உன் உயிர் தந்து
என் உயிர்
வளர்த்த தாயே !!
தரணியில் நானும்
அவதாரம் எடுத்திட
துணையாய்
இருந்தவளே !!
ஈரைந்து மாதங்கள்
எனை கருவாய்
வயிற்றில்
சுமந்தவளே !!
பசியால் நீ
வாடிடும் போதும்
நான் பசியறியாது
செய்தவளே !!
நோயினால் நீ
வாடிய போதும்
என் மனம்
நோகாமல்
பார்த்தவளே !!
உன்னை
என்னவென்று
நான் சொல்வேன்...
நீ தெய்வம் என்று
சொன்னால் கூட
உனக்கு அது
இழுக்கு தான்...!!
நீ தெய்வத்துக்கு
மேலே தான்
என் மனதில்...!!
ஒரு அன்னையாய் பொறுப்புணர்ந்து, என் அன்னைக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள தாய்மை குணம் கொண்ட அனைத்து உயிரினங்களுக்கும் “அன்னையர் தின வாழ்த்துக்களை” சொல்லிக்குறேன்.