Showing posts with label கேபிள் கலாட்டா. Show all posts
Showing posts with label கேபிள் கலாட்டா. Show all posts

Saturday, October 07, 2017

நமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல?! கேபிள் கலாட்டா


நிக்க, நடக்க, உக்கார, எழ... என எல்லாத்துக்கும் முருகனைதான் கூப்பிடுவேன். எந்த கடவுள் கோவிலுக்கு போனாலும் முதல்ல, அப்பனே! முருகா! ஞானப்பண்டிதா! சன்முகான்னு சொல்லி அதுக்கப்புறம் சுயநினைவுக்கு வந்து அந்த கோவில்ல இருக்கும் சாமி பேரை சொல்லி கும்பிடுமளவுக்கு முருக பக்தை..., விஜய் டிவில தமிழ்கடவுள் முருகன் விரைவில்..ன்னு விளம்பரம் வந்ததும் ஆகா, நம்ப முருகன் பத்திய கதைன்னு ஆசையா ரெண்டு நாள் உக்காந்து பார்த்தேன். ஆனா, மனசு இந்த தொடரில் ஒட்டவே இல்ல. கந்தன் கருணை மாதிரியான பழைய புராண படங்களை பார்த்தபோது இருந்த ஈர்ப்பு இந்த தொடரில் இல்ல. காரணம் என்னன்னு தெரில. இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணி முதல் 9.30 வரை ஒளிப்பரப்பாகுது.


இதுக்கு போட்டியா சன் டிவில வினாயகர் தொடர் ஒளிப்பரப்பாக போகுதாம். வரும் திங்கள் முதல் மாலை 7 மணி முதல் 7.30 வரை ஒளிப்பரப்பாக போகுது. இனி எல்லா சேனலும் மாரியம்மா, கெங்கையம்மா, பெருமாள்ன்னு தொடர் ஆரம்பிப்பாங்க. ஏன்னா பாம்புகளை மையமா வச்சு சீரியல் ட்ரெண்ட் முடிஞ்சு இப்ப பேய் ட்ரெண்ட் சீரியல் எல்லா சேனலிலும் ஓடிக்கிட்டிருக்கு . அடுத்து சாமி ட்ரெண்ட் ஆரம்பிப்பானுங்க.
தினமும் இரவு 8.30க்கு சரவணன் மீனாட்சி ஒளிப்பரப்பகும். எங்கூட்டுல நண்டு சிண்டுக உக்காந்து பார்க்கும். எனக்கு எரிச்சலா இருக்கு. சீரியல்ல வில்லிக்கு பேய் பிடிச்சுட்டுது. அது ஹீரோயினை கொல்லப்பாக்குது. ஆனா, ஹீரோயினோட  ஹீரோ பேயை எதுத்து நிக்குறார். என்ன ஆனாலும் சரி, நான் மீனாட்சியை காப்பாத்துவேன், அவளை விட்டுத்தரமாட்டேன்னு சொல்லி பேயை எதிர்த்து நிக்குறாரு. இதுக்காகவே இந்த சீரியல் பிடிச்சு போய் இப்ப பார்க்க ஆரம்பிச்சுட்டேன். நம்மாளுங்களா இருந்தா இந்நேரத்துக்கு தெறிச்சு ஓடிப்போவாங்க. இல்லன்னா நம்பளை பிடிச்சு பேய்க்கிட்ட கொடுப்பாங்க. எத்தனை ஜென்மம் ஆனாலும் நமக்குலாம் இப்படி ஒரு ஆள் அமையாது :-(
ஆரம்பத்துல நல்லா இருந்த தெய்வ மகள் இப்ப போரடிக்க ஆரம்பிக்குது.  சீரியல்ல லாஜிக் பார்க்க கூடாதுங்குறது ஓகே. அதுக்காக ஒரு ஹையர் போலீஸ் ஆஃபீசரை கொலை பண்ணுவாங்களாம். ஆனா, அதை கண்டுப்பிடிக்க முடியாதாம். படுத்த படுக்கையா இருந்திக்கிட்டே எத்தனை எத்தனை கொலை, சதி?! இதுலாம் டூ இல்ல ட்வெண்டி மச். கதையை எப்படி கொண்டு போறதுன்னு தெரிலன்னா முடிச்சு தொலைங்கடா பக்கி பயலுகளா!!

மதியுகம் சேனல்ல காலை 7 மணிக்கு ஆலயம் அறிவோம்ன்ற நிகழ்ச்சி, சின்ன சின்ன ஆலயங்கள் முதற்கொண்டு பெரிய பெரிய ஆலயங்கள் வரை தல வரலாற்றோடு கோவிலை கட்டியவர், இப்போதைக்கு அந்த கோவிலில் தேவைப்படும் வசதி, கோவிலை நிர்வகிப்பவர், அங்கு நடக்கும் பூஜை, விழாக்களோடு ஆலயம் பத்தின புதுப்புது தகவல்களை சொல்றாங்க.
பெப்பர்ஸ் டிவில திருமதி. ராஜராஜேஸ்வரின்ற மனநல மருத்துவர் உறவுகளுக்குள் விழும் சிக்கல்கள், மன அழுத்தம், நோய் பற்றிய பயம், பரிட்சை காய்ச்சல் மாதிரியான சிக்கல்களுக்கு அழகா, விளக்கமா, எளிமையா தீர்த்து வைக்குறார். இந்த நிகழ்ச்சி காலை 8.30க்கு ஒளிப்பரப்பாகுது.
 காஜல் வந்து ஒரு கடையில் புடவை வாங்க சொல்றார், அண்ணாச்சி தன்னோட கடையில் துணி எடுக்க சொல்றாரு.  ஒரு குட்டி பொண்ணு வந்து ட்ரெஸ்மாடல்களை சொல்லி ஆசைக்காட்து. ஃப்ரிட்ஜ், வாஷிங்க்மெஷின், மொபைல், வண்டின்னு ஆஃபர் கொடுத்து ஆளுக்காள் தங்க கடைக்கு கூப்பிடுறாங்க. செலவு பண்ண சொல்லித்தர பக்கிங்க சம்பாதிக்க ஒரு வழிய காட்டலாம். ஒரு பொருள் விற்க விளம்பரம் அவசியம்தான்., ஆனா, அதுக்காக இப்படிலாம் இம்சிக்கக்கூடாது.

கேபிள் கலாட்டா தொடரும்......

