
நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்கு சென்ற முதல் நாள்...,
(மைண்ட் வாய்ஸ் : ஹேய் நீ அம்புட்டு பெரிய படிப்புலாம் படிச்சு இருக்கியா?)
முதல் பீரியட்.., தமிழ் ஆசிரியர் வந்தார் "என் கோடை விடுமுறை" என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொன்னார். தமிழ் என்பதால் அசத்திட்டோமில்ல. பத்துக்கு எட்டு எடுத்து குட் வாங்கியாச்சு.
அடுத்த பீரியட் ஆங்கிலம். சார் வந்தார். வெளியூரிலிருக்கும் உன் நண்பனுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதுங்கள் என்றார்.
என்னவோ கருவாச்சிக் காவியம் எழுதுற வைரமுத்து போல மத்தப் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்துட்டு .., சார்கிட்ட நல்லா பேரு வாங்கணுமின்னு வேகமா எழுத ஆரம்பிச்சேன்.., (மைண்ட் வாய்ஸ்: நல்ல பேரு வாங்குறது யாரு? நீயா? பார்ப்போம்..,)
பதட்டத்துல என்ன எழுதணும் னு மறந்து போச்சு . அப்படி இப்படி னு ஒப்பேத்தி முதல் ஆளா பேப்பரை குடுத்துட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன்.
( மைண்ட் வாய்ஸ்: ஆமா பெரிய I.A.S ரிசல்ட்)
எல்லாருக்கும் பேப்பரைக் குடுத்துட்டு பசங்களோட பேரும் மார்க்கும் சொன்னார்.
எல்லாரும் அஞ்சு, ஆறு மார்க் எடுத்து இருந்தாங்க. என் பேப்பர் மட்டும் வரலை. ஆஹா, நாமதான் முதல் மார்க்கு போல, கடைசியா நம்ம பேரு, மார்க் சொல்லிட்டு குடுப்பருனு நினைச்சு மனசு ரெக்க கட்டி பறக்குது.
கடைசியா ராஜி இங்க வா னு சார் கூப்பிட,
நானும் எதோ பத்மபூசன் விருது வாங்குற மிதப்புல போய் சார்கிட்ட நின்னேன்.
@@## $%% @@##$%%^&!@$%&* !!@#%&***** ணு சார் திட்ட
பசங்கலாம் "கொள்"னு சிரிக்குறாங்க.
நான் பேப்பரைக் கையில வாங்கிகிட்டு, மூஞ்சிய தொங்கப் போட்டுக்கிட்டு, என் இடத்துக்கு வந்து பேப்பரை எடுத்து பார்க்குறேன் அதுல இப்படிதான் இருந்தது...,
நீங்களே பாருங்க இதுக்கு போய் எங்க சார் அசிங்க அசிங்கமா திட்டுனார்.
To,
R.Sujatha,
No.132, NH Road,
Nehru nagar,
calcutta.
Hai Suji,
I am Raji. I am fine. How are you? you fine?
my father, mother, sister, my house cow fine. your father, mother, brother, sister, your house dog fine?
I vill (WILL) kill You. Happy birth day to you. Who are you? mani mani haappi retans off the day(many many Happy returns of the day)
With Love,
Your loving friend,
Raji.
(உங்க சாரா இருக்கப் போகவே உன்னை திட்டுரதோட விட்டுட்டார். நானாஇருந்தால் உன்னை அன்னிக்கே T.C. குடுத்து அனுப்பி இருப்பேன். இந்த பிளாக் உலகம்மவது நிம்மதியா இருந்திருக்கும். யாரு, யார் அது? வேற யாரு மைன்ட் வாய்ஸ்தான்)