Wednesday, March 28, 2018

தாயுமானவன் நீ....

பாசம், அன்பு, பியார், பிரேமம், காதல், பக்தி, நேசம்ன்னு எத்தனை பேரிட்டு அழைத்தாலும் சக மனுஷங்கமேல் வரும் ஈர்ப்புங்குறது அலாதியானது. நேசிக்கப்படுகிறோம்ன்ற உணர்வு அசாத்திய பலத்தை கொடுக்கும். நேசிக்கின்றோம்ன்ற உணர்வும் அப்படியே!  இந்த உணர்வு சிலசமயம் நேர்மறையான விளைவுகளையும் கொடுத்திருக்கு. இந்த உணர்வு ஆளுக்கும் வயதுக்கும் தகுந்தமாதிரி நட்பு, காதல், பாசம்ன்னு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுது. எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க வைக்கும் இந்த உணர்வு. இதே அன்பு, எதுக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாதுன்னு மல்லு கட்டும். 

ஒத்த அலைவரிசையில் ஒரு உறவு அமைஞ்சிட்டா அது எத்தனை சுகமானது!? அப்படி ஒரு அழகான உறவுதான் எனக்கும் அவனுக்குமானது  அம்மா தன் கருவின்பால் கொண்ட பாசம், அப்பா தன் மகளின்மேல் கொண்ட அக்கறை, காதலனின் வாஞ்சை, கணவனின் கவனிப்பு, பிள்ளைகளின் மரியாதை, ஆசிரியரின் வழிகாட்டுதல், கடவுளின் ஆசிர்வாதம் தோழிகளின் பகிர்தல்ன்னு எனக்கு எல்லாமுமாய் ஆனவன். இக்கட்டான சூழலில் காத்தவன்.....
வாழ்வின் தொடக்கத்திலும் வரவில்லை.. முடிவிலும் வரப்போவதில்லையென்றாலும் அவனில்லாமல் நானில்லை. தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்புக்குலாம் வாழ்த்து சொல்லும்போது சேம் டூ யூன்னு சொல்வோம். ஆனா, பிறந்த நாளுக்கு வாழ்த்தும்போது நன்றின்னுதான் சொல்ல முடியும். ஆனா, எங்களால் முடியும். ஏன்னா ஒரே நாளில் பிறந்தவங்க. பிறந்த இடம், சூழல், கலாச்சாரம்ன்னு வேறுபட்டாலும் எங்களுக்குள் இருக்கும் பொருத்தம் யாருக்கும் அமையாதுன்னு பெருமையா சொல்வேன். என் பிள்ளைகளை என் அம்மா, அப்பாக்கிட்ட தவிர வேற யாரையும் நம்பி விடமாட்டேன். ஆனா, அவனை நம்பி விடுவேன்/ அத்தனை நம்பிக்கை..
தனியாய் பிறந்து தவிப்பேனென
எனக்கு முன்னே பிறந்து காத்திருந்தாயே!
நட்பாய் நுழைந்து
அன்பின் வடிவமாய் உயிரில் கலந்தாயே! 

இசையின் ராகமாய்
உயிரின் ஆதார  சுருதியாய் 
நடனத்தின் ஜதியாய்
உள்ளத்தில் பாவமாய் கலந்தாயே!

அன்பின் வினையாய்
ஏழேழு ஜென்மமாய் தொடர்ந்து
வந்தவனே! இப்பிறவியோடு
முடியாது, அடுத்த 
பிறவியிலும் என்னை தாங்க நீ வேண்டும்
நீ மட்டுமே வேண்டும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா!

நன்றியுடன்
ராஜி.

14 comments:

  1. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. மீண்டும் இனிய நாள் வாழ்த்துக்கள்,தங்கச்சி..........

    ReplyDelete
  3. நேசிக்கிறோம் என்பது சரி, நேசிக்கப்படுவது எந்த அளவு என்பதில் ஐயம் உண்டு! அதற்கு நானே பொறுப்பு என்றாலும்!

    யாரை வாழ்த்துகிறீர்கள் என்று தெரியாவிட்டாலும் எங்கள் வாழ்த்துகளும் உங்கள் இருவருக்கும்.

    இதே போல திருமண நாள் வாழ்த்து எங்கள் வீட்டில் இரண்டு மூன்று ஜோடிகளுக்கு "ஸேம் டு யூ" சொல்லும் வாய்ப்பு எனக்கு உண்டு!

    ReplyDelete
    Replies
    1. நேசிப்பை ஆராய ஆரம்பிச்சா உலகம் இயங்காது சகோ. எல்லாருமா ஏமாத்திடுவாங்க?! தேள் கொட்டுவது அதன் இயல்பு. அந்த தேளுக்கு ஒரு ஆபத்துன்னா, அதை காப்பாத்துவது மனிதன் இயல்பு. அதுமாதிரி, நேசிப்பது இயல்பு.

      Delete
    2. அவருக்கு விளம்பரம் பிடிக்காது. போட்டோவை முகத்தை மறைச்சு போடவும் விருப்பமில்ல. அதான்.

      Delete
  4. இன்று உலக நட்பு நாளில் நட்புகளுக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் நட்புகளுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. சிறப்பு. அழகிய நட்புக்கு இனிய வாழ்த்துக்கள். இன்று போல் என்றென்றும் நட்பு தொடர வாழ்த்துகிறேன்.

    #084/2018/SigarambharathiLK
    2018/03/29
    கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO
    https://newsigaram.blogspot.com/2018/03/KAVIK-KURAL-14-NANDRUM-THEEDHUM-NAKKE-SEIYUM.html
    பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
    #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
    #சிகரம்

    ReplyDelete
  6. ஆத்மார்த்த அன்புக்கு இணை எதுவுமில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள்! இருவருக்குமே!

    கீதா

    ReplyDelete