1. சத்துணவு சோறெல்லாம் நல்லா ருசியா இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!...,
2. நான் இருக்குற ஊருல மட்டும்தான் நிலா இருக்குன்னும்.., நான் எங்க போனாலும் கூடவே வருதுன்னும் நினைச்சுப்பேன்!!...,
3. டீச்சர்லாம் குடை வெச்சுக்கிட்டும்.., கண்ணாடி போட்டுக்கிட்டும் உர்ர்ர்ர்ருன்னு இருப்பாங்கன்னு நினைச்சுப்பேன்!!...,
4. அண்ணன், தங்கச்சிலாம் “பாசமலர்” படத்துல வர்றா மாதிரி அன்பா, இருப்பாங்கன்னும நினைச்சுப்பேன்!!..,
5. சினிமா பார்க்கும்போது. பெரிய பெரிய பூதம்லாம் தியேட்டரை தலையில தூக்கிகிட்டு போய் காட்டுதுங்க, படம் முடிஞ்சதும் மறுபதியும் இங்கயே கொண்டு வந்து விட்டுடுதுங்கன்னு நினைச்சுப்பேன்!!...,
6. பெரியவளானதும், நம்பியார், அசோகன், கிட்டியை எல்லாம் கொன்னுடனும் நினைச்சுப்பேன்!!...,
7. ஆம்பிள்ளை போலீசெல்லாம் கெட்டவங்கன்னும், பொம்பளை போலீசெல்லாம் நல்லவங்கன்னும் நினைச்சுப்பேன்!!...,
8. பெரியவளானதும் வைஜெயந்தி ஐபிஎஸ் போல பெரிய கான்ஸ்டபிள் ஆகி கெட்டவங்களைலாம் பறாந்து பறந்து அடிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்..., (முக்கியமா எங்க ஸ்கூல் பியூனை.., அவந்தான் எங்க வூட்டு பக்கத்துல குடியிருந்துக்கிட்டு அங்க நடக்குறதை இங்கும்.., இங்க நடக்குறதை அங்கும் போட்டு குடுக்குறது!!...,
9. கொசுவை ஒழிக்க, தினமும் பத்து கொசு அடிச்சு கொண்டு வந்து காட்டனும்ன்னு அரசங்கமே சட்டம் போட்டு ஊருக்கு ஒரு ஆஃபீஸ் வெச்சு குறிச்சுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,
10. காலேஜ் படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்டாலே வேலை கிடைச்சு ஒரே ப்ப்ப்ப்ப்ப்பணக்காரங்களாயிடலாம்ன்னு நினைச்சுப்பேன்!!..,
11. சாமிலாம் பெரிய சைஸ் ஜல்லடைல ஊத்துற தண்ணிதான் “மழை”ன்னு நினைச்சுப்பேன்!!...,
12. பெரியவளாகி கல்யாணம் கட்டிக்கிட்டு வூட்டுக்காரரையும்.., புகுந்த வூட்டினரையும் பத்திரமா பார்த்துக்கிட்டு நல்ல பொண்ணுன்னு பேரெடுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,
13. எங்க ஊரு மணியக்காரருக்குதான் எல்லா ”பவரும்” இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!....,
14. எங்க ஊரு பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சாலே எல்லா வியாதியும்.., சரியாகிடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,
15. எங்க பக்கத்து வீட்டு கார்த்தியண்ணாக்குதான் எல்லாமே தெரியும்ன்னு நினைச்சுப்பேன்!!...,
16. ஃபிளைட் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல போய் நின்னுக்கும்.., பூமி சுத்திக்கிட்டு வரும்போது எந்த நாட்டுல இறங்கனுமோ அப்போ இறங்கி கீழ வந்துடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,
17. கல்யாணம் கட்டிக்கிட்டா “அப்பா”வைத்தான் கட்டிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,
18. அடுப்புல குண்டானை வெச்சு, பருப்பு, காய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க வெச்சா அதான் சாம்பார்ன்னு நினைச்சுப்பேன்!!...,
19. உலகத்துலேயே ருசியான பலகாரம் “தேன் மிட்டாயும், கலர் அப்பளமும்”தான் நினைச்சுப்பேன்!!....,
20.மெட்ராஸ், பெங்களூர், கல்கத்தாலாம் வெளிநாட்டுல இருக்குன்னு நினைச்சுப்பேன்!!..,
(தொடரும்...., )
இந்த தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாட.., புது விதமான ”பதிவர்கள் பெயர் தாங்கிய வெடிகள்” அறிமுகம் நமது தளத்தில் திங்களன்று....,