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473939
நன்றியுடன்,
ராஜி

Saturday, July 08, 2017

டிடிம்மா! ஏன்ம்மா இப்படி சிரிக்குறே?! கேபிள் கலாட்டா


 டான்ஸ் ஷோ, காமெடி ஷோக்கள் கொட்டிக்கிடக்கும் நம்மூர் சேனல்ல விவசாயம் சம்பந்தமான நிகழ்ச்சி ரொம்ப கம்மி.  நாமலாம் சின்ன வயசுல தூர்தர்ஷன்ல வயலும் வாழ்வும்ன்ற நிகழ்ச்சி நேரம் வந்தாலே டிவிய ஆஃப் பண்ணிடுவோம். ரூமுக்குள்ள உக்காந்து இந்த உரம் போடுங்க, அந்த மருந்து தெளிங்கன்னு சொல்லி கடுப்பேத்துவாங்க. ஆனா, இப்ப புதிய தலைமுறை டிவில விவசாயம் பத்தி புதுக்கோணத்துல அலசுறாங்க. அந்தந்த இடங்களுக்கு போய் என்ன மாதிரியான இடங்களுக்கு என்ன பயிரிடலாம், அதை எப்படி காப்பாத்தி லாபம் பார்க்கலாம்ன்னு அழகா சொல்லி, விவசாயம்ன்னாலே காசு பார்க்க முடியாதுன்னு பீதிய கிளப்பாம இப்பத்திய இளைஞர்களுக்கும் விவசாயத்தின்மீது ஆர்வம் உண்டாக்குற மாதிரி இந்நிகழ்ச்சி போகுது. இந்த சூழலில் இளை தலைமுறையினருக்கும், விவசாயத்துடன்தொடர்பு இல்லாதவர்களுக்கும் கூட விவசாயத்தின் மீதுமரியாதையையும், ஆர்வத்தையும் இந்நிகழ்ச்சி உண்டாக்க இந்நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. 
 மருமகளை கொடுமைப்படுத்துற மாமியார்களையே எத்தனை நாளைக்கு டிவில பார்க்குறதாம். அதனால, ஒரு சேஞ்சுக்கு மருமகனை கொடுமைப்படுத்துற மாதிரியான சீரியல் ஒன்னு தினமும் நைட் 8 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. இதுக்கு பேரு மாப்பிள்ளை. இந்த புதுமை பத்தாதுன்னு சீரியல் பார்க்குறோமா இல்ல எதாவது பாடாவதி படத்தை பார்க்குறோமாங்குற மாதிரி சீரியல் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள்.. நல்லவேளை. என் ஆத்துக்காருக்கு பிடிச்ச இந்த சனியன் ஒலிப்பரப்பாகுற நேரம் மாத்துனதால நான் தப்பிச்சேன்.
ஜீ டிவில மெல்ல திறந்தது கதவுன்னு ஒரு சீரியல். ஜீ டிவி நடத்துன ஜூனியர் சூப்பர் ஸ்டார்ல ஜெயிச்ச  சின்ன பசங்க ரெண்டு நடிக்குறதால் எங்க வீட்டு பசங்க பார்ப்பாங்க. வயசுக்கு மீறிய பேச்சும், நடத்தைலாம் இந்த சீரியல்ல வரும். எல்லாத்துக்கும் மணிமகுடம் வைக்குறமாதிரி சீரியலோட ஹீரோவுக்கு ரெண்டு பொண்டாட்டி.  ரெண்டுத்துக்கும் சண்டை.  ஒருத்தரையொருத்தர் வீட்டைவிட்டு ஒரு மாசத்துக்குள்ள அனுப்புறதா சவால்;. அதனால புருசனை இம்ப்ரெஸ் பண்ண ஆரம்பிக்க ஐடியா கொடுக்குறது ஹீரோவுக்கும், செக்கண்ட் வொயிப்ஃப்கும் பொறந்த பையன். அம்மாக்களுக்கு ட்ரெஸ் பண்ணிவிடுறதும், சமைக்கச்சொல்லி ஐடியாக்கொடுக்குறதும்ன்னு பார்க்கவே எரிச்சலா இருக்கு. இது திங்கள்லிருந்து வெள்ளி வரை மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. 
அது ஒரு சோப் விளம்பரம். அப்பா வர லேட்டாகுது தனியா போகவான்னு பத்து பனிரெண்டு வயசு பொண்ணு அம்மாக்கிட்ட கேக்குது. நான் வரேன்னு அம்மா அவளை கூட்டி போறாங்க. ட்யூஷன்ல கொண்டு போய் விடுறதோட , பக்கத்திலிருக்கும் கராத்தே கிளாஸ்லயும் சேர்த்து விடுறாங்க. அதுல அந்த பொண்ணுக்கு விருப்பமே இல்ல. வீட்டுக்கு வந்து ஏன்ம்ம்மான்னு பொண்ணு கேக்குது. உன் அம்மான்னு பதில் சொல்லுறாங்க. அந்த பொண்ணு மஞ்சள் பெல்ட் வாங்குமளவுக்கு முன்னேறுது.  கொஞ்ச நாள் கழிச்சு அப்பா வர லேட்டாகுது. வாம்மான்னு கூப்பிடுது. ம்ஹூம் நீ தனியாவே போன்னு சொல்லுறாங்க. ஏன்மான்னு கேக்குது பொண்ணு. நான் உன் அம்மான்னு சொல்லி மஞ்சபெல்டை கட்டுறதோட விளம்பரம் முடியுது. பொண்ணுங்களுக்கு படிப்பு மட்டும் போதாது. தன்னை காத்துக்கொள்ளுமளவுக்கு திறமையும் வேணும்ன்னு அழகா சொல்லுது இந்த விளம்பரம்.
காஃபி வித் அனு கொஞ்ச நாள் கழிச்சு காஃபி வித் டிடி ஆனது. இடையில் பிரேக்.  இப்ப அன்புடன் டிடியா விஜய் டிவில மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. பிரபலங்களை கூப்பிட்டு பேசுறதோட அவங்க உறவினர்களையும், பிரண்டுகளையும் கூட்டி வந்து அவங்களை பத்தி  சுவாரசியமான விசயங்களை சொல்ல வைக்குறாங்க. அதுமட்டுமில்லாம, பிரபலங்களோட ரசிகர்கள், மேக்கப் மேன், போட்டோகிராஃபர்ன்னு வெளிச்சத்துக்கு வராதவங்களையும் கூட்டி வந்து பேச வைக்குறாங்க. நிஜமாவே இந்த விசயம் நல்லா இருக்கு. என்ன டிடி சிரிக்குறதும், கன்றாவி ட்ரெஸூம்தான் தாங்க முடில.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465724
출처: https://www.facebook.com/photo.php?fbid=451263394892739=a.529337427085335.121343.167184886633926=1
நன்றியுடன்,
ராஜி.

