Monday, May 08, 2017

சம்சாரிக்கும், சன்னியாசிக்குமான வித்தியாசம் - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள!  நீ கேட்ட தேங்காய், பழம், பூ.... ஆமா இன்னிக்கு என்ன விசேஷம்?! எதுக்கு பூ வாங்கியாற சொன்னே?!
இன்னிக்கு பிரதோஷம் மாமா. மறந்துட்டீங்களா?! அதுமில்லாம இன்னிக்கு திங்கள் கிழமை வேற சிவப்பெருமானுக்கு உகந்த நாள். அதனால, கோவிலுக்கு போகலாம்ன்னு வாங்கியாற சொன்னேன். 

பிரதோஷம்ன்னா என்னன்னு தெரியுமா?!
"Nandi pojaa" important sacred ritual in #hinduism, in temple of lord #shiva:
ம்ம் தெரியும் மாமா.  ‘தோஷம்’ன்னா குற்றமுள்ளது.  பிரதோஷம்ன்னா குற்றமில்லாததுன்னு அர்த்தம். அதாவது குற்றமில்லா இந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களையே செய்யலாம்ன்னு இருக்கும்போது சாமிய கும்பிட்டா அதோட பலன் அதிகம்ன்னுதான் இந்த நேரத்தில் சாமிய கும்பிட தோதா பிரதோஷ வழிபாட்டுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

அதுமில்லாம, அசுரர்கள் ஒரு பக்கமும், தேவர்கள் ஒருபக்கமும் வாசுகி பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடையும்போது. வலிதாங்காம வாசுகி பாம்பு நஞ்சை கக்கியது.  அதுமட்டுமில்லாம பாற்கடல்ல இருந்து மகாலட்சுமி, கற்பக மரம், காமதேனு, வலம்புரி சங்கு போன்றவைகளோடு நஞ்சும் வெளிவந்தது. இரண்டு நஞ்சும் சேர்ந்து மூன்று லோகத்தையும் சூழ ஆரம்பித்தது. இதைக்கண்டு பயந்த தேவாதி தேவர்கள், அசுரர்கள், பிரம்மன், விஷ்ணு உள்ளிட்டோர் சிவப்பெருமானை தஞ்சமடைந்தனர். 
poison:
எல்லோரையும் காக்கும் பொருட்டு,  சிவப்பெருமான்  அந்த ஆலகால விஷத்தை உண்டார். அனைத்தையும் உணர்ந்த தெய்வப்பெண் ஆனாலும், கணவன் என வரும்போது அவளும் எல்லா உணர்ச்சிகளுக்கும் ஆட்படும் சாதாரண பெண்ணாகிடுதல் இயல்பு. அதுக்கேத்த மாதிரி, அந்த ஆலகால விஷம் கணவன் உடலில் கலக்கக்கூடாதுன்னு அவரோட தொண்டைக்குழியை பிடித்தாள். அதனால், விஷம் சிவப்பெருமானின் தொண்டையிலேயே விஷம் நின்றுவிட்டது.  உலகை காப்பாற்றிய சிவப்பெருமானை ஆனந்த தாண்டவமாட அனைவரும் வேண்டி நிற்க நந்தி தேவர் இசையமைக்க நடனமாடினார்.

இந்த திருவிளையாடல் நடந்தது திரயோதசி திதியில்  மாலை 4.30 முதல் 6 மணிக்கு. தினமும் வரும் இந்த நேரம் நித்ய பிரதோசக்காலம். அதனாலதான் அந்த நேரத்தில் வீட்டில் விளக்கேத்தி சாமி கும்பிடனும்ன்னு சொல்லி இருக்காங்க.  அமாவாசைக்கு முன்னும், பௌர்ணமிக்கு முன்னும் என திரயோதசி திதி மாசம் இருமுறை வரும்.  அதனாலதான் இந்த நேரத்தில் எல்லா சிவன்கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பா நடக்கும்.
மணிராஜ்:
பிரதோஷம் மொத்தம் பத்து வகைப்படும் நித்திய பிரதோஷம், நட்சத்திர பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப் பிரதோஷம், பூர்ண பிரதோஷம், திவ்ய பிரதோஷம், அபய பிரதோஷம், தீபப் பிரதோஷம், சப்த பிரதோஷம், மகா பிரதோஷம். சித்திரை மாதம் வரும் வளர்பிறையில் வரும் பிரதோஷம் ரொம்ப சிறப்பானது. இதான் மகா பிரதோசம்ன்னு சொல்வாங்க. இதேப்போல சனிப்பிரதோஷமும் ரொம்ப சிறப்பானது.  

