அறிமுகப்படுத்துறாங்க. அந்தந்த சீசனுக்கு தகுந்த    நம் பாரம்பரிய உணவுகளை எளிய பொருட்களை கொண்டு சமைக்கும் முறையை அழகா சொல்லிக்காட்டுறாங்க. நேயர்கள் கேட்கும் கேள்விக்கு சித்த மருத்­து­வர் செல்­வ­சண்­மு­கம்  பதில் சொல்லுறது கூடுதல் சிறப்பு.
உடை, உணவு, கேளிக்கை, அலங்காரப்பொருட்கள் போன்ற நமக்கு அத்தியாவசியமானதுக்கூட சிலருக்கு ஆடம்பரம். நூறு ரூபாய்க்கு நல்ல உடைகள் கூட வாங்கமுடியாத மக்கள் இன்னும் இருக்காங்க. அப்பேற்பட்ட சிலரை  மக்கள் டிவி தேடி கண்டுப்பிடிச்சு அவங்களோட ஆசையை ‘சின்ன சின்ன ஆசைகள்’ நிகழ்ச்சி மூலம் நிறைவேத்துது.  நமக்கு படிப்பினையையும் நெகிழ்வையும் ஒருசேற தரும் நிகழ்ச்சி இது. எனக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி. ஆங்க் சொல்ல மறந்துட்டேனே... இந்நிகழ்ச்சி ஞாயிறு காலை 10.30க்கு ஒளிப்பரப்பாகுது.சன் லைஃப் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.30 முதல் 11 மணி வரையிலும் மதியம் 3 முதல் மாலை 6 மணி  வரையிலும் எஸ்.பி.பி, இளையராஜா, மனோ, சித்ரா, ஜானகி, ஜேசுதாஸ், தேவா போன்றவர்களின் எவர்க்ரீன் பாடல்களை ஒளிப்பரப்புறாங்க. கேட்டு ரசித்து மறந்த அரிதான பாடல்களை பார்த்து கேட்டு மகிழலாம்.முன்னலாம் பொம்பளைங்களை வில்லியா போட்டுதான் சீரியல் எடுத்தாங்க. இப்ப பசங்களை வில்லன்ங்களா போட்டு சீரியல் எடுக்குறாங்க. ஜீ டிவில மாலை நேரத்துல ’மெல்ல திறந்தது கதவு’ன்னு ஒரு நாடகம். எல்.கே.ஜி படிக்குற பசங்களை மையமா வெச்சு போகுது.  ஒரு அஞ்சு வயசு பையன் அப்பாவோட லவ்வை கண்டுப்பிடிக்க ட்ரை பண்ணுறதும், அஞ்சு வயசு பொண்ணை கொல்ல பாம்பை ஏவுறதும், டான்ஸ் ஆடி அந்த பாம்பை இந்த குட்டி மயக்குறதும், சக மாணவி முதல் ரேங்க் எடுக்குறதை தடுக்க பிளான் பண்ணுறதும், டியூஷன் மாஸ்டர்கிட்ட  பாட்டி விடும் ஜொள்ளை கிண்டல் செய்யுறதுன்னும் ரொம்ப நல்ல விசயங்களை வெச்சு போகுது. சேனல் மாத்தும்போது பார்த்ததே இம்புட்டு விசயம். இன்னும் முழுசா பார்த்தா?!


சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 7 மணி முதல் 7.30 வரை தினமும் ஒரு ஆலயத்தை பத்தி ஒளிப்பரப்புறாங்க. தல வரலாறு, திருவிழாக்கள், அமைவிடம்ன்னு சொல்லுறதோடு சின்ன சின்ன வழிபாடு சம்பந்தமான குறிப்புகளையும் கொடுக்குறாங்க. 


பொழுது போக்க  தொலைக்காட்சி பார்க்குறது தப்பில்ல. ஆனா, பொழுதன்னிக்கும் தொலைக்காட்சியையே பார்க்கக்கூடாது. ஏன்னா நான் அப்பிடிதான். எனக்கு டிவி பார்க்கவே பிடிக்காதுப்பா. 

திங்கள் ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம் சகோஸ்..
நன்றியுடன்,
ராஜி.20 comments:

 1. உங்களுக்கு டி.வி பார்ப்பது பிடிக்காது என்பதை ஜெயா டி.வி மேல சத்தியமா நம்பிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நம்பினாதான்ண்ணே சோறு

   Delete
 2. பொழுதன்னிக்கும் தொ.கா. பார்க்கிறது இல்லேன்னு சொல்லிட்டு, டி.வி.க்களின் பல்சுவை நிகழ்ச்சிகளுக்குப் பட்டியல் போட்டிருக்கீங்களே!

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி. நிஜமாவே டிவி பார்க்க பிடிக்காதுண்ணே. தையல், கிராஃப்ட், செய்யும்போது துணைக்கு அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிருக்கும்ண்ணே.

   Delete
 3. நான் நம்பறேன்!நலமா!

  ReplyDelete
 4. இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம்........

  ReplyDelete
  Replies
  1. அப்பிடின்னா சொல்றீங்க. இனி வசூல் செஞ்சுடலாம்

   Delete
 5. #எனக்கு டிவி பார்க்கவே பிடிக்காதுப்பா#
  ஆப் பண்ணவே பிடிக்காது என்பது தானே உண்மை :)

  ReplyDelete
  Replies
  1. இப்படி பப்ளிக்குல போட்டு உடைச்சுட்டீங்களேண்ணே

   Delete
 6. நமக்கு டிவி பார்க்க இங்கு டிவியும் இல்லை நேரமும் இல்லை...
  பரவாயில்லை... ஒரு விளம்பரப் பதிவாய் நல்ல பதிவு அக்கா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 7. ஆங்ங்ன் நல்ல நேரம் முடியமுன் வந்திடோணும் என வந்தேன்:) வந்த வேகத்தில் வோட்டும் போட்டிட்டேன்ன்... இது நல்ல ஒரு ரீவி விளம்பரம்தானே?:).. ரீவி பார்ப்பது தப்பில்லை, அதுவே கதியென இருப்பதுதான் தப்பு.

  ReplyDelete
 8. சின்னச்சின்ன ஆசை சிலருக்கு உபயோகமாக இருக்கலாம்! வழக்கம் போல தம வாக்குப் போட்டாச்.... நான் தொலைகாட்சி முன் அமர்வது ரொம்பச் சொற்ப நேரமே....

  ReplyDelete
  Replies
  1. நானும்தான். எனக்கும் ட்விமுன் உக்கார பிடிக்காது, ஏன்னா டிவி பார்க்கவே பிடிக்காதே

   Delete
 9. NEWS18 சேனலில் ஒளிபரப்பாகும் பயிர்த்தொழில் பழகு,discovery, national geographic போன்ற சேனல்களில் சில பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

  ReplyDelete
  Replies
  1. நான் பச்சை தமிழச்சியாக்கும்

   Delete
 10. இத்தனை நிகழ்ச்சிகளா...ம்ம்ம்...டி வி இல்லை....அத்ஸ்னால நோ ஐடியா...நல்ல தொகுப்பு......

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இருக்குண்ணே

   Delete