Saturday, June 24, 2017

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா! - கேபிள் கலாட்டா



வேந்தர்  டிவில பின்கோடுங்குற நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. அமிஞ்சிக்கரை முதல் அமெரிக்கா வரை எல்லா இடத்தையும் சுத்திக்காட்டுறாங்க. நிகழ்ச்சியின் முதல்பகுதியில் அந்த பகுதியின் ஊர்பெயர்க்கான காரணம், அந்த பகுதி உருவான வரலாறு உள்ளிட்ட விஷயங்களும், நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் அந்த பகுதியின் வரலாற்று பழைமை வாய்ந்த கட்டிடங்கள், புகழ்பெற்ற வழிபாட்டுதலங்களுக்கான வரலாற்று குறிப்புகளும்,  நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் அந்த பின்கோடு பகுதியில் கிடைக்கும் பிரபலமான உணவுகள், சாலையோர பிரசித்தமான உணவுவகைகள் முதலியவற்றை அந்த ஏரியாவின் மண்மனம் குறையாமல் ஒளிப்பரப்பாகுட் இந்த நிகழ்ச்சியுடைய மறுஒளிபரப்பாக வெள்ளிக்கிழமை இரவு 9:00மணிக்கும் ஒளிபரப்பப்பாகுது.  இந்நிகழ்ச்சியை தி.முத்துராஜ் இயக்கி, அலெக்ஸ் தொகுத்து வழங்குகிறார். 

ஜீ டிவில வீக் எண்ட்  வித் ஸ்டார்ஸ்ன்னு ஒரு நிகழ்ச்சி. திரை உலக பிரபலங்களை கூப்பிட்டு சுகாசினி பேட்டி காணுற சாதாரண நிகழ்ச்சிதான். ஆனா, மத்த நிகழ்ச்சிகளைவிட இந்த நிகழ்ச்சியை அழகாக்குறது அந்த பிரபலங்களோட குடும்பத்தினரையும் அவங்க நண்பர்களையும் அவங்களுக்கே தெரியாம சந்திக்க வைக்குறாங்க. இதுவரை அர்ஜுன், குஷ்பு, பாக்கியராஜ், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்ன்னு கெஸ்ட்டா வந்திருக்காங்க. இன்னிக்கு (23/6/2017) அன்னிக்கு நடிகை ரோஜா கலந்துக்குறாங்க.



 நேஷனல் ஜியாகரபிக் சேனல்ல இன்டியாஸ்  மெகா கிட்சன்னு ஒரு நிகழ்ச்சி முன்ன ஒளிப்பரப்பாச்சு. திருப்பதி, தர்மஸ்தலா, இஸ்கான் கோவில்,  அமிர்தசரஸ், கலிங்கா யூனிவர்சிட்டின்னு சதா சர்வ நேரமும் அன்னதானம் நடக்குற இடம், சாப்பாடு தயாராகுற இடம், அதுக்கு தேவையான மூலப்பொருட்கள் சுத்தம் செய்யுறது, அதை பாதுகாத்து வைக்குறதுன்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பாங்க. பார்க்க பிரம்மாண்டமாவும், பிரமிப்பாவும் இருக்கும். இப்ப புதுப்பொலிவோடு அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பிச்சிருக்காங்க. வரும் திங்கட்கிழமை முதல் இரவு 9.00 மணிக்கு இன்னிகழ்ச்சி ஒளிப்பரப்பாக போகுது. முதல் நிகழ்ச்சி பொற்கோவில் நடக்குற அன்னதானத்தையும், உணவு தயாராகுற கிச்சனும்தான். தவறாம பாருங்க.



புதிய தலைமுறை டிவில புதுபுது அர்த்தங்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது.  அரசியல் நிகழ்வு, சமுதாய நிகழ்வினை புது கோணத்துல அலசுறாங்க.. சம்பந்தப்பட்ட தலைவர்களை கூப்பிட்டு வந்து அவர் கருத்தையும் கேக்குறாங்க.


எல்லா தெய்வத்தையும் அந்தந்த கோவில்ல போய் வேண்டிக்கிட்டாதான் வரம் கொடுக்கும், ஆனா, நம்ம குலதெய்வம் மட்டும் நாம வரம் கேட்கனும்ங்குறதுக்காகவே நம்ம வீட்டு வாசல்ல காத்திருக்கும்ன்னு சொல்வாங்க. குலதெய்வம் முதல் கடவுள். அதுக்கப்புறம்தான் மத்த கடவுள். எல்லா சாமியும் குலத்தெய்வமாகிடாது. அதேமாதிரி குலதெய்வம் கோவில் நம்ம வசிப்பிடங்களுக்கு அருகில் இருக்காது. தூர எங்கோ காட்டுல, ஏரிக்க்கரையில, வரப்புமேட்டுல இருக்கும். அப்படி இருந்தாலும் குலதெய்வம் நம்ம வாசப்படில காத்திருக்கும்.   அப்பேற்பட்ட குலத்தெய்வம் இருக்குற கோவிலை தேடிப்பிடிச்சு  அதோட சிறப்புகளை மக்கள் டிவில ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு எங்க குலச்சாமின்ற பேர்ல ஒளிப்பரப்பாகுது.


நமக்கு நம்ம பொறந்த நாள்,  கல்யாண நாள், பசங்க பிறந்த நாள், அவங்க சம்பந்தப்பட்ட நால், நம்ம மூதாதையர்கள் திதின்னு இப்படி நம்மை சார்ந்த நிகழ்ச்சிகள் நினைவிலிருக்கும். இல்லன்னா படிப்பு, நுழைவுத்தேர்வுக்காக கொஞ்சம் முக்கியமான நாட்களை நினைவு வச்சுக்குவோம். அந்த மாதிரி அன்றைய தினத்தின் வரலாற்றை வரலாறு பேசுகிறதுன்ற நிகழ்ச்சில ஒளிப்பரப்பாகுது. அந்நாளில் நடந்த  இயற்கை சீற்றம், அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நாட்களை திங்கள் முதல் சனி வரை மாலை 6.30க்கு ஒளிப்பரப்பாகுது. பயனுள்ள நிகழ்ச்சி.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464385


நன்றியுடன்,
ராஜி.

Saturday, June 10, 2017

விஜய் டிவிக்காரங்க சரியான பெருமை அடிச்சுக்குறவங்க போல- கேபிள் கலாட்டா.

தினமும் காலை 9 மணிக்கு கிச்சன் கேபினெட்ன்னு ஒரு நிகழ்ச்சி. இதுல அரசியல், சினிமா, நாட்டு நடப்புன்னு எல்லாத்தையும் நக்கல், நையாண்டியுடன் அழகா எடுத்து சொல்றாங்க. எப்ப பாரு நியூஸ், கருத்தரங்கம்ன்னு பார்த்து பார்த்து போரடிச்சு போய் இருக்கவுங்களுங்கு ஒரு மாறுதலான நிகழ்ச்சி இது. இது ஒளிப்பரப்பாகுற டிவி புதிய தலைமுறைல...
Image result for puthiya thalaimurai kitchen cabinet
நியூஸ் 7 தமிழ்ல ஞாயித்துக்கிழமை மதியம் 12.30க்கு சுற்றலாம் சுவைக்கலாம்ன்ற நிகழ்ச்சி,  இதுல பாரம்பரிய உணவு முதற்கொண்டு வட்டார உணவு வரை அந்தந்த ஊருக்கே போய் அந்த ஊர் ஆளுங்களை கொண்டே  சமைச்சு காட்டுறாங்க,  ரோட்சைட்ல இருக்கும் சர்பத் கடை முதற்கொண்டு நட்சத்திர ஹோட்டல் வரை  அதன் ருசியை எடுத்து சொல்றாங்க. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செம ஜாலியா எடுத்துட்டு போறார் இந்நிகழ்ச்சியை...  மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை, கொடைக்கானல்ன்னு ஆல்ரெடி ஐயா சுத்தி வந்து நிகழ்ச்சியை கலக்கி இருக்கார். 
புதிய தலைமுறையில் நீயின்றி அமையாது உலகுன்னு ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது.  நீரின்றி அமையாதுன்னு வள்ளுவரின் வாக்கு. நீரைப்போலவே நாமும் மிக முக்கியம். நாம இல்லன்னாலும் இச்சமூகம் வீண்.  நம்ம செயல்பாடுகள் இல்லாமல் இந்த உலகம் சுமூகமாய் இயங்காது. அதனால நம்ம செயல்பாடுகள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்ங்குறதை இந்நிகழ்ச்சி உணர்த்துது.  இச்சமூகம் என்ற சக்கரம் சுழல பல்வேறு துறை சார்ந்தவர்கள் ஓயாது உழைக்கின்றனர். மருத்துவர்கள், ஓட்டுனர்கள், விவசாயிகள், வாகன பழுது நீக்குறவங்கன்னு எல்லா துறையிலிருந்து இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டு தங்கள் கருத்துகளை எடுத்து சொல்றாங்க.  
வேந்தர் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு மூன்றாவது கண்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. சிலருக்கு அமானுஷ்யங்களின் மீது அலாதி ஈடுபாடு உண்டு.  அந்த ஈடுபாட்டின் தேடல்தான் இந்நிகழ்ச்சி...  அமானுஷ்ய உலகில் இதுவரை மறைந்திருந்த பல பயங்கர சடங்குகளையும் நம்பவே முடியாத ஆச்சரியங்களையும், இறைவன் கருணையால் நடக்கும் அற்புத நிகழ்வுகளும், சித்தர்கள் பற்றிய தேடல்கள் மற்றும் இயற்கைக்கு முரணான நிகழ்வுகளும் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகுது. 
புதுயுகம் சேனல்ல வினா விடை வேட்டைன்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக ஒளிப்பரப்பாகுது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆதிராஜ் அழகா பசங்கக்கிட்ட இருந்து விடைகளை வாங்குறதுலயும், நிகழ்ச்சியையை கொண்டு செல்வதிலும் அக்கறையோடு செயல்படுறார். சீரியல், பாடல், காமெடின்றதை தாண்டி பொது அறிவை வளர்க்கு இந்நிகழ்ச்சி பயனுள்ளதாகும். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகுது.
கறுப்பு பணம் எப்படி உருவாகுதுன்னு கறுப்பு பணத்தோட நதிமூலம் ரிஷி மூலத்தை நமக்கு இன்னிக்கு மதியம் 12 மணிக்கு சொல்ல போறாங்களாம் . முடிஞ்சா பாருங்க..... 
கவுண்டமணி, செந்தில்கிட்ட ஒரு படத்துல சொல்வார். இந்த சினிமாக்காரங்களுக்குதான் வேலை இல்லை. இவனுங்கதான் பூமில பொறந்தமாதிரி அவனுங்களே அவனுங்களுக்கு பொறந்தநாள்ன்னு சொல்லி விழா எடுத்து கொண்டாடிக்குறானுங்கன்னு. அதுமாதிரி இந்த விஜய் டிவிக்காரனுங்களுக்கும் வேற வேலை இல்ல போல... அவனுங்களே விழா எடுத்துக்கிட்டு அவனுங்களே அவனுங்களே அவனுங்களுக்கு விருது கொடுத்துக்கிறாங்க. எல்லா கேட்டகிரிலயும் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர்கள்ன்னு எல்லாருக்கும் விருது கொடுத்துக்குறாங்க... சரியான பெருமைக்காரங்களா இப்பாய்ங்க போல!!
Image result for watching tv
நன்றியுடன்,
ராஜி.