ஆலகால விஷத்துக்கு பயந்து  சிவப்பெருமான் இருக்கும் கைலாயத்தை நோக்கி அனைவரும் ஓடும்போது அவர்களை ஆலகால விஷம் இடைமறித்தது. அதுக்கு பயந்து வந்த வழியே திரும்பி சுற்ற, அங்கும் ஆலகால விஷம் வந்து இடைமறித்து நின்றது. இவ்வாறு இடமும் வலமுமென மூன்று முறை சுத்தினாங்க. இந்த பிரதட்சணத்தை சோமசூக்தப்பிரதட்சணம்ன்னு சொல்றாங்க. அதன்படிதான் பிரதோஷ காலங்களில் கோவிலை வலம் வரனும்.
ॐ SHIVA ॐ ✨ OM NAMAH SHIVAYA ✨:
பால், தயிர், இளநீர், சந்தனம், கரும்புச்சாறு, தேன்,  பன்னீர்ன்னு நாம் செய்யப்படும் அபிஷேகப்பொருளுக்குன்னு ஒவ்வொரு பலன் கிடைக்கும். அதேப்போல அருகம்புல், ஊமத்தை, தும்பை, வெள்ளெருக்குன்னு மலர்களுக்கும் தனித்தனி பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ஊற வெச்ச பச்சரிசி, பைத்தம்பருப்புடன் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு படைத்தால் முன் ஜென்மம் பாவம் தீரும்.... அதிகாலை எழுந்து  நீராடி எதும் உண்ணாமல் விரதமிருந்து பிரதோச வழிபாடு முடிந்ததும் பால் பழம் அருந்தி விரதம் முடிக்கலாம்.

போதும்.... போதும்... உனக்கு தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு இப்படியா மூச்சு விடாம சொல்வே?! அப்புறம் உன்னை ஹாஸ்பிட்டலுக்குதான் கூட்டிப்போகனும்.

ஹாஸ்பிட்டலுக்கு போனதும் டாக்டர்லாம் கையப்பிடிச்சு நாடி பார்க்குறாங்களே ஏன்னு தெரியுமா?!
3D Dr. Mario by SuperKirYoshi.deviantart.com on @deviantART:
ரத்த ஓட்டம் பார்க்குறாங்கன்னு நினைக்குறேன்.

கிட்டத்தட்ட சரிதான் மாமா. கைல தமனியில் ரத்தம் பாயும் விதம், அது சீரான விதத்துல ஓடுதான்னு பார்க்கவும்தான் இந்த மாதிரி பார்க்குறாங்க. உதாரணத்துக்கு நாம சும்மா இருக்கும்போது நிமிசத்துக்கு  72 முறை நம்மோட நாடி துடிக்கும். இது குழந்தைகளுக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும். இதுவே நாம வேலை செய்யும்போதும், பயந்திருக்கும்போதும், சந்தோசத்தின்போதும் இத்துடிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கும். அதேமாதிரி சாதாரண மாதிரி  இருதயத்துடிப்பில்  லப்டப்புன்னு ரெண்டு விதமான சத்தம்  வரும்.  இதிலிருந்து சத்தம் மாறுப்பட்டாலும் இருதயத்தில் ஏதோ பாதிப்பு இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அதனாலதான் டாக்டர் நாடி, கழுத்துப்பகுதி, மார்புன்னு இந்த நாடித்துடிப்பை பார்க்குறாங்க. ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடக்கையிலும் பார்க்கனும்.  சித்த மருத்துவப்படி மொத்தம் பத்து வகை நாடிகள் நம்ம உடம்புல இருக்கு. முன்னலாம் நாடித்துடிப்பை வெச்சே எல்லா நோயும் நம் முன்னோர்கள் கண்டுக்கிட்டாங்க. இப்பதான் ஸ்டெத்தாஸ்கோப் வந்திட்டுது. 

ஆத்தி! உனக்கு மூளை வேலை செய்யுதுன்னு ஒத்துக்குறேன். சரி, வைரத்துக்கு மொத்தம் எத்தனை மூலை இருக்குன்னு சொல்லேன். 

இதுக்கு விடை எனக்கு தெரியும். அதே நேரம் இதை படிக்குற என் சகோதரர்கள் சொல்லட்டும். அப்புறமா நான் சொல்றேன்.  அவங்க சொல்றதுக்கு முன் ஒரு ஜோக் சொல்றேன்.  நீங்க சிரிங்க. 

சம்சாரிக்கும், சன்னியாசிக்கும் என்ன வித்தியாசம்?!
புலித்தோல்ல தூங்கினா சன்னியாசி, புலியோடவே தூங்கினா அவன் சம்சாரி.
இன்னிக்கு ரொம்ப பேசியாச்சு அதனால .. வெயில் காலத்துல வேர்வை நாத்தம் வராம இருக்க சில டிப்ஸ் சொல்லிட்டு நான் கோவிலுக்கு போறேன். எலுமிச்சை பழத்தை எடுத்து உடல் முழுக்க தடவி முக்கியமா அக்குள் பகுதில குளிச்சா அன்னிக்கு முழுக்க வேர்வை நாத்தம் வராது. கொஞ்சம் சீயக்காய் தூள், வெந்தயப்பொடி சேர்த்து தினமும் தலைக்கு குளிச்சு வந்தாலும் வேர்வை சுரந்தாலும்  உடம்பு கப்படிக்காது. குளிக்கும் நீரில் வெற்றி வேர், துளசி, வேப்ப இலை போட்டும் குளிக்கலாம். குளிச்ச பின் அக்குள் வியர்வை போக துடைத்து பேக்கிங்க்சோடாவை கொஞ்சம் பூசிக்கிட்டாலும் நாத்தம் வராது. தினமும் ரெண்டு முறை குளிக்கனும். துவைச்ச துணிகளை தினத்துக்கொன்னா மாத்திக்கனும். சந்தனம் தேய்ச்சு குளிக்கலாம் . குடல்ல அழுக்கு சேர்ந்தாலும் வியர்வையில் நாற்றமடிக்கும். அதனால, மலச்சிக்கல் வராம பார்த்துக்கனும்.
"Vinnyasa Premier Art Galery":
சரி சரி... உன் டிப்சுக்கு நன்றி. பிரதோஷ நேரம் நெருங்கிட்டு நீ கோவிலுக்கு போற வழியப்பாரு...

சரி நான் கிளம்புறேன். 
சரி சரி... கெளம்பு...


16 comments:

 1. ///சம்சாரிக்கும், சன்னியாசிக்கும் என்ன வித்தியாசம்?!
  புலித்தோல்ல தூங்கினா சன்னியாசி, புலியோடவே தூங்கினா அவன் சம்சாரி.///

  நல்ல ஜோக்.....

  சம்சாரிக்கும், சன்னியாசிக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டுவிட்டு நீங்க்ளே பதிலையும் சொல்லிட்டீங்க ஆனால் கேள்விமட்டும் கேட்டு இருந்தால் என் பதில் இப்படித்தான் இருக்கும்

  சம்சாரி ஒரு பெண்ணைத்தான் கட்டிகிட்டு அழுவான் ஆனால் சன்ன்னியாசியோ ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கட்டிக் கொண்டு அழுவான்

  ReplyDelete
  Replies
  1. நீங்க பதில் சொல்லலைன்னாலும் உங்க மைண்ட் வாய்சை நான் கேட்ச் செய்வேன் என் மதிபிற்குறிய அண்ணாவே!