Saturday, June 03, 2017

பிரபலங்களின் கல்யாணத்துல நடந்ததை தெரிஞ்சுக்கனுமா?! கேபிள் கலாட்டா

நம்ம கல்யாண ஆல்பம், சிடி பார்க்குறதுதான் கஷ்டம். ஆனா, மத்தவங்க கல்யாணத்து ஆல்பம், சிடி பார்க்குறதுன்னா ஆர்வமா பார்ப்போம். அதும் பிரபலமானவங்க கல்யாணம் எப்படி, எங்க நடந்துச்சுன்னும், அதுக்கு யார்யார்லாம் வந்தாங்கன்னும் தெரிஞ்சுக்குறதுல எல்லாருக்கும் ரொம்ப ஆர்வமாதான் இருக்கும். நியூஸ் வாசிக்குறவங்க முதற்கொண்டு சினிமா நடிகர்கள் வரை தங்கள் கல்யாண அனுபவங்களை ஜீ டிவி என் ஆட்டோகிராஃப்ல சொல்றாங்க. அவங்க வழிஞ்ச வழிசல்கள், சம்மதம் வாங்க பட்ட பாடுகள், வெட்கம், துக்கம்ன்னு எல்லாம் கலந்த கலவையான நிகழ்ச்சி... இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகுது.
Image result for vijay tv autograp
சத்தியம் டிவில தினமும் மாலை 6 மணிக்கு பசங்கன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதுல பசங்களுக்குன்னு சமையல், கிராஃப்ட், யோகான்னு சொல்லி தர்றாங்க. இதுமட்டுமில்லாம சாதனை செஞ்ச குழந்தைகளை பேட்டி எடுத்து போடுறாங்க. வாய்ப்பாட்டை எப்படி எளிய முறையில் மனப்பாடம் செய்யுறதுன்னு சொல்றாங்க.  இதுக்கு தொகுப்பாளரா சின்ன குழந்தைகளையே போட்டிருக்குறது கூடுதல் சிறப்பு...
அன்னன்னைக்கு நடக்குற குற்றங்களை டிவி நியூஸ்ல, பேப்பர்ல தெரிஞ்சுக்குறோ. பெரிய பெரிய கொலைகள், விபத்து, கொள்ளைன்னா அதோட பின்னணி வெளில தெரிய வரும். மத்ததுலாம் ஜஸ்ட் லைக் தட்ன்னு கடந்து போவோம். அந்த மாதிரியான குற்றங்களின் பிண்ணனி, அந்த வழக்கு எந்த போக்குல போகுதுன்னு ராஜ் நியூஸ் கோப்பியம் நிகழ்ச்சில தெரிஞ்சுக்கலாம். இது, தினமும் இரவு 10 மணிக்கு பார்க்கலாம்.
அனிமல் பிளானெட்ல தினமும் மதியம் 12.30க்கு சுப்ரீம் பவர்ன்னு ஒரு நிகழ்ச்சி. எறும்பு முதற்கொண்டு யானை வரை அதோட குணாதிசயம், அதனால விளையும் நன்மைகள்ன்னு புதுக்கோணத்துல நிகழ்ச்சி ஒளிப்பரப்புறாங்க,. மிருகங்களின் பத்தி புதுப்புது விசயங்களை இந்நிகழ்ச்சில தெரிஞ்சுக்கலாம்..
வசந்த் டிவில ஊரும், பேரும்ன்னு ஒரு நிகழ்ச்சி. இதுல ஒரு ஊரின் பேர் எப்படி வந்துச்சுன்னு அந்தந்த ஊர்க்காரர்கள்கிட்ட கேட்குறாங்க. அவங்க சொதப்பி, வழியுற வழிசல் இருக்கே. அடடா! ஊரோட பெயர்க்காரணத்தை நிகழ்ச்சி வர்ணனையாளர் நகைச்சுவை நடிகர் கணேஷ் விளக்கி சொல்லி அந்தந்த ஊரின் சிறப்பை எடுத்து சொல்றார்.

மக்கள் டிவில சனிக்கிழமைதோறும் காலை 10.30க்கு பெண்மனசுன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பத்தி பெண்களோட கருத்துகளை தொலைப்பேசி வாயிலா பகிர்ந்துக்கிறாங்க.  சுற்றுச்சூழல் முதற்கொண்டு சினிமா வரை பெண்கள் கருத்துகள் அசர வைக்குது...
நன்றியுடன்,
ராஜி.

Saturday, May 27, 2017

சிறார் வன்கொடுமை சட்டம் டிவிக்காரங்க மேல பாயாதா?! - கேபிள் கலாட்டா


தினமும் காலை 8. 45 மணிக்கு சன் டிவில நாட்டு மருத்துவம்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. நம் வீட்டு அடுப்படியில் இருக்கும் பொருட்களையும், வீட்டுக்கு அருகில் நம்மால் கண்டுக்கிடாம இருக்கும் அருகம்புல், அம்மான்பச்சரிசி, குப்பைமேனி, கீழாநெல்லி, முடக்காத்தான் முதற்கொண்டு சென்பகப்பூ, நெய், வாழைத்தண்டு, நெய், தேன் வரை அந்த பொருட்களில் மறைந்திருக்கும் சத்துக்கள் பற்றியும் சொல்லி, அம்மூலிகைகள் கொண்டு சாதாரண தலைவலி முதல் வெண்குஷ்டம் வரை போக்கும் வழிகளை அழகா மருத்துவர் சக்தி சுப்பிரமணியம் அய்யா சொல்றார். அய்யா சொல்ல சொல்ல அந்த மூலிகைகளை பக்குவப்படுத்தி மருந்தாக்கும் முறைகளை அய்யாவோட உதவியாளர் (பேர்தான் தெரில) செய்யுறது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்குது. இந்த குறிப்புகளை எழுதி வெச்சுக்கிட்டா சின்ன சின்ன நோய்களுக்கும் விபத்துகளுக்கும் முதலுதவியை வீட்டுலயே செஞ்சுக்கலாம்...
ஜீ டிவில சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 லிருந்து 7.30 வரை அதிர்ஷ்டலட்சுமி ஒளிப்பரப்பாகுது. கமல், மகாலட்சுமி தொகுத்து வழங்குறாங்க. அண்ணன் தங்கையோ, நட்போ, காதலர்களோ எந்த உறவா இருந்தாலும் இரண்டு பேர் கலந்துக்கலாம்.  சின்ன சின்ன விளையாட்டு நிகழ்ச்சிகள் வெச்சு நிகழ்ச்சி நடக்குது. ஏன் ஏன் கத்துறேங்குற ஒரு விளையாட்டுல  ஒருத்தர் காதுல ஹெட்போன்ல பாட்டு போட்டு வெளில இருக்கும் சத்தம் கேக்காத மாதிரி செய்திடுவாங்க. தொகுப்பாளர் கொடுக்கும் வார்த்தைய  இன்னொருத்தர் சத்தமா சொல்லனும். சைகைல உணர்த்த விடாம கைகளை கட்டி விடுவாங்க. சொல்ற வார்த்தைய கண்டுப்பிடிக்க முடியாம திணறுவதும், தப்பா சொல்லி மொக்கை வாங்குறதும் சிரிக்க வைக்கும். நிகழ்ச்சில தோத்தாலும் ஜெயிச்சாலும் ஆண்ட்ராய்டு போன், மிக்சி, வாட்டர் ஃப்யூரிஃபையர்ன்னு கிடைக்கும்.