   Delete
  2. ஹஹஹஹஹ் மதுரை சகோ....

   கீதா

   Delete
 2. 'த்ரூட்'தின் மைண்ட் வாய்ஸ் சரிதானே ....நந்திக்கே சில்க் சாரின்னா ரொம்ப பிடிக்குதே ,திரும்பி கெட்ட பார்வை பார்க்குதே ....நான் ரெண்டாவது படத்தைச் சொன்னேன் :)

  ReplyDelete
  Replies
  1. நந்தி கெட்ட பார்வை பார்க்கலைண்ணே. நந்திக்கு முன் அந்த பொண்ணு உக்காந்து சாமி கும்பிடுது. நீங்க சொல்ற மாதிரி அந்த பொண்ணை நந்தி பார்க்குறதா இருந்தா அந்த பொண்ணு நல்ல பொண்ணா இருக்கனும்.

   Delete
 3. புலித்தோல்ல தூங்கினா சன்னியாசி, புலியோடவே தூங்கினா அவன் சம்சாரி...என்பதை சில மனைவிகள் ஆட்சேபிக்கப் போவதாகத் தகவல்கள் கூறுகின்றன. எங்களின் வீரத்தையும் ஆக்ரோஷத்தையும் வெறும் புலிகளோடு மட்டும் ஒப்பிடுவது சரியா என்று அவர்கள் கொதித்துப் போயிருக்கிறார்களாம்.

  -இறைய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. என்னை எதுலயாவது கோர்த்து விட்டுடாதீங்கப்பா

   Delete
 4. ஆவ்வ்வ்வ் ஹையோ ஹையோ இங்கின வந்தோர் எல்லாம் சம்சாரியைப் பற்றி மட்டுமே பேசிட்டுப் போயிருக்கினம்:) கர்:) நான் மட்டும் பிரதோசம் பேசப்போறேன் ஏனெனில் மீ ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்:)..

  எனக்கு சிவனை ரொம்பப் பிடிக்கும்.. சிவலிங்கமும் ரொம்பப் பிடிக்கும். ஆனா இதுவரை பிரதோச விரதம் பிடித்ததில்லை... நிறைய விரதங்கள் பிடிப்பேன் சின்ன வயதிலிருந்தே, அதனால புது விரதங்கள் பிடிக்க பயம்.. தொடங்கினால் விட்டிடக்கூடாதெல்லோ..

  பிரதோச விளக்கம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இது ஒண்ணும் ஐயப்பன், சஷ்டி, வைகுண்ட ஏகாதசி விரதம் போல கடுமையான விரதமில்லைங்க ஆதிரா. கோவில்லதான் கும்பிடனும்ன்னு இல்ல. பிரதோச வேளையில் சாமிய கும்பிட்டாலே போதும். அதான் இங்க முக்க்கியம்.

   Delete
 5. தெரிஞ்ச கேள்விக்கு நீங்கள் பதுளை சொல்லிட்டு தெரியாத கேள்விக்கு பதிலை எங்களிடம் கேட்பதை வன்மையாகக்.....

  தம வாக்கிட்டு ரசித்தேன் பதிவை.

  ReplyDelete
  Replies
  1. என்னாச்சு ஸ்ரீராம்...மொபைல்ல டைப்பினீங்களா பாதியிலேயே நிக்.....

   கீதா

   Delete
  2. கண்டிக்குறாராம்

   Delete
 6. பிரதோஷம் பற்றி நல்ல தகவல்கள். ஜோக் ரசித்தோம். கேள்விக்குப் பதில் தெரியலியே...

  ----இருவரின் கருத்தும்..

  ReplyDelete
  Replies
  1. வைரத்திற்கு ஆறு மூலைகள்.. இருவரின் பதிலும் இதே

   Delete
 7. பிரதோஷம் பற்றி விளக்கியது அருமை

  ReplyDelete