நியூஸ் 7 டிவில ஃபீனிக்ஸ் பெண்கள்ன்ற நிகழ்ச்சி  ஞாயிறு மாலை 5.30க்கு ஒளிப்பரப்பாகுது.  பொதுவாவே, ஒரு லட்சியத்தை நோக்கி நடைப்போடுவது, அதை அடைவதும் ரொம்ப கஷ்டம். அதுவே பெண்ணுன்னா இன்னும் தடைகள் கூடும். அந்த தடைகளை உடைத்து சாதனை புரிந்த பெண்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிதான் இந்த ஃபீனிக்ஸ் பெண்கள். ஆசியாவின் முதல் பெண்  பேருந்து  ஓட்டுனரான வசந்தகுமாரி, மாதவிடாய் கொடுமை பத்தி ஆவணப்படமெடுத்த கீதா முதற்கொண்டு என்பது வயசுலயும் யோகா செய்து அசத்தும் பாட்டி, வீட்டு வேலை செய்யும் பெண்கள், மெரினாவை சுத்தம் செய்யும் பெண்கள்ன்னு இந்த பட்டியல் நீளுது...
ராஜ் டிவில  திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 5.30க்கு வெள்ளித்திரை நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இது சினிமா சம்பந்தப்பட்ட தகவல்களை கொண்டது.  சினிமா கிசுகிசுக்கள், சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள், திரைக்கலைஞர்களின் பயோடேட்டா என இந்த நிகழ்ச்சியின் பட்டியல் நீண்டாலும் இந்த நிகழ்ச்சியோட ஹைலைட்டே ‘அந்த நாள் ஞாபகம்’ன்ற பேர்ல பழைய படங்கள் பற்றிய நினைவுகளை அழகா பகிர்ந்துக்கிறார் சித்ரா லட்சுமணன்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார், ஜூனியர் சூப்பர் சிங்கர், ஜூனியர் பிரபுதேவா....ன்னு விதம்விதமான தலைப்புகளில் குழந்தைகளை வெச்சு நிகழ்ச்சி நடத்துறது மட்டுமில்லாம நாடகத்துலயும் இப்ப குழந்தைகளை வெச்சு எடுக்குறது அதிகமாகிடுச்சு. ஸ்டேஜ் ஷோவில் மோசமான அங்க அசைவுகள், மோசமான பாடல்கள் வெச்சு பசங்களை கெடுக்குறாங்கன்னா நாடகங்களில் பெரியவங்களுக்கு சமமா சதி செய்யுறமாதிரியும், திருட்டு, காதல்ல துணைப்போற மாதிரியும் காட்டுறாங்க. அதைவிட கொடுமை மாந்த்ரீகம்,  பேய், பிசாசு அமானுஷ்ய நாடகத்துலயும் நடிக்க வெச்சு குழந்தைகள் மனசுல மூட நம்பிக்கை உண்டாக்குறதோடு பேய் பிசாசாவே நடிக்க வைக்குறாங்க. பதினெட்டு வயசுக்கு கீழ இருக்கும் பசங்க வேலை செய்யக்கூடாதுன்ற சிறார் வன்கொடுமை சட்டம் இந்த விசயத்துல எதும் செய்ய முடியாதா?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461420
Tamil Nadu kid , India: I am adopting from India, they 31 million children living in the streets. Clearly this gorgeous girl is well taken care of, but there are children in India without parents, hope, or love. Let's work and pray on their behalf for a better future and a loving home <3:
நன்றியுடன்,
ராஜி. 

Saturday, April 22, 2017

பொழுது போக்க டிவியா இல்ல பொழுதன்னிக்கும் டிவியா??!! - கேபிள் கலாட்டா


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 7.30 வரையும்.. சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 6.45 முதல் 7 மணி வரையிலும் சன் டிவில ’நல்ல நேரம் பொறக்குது’ன்னு ஒரு நிகழ்ச்சி. வெறும் ராசிப்பலன் மட்டும் சொல்லாம பரிகார தலங்கள் பற்றியும், சித்தர்கள் பற்றியும் அழகான உச்சரிப்போடும், எளிய நடையில் ஜோதிடர் சிவக்குமார் சொல்றாரு.


நியூஸ் 7 சேனல்ல  ‘உணவே அமிர்தம்’ன்ற நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியானம் 2.30க்கு ஒளிப்பரப்பாகுது. தினமும் ஒரு ஆரோக்கிய சமையலை அறிமுகப்படுத்துறாங்க. அந்தந்த சீசனுக்கு தகுந்த    நம் பாரம்பரிய உணவுகளை எளிய பொருட்களை கொண்டு சமைக்கும் முறையை அழகா சொல்லிக்காட்டுறாங்க. நேயர்கள் கேட்கும் கேள்விக்கு சித்த மருத்­து­வர் செல்­வ­சண்­மு­கம்  பதில் சொல்லுறது கூடுதல் சிறப்பு.




உடை, உணவு, கேளிக்கை, அலங்காரப்பொருட்கள் போன்ற நமக்கு அத்தியாவசியமானதுக்கூட சிலருக்கு ஆடம்பரம். நூறு ரூபாய்க்கு நல்ல உடைகள் கூட வாங்கமுடியாத மக்கள் இன்னும் இருக்காங்க. அப்பேற்பட்ட சிலரை  மக்கள் டிவி தேடி கண்டுப்பிடிச்சு அவங்களோட ஆசையை ‘சின்ன சின்ன ஆசைகள்’ நிகழ்ச்சி மூலம் நிறைவேத்துது.  நமக்கு படிப்பினையையும் நெகிழ்வையும் ஒருசேற தரும் நிகழ்ச்சி இது. எனக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி. ஆங்க் சொல்ல மறந்துட்டேனே... இந்நிகழ்ச்சி ஞாயிறு காலை 10.30க்கு ஒளிப்பரப்பாகுது.



சன் லைஃப் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.30 முதல் 11 மணி வரையிலும் மதியம் 3 முதல் மாலை 6 மணி  வரையிலும் எஸ்.பி.பி, இளையராஜா, மனோ, சித்ரா, ஜானகி, ஜேசுதாஸ், தேவா போன்றவர்களின் எவர்க்ரீன் பாடல்களை ஒளிப்பரப்புறாங்க. கேட்டு ரசித்து மறந்த அரிதான பாடல்களை பார்த்து கேட்டு மகிழலாம்.



முன்னலாம் பொம்பளைங்களை வில்லியா போட்டுதான் சீரியல் எடுத்தாங்க. இப்ப பசங்களை வில்லன்ங்களா போட்டு சீரியல் எடுக்குறாங்க. ஜீ டிவில மாலை நேரத்துல ’மெல்ல திறந்தது கதவு’ன்னு ஒரு நாடகம். எல்.கே.ஜி படிக்குற பசங்களை மையமா வெச்சு போகுது.  ஒரு அஞ்சு வயசு பையன் அப்பாவோட லவ்வை கண்டுப்பிடிக்க ட்ரை பண்ணுறதும், அஞ்சு வயசு பொண்ணை கொல்ல பாம்பை ஏவுறதும், டான்ஸ் ஆடி அந்த பாம்பை இந்த குட்டி மயக்குறதும், சக மாணவி முதல் ரேங்க் எடுக்குறதை தடுக்க பிளான் பண்ணுறதும், டியூஷன் மாஸ்டர்கிட்ட  பாட்டி விடும் ஜொள்ளை கிண்டல் செய்யுறதுன்னும் ரொம்ப நல்ல விசயங்களை வெச்சு போகுது. சேனல் மாத்தும்போது பார்த்ததே இம்புட்டு விசயம். இன்னும் முழுசா பார்த்தா?!


சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 7 மணி முதல் 7.30 வரை தினமும் ஒரு ஆலயத்தை பத்தி ஒளிப்பரப்புறாங்க. தல வரலாறு, திருவிழாக்கள், அமைவிடம்ன்னு சொல்லுறதோடு சின்ன சின்ன வழிபாடு சம்பந்தமான குறிப்புகளையும் கொடுக்குறாங்க. 


பொழுது போக்க  தொலைக்காட்சி பார்க்குறது தப்பில்ல. ஆனா, பொழுதன்னிக்கும் தொலைக்காட்சியையே பார்க்கக்கூடாது. ஏன்னா நான் அப்பிடிதான். எனக்கு டிவி பார்க்கவே பிடிக்காதுப்பா. 

திங்கள் ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம் சகோஸ்..
நன்றியுடன்,
ராஜி.



Saturday, January 09, 2016

தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் - கேபிள் கலாட்டா

அது ஒரு பிஸ்கட் விளம்பரம். பள்ளியில் காலைல அசெம்ப்ளி கூடி இருக்கு.  பிள்ளைகள்லாம் வரிசைல நிக்குறாங்க. தலைமை ஆசிரியர் பிள்ளைகளை பார்வையிட்டுக்கொண்டே வருகிறார். ஒரு பையன் ”டை” கட்டிக்கிட்டு வரல. உடனே, ஆசிரியர் கோவமாகி.., “கெட் டவுட்”ன்னு சொல்லிட்டு அடுத்த பையனை பார்க்குறார். அவனும் “டை”கட்டிக்கிட்டு வராமல் போகவே அவனையும் வெளில போகச் சொல்லிட்டு.., அடுத்த பையனை பார்க்குறார். அவனும் “டை”கட்டிக்கிட்டு வரல. கொஞ்ச நேரம் அவனை உத்து பார்த்துட்டு, அவன் பாக்கெட்டில் வெளியில் தெரியும் “டை”யை பாக்கெட்டுக்குள் தள்ளிவிட்டு சிரித்தப்படியே அவனையும் வெளில போகச்சொல்லிடுறார். பிள்ளைகள்லாம் சிரிச்சப்படியே பிஸ்கட் சாப்பிடுற மாதிரி அந்த விளம்பரம் போகுது. ஆசிரியரை ஏமாத்தி, வகுப்பை கட் பண்ணுற மாதிரி விளம்பரம் வந்தாலும், நண்பனுக்கு ஒரு துன்பம், அவமானம் வந்தால் துணைக்கு ஓடிப்போகும் நண்பன் ரசிக்க வைக்குறான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதித்யா சேனல்ல “கொஞ்சம் நடிங்க பாஸ்” ன்னு ஒரு நிகழ்ச்சி. சினிமாவுல வந்த ஃபேமசான பஞ்ச் டயலாக்” ஒண்ணை நேயர்கள்கிட்ட சொல்லி நடிக்க சொல்றார் நிகழ்ச்சி தொகுப்பாளர் “ஆதவன்”. பயிற்சி இல்லாததாலும், கேமரா முன் நிக்கும் கூச்சத்தாலும் பெரும்பாலானவர்கள்  அந்த டயலாக்கை சொல்ல சொதப்புவாங்க. அந்த சொதப்பலுக்கு அவர் அடிக்கும் “கமெண்ட்”களும் நிகழ்ச்சியை சுவாரசியமாக்குது. எவ்வளவுதான் டென்சன்ல இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது நம்மையும் அறியாம சிரிச்சுடுவோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
சத்தியம் தொலைக்காட்சில சமுதாய அக்கறைக்கு  எடுத்துகாட்டா  ”வர்ணஜாலம்”ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. ”புரியாத வார்த்தை இருந்தும் பயனில்லை, புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை”ங்குற மாதிரியான வாழ்க்கையின் பல தத்துவங்களை கோடிட்டு காட்டி இருக்கிற வாழ்க்கையை இன்னும் எப்படி அழகுபடுத்தி, சீர்படுத்தி, பண்படுத்தி சமுதாயத்திற்கும் நம்மை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் எப்படி பிரயோஜனமாய் வாழனும்ன்னு   பல பயனுள்ள தகவல்களை தர்றாங்க. இந்த தொகுப்புல சிந்திக்க தூண்டுற பல சுவாரசியமான தகவல்கள், புதுபுது விஷயங்கள், கலகலப்பான குறும்படக்காட்சிகளுடன் ஞாயிறு தோறும் இரவு 8:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகுது “வர்ணஜாலம்”. இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய் தோறும் மாலை 3:30 மணிக்கு காணலாம்.
------------------------------------------------------------------------------------------- 


மக்கள் தொலைக்காட்சியில் மார்கழி மாச சிறப்பை தினமும் மாலை 5.30க்கு “மாதர் போற்றும் மார்கழி”ன்ற தலைப்புல ஒளிப்பரப்பாகுது. இதில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல்களை பிரபல கர்னாடக பாடகர்கள் நிரஞ்சனா சீனிவாசன், யுவகலாபாரதி, வித்யா கல்யாணராமன்லாம் பாடி நம் மாலைப் பொழுதை பக்தி பரவசமாக்கிடுறாங்க.
---------------------------------------------------------------------------------------------
 பெண்களுக்கான நிகழ்ச்சிகள்ன்னு “சினேகிதியே”, “பெண்கள் நேரம்” “லேடீஸ் சாய்ஸ்”, “மகளிர் மட்டும்”ன்னு ரகம், ரகமா நிகழ்ச்சி ஒளிப்பரப்பினாலும், பேருதான் மாறுதே ஒழிய, நிகழ்ச்சி கான்செப்ட்லாம் ஒண்ணைப்போலவே இருக்கு. சமையல், கிராஃப்ட், அழகு குறிப்பு, ஆரோக்கியம், ஷாப்பிங்க்ன்னு...,தான் இருக்குதே தவிர,  விவசாயம், கட்டிடக்கலை, கம்ப்யூட்டர், வியாபாரம், ஷேர்மார்க்கெட்ன்னு இல்லையே! நாங்களும் அறிந்துக் கொள்ள வேண்டியதும், பகிர்ந்து கொள்ள வேண்டியதும் அதிகம் இருக்குன்னு எப்போ உணரப் போகிறீர்கள் சேனல்கார்ஸ்?!
எனக்கு டிவி பார்க்க பிடிக்காதுன்னு பதிவுக்கு பதிவு சொல்லனுமா?! தேவையில்லதானே?!

Saturday, November 28, 2015

புத்தி சொன்னா இளைஞர்கள் ஏத்துக்குவாங்களா?! - கேபிள் கலாட்டா



சன்லைஃப் சேனல்ல தினமும் மதியம் 3 மணில இருந்து 5 மணி வரை வானவில், உங்கள் சாய்ஸ், நெஞ்சை தொட்ட பாடல், கிளாசிக் பாடல்கள்ன்னு திகட்ட திகட்ட70, 80, 90களில் வந்த பாடல்களை ஒளி(லி) பரப்புறாங்க. வூட்டுக்காரர், பசங்க, நியூஸ், ஸ்போர்ட்ஸ் சேனல்ன்னு எந்த இம்சையும் இல்லாம ரசிச்சு கேக்கலாம்.

----------------------------------------------

வேந்தர் டிவில தினமும் இரவு “மூண்றாவது கண்”ன்னு ஒரு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை 9.30க்கு ஒளிப்பரப்பாகுது.  அதிகம் அறியப்படாத ஊர்களில் சித்தர்கள் நடமாடிய இடங்கள் , வித்தியசமாய் குறி சொல்லும் இடங்கள், அமானுஷ்யமான விசயங்கள் பத்திலாம் ஒளிபரப்புறாங்க. வித்தியாசமாவும், ரசிக்கும்படியாவும் இருக்கு.  போன வாரம் முழுக்க கோவை பக்கத்துல இருக்கும் வெள்ளியங்கிரி பத்தியும், சதுரகிரி சித்தர்கள் காடு பத்தியும் போட்டாங்க. ஒருவேளை நைட்ல பார்க்க முடியாதவங்களுக்காக பகல் வேளைல 12.30வரை மறுஒளிபரப்பு பண்ணுறாங்க.

----------------------------------------------------------

மக்கள் தொலைக்காட்சியில் ”4+2” ன்னு ஞாயிறு மதியம் 11.30க்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. இதுல இரு சக்கர, நாலு சக்கர வண்டி பத்தி எல்லாத்தையும் அலசி காய  வைக்குறாங்க. மைலேஜ், இஞ்சின், சீட், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க், டெக்னிக்கல் விஷயங்கள்ன்னு எல்லா விசயங்கள் பத்தியும் அழகு தமிழ்ல சொல்றாங்க. வண்டி வாங்க நினைப்பவங்க அவசியம் பாருங்க

--------------------------------------------------------------

கேப்டன் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.55க்கு “புத்துணர்ச்சி தரும் யோகா”ன்னு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதை செல்வி.லட்சுமி ஆண்டியப்பன் நடத்துறங்க. உடலை ஆரோக்கியமா வச்சுக்க தேவையான பயிற்சிகளை செஞ்சு காட்டுறாங்க, சின்னவங்க, பெரியவங்க, கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சிகளை காரண காரியங்களோடு விளக்கி பயிற்சிகளை செஞ்சும் காட்டுறாங்க. 

-----------------------------------------------------------------------

பொதிகை சேனல்ல “கல்லூரி காலங்கள்”ன்ற நிகழ்ச்சியை இறையன்பு. I.A.S அவர்கள் தொகுத்து வழங்குறார். ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையில் 15 முதல் 25வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. தான் பிற்காலத்துல என்னவாகனும், மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, இண்டர்வியூன்னு இது நீளும். இந்த காலகட்டத்தை எப்படி மேம்படுத்திக்கனும்ன்னு மாணவர்களுக்கு தனக்கே உண்டான பாணியில் எளிய நடையில் எடுத்து சொல்றார். நினைவாற்றல், தேசபக்தி, வரலாறு, பக்தி, ஆன்மீகம், கம்யூனிசம் எதை பத்தியும் பொறுமையா எடுத்து சொன்னால் இன்றைய இளைஞர்கள் புரிஞ்சுப்பாங்க. கண்டிப்பா நல்லதை ஏத்துக்குவாங்கன்னு நம்பிக்கையாய் சொல்றார். இந்த நிகழ்ச்சி வார நாட்கள்ல இரவு 10.30 முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகுது.

--------------------------------------------------------
விஜய் டிவில தினமும் காலைல 7 மணிக்கு ”பாட்டி வைத்தியம்”ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பேருதான் பாட்டி வைத்தியமே தவிர ”ரேவதி சந்திரன்”ன்ற ஆன்டிதான் நிகழ்ச்சியை நடத்துறாங்க. இன்றைய காலகட்டத்துல சின்ன சின்ன உடல் உபாதைக்குலாம் டாக்டரை தேடிப்போய் ஆயிரக்கணக்குல செலவு பண்ணுறொம். கூட்டு குடும்பமாய் இருந்த காலத்துல வீட்டுல இருந்த பொருட்களைக் கொண்டே சின்ன சின்ன உடல் உபாதைகளை தீர்த்துக்கிட்டாங்க. ம்ம்ம்ம் எல்லாத்துக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்குல்ல. இனி, இந்த நிகழ்ச்சிய பார்த்து குறிப்பெடுத்து வச்சுக்கிட்டா நமக்கும் யூஸ் ஆகுமில்ல.!!

-----------------------------------------------------------------

அடுத்த வாரம் கேபிள் கலாட்டா வரும். அதுக்கு முன்ன ஒரு விசயத்தை சொல்லிக்க விரும்புறேனுங்க சகோ’ஸ். எனக்கு டிவி பார்க்க பிடிக்காது. வர்ட்ட்ட்டா